Wednesday 12 September 2012

PRESERVING COMIC BOOKS–FEEDBACK

 indrajalcomicscollectio_thumb[6]
Dear Friends,
சென்ற பதிவிற்கான ஒரு பின்னூட்டத்தில் நண்பர் சிபி தனது காமிக்ஸ் புத்தகங்களை பத்திரப்படுத்தி இருக்கும் விதத்தை நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக எனக்கு இமெயிலில் சில படங்களை விவரத்தோடு அனுப்பி இருந்தார். அந்த படங்களையும் விவரங்களையும் அந்த பதிவையே எடிட் செய்து சேர்த்திடவே நினைத்தேன். அப்படிச் செய்தால் அதை யாரும் பார்க்காமல் போக நேரிடலாம் என்று நினைத்து புதிய பதிவாகவே இட்டுவிட்டேன்..
நண்பர் சிபி அனுப்பியது 4 படங்கள்.
இனி நண்பர் சிபியின் மெயில் விவரத்தை உள்ளபடியே கீழே பிரதிபலிக்கின்றேன் ;
CIBI: ”Pls. find the images of the covers/pouches these are the covers easily available and price also less ( hope )
This is press type you can open and close so many time but this quality is PP only but “MYLAR” material is new to me will check and revert you about this.
Thanks for your wonderful search and sharing.
Keep it up and once again thanks for all.”
By Cibi.
CIBI
 

DSC_0118_thumb[7]
DSC_0119_thumb[6]
DSC_0120_thumb[14]
DSC_0121
மேலேயுள்ள நான்கு படங்களும் நண்பர் சிபி அனுப்பியது.
பயணுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதற்கும், மேலும் ஏதேனும் விவரங்கள் கிடைத்தால் அவைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்வேன் என்று சொன்னதற்கும், நம் அனைவரின் சார்பிலும் நண்பர் சிபிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பதிவின் மேலே இருக்கும் முதல் படம்  வலையில் காணக்கிடைத்தது. ஷங்கர் என்ற காமிக்ஸ் ஆர்வலரின் இந்திரஜால் காமிக்ஸ் கலக்‌ஷன். மேஜையில் வட்ட வடிவ பெட்டியில் அடுக்கப்பட்டு இருப்பதும்  இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். நடுவே உள்ள 25 பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களும் இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். சேமிப்புகளை எவ்வளவு நேர்த்தியாக அவர் பத்திரப்படுத்தியுள்ளார் !!!.
இந்த பதிவு ரோம்ப குட்டியாக இருக்கிறது. அதனால் நீளத்தை  அதிகரிக்க சில எக்ஸ்ட்ரா மேட்டர்கள் கீழே.
அடுத்து, Mylar மெட்டீரியலைப் பற்றி சில விவரங்களை தெரிந்து கொள்ள கீழே ஒரு லிங்க்;
MYLAR WEB ANSWER
இப்போது சில யூட்யூப் விடியோக்கள்.
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 1
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 2
மேட் என்னும் காமிக்ஸ் ஆர்வலரின் காமிக்ஸ் சேகரித்து வைத்திருக்கும் முறை நமக்கெல்லாம் காதில் புகை வரவைக்கும்.
சொல்ல என்ன இருக்கிறது ?
அடுத்து நாமெல்லாம் 2012ம் வருடத்தில் முதலீடு!!! செய்ய வேண்டிய 45 காமிக்ஸ் புத்தகங்களின் பட்டியல். வருங்காலத்தில் இவையெல்லாம் ஷேர் மார்க்கெட் பங்குகளைப் போல விலையேறும் போது விற்று நன்றாக காசு பார்க்கலாமாம்.
கட்டாயம் முதலீடு செய்ய வேண்டிய ஷேர்கள்.
இந்த வாரத்திற்கு இது போதும் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.






Saturday 8 September 2012

PRESERVING COMIC BOOKS

img2040m

நண்பர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் வலைப்  பக்கங்களை  மேய்ந்து கொண்டு இருந்தபோது, சில பக்கங்களையும், படங்களையும் காண நேர்ந்தது. ஒரு காமிக்ஸ் ஆர்வலர், வேதாளரின் டெய்லி ஸ்ட்ரிப்புகளை அவரே பிரிண்ட் எடுத்து, அந்த காமிக்ஸ் பிரிண்ட் அவுட்களை, பஞ்சிங் மெஷினால் பஞ்ச் செய்யாமல், அவற்றை பத்திரமாக டாகுமெண்ட் ஸ்லீவ்களில் பத்திரப்படுத்தி, பிறகு அந்த ஸ்லீவ்களை அழகாக பாக்ஸ் பைல்களில் போட்டு அழகாக  சேமித்து வைத்திருக்கிறார். இவர் டெய்லி இங்க் என்னும் ஆன்லைன் காமிக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி, டிஜிடல் காமிக்ஸ்களுக்கு சந்தாதார் ஆக இருக்கிறார். சந்தாவின் மூலமாக அவருக்கு வந்த காமிக்ஸ்களை எல்லாம் வரிசைகிரமமாக பிரிண்ட் எடுத்து வைத்துள்ளார்.

அதைப் பார்த்ததும், மேலை நாடுகளில், காமிக்ஸ்களை பத்திரமாக சேமித்து வைக்க எத்தனை வசதிகள் இருக்கின்றன என்று தேடிப்பார்த்தேன். கிடைத்தவைகளை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இந்த பதிவை தயாரித்தேன். இனி மற்ற விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

இந்தியாவிலும் ஆன்லைன் புத்தகங்களும், ஆன்லைன் காமிக்ஸ்களும் இருக்கிறது. பெங்களூர் காமிக் கானில், தி டெம்ப்ளார் என்ற ஆன்லைன் காமிக்ஸ் அறிமுகம் ஆகின்றது. ஒரு வருட சந்தா ரூபாய் 300/- என்று நினைக்கின்றேன். மற்ற விவரங்கள் நாளைய பெங்களூர் காமிக் கானில் தெரிந்துவிடும். ஆன்லைன் காமிக்ஸ்களைப் பொறுத்தவரை, இந்தியா, வெளிநாடு என்று பிரித்துப் பார்க்க தேவையில்லை. ஆன்லைன் காமிக்ஸ்கள் எந்த நாட்டில் வெளியானாலும், நாம் இந்தியாவில் இருந்தே சந்தா செலுத்த முடியும், ஆனால் அமெரிக்க டாலர் கணக்கில்தான் செலுத்த வேண்டியிருக்கும். 

img2041v

தனித் தனியாக உள்ள காமிக்ஸ் புத்தகங்கள், பைண்ட் செய்யப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்று கீழுள்ள படத்தில்.

comics-to-books

பார்ப்பதற்கு ஒரு பாக்ஸ் போல்டரைப் போல் உள்ள இந்த பைலைப் பிரித்தால் அதற்குள்ளே……

SPIDERMAN FOLDER

 

 

 

இது ஒரு காமிக்ஸ் ஸ்டோரேஜ் பாக்ஸ். தனித் தனி காமிக்ஸ்களை பத்திரப்படுத்தி வைக்க நேர்த்தியான சொருகு அறை அமைப்பைக் கொண்டு உள்ளது.

 

 

 

box_button

இந்த பாக்ஸ் போல்டர்களை மூடியிருக்கும் போது பார்த்தால், அழகாக பைண்ட் செய்யப்பட்டு இருக்கும் புத்தகத்தைப் போலவே இருக்கின்றது.

இந்த போல்டர்களின் முகப்பில் காமிக்ஸ் ஹீரோக்களின் படங்கள் அச்சிடப்பட்டே விற்பனைக்கு கிடைக்கிறது என்பது இன்னும் சிறப்பு. சூப்பர்மேனுக்கு ஒரு போல்டர், பேட்மேனுக்கு ஒரு போல்டர் என்று கலக்‌ஷனை தனித்தனியாக வைத்துக் கொள்ளலாம்.

FOLDERcustom_covers

அமெரிக்க அரசு, அங்கிருக்கும் லைப்ரரிகளில், உபயோகத்தின் காரணமாக புத்தகங்களின் அட்டை தளர்வடைந்து விட்டால், உடனே அந்த புத்தகங்கள் மீண்டும் பைண்டு செய்யப்படுகிறது. புதிய புத்தகங்களையும், பழைய புத்தகங்களையும் பைண்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஸ்டேண்டர்ட் பார்மாட்டை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

கீழேயுள்ள படத்தில் ஸ்டிச்சிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.

sewing3

 

bound-comics-examples_sm

 

half-bind_books

புத்தகங்களை பைண்ட் செய்யும் நிறுவனங்கள், அரசின் இந்த பைண்டிங் ஸ்டேண்டர்டுகளையே பின்பற்றுகின்றன. புத்தகங்களை பைண்ட் செய்ய விரும்புபவர்களும், அவர்களிடம் இருக்கும் புத்தகங்களை இந்த நிறுவனத்திடம் கொடுத்தால், சிறப்பான முறையில் பைண்ட் செய்து தருகின்றனர்.

பைண்டிங் செய்யும் செயல் முறையில், புத்தகத்தின் டெக்னிக்கல் விவரங்கள்.

இந்த தேடலில் எனக்கு கிடைத்த ஒரு உருப்படியான விவரம்.

பிரதியெடுக்க உபயோகப் படுத்தும் ஜெராக்ஸ் பேப்பர்களில் இரண்டு வகையான பேப்பர்கள் உள்ளனவாம்.

1. CROSS GRAINED PAPPER

2. LONG GRAINED PAPPER

நாம் டவுன்லோட் செய்தவற்றை பிரிண்ட் செய்து அதை பைண்ட் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு பிரிண்ட் செய்ய உபயோகிக்க வேண்டிய ஜெராக்ஸ் பேப்பர் க்ராஸ் க்ரெயிண்ட் பேப்பராக இருந்தால், அந்த பேப்பரை பைண்ட் செய்த பிறகு பிரித்து படிக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல, பக்கங்கள் விசிறி போல குத்திட்டு நிற்குமாம்.

bookopen 

லாங் க்ரெயின் பேப்பரில் பிரிண்ட் செய்து பைண்ட் செய்தால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் பக்கங்கள் தளர்வாக இரண்டு பக்கங்களிலும் படிந்து, படிப்பதற்கு வசதியாக இருக்குமாம். இந்த இரண்டு வகையான பேப்பர்களுக்கும், விலையில் அதிக வித்தியாசம் இல்லையாம். இந்தியாவில் லாங் க்ரெயின் பேப்பர் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

அப்படி லாங் க்ரெயின் பேப்பர் கிடைக்கின்றது என்றால், இனி என்னுடைய பெர்ஸனல் ப்ராஜெக்ட்டுகளுக்கு அதையே உபயோகிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். நீங்களும் லாங் க்ரெயினையே உபயோகிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

bookflat 

ஒரே காமிக்ஸ் ஹீரோவின் பல புத்தகங்களை பைண்ட் செய்யும்போது, அந்த பைண்டிங் புத்தகத்தின் அட்டையில் அந்த காமிக்ஸ் கதாபாத்திரத்தின் படத்தையும் அச்சிட்டு தருகிறார்கள். அனைத்திற்கும் ஒரு விலை. வீட்டில் இருந்தபடியே இந்த ஃபார்ம்களை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் நிரப்பி, நிரப்பப்பட்ட படிவங்களை, பைண்ட் செய்ய வேண்டிய புத்தகதோடு, தபாலில் அனுப்பி, உரிய கட்டணங்களை செலுத்தினால், பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களாக திரும்பி வரும்.

ஒரு கண்டீஷன், பைண்ட் செய்ய அனுப்பிய புத்தகத்தின் பக்கங்களின் ஓரம், பக்கத்தை திருப்பும்போது உடைந்து விழும் நிலையில் இருந்தால், அந்த புத்தகம் பைண்டிங் செய்ய ஏற்றுக் கொள்ளப்படாது.

custom-cover1                                  halfbindguide

நண்பர்களே, இது போன்ற வசதிகள் நமக்குக் கிடைக்க இன்னும் எத்தனை காமிக் கான்பரன்ஸுகள் இந்தியாவில் நிகழ்த்தப்பட வேண்டுமோ தெரியவில்லை.

இந்த வசதிகள் கிடைக்கும் வரை நமது காமிக்ஸ்களை அட்டைப் பெட்டியில் வைக்கலாம். காமிக்ஸ்களை ஸ்டோர் செய்து வைக்க அதற்கென்றே தனித்தன்மை வாய்ந்த அட்டைப் பெட்டிகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றதாம். அது போல் காமிக்ஸ்களை அட்டைப் பெட்டியில் வைத்தாலும் அப்போதைக்கப்போது புத்தகங்களின் நிலைமையை சோதித்து, அட்டைப் பெட்டிகளை மாற்ற வேண்டும். நண்பர் இரவுக்கழுகார் செய்துள்ளது போல ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பதும் சிறந்தது. ஆனால் அந்த ப்ளாஸ்டிக் கவர்கள் “பாலிப்ரொப்பலைன் (மைலார்)” என்ற மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமாம்.

அனைத்து காமிக்ஸ் ஆர்வலர்களின் ஆசைகளும் நிறைவேற, நாம் அனைவரும் கூட்டாக  இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.