Tuesday 26 June 2012

MACKENNA'S GOLD


டியர் நண்பர்களே,

ஜூன் 20ம் தேதி, இரவு இபே-வில் புக் செய்தது, 23ம் தேதி சனிக்கிழமை காலை 11.30க்கு வந்தது காமிக்ஸ் புதையல். 
கிரெடிட் கார்டை ஆன்லைன் பர்சேசுக்கு பயண்படுத்தியது இல்லை.
பல நாட்களாக புக் செய்ய முயற்சித்தும் மேமெண்ட் ஸ்க்ரீன் வரை வந்து பின் அதற்கு மேல் தொடர முடியவில்லை. இதுவே முதல் முறை. அதனால் பல பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக கார்டை ரெடி செய்து செக்யூரிட்டி ரெஜிஸ்ட்ரேஷனை முடிப்பதற்குள் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகியது. அதற்குள் இபேயில் இருந்த இரதப்படலம் XIII மெகா புத்தகம் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கும் விஷயமாக அமைந்து விட்டது.
ஏதேனும் எக்ஸ்ட்ரா காப்பி இருக்குமா அல்லது மறுபதிப்பிடும் திட்டமிருக்கின்றதாவென இபேயிலிருந்தே ஒரு மெயில் அனுப்பினேன். வெகு விரைவாக ஒரு பதில் மெயில் வந்தது. இரத்தப்படலம் XIII மெகா இஷ்யூ காப்பிகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் மறுபதிப்பு என்பது இம்பாஸிபிள் என்றும் சக வாசக நண்பர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் ஏதேனும் எக்ஸ்ட்ரா காப்பி இருக்கின்றதா என்று முயற்சிக்கவும் என்று எனக்கு தெரியப்படுத்தினார்கள். (கொலைகாரக் கலைஞன் பற்றிய என்னுடைய முந்தைய வலைப்பதிவில் மறுபதிப்பு பற்றிய எனது கருத்துக்களை படித்திருப்பர் என்று நினைக்கின்றேன் ;) ) Better luck next time. 
            எடிட்டரின் பரணில் (கொடவுனில்) பழைய புத்தகங்களின் ஸ்டாக் விரைவாக தீர்ந்து வருகின்றது என்று நினைக்கின்றேன். ஏனெனில் இரவுக்கழுகாருக்கு வந்த பார்சலிலிருந்த புத்தகங்களுக்கும் எனக்கு வந்த புத்தகங்களுக்கும் சிறு வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன். மேலும் இந்த வருடத்திய வெளியீடான லயன், முத்து மற்றும் காமிக்ஸ் க்ளாசிக்ஸின் மூன்று புதிய புத்தகங்களும் என் பார்சலில் இருந்தது. இதற்கு பதில் இந்த மாத வெளியீடுகளான (சிகப்புக் கன்னி மர்மம் மற்றும் தற்செயலாய் ஒரு தற்கொலை) இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  எனது முந்தைய பதிவில் கொலைகார கலைஞன் புத்தகம் ஏற்கெனவே என்னிடம் ஒரு காப்பியோ இரண்டு காப்பியோ இருக்கும் என்று தெரிவித்தேன். இப்போது சர்ப்ரைஸாக மீண்டும் ஒரு காப்பி. 

கொலைகாரக் கலைஞனை ஏலத்தில் எடுக்க SOTHEBY'S லண்டன் ஏலக்கடையில் கூடியிருக்கும் கூட்டம்.


    என்னை விடாது துரத்துகின்றான் கொலைகார கலைஞன். இத்தனை காப்பிகள் என்னிடம் சேர்வதைப் பார்த்தால் வருங்காலத்தில் எனது கொள்ளுப் பேரனோ எள்ளுப் பேரனோ, பேத்தியோ கொலைகாரக் கலைஞனை

வருங்கால செய்தி: கொலைகாரக் கலைஞன் புத்தகத்தை ஏலத்தில் எடுக்க லண்டனில் கடும் போட்டி.


SOTHBY'S ஏலக் கடையில் பல கோடி டாலர்களுக்கு விற்று அந்த பணத்தில் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் புதிய காமிக்ஸ்களை வாங்கி படித்து வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

            எனக்கு வந்தது மொத்தம் 69 புத்தகங்கள். இந்த பழைய புத்தங்கள் வாங்காதவர்கள் விரைவாக செயல்பட்டு வாங்குவது நல்லது. இல்லையேன்றால் என்னைப்போல் XIII- மெகா இஷ்யூவை கோட்டைவிட்டுவிட்டு வருதப்பட நேரும். மேலும் கொடவுன் காலியானல், எடிட்டரும் இன்னும் அதிக புது உற்சாகதோடு வருங்கால புதிய வெளியீடுகளை அதிகமாக கவனிப்பார். இந்த புதிய முறை இபே விற்பனை மூலம் இனிவரும் காலங்களில் புதிய புத்தக வெளியீடுகள் எல்லாம் கொடவுனில் தேங்காமல் விற்றுவிடும் என்று உறுதியாக நம்புகின்றேன். பார்சலை பிரித்தபோது எடுத்த படங்களும், சிறிய விளக்கங்களும்.


உறுதியான தரமான பேக்கிங். விரைவான டெலிவரி. எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.


ஒரு ஜயண்ட் சைஸ் புத்தகம். பார்சலின் உள்ளே புத்தகங்கள் நல்ல நிலையில் பத்திரமாக இருந்தது. ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், இரும்புக்கையின் சுட்டு விரலே துப்பாக்கிதானே, பின் ஏன் மாயாவியின் கையில் இவ்ளோ பெரிய துப்பாக்கி? சுட்டுவிரலைக் காட்டி மிரட்டினால் விண்வெளிக் கொள்ளையர்கள் பயப்படமாட்டர்கள் என்று பெரிய துப்பாக்கியை எடுத்துவிட்டாரோ?



பெரிய சைஸ் புத்தகத்தை எடுத்த பிறகு இருக்கும் மற்ற புத்தகங்கள்.



வெளியீடுகளின் படியும், விலையின் படியும் வரிசைப்படுத்தப்பட்ட புத்தகங்கள். இந்தப் படத்தில் முதல் வரிசையில் மேலே வலது புறம் கடைசியில் இந்த வருடம் வெளியான, எமனின் தூதன் Dr.7, விண்ணில் ஒரு குள்ளநரி, கொலைகாரக் கலைஞன்.  



    நீண்ட வருடங்களுக்குப் பிறகு வாங்காமல் விட்டுப்போன புத்தகங்கள் இப்போது கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு காமிக்ஸ் புதையல். கொலராடோ (ஓமர் ஷெரீப்) கையில் தங்கக் கட்டி கிடைத்தவுடன் கண்களில் தென்படும் மகிழ்ச்சியைப் பாருங்கள். அதே மகிழ்ச்சி எனக்கும். அதனாலேயே இதை மெக்கனாஸின் தங்கப் புதையலைப் போல் என்று ஒப்பிடவே தலைப்பையும், அந்த சினிமாவின் படங்களையும் இங்கே சேர்த்திருக்கின்றேன். (கொலராடோ என்ற நதியின் பெயர் நம் வெஸ்டர்ன் காமிக்ஸ் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர்.)

விண்ணில் ஒரு குள்ளநரி மற்றும் எமனின் தூதன் Dr.7 புத்தகங்கள் பற்றிய பதிவு (தாமத) தயாரிப்பில் உள்ளது.

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

அன்புடன்
பாலாஜி சுந்தர்.

Thursday 21 June 2012

கொலைகாரன் வரான் ஓடுங்க...

ஜானி நீரோ தோன்றும் கொலைகாரக் கலைஞன்


            இது ஒரு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளியீடு, அதனால் இது ஒரு மறு பதிப்பு. நினைவில் நிற்கும் அருமையான சித்திரங்கள் கொண்ட, விறு விறுப்பான கருப்பு வெள்ளைப் படங்களைக் கொண்ட கதை. முதல் பதிநான்கு பக்க படக்கதையும், கார் கடலில் பாயும் படங்களும் ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். இதற்கு மேல் இந்த கதையைப் பற்றி சொல்லவதற்கு ஏதும் இல்லை.


        முதல் முறையாக முத்து காமிக்ஸில் குறைந்தது 30லிருந்து 35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த புத்தகம். முதல் வெளியீடான முத்து காமிக்ஸை நன்கு வளர்ந்த பெரியவர்களே என்னிடமிருந்து சுட்டு விட்டார்கள். பிறகு மீண்டும் முத்து காமிக்ஸில் ஒருமுறையும், காமிக்ஸ் க்ளாசிக்ஸில் ஒரு முறையும் வெளிவந்தது என்று நினைக்கின்றேன். என் கலக்‌ஷனில் நிச்சயம் ஒரு புத்தகம் இருக்கும் என்று தெரிந்தே இந்த புத்தகத்தை வாங்கினேன். 

            அதிக அளவு கருப்பு மசி உபயோகத்தினால் நிறைய பக்கங்களின் படங்கள் கருப்பாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றது. இந்த கருப்படிக்கப்பட்ட படங்கள், பவர் கட்டிலிருக்கும் தமிழக இரவுகளில் கதை நடக்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.இந்த கதையின் முந்தைய பதிப்புகளுக்கும் இந்த மறுபதிப்பிற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அப்போது என்னிடம் கம்ப்யூட்டரும், பதிவேற்றுவதற்கு வலைப்பூவும் இல்லை. அவ்வளவே.

            இந்த காமிக்ஸின் மெல்லிய அட்டையின் தரம், என் கலக்‌ஷனில் இருக்கும் பழைய பல காமிக்ஸின் தரத்திலேயே இருக்கின்றது. என் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் சில மெல்லிய அட்டைகள் லேசாக மடித்தாலே ஒடிந்து விழுந்துவிடும். இந்த புத்தகத்திற்காவது, காமிக்ஸ் க்ளாசிக்ஸின் மற்றொரு வெளியீடான தலைவாங்கிக் குரங்கு புத்தகத்தின் தடிமனான அட்டையைப் போல் போட்டிருக்கலாம். மீண்டும் வாங்கியதற்கு திக் அட்டை ஒரு ஜஸ்டிபிகேஷன் என்று என் மனதை நானே சமாதானப்படுத்திட உதவியாக இருக்கும். எப்படி ஆனாலும் இதே கதையை மீண்டும் ஒரு மறுபதிப்பு கருப்பு வெள்ளையிலோ அல்லது கலரிலோ வெளியிட்டாலும் வாங்காமல் இருக்கப் போவதுமில்லை, தலைக்கேறிய காமிக்ஸ் போதை தலையை விட்டு கீழே இறங்கப் போவதுமில்லை.

அன்புடன்,
BALAJI SUNDAR.

Wednesday 20 June 2012

லயன் கம் பேக் ஸ்பெஷல் ஒரு இனிய அனுபவம்

லயன் கம் பேக் ஸ்பெஷல் ஒரு இனிய அனுபவம்



கடைசியாக எப்போது காமிக்ஸ் புத்தகம் வாங்கினேன் என்று தெரியவில்லை. பல வருடங்கள் ஆகிவிட்டிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பேப்பர் கடைக்கு செல்லும் போதும் காமிக்ஸ் புத்தகம் இருக்கின்றதா என்று விசாரிக்கும் போதும், இல்லை என்ற சொல்லே பதிலாக வந்தபோதும் விசாரணையை மட்டும் என்றும் நிறுத்தியது இல்லை.

சென்னையில் இருந்தாலும், என் ஆர்வத்திற்கு ஏற்றபடி நான் வாங்கும் புத்தகங்கள் எப்போதுமே எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கடைகளில்  கிடைக்காது. இப்போதும் 1 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கடைக்குச் சென்றுதான் புத்தகங்களை வாங்கி வருகின்றேன். டிஸ்கவரி புக் பேலஸ் செல்ல வேண்டும் என்றால் போக வர 32 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். திரு. கிங் விஸ்வாவின் http://tamilcomicsulagam.blogspot.in/ வலைதளத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றிய தகவலை படித்து, உடனே அங்கு போய் கிடைத்த  6 காமிக்ஸையும் அள்ளி வந்துவிட்டேன். அந்த லக்கி ட்ரிப் பற்றிய விவரங்களை இந்த தளத்திலேயே என்னுடைய முதல் வலைப்பதிவை படிக்கலாம்.

இந்த பதிவில் இடம் பெறும் படங்கள் அனைத்தும், நமது லயன் காமிக்ஸூக்கும் நோட்டுப் புத்தக அட்டைகளும் தரத்தில் எப்படி ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்ற என்பதற்காக இடம் பெறுகின்றன.

    இப்போழுதெல்லாம் பள்ளிக்கூட நோட்டு புத்தகங்கள் ஆப்செட் பிரிண்டிங்கில் வண்ண மயமான அட்டைப் படங்களுடன் வருகின்றது. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தக அட்டையைப் பார்த்ததும் இது பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தைப் போல இருக்கின்றதே என்று மனதில் தோன்றியது. பில்லிங் கவுண்டர் டேபிள் மேலே ஒரு வண்ண பள்ளி நேட்டு சாம்பிளைப் பார்த்து அது வேறு ஏதே காமிக்ஸ் புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தகத்தை பார்த்த பிறகு இப்போது கலர்புல் அட்டை கொண்ட எந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தாலும் காமிக்ஸ் புத்தகத்தை பார்க்கும் உணர்வு தோன்றுகிறது. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தக அட்டைப் பட டிசைன் அந்த அளவுக்கு நேர்த்தியாக உருவாக்கப்பட்டு கலர் மேட்சிங் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முன்னெப்போதும் இருந்ததை விட அதிகமாகவே எடிட்டர் சிரத்தை எடுத்திருக்கின்றார்.

        இப்போது கதைகளுக்கு வருவோம். லக்கி லூக்கின் ஒற்றர்கள் ஒராயிரம் கதை தரமான ஆர்ட் பேப்பரில், அருமையான வண்ண ஓவியங்கள். சிறந்த 
மொழிபெயர்ப்பு. ரசிக்கும் படியான கதை. இந்த கதையில் எனக்கு பிடித்த ஒரு ”கட்டத்தை” இங்கு அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன். பல இடங்கள் ரசிக்கும் படியான விதத்தில் இருந்தாலும் இந்த ஒரு கட்டத்தை மிகவும் ரசித்தேன்.

கேப்டன் பிரின்ஸ் & கோவின் – கானகத்தில் களேபரம்.

    அருமையான ஆர்ட் பேப்பரில், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணப் படங்கள். விறு விறுப்பான மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை. மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் வரைகலை. ஆங்கில ஆக்‌ஷன் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் உள்ள சித்திரங்கள் எல்லாம் பேசும்படங்கள். பிரின்ஸைக் குறிவைக்கும் துப்பாக்கியின் தோட்டா மரத்தூணை சிதறடிப்பதும், ஒடும் ஜின்னைக் குறிவைத்து வரும் தோட்டா, மரக்கிளையில் இடித்துக் கொள்ளாமல் ஜின் தலையை குனியும் போது அந்த மரக்கிளையை சிதரடிப்பதும் சிறந்த உதாரணங்கள். அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல், கொட்டும் மழையில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சி நெஞ்சைவிட்டு நீங்காதவை. இந்த கேப்டன் பிரின்ஸின் கானகத்தில் களேபரம் படக்கதை, என்றென்றும் என் பசுமையான நினைவுகளில் இடம் பெறும் ஒன்று.

        இந்த சாகச கதையில், கேப்டன் பிரின்ஸின் கதையை முடிக்கத் துடிக்கும் வில்லன் கர்ட் ப்ரான்ஜன், ஏன் பிரின்ஸின் எதிரியானான், கேப்டன் பிரின்ஸுக்கும் வில்லன் கர்ட் ப்ரான்ஜனுக்கும் இடையே விரோதம் ஏற்பட காரணம் என்ன என்பதை 94வது பக்கத்தில் கடைசி படத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் போது, ஒரு நாலு அங்குல சதுரத்தில் எழுத்துக்களாகவே விவரித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், கதையை படித்து முடித்த பின் மனதில் தோன்றும் ஒரு சிறிய குறையும் இல்லாது போயிருக்கும். ஒருவேளை எனக்குதான் புரியவில்லையோ? பிரின்ஸும், கர்ட் ப்ரான்ஜனும் ஏற்கெனவே வெளிவந்த ஒரு முந்தைய வெளியீட்டில் மோதிக்கொண்டனரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஏனெனில் 2012க்கு முன் காமிக்ஸ் வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.  

இரும்புக்கை மாயாவியின் கதைகள் 2.
1. இரும்புக்கை மாயாவி vs Dr. Magno
2. கண்ணாமூச்சி ரே ரே
        இந்த இரண்டு கதைகளும் சாதா பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை கதைகள். இந்த இரண்டு கதைகளும் சேர்த்து 77 பக்கங்களில் அச்சாகி இருக்கின்றது. இதில் 37 பக்கங்களின் மேலே இரும்புக்கை மாயாவி, இரும்புக்கை மாயாவி என்று அச்சாகி இருக்கும் தலைப்புகளை எடிட் செய்திருந்தால் மிச்சமாகும் இடத்தில் இன்னொரு கதையை வெளியிட்டிருக்கலாம்.
பிலிப் காரிகனின் சிறையில் ஒரு சீமாட்டி.
        இட நெருக்கடி காரணமாக இந்த கதையின் தலைப்பை மார்ஜின் ஸ்பேஸ் இடத்தில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நினைகின்றேன். இட நெருக்கடியை சமாளிக்கத்தான் மார்ஜின் ஸ்பேசில் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கிறது என்றால் அது பாராட்டத் தகுந்த விஷயம். அதே சமயம் இந்த கதையின் முடிவில் இருக்கும் வெற்று இடத்தை அட்ஜஸ்ட் செய்து முன்னே கொண்டுவந்து இருந்தால் கதையின் தலைப்பை சிறப்பாக அச்சிட இடம் தாராளமாக இருந்திருக்கும்.

        இந்த கதை டெய்லி வகையை சேர்ந்தது என்று எடிட்டர் அவர் ப்ளாக்கில் ஏற்கெனவே சொல்லி இருக்கின்றார். பத்திரிகையில் இந்த கதை தினத்தந்தி சிந்துபாத் கதை போல வந்த கதை. பேஜ் லே அவுட்டில் இடம் பெறும் ஒவ்வொரு வரிசை கட்டங்களும் ஒவ்வொரு நாள் வந்த கதையாக இருக்க வேண்டும்.

        இந்த கதையின் படங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் சித்திரங்களின் துல்லியமும், நேர்த்தியும் மனதை ஈர்க்கிறது. சில இடங்களில் மட்டும் கருப்பு மையின் அளவை மட்டுப்படுத்தியிருந்தால் அந்த சித்திரங்களும் இன்னும் தெளிவாக இருக்கும்.

               மொழிபெயர்ப்பு சில இடங்களில் மர்க்ளேவை ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்பத்தை உண்டு பண்ணுகின்றது. மர்க்ளே கதாபாத்திரம் ஒரு முதிர்கன்னி என்பதால் படத்தைப் பார்த்தால் ஒரு ஆணின் தேற்றமே தெரிகின்றது (எடிட்டர் என்ன செய்வார், அந்த கதாபாத்திரத்திற்கு அனைத்து தமிழர்களையும் மச்சான் ஆக்கிய நடிகையின் (சித்திரத்தை)போட முடிந்திருந்தால் போட்டிருக்க மாட்டாரா என்ன! அப்போதும் இது மாதிரி குழப்பம் வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் அதற்கெல்லாம் வெளிநாட்டு காமிக்ஸ் உரிமையாளர்களை மச்சான்களாக்காததால் சம்மதிக்க மாட்டர்கள்). 154-வது பக்கத்தில் வில்லன்கள் பேசிக் கொள்ளும் போது மிஸஸ் மர்க்ளேவை, அவன் என்றே குறிப்பிடுகிறார்கள். இப்படியெல்லம் வாசர்களுக்கு குழப்பம் வரும் என்று தெரிந்த்துதான் கதையின் தலைப்பையே சிறையில் ஒரு சீமாட்டி என்று வைத்திருக்கின்றதே அப்புறம் ஏன்யா உனக்கு குழப்பம் என்கிறீர்களா. சரி, சரி, என் குழப்பத்தை நானே தெளிவித்துக் கொள்கிறேன்.

            ஏஜெண்ட் பிலிப் காரிகன் கதைகளைப் பொறுத்தவரை, அவருடைய சாகச கதைகள் வேறு வேறாக இருந்தாலும், தனித்தனி புத்தகமாக இருந்தாலும் எப்போதும் ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் ஒரு லிங்க் இருந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு டாக்டர் செவன், டாக்டர் கர்லா கோபக் போன்ற கதாபாத்திரங்கள். இந்த கதையின் வில்லி மிஸஸ் மர்க்ளேயும் அப்படி ஒரு கேரக்டர் போலிருக்கிறது. மிஸஸ் மர்க்ளேயும், காரிகனுடன் மோதிக்கொண்டு சிறைச்சாலைக்கு போன கதையையும் ஒரு நாலுவரி வார்த்தையில் விளக்கி இருக்கலாம். ஒருவேளை அந்த கதையும் ஏற்கெனவே லயனில் வந்து நான் தான் வாங்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இந்த கதை ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படத்திற்கு, படம் தொடங்கிவிட்ட பிறகு, ஒரு மணி நேரம் கழித்து போய் முக்கியமான காட்சிகளை பார்க்காமல் தவற விட்ட  உணர்வே மிஞ்சுகின்றது.

        எப்போதும் எடிட்டர் திரு. விஜயன் அவர்களைப் பற்றிய என்னுடைய கருத்து எப்படிப்பட்டதென்றால், திரு. விஜயன் காமிக்ஸ் வெளியிடுவதை பணம் சம்பாதிக்கும் பிசினஸ்ஸாக செய்யவில்லை, அவருக்கு காமிக்ஸ் புத்தகங்கள் மேல் உள்ள தீராத காதலால் தான் இந்த துறையில் இருக்கின்றார். ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனுக்குள்ளும் காமிக்ஸை அச்சிட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கும். அதை நடைமுறைப்படுத்த வசதியும் வாய்ப்பும் தைரியமும் எடிட்டர் திரு. விஜயனுக்கே இருக்கின்றது. லயன் கம் பேக் ஸ்பெஷல் வெளியிட்டதன் மூலம், திரு. விஜயன் தான் ஒரு சிறந்த காமிக்ஸ் ரசிகன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். 

        மொத்தத்தில் லயன் கம் பேக் ஸ்பெஷல் ஒரு அதிரடியான மறுவரவு. லயன் கம் பேக் ஸ்பெஷல் புத்தகத்திற்கு என்றும் என் மனதில் ஒரு நிரந்தர இடம் உண்டு.

        ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் அவசியம் வாங்க வேண்டிய ஒரு புத்தகம், லயன் கம் பேக் ஸ்பெஷல். ரசிகரல்லாதோரும் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்தால் அவர்களும் நம்ம காமிக்ஸ் ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்கள்.
நண்பர்களே உங்களது கமெண்ட்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். (மச்சான் நடிகை பற்றிய கமெண்ட்களைத் தவிர்த்து :P இல்லையென்றாலும் பரவாயில்லை பின் எப்படித்தான் பொழுது போவதாம்:))


அன்புடன்,
பாலாஜி சுந்தர்.

Saturday 16 June 2012

VIKRAM AND VETHAL


VIJAYA VIKRAMADITYA


COMEBACK SPECIAL. FIRST THINGS FIRST.

பல சிரமங்களை கடந்து, பல கஷ்ட நஷ்டங்களை சந்தித்தும் சற்றும் மனம் தளராத நவீன விஜய விக்ரமாதித்தன் லயன் முத்து எடிட்டர் திரு விஜயன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் காமிக்ஸ் வேதாளத்தை பிடித்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு தன் காமிக்ஸ் ரசிகர்களை நோக்கி தனது 40வது வருட பயணத்தை COMEBACK SPECIAL-ல் வெளியீட்டின் மூலம் தொடர்கிறார். அவர் தோளில் தொங்கும் வேதாளம் எள்ளி நகைத்து பின் வரும் கேள்வியை அவரிடம் கேட்டது “முயற்சியில் தளராத விஜய விக்ரமாதித்தனே இந்தியாவில் வெளிவந்து கொண்டிருந்த காமிக்ஸ்கள் எல்லாம் ஏன் திடீரென்று நின்றுவிடுகின்றன – இந்த கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ மவுனமாக இருந்து விட்டால் நான் மீண்டும் உன்னுடன் வராமல் மீண்டும் தனி மரத்திற்கே சென்றுவிடுவேன்” என்று கூறியது. நமது எடிட்டர் விஜய விக்ரமாதித்தர் என்ன பதில் கூறியிருப்பார் என்று அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அவர் முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்க அவரை வாழ்த்துகிறேன். எந்தவித தடையும், தடங்கலும் இன்றி, நம் எல்லோருக்கும் அவரின் சற்றும் மனம் தளராத  முயற்சியால் வாரா வாரத்திற்கு காமிக்ஸ்  கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று சுயநலத்தோடு பொதுநலமும் கலந்து பிரார்த்திக்கின்றேன். மாதத்திற்கு ஒழுங்கா ஒரு காமிக்ஸ் கிடைத்தாலே பெரிய விஷயம் இதிலே வாரா வாரத்திற்கு காமிக்ஸா என பல வாசகர்கள் என்னை திட்டுவது ஒரு பக்கம் கேட்கிறது, மற்றொரு பக்கம் மாதத்திற்கு ஒரு காமிக்ஸ்க்கே முழி பிதுங்குது, இதிலே இவன் வாரத்திற்கு ஒன்று என்று சதிப் பிரார்த்தனை  செய்து என்னை வம்பிலே மாட்டி விடுறதற்கு இவன் என்னமா சதி பன்றான் என்று எடிட்டர் பல்லை நற நறப்பதும் மனக் கண்ணில் தெரிகிறது. ம்ம்… நம்பிக்கை தான் வாழ்க்கை. என் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். அதற்கு பொறுமையும் நம்பிக்கையும் கொடு இறைவா என்று மற்றோரு பிரார்த்தனையையும் செய்து கொள்கிறேன்.
ஒரே மாதிரியான வேலையை பல பேர்கள் தனித் தனியாக போட்டியுடன் செய்து கொண்டிருக்கும் போது, அதில் யாராவது ஒருவர் மட்டும், அனைவரும் பாராட்டும் விதமாக செயல் பட்டிருந்தால் அவரை ஆங்கிலத்தில் விளிக்கும் ஒரு சிறப்பு சொற்றொடர் உண்டு அது “HE IS ALONE IN THE CROWD” என்று சொல்வார்கள். ஆனால் எடிட்டரை பொறுத்தவரை, காமிக்ஸ் வெளியீட்டாளர்களில் அவர் ஒருவரே இருக்கின்றார். தமிழ் காமிக்ஸ் என்றில்லை, ஆங்கில காமிக்ஸிலும் இந்தியாவில் வேறு யாரும் இல்லை. அமர் சித்திர கதாவை விட்டு விடுங்கள், அந்த காமிக்ஸின் தன்மைக் களமே வேறு. அப்படியே ஏதேனும் காமிக்ஸ் வெளியீட்டாளர்கள் இருந்தாலும் அவைகள் இங்கு (இந்த விலையிலும், தமிழிலும்) கிடைப்பதும் இல்லை.
பல வருடங்களாக எடிட்டர், காமிக்ஸை சந்தைப் படுத்துவதில் அவர் சந்திக்கும் சிரமங்களையும், விற்பனையில் ஏற்படும் நஷ்டங்களையும் அவர் ஹாட் லைனில் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி, EDITOR VIJAYAN IS ALONE AND THERE IS NO CROWD OF COMIC LOVERS IN TAMIL NADU. 40 வருடங்கள் இந்த துறையில் இருக்கும் அவருக்கு எந்த வகையிலும் நான் புதிய விற்பனை மந்திரங்களையோ தந்திரங்களையோ சொல்லிவிட முடியாது.  ஆனால் எனக்குத் தோன்றும் சில எண்ணங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன். எனக்கு காமிக்ஸ் மேலுள்ள தீராத காதலே இந்த பதிவுகளுக்கு முழு முதல் காரணம். என் கருத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எடிட்டரும், அனைத்து காமிக்ஸ் ரசிகர்களும் மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முத்து காமிக்ஸின் வெற்றி.
முத்து காமிக்ஸ் முதன் முதலில் வெளிவந்த போது, ஒவ்வொரு தமிழக இல்லமும் இருந்த நிலை எப்படி என்று சுருங்க சொல்ல வேண்டும் என்றால், அனைத்து வீடுகளிலும் ரேடியோ கூட இல்லாத நிலை. தனி மனிதன் ரேடியோ வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் லைசன்ஸ் வாங்க வேண்டும். அந்த லைசன்ஸை வருடா வருடம் பணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். யாராவது லைசன்ஸ் இல்லாமல் ரேடியோ வைத்து இருந்தால் அவர்கள் மேல் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைக்கு ஏதாவது ஒரு வீட்டில்தான் ட்யூப் லைட்டை பார்க்க முடியும். பொழுது போக்கு என்றால் சினிமா மட்டுமே. வெகு சில தினசரி பேப்பரும், சில வார பத்திரிகையுமே வெளிவந்தது. இரண்டு சக்கர வாகனம் என்றால் யெஸ்டி, ராஜ்தூத் மற்றும் புல்லட்டும், நான்கு சக்கர வாகனம் என்றால் அம்பாசிடர், பியட் மற்றும் ஸ்டாண்டர்ட் கார்களே இருந்தது. 1969ல் தான் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் பதித்தார். எனக்கு அப்போது அது ஒரு நம்ப முடியாத ஆச்சர்யத்தை தரும் விஷயமாக இருந்தது. ஏனெனில், குழந்தைப் பருவத்தில் நீல வானத்திற்கு அப்பால் ஏதும் இல்லை என்று முழுமையாக நம்பி இருந்தேன். நீல வானத்திற்குள்தான் நிலா இருக்கின்றது என்று நினைத்திருந்தேன். ஆனால் நீலக்கலர் வானத்தை தாண்டி பல கோள்களும் பல கேலக்ஸிக்களும் உள்ளது என்று ப்ளாஷ் கார்டன் கதைகளைப்படித்தும், மந்திரவாதி மாண்ட்ரெக் கதைகளைப்படித்தும் தெரிந்து கொண்டேன் (மந்திரவாதி மாண்ட்ரெக்கிற்கு ஒரு வேற்று கிரக மன்னன் மக்னான் நண்பர், அடிக்கடி சோப்பு பபுள் ஒன்றை அனுப்பி மாண்ரெக்கை அழைத்துக் கொள்வார்).
அந்த நாட்களில் முத்து காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு திரில்லிங்கான 3D படம் பார்ப்பது போன்ற அனுபவம். இதுவே முத்து காமிக்ஸ் வெற்றியின் காரணம்.
சிறு வயதில் முத்து காமிக்ஸுக்கு அடுத்து நான் படித்து ரசித்தது இந்திரஜால் காமிக்ஸ்களை. இந்திரஜால் காமிக்ஸ்கள் மும்பையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த காமிக்ஸ்கள் ஆங்கிலம், தமிழ் மற்றும் பல மாநில மொழிகளில் வெளியிடப் பட்டது.
இன்றய நிலை அப்படி இல்லை. டிவி வீட்டிற்குள் வந்து ஹாலில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு செய்யக்கூடாத அழிச்சாட்டியம் அத்தனையையும் செய்து கொண்டு இருக்கின்றது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று நிருப்பதற்கு, கம்ப்யூட்டர் நமது வாழ்வில் வந்து டிவியை சிறிது ஓரம் கட்டி உலகத்தையே நம் வீட்டுக்குள் கொண்டு வந்தது என்றால், அனைத்தையும் பின்னுக்கு தள்ளி, அதற்கும் மேலே ஒரு படி போய்விட்டது செல்போன். லயனும், முத்து காமிக்ஸூம் புதிய உத்வேகத்துடன் வெளிவருவதற்கு கம்ப்யூட்டருக்கும், செல்போனுக்கும் முக்கிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இவ்விடத்தில் நான் சொல்ல விழைவதை எல்லாம் வரிசை படுத்திவிடுகிறேன்.

டியர் எடிட்டர் சார்,

  1. லயன் கம்பேக் ஸ்பெஷலைப் படித்தேன். இந்த புத்தகத்தை வாங்கிய போது மனது மிகவும் சந்தோஷப்பட்டது. லக்கி லூக்கும் கேப்டன் பிரின்ஸும் சூப்பர். அதாவது பாதி புத்தகம் சூப்பர். கருப்பு வெள்ளை கதைகளான இரும்புக்கை மாயாவியையும், சீக்ரெட் ஏஜெண்ட் காரிகனையும் தவிர்த்திருக்கலாம். இப்படி சொல்வதால் நான் கருப்பு வெள்ளை கதைகளை வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொண்டிட வேண்டாம்.
  2. இனி உங்கள் வெளியீடுகள் அனைத்தையும் கம்பேக் ஸ்பெஷல் மற்றும் என் பெயர் லார்கோ சைசிலேயே கலரில் வெளியிட வேண்டும்.
  3. பாக்கெட் சைஸிலிருந்தும் ரூ.10/- காமிக்ஸிலிருந்தும் வெளியே வாருங்கள். குமுதம் வார பத்திரிகையின் இன்றைய விலை தமிழகம் மற்றும் புதுவைக்கு ரூ.10/- பிற மாநிலங்களில் ரூ.12 (அட்டையுடன் சேர்த்து 118 பக்கங்கள்). ஆனந்த விகடன் வார பத்திரிகை தமிழகம் மற்றும் புதுவைக்கு ரூ.17/- பிற மாநிலங்களில் ரூ.19 (அட்டையுடன் சேர்த்து 100 பக்கங்கள் பெரிய சைஸ் புத்தகம்). ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் எப்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்துவரும். இரண்டு வார பத்திரிகைகளின் விலையிலும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்துவந்தது. சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஆனந்த விகடன் தன்னுடைய சைசை மாற்றி விலையையும் மாற்றிவிட்டது. இந்த விலையிலும் ஆனந்த விகடன் அட்டையில் தமிழ் வார இதழ்களில் நம்பர் 1 என்றும் போட்டுக் கொள்கிறது. இது ஒரு சிறிய உதாரணம். இந்த இரண்டு பத்திரிகை குழுமங்களும் பல பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இதை இங்கே சொல்வதற்கு காரணம் ரூ.5/- ரூ.10/- காமிக்ஸ்களை தவிர்த்து விடுங்கள்.
  4. என்னுடைய தாழ்மையான கருத்து, இன்றைய நிலவரப்படி விற்பனையை விலை நிர்ணயிப்பதில்லை. உயர்ந்த தரமும் விளம்பரமும்தான் விற்பனையை தீர்மானிக்கிறது. விளம்பரம் இருந்தாலும் தரமற்ற பொருட்கள் விற்பனையாவதில்லை.
  5. மற்றுமொரு உதாரணம் – மொபைல் போன்கள் எல்லாம் சில ஆயிரம் ரூபாய் விலையில் விற்றுக் கொண்டிருந்த போது, ஆப்பிள் கம்யூட்டரின் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை வெளியிட்டார். அதன் விலை ஏறத்தாழ ரூ.50,000/-. இண்டர்நெட் உலகில் ஒரு கதை உண்டு. அதாவது ஐபோன் ஐடியா ஸ்டீவ் ஜாப்ஸுடையது, ஆனால் அதை உருவாக்கியது ஆப்பிள் லேப்பில் இருந்த பல எஞ்சினியர்கள். ஒவ்வொரு புரோட்டோ டைப்பையும் ஸ்டீவ் ஜாப்ஸ்சிடம் கொடுப்பார்களாம், அவரும் அதை உபயோகப்படுத்திவிட்டு இன்னும் மேம்படுத்தவேண்டும் என்று திருப்பி லேப்பிலேயே கொடுத்து விடுவாராம். அப்படி பல முறை மெருகூட்டப்பட்டு பின்புதான் ஐபோன் வெளிவந்தது. ஆனால் அதன் விலையை பார்த்து அனைவரும் சொன்ன கருத்து இது, இந்த விலையில் விற்பனையாகாது. இது சொற்பமான பணக்காரர்களின் விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள் என்று கூறினார்கள். அனைத்து செல்போன் விற்பனையாளர்களும் கூறிய கருத்து ”ஐபோன் எங்களுக்கு போட்டியில்லை”.
இன்றைய நிலையில் ஐபோன் அனைத்து செல்போன் விற்பனையையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கின்றது. ஐபோனைப் போல மற்றோரு டச் போனை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர மற்ற செல்போன் கம்பெனிகளுக்கு 6 வருடம் பிடித்தது. அதுமட்டுமல்லாமல் இன்று அனைத்து செல்போன் கம்பனிகளும் சிறிது கூட தயக்கமே இல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றால் அது – ஐபோனை போலவே மற்றொரு போனை காப்பி அடித்துத்  தயாரித்து சந்தைப்படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த உதாரணம் எதற்கு சொல்கிறேன் என்றால், தரம் இருந்தால் போதும் அதுவே விற்பனைக்கு விளம்பரம்.
  1. கருப்பு வெள்ளை காமிக்ஸ்களுக்கு வேண்டுமானால் காமிக்ஸ் கிளாசிக்ஸ் லேபிளில் வெளியிடலாம் அல்லது வேறு ஒரு புதிய லேபிளில் ( VINTAGE COMICS -  விண்டேஜ் காமிக்ஸ் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் அல்லது எவர்க்ரீன் காமிக்ஸ்).  பெயர் எதுவாக இருந்தாலும் சைஸ் புதிய சைஸ் மட்டுமே. அதாவது கம்பேக் ஸ்பெஷல் அண்ட் என் பெயர் லார்கோ சைஸ்.
  2. கடைசியாக ஒரு விஷயம். மறுபதிப்புகளைப்பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து. நான் மறுபதிப்புகளுக்கு எதிரி இல்லை. மறுபதிப்புகள் வந்தால் அதை முதலில் வாங்க க்யூவில் நிற்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். நாம் கவனம் செலுத்த வேண்டியது, புதிய வெளியீடுகளையும் புதிய கதைகளையுமே. முத்துவிலும் லயனிலும் பழய கதை போடுவதை முற்றிலுமாக தவிர்க்கலாம். மறுபதிப்புகளை ஒரு ஆர்டரில் செய்யலாம் என்பது என் கருத்து. உதாரணத்திற்கு மறுபதிப்புகளை கலெக்டார்ஸ் எடிஷனாக வெளியிடுங்கள். இரத்தப்படலம் ரூ.200/- விலை புத்தகத்தைப்போல ஆனால் சைஸ் புதிய சைஸ்ஸில் இருக்க வேண்டும் மற்றும் கலரில் இருந்தால் குரங்கு கள்ளையும் குடித்து தேளும் கொட்டிய கதைதான் வாசகர் நிலை. கலெக்டார்ஸ் எடிஷனுக்கு கதை தேர்ந்தெடுப்பதென்றால், முத்துவில் வெளி வந்த 10 கதையோ அல்லது 5 கதைகளையோ வரிசைப்படி தேர்வு செய்து ஒரே புத்தகமாக பெரிய சைசில் கனமான அட்டையுடன் 100 விலையிலோ அல்லது 200 விலையிலோ வெளியிடலாம். கலர் பாதி கருப்பு வெள்ளை பாதி வேண்டாம். ஒன்று முழுக்க கலர் அல்லது முழுக்க கருப்பு வெள்ளை. இந்த ஒட்டு மொத்த மறுபதிப்பிற்கு பேட்மேன், இரவுக்கழுகு டெக்ஸ் வில்லர், கேப்டன் பிரின்ஸ், டைகர், சீக்ரெட் ஏஜெண்ட் காரிகன், PHANTOM, MANDRAKE AND FLASH GORDON ஆகிய குழுவிற்கு விதி விலக்களிக்கலாம். இவர்களை மட்டும் கூட்டத்தில் இருந்து விடுவித்து ஒவ்வொரு தனி வீரரின் சாகசங்களையும் இரத்தப்படலத்தைப் போல ஒரே புத்தகமாக போடலாம். இரத்தப்படலத்தை நீங்கள் ஒரே புத்ததகமாக போட்ட சாதனை அதன் மூல கர்த்தா பப்ளிஷர்களே செய்யாத ஒரு விஷயம். அந்த புதிய முயற்சியே இன்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் விதத்தில் வேன் ஹெம்மியின் லைப்ரரியிலே நம் தமிழ் இரத்தப்படலம் மெகா இஷ்யூ. என்னைப் பொறுத்தவரை இரத்தப்படலம் மெகா இஷ்யூ ஒரு புதிய முயற்சி ஆனால் அந்த புதிய முயற்சியே காமிக்ஸ் ஜாம்பவான்களையே உங்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. (ஆர்வக் கோளாரில் ப்ளாஷ் கார்டனையும் சேர்த்துவிட்டேன்.)
  3. PHANTOM, MANDRAKE AND FLASH GORDON இவர்களது கதைகளையும் தனித்தனியாக பெரிய சைசில் நல்ல பேப்பரில், கலரில் வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும் என்பது எனது மற்றுமொரு தாழ்மையான கருத்து. பேண்டம் மற்றும் மாண்ரெக் கதைகளில் நல்லதொரு ஒழுக்கம் மறைபொருளாக இழையோடும். இந்த கதைகள் சிறுவர்கள் வாழ்வில் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவும். ப்ளாஷ் கார்டன் கதைகளில் அறிவியல் சார்ந்த சுவாரசியமான பல விஷயங்கள் வெளிப்படும். இவை தவிர மற்றுமொரு சாகச வீரர் இருக்கின்றார் அவர் ZORRO. வாசகர் கருத்துக்குப் பின் அவரையும் ஒரு பெரிய சைஸ் புத்தகத்தில் முயற்சிக்கலாம். சமீபத்தில் வந்த க்ரிஸ்டபர் நோலனுடைய பேட் மேன் பிகின்ஸ்ஸையும், டார்க் நைட்டையும் முயற்சிக்கலாம். இந்த வரிசையில் மூன்றாவது படமான டார்க் நைட் ரைசஸ், ஜுலை மாதம் 20ம் தேதி வெளிவருகிறது. அந்த சமயத்தில் இரண்டு பாக கதையோ அல்லது மூன்று பாகமோ நன்கு விற்பனையாகலாம்.
உஸ்ஸ் ஒருவழியாக முடித்துவிட்டேன்
Thats all for now friends,
see you soon in your comments.
Balaji Sundar.

Friday 15 June 2012

Prometheus HD Quality Wallpapers

Prometheus HD Quality Wallpapers

All are widescreen

Right click on the picture and choose "save as" option.
Sorry friends, this post is also not optimized for mobile viewing.

(all copyright is owned by its respective owners)

Prometheus is a Prequel to the first Alien movie directed by director Ridley Scott.  
The first Alien movie was released 33 years ago in 1979. Hope this movie screen is less darker than the first Alien movie. Some of my friends and friends of friends feedback of the movie is not good. Their main complaint is that they are not able to follow the story-line and also they are not comfortable with the 3D spectacles provided by the multiplex theater companies. The theater charges for the glass and keep on re-using it endlessly without bothering about cleaning or the quality. I also had the same experience. Replacing a faulty 3D glass can be only done at the interval or else you have to go for exchange in the middle of the movie. Now a days Hollywood movie production companies are preferring to release their movies in 3D by converting the 2D movies digitally. May be they are resorting to this to prevent piracy. Here are some HD quality widescreen wallpapers. The galaxy level universal planetary atlas is mind boggling (First wallpaper). The tag line of the movie is that "the search for our beginning could lead to our end". In my opinion the Prometheus is not on search of our beginning. It really is a movie in search of the beginning (origin) of the double mouthed, sharp teethed, acid blooded Alien !. Let us hope that the sequels to the Alien prequel Prometheus may lot more better than this.





Avengers HD Quality Wallpapers

Avengers HD Quality Wallpapers

 All are widescreen.

Right click on the picture and choose "save as" option.

Sorry friends, this post is not optimized for mobile viewing.


(copyright is owned by its respective owners)