டியர் ஃப்ரண்ட்ஸ்,
இது என்னுடைய புதிய வலைப் பதிவு. இங்கு முழுக்க என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே பிரதான எண்ணம். இங்கு காமிக்ஸும், ஆங்கில சினிமாவுமே இடம் பெறும். நீங்களும் உங்களுடைய மென்மையான கருத்துக்களை இங்கே பதிவிடலாம்.
அடியேனுக்கு சிறு வயது முதலே காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உண்டு.
முத்து காமிக்ஸின் முதல் வெளியீடான “இரும்புக்கை மாயாவி”-யே எனது முதல் புத்தகம். எனக்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை எனது தாயாரையே சேரும். அவரே எனக்கு “இரும்புக்கை மாயாவி” புத்தகத்தை வாங்கித் தந்தார். அதன் பின் ”இந்திரஜால் காமிக்ஸ்” புத்தகங்களையும் அவரே வாங்கித்தந்தார்.
அதன் பின் சிறிது வளர்ந்த பின் ஆங்கில சினிமாவுக்கு அழைத்துப் போய், ஆங்கில பட ஆர்வத்தை ஏற்படுத்திய பெருமை எனது தந்தையை சேரும்.
so இந்த வலைப்பதிவு உருவாக முதல் இரண்டு காரணங்கள் மேலே சொன்னவை.
அடுத்த இரண்டு காரணங்கள், லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்களும், திரு கிங் விஸ்வா அவர்களுமே.
பல காலமாக சென்னை முழுக்க லயன் மற்றும் முத்து காமிக்ஸை தேடி தேடி அலுத்துப் போய்விட்டது.
சில வருடங்களுக்கு முன்பே தமிழ் காமிக்ஸ் பற்றிய வலைப்பதிவுகள் BLOGSPOT-ல் இடப்பட்டிருந்தாலும், சென்னையில் காமிக்ஸ் கிடைப்பதற்கு எந்த வழியும் தெரியவில்லை. சலித்துப்போய், நானும் காமிக்ஸ் தேடுவதை நிறுத்திவிட்டாலும், எப்போது புத்தக கடைக்குச் சென்றாலும், தவறாது அங்கு காமிக்ஸ் கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.
வருடம் தவறாது புத்தக கண்காட்சிக்கு செல்லும் பழக்கம் இருந்தாலும், கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக ஒரு முக்கியமான செயலை முடிக்க வேண்டி இருந்ததால், 2012 ம் வருட புத்தக கண்காட்சிக்கு போகாமல் விட்டு விட்டேன்.
சென்ற மாதம் திரு கிங் விஸ்வா அவர்களின் TAMIL COMICS ULAGAM வலைப்பதிவை பார்த்த்தேன். அதில் அவர், பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஸ்டால் பற்றி எழுதியிருந்தைப் படித்தபின், இந்த வருடம் புத்தக கண்காட்சியை தவற விட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். அதே வலைப்பதிவில் திரு கிங் விஸ்வா, டிஸ்கவரி புக் பேலசில் லயன் காமிக்ஸ் கிடைப்பதாக கூறியிருந்தார்.
டிஸ்கவரி புக் பேலஸ் விலாசம்:
டிஸ்கவரி புக் பேலஸ்,
கே. கே. நகர் கிழக்கு, சென்னை - 78,
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகே)
இமெயில்: discoverybookpalace@gmail.com
WEBSITE: http://www.discoverybookpalace.com
PHONE : 044-6515 7525, MOBILE: 99404 46650.
சென்ற வாரம் டிஸ்கவரி புக் பேலசுக்கு சத்குரு ஸாயி நாதரை சின்சியராக பிரார்த்தித்து விட்டு சென்றேன்.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு வேடியப்பனை சந்திதேன். நண்பர் திரு வேடியப்பன் நன்கு பழகுகிறார். நல்ல சுபாவம் கொண்டிருக்கிறார். நான் சென்ற நேரம், மதிய உணவு வேளை. திரு வேடியப்பனைத் தவிர மற்ற ஊழியர்கள் உணவருந்த சென்று விட்டார்கள். சரியான சமயத்தில் நான் வந்திருப்பதாகவும், இப்போது தான் சிவகாசியில் இருந்து கூரியர் வந்துள்ளது என்றும், எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்றும் திரு வேடியப்பன் கூறினார். அவரே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, பார்சலை பிரித்து காமிக்ஸ் புத்தகங்களை எடுத்து கொடுத்தார்.
டிஸ்கவரி புக் பேலசில் மற்ற அனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்கின்றது. இந்த புத்தக கடையை உள்வலம் வந்தபோது என் இதயத்தில் எழுந்த உணர்வு, இதுவரை எந்த புத்தக கடையிலும் எனக்கு ஏற்பட்டது இல்லை. அந்த உணர்வு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அங்கிருக்கும் புத்தகங்கள் எல்லாம் ஒரு தனிமனிதர் அவருடைய டேஸ்ட் படி தேர்ந்தெடுத்த ப்ரைவேட் புத்தக லைப்ரரி கலக்ஷன் போல தொன்றியது.
எதை எடுப்பது? எதை விடுப்பது?
(Hope you all will agree that there is a difference between a shop selling books and a dynamic book collection of an individual man).
வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களின் பட்டியல்:
1. லயன் கம்பேக் ஸ்பெஷல் - லயன்.
2. சாத்தானின் துதன் டாக்டர்-7 - லயன்.
3. கொலைகாரக் கலைஞன் - காமிக்ஸ் க்ளாஸிக்ஸ்.
4. விண்ணில் ஒரு குள்ளநரி - முத்து காமிக்ஸ்.
5. தலைவாங்கிக் குரங்கு - காமிக்ஸ் க்ளாஸிக்ஸ்.
6. என் பெயர் லார்கோ! - முத்து காமிக்ஸ்.
காமிக்ஸ் ரசிகர்களே, டிஸ்கவரி புக் பேலசுக்கு செல்வதற்கு முன் போன் செய்து, புத்தகங்கள் இருக்கின்றதா என்று தெரிந்து கொண்டு செல்லவும்.
திரு கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றிகள் பல.
டியர் கிங் விஸ்வா உங்கள் நல்ல எண்ணத்திற்கும், தகவலை பகிர்ந்து கொண்டமைக்கும் ஹேட்ஸ் ஆப்.
மீண்டும் காமிக்ஸ் வெளியிட தொடங்கியதற்கு, மதிப்பிற்குரிய எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு நன்றிகள் பல. உங்களுக்கும் ஹேட்ஸ் ஆப் அண்ட் சல்யூட்.
KING VISWA'S INTERESTING BLOG : KING VISWA'S BLOG
LION COMICS EDITOR VIJAYAN'S BLOG : http://lion-muthucomics.blogspot.in/
பாலாஜி சுந்தர்.
திரு பாலாஜி சுந்தர்,
ReplyDeleteவணக்கம். அருமையான பதிவு. பலருக்கு இது உபயோகப்படும். நேற்றே உங்கள் தளத்தை பார்த்துவிட்டேன். தாமதமாக கமென்ட் இடுவதற்கு மன்னிக்கவும்.
உங்களுடைய எழது நடை பிரம்மாதமாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நண்பர் வேடியப்பனை கேட்டதாக சொல்லவும். சந்தித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. தொடர்ந்த பயணங்களால் பதிவெழுதவோ, நண்பர்களை சந்திப்பதோ இயலலாமல் போகிறது.
நீங்கள் இந்த புத்தகங்களை படித்து விட்டு இரண்டு வேலைகளை செய்தால் சந்தோஷப்படுவேன்.
(1) லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு விமர்சனக் கடிதம், சமீப வருடங்களில் விமர்சனக் கடிதங்கள் எழுதுவது குறைந்து விட்டது.
(2) உங்கள் தளத்திலேயே இந்த புத்தகங்களைப் பற்றிய சிறு விமர்சனம்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் திரு கிங் விஷ்வா,
Deleteஎனது வலைப்பதிவிற்கான உங்களது பின்னூட்டத்தினை இப்போதுதான் பார்த்தேன். உங்களது கனிவான பதிலினினால் என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. உங்களுக்கு நன்றிகள் பல
உங்களது வாழ்த்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
என்னுடைய வலைப்பதிவில், டிஸ்கவரி புக் பேலஸ் பற்றிய விவரங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே உங்கள் வலைப்பதிவில் அறிவித்ததுதான். எனவே பாராட்டுக்கள் உங்களையே சாரும்.
புதிய காமிக்ஸ் வந்தால் என்னை மொபைலில் அழைப்பதாக திரு வேடியப்பன் உறுதியளித்துள்ளார். அவரிடம் இரத்தப்படலம் மெகா இஷ்யூ வேண்டும் என்று கேட்டுள்ளேன். மீண்டும் அவரை சந்திக்கும் போது உங்களது கனிவான விசாரிப்புகளை அவரிடம் தெரிவிக்கின்றேன்.
காமிக்ஸ் புத்தகங்களை நீங்கள் எப்படி பெறுகிறீர்கள்?
நீங்கள் கூறியுள்ள இரண்டு வேண்டுகோளையும் நிறைவேற்ற என் முயற்சிகளை ஆரம்பிக்கின்றேன்.
எடிட்டருக்கு விமர்சனத்தை எப்படி அனுப்பட்டும், தபாலிலா அல்லது இமெயிலிலா?
உற்சாகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி.
பாலாஜி சுந்தர்
//அவரே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, பார்சலை பிரித்து காமிக்ஸ் புத்தகங்களை எடுத்து கொடுத்தார்.//
ReplyDeleteநீங்கதான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தீர்களா ?
இப்படி ஒரே இடத்தில் பலபிரதிகளை பார்த்து பலவருடம் ஆகிவிட்டது ( இப்போதுதான் விற்பனை பிரதிநிதிகள் அதிகம் கிடையாதே )
அதிர்ஷ்டசாலியய்யா நீங்கள்
😄
Delete