நண்பர்களுக்கு வணக்கம்.
சமீபத்தில் வலைப் பக்கங்களை மேய்ந்து கொண்டு இருந்தபோது, சில பக்கங்களையும், படங்களையும் காண நேர்ந்தது. ஒரு காமிக்ஸ் ஆர்வலர், வேதாளரின் டெய்லி ஸ்ட்ரிப்புகளை அவரே பிரிண்ட் எடுத்து, அந்த காமிக்ஸ் பிரிண்ட் அவுட்களை, பஞ்சிங் மெஷினால் பஞ்ச் செய்யாமல், அவற்றை பத்திரமாக டாகுமெண்ட் ஸ்லீவ்களில் பத்திரப்படுத்தி, பிறகு அந்த ஸ்லீவ்களை அழகாக பாக்ஸ் பைல்களில் போட்டு அழகாக சேமித்து வைத்திருக்கிறார். இவர் டெய்லி இங்க் என்னும் ஆன்லைன் காமிக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி, டிஜிடல் காமிக்ஸ்களுக்கு சந்தாதார் ஆக இருக்கிறார். சந்தாவின் மூலமாக அவருக்கு வந்த காமிக்ஸ்களை எல்லாம் வரிசைகிரமமாக பிரிண்ட் எடுத்து வைத்துள்ளார்.
அதைப் பார்த்ததும், மேலை நாடுகளில், காமிக்ஸ்களை பத்திரமாக சேமித்து வைக்க எத்தனை வசதிகள் இருக்கின்றன என்று தேடிப்பார்த்தேன். கிடைத்தவைகளை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இந்த பதிவை தயாரித்தேன். இனி மற்ற விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
இந்தியாவிலும் ஆன்லைன் புத்தகங்களும், ஆன்லைன் காமிக்ஸ்களும் இருக்கிறது. பெங்களூர் காமிக் கானில், தி டெம்ப்ளார் என்ற ஆன்லைன் காமிக்ஸ் அறிமுகம் ஆகின்றது. ஒரு வருட சந்தா ரூபாய் 300/- என்று நினைக்கின்றேன். மற்ற விவரங்கள் நாளைய பெங்களூர் காமிக் கானில் தெரிந்துவிடும். ஆன்லைன் காமிக்ஸ்களைப் பொறுத்தவரை, இந்தியா, வெளிநாடு என்று பிரித்துப் பார்க்க தேவையில்லை. ஆன்லைன் காமிக்ஸ்கள் எந்த நாட்டில் வெளியானாலும், நாம் இந்தியாவில் இருந்தே சந்தா செலுத்த முடியும், ஆனால் அமெரிக்க டாலர் கணக்கில்தான் செலுத்த வேண்டியிருக்கும்.
தனித் தனியாக உள்ள காமிக்ஸ் புத்தகங்கள், பைண்ட் செய்யப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்று கீழுள்ள படத்தில்.
பார்ப்பதற்கு ஒரு பாக்ஸ் போல்டரைப் போல் உள்ள இந்த பைலைப் பிரித்தால் அதற்குள்ளே……
இது ஒரு காமிக்ஸ் ஸ்டோரேஜ் பாக்ஸ். தனித் தனி காமிக்ஸ்களை பத்திரப்படுத்தி வைக்க நேர்த்தியான சொருகு அறை அமைப்பைக் கொண்டு உள்ளது.
இந்த பாக்ஸ் போல்டர்களை மூடியிருக்கும் போது பார்த்தால், அழகாக பைண்ட் செய்யப்பட்டு இருக்கும் புத்தகத்தைப் போலவே இருக்கின்றது.
இந்த போல்டர்களின் முகப்பில் காமிக்ஸ் ஹீரோக்களின் படங்கள் அச்சிடப்பட்டே விற்பனைக்கு கிடைக்கிறது என்பது இன்னும் சிறப்பு. சூப்பர்மேனுக்கு ஒரு போல்டர், பேட்மேனுக்கு ஒரு போல்டர் என்று கலக்ஷனை தனித்தனியாக வைத்துக் கொள்ளலாம்.
அமெரிக்க அரசு, அங்கிருக்கும் லைப்ரரிகளில், உபயோகத்தின் காரணமாக புத்தகங்களின் அட்டை தளர்வடைந்து விட்டால், உடனே அந்த புத்தகங்கள் மீண்டும் பைண்டு செய்யப்படுகிறது. புதிய புத்தகங்களையும், பழைய புத்தகங்களையும் பைண்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஸ்டேண்டர்ட் பார்மாட்டை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
கீழேயுள்ள படத்தில் ஸ்டிச்சிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.
புத்தகங்களை பைண்ட் செய்யும் நிறுவனங்கள், அரசின் இந்த பைண்டிங் ஸ்டேண்டர்டுகளையே பின்பற்றுகின்றன. புத்தகங்களை பைண்ட் செய்ய விரும்புபவர்களும், அவர்களிடம் இருக்கும் புத்தகங்களை இந்த நிறுவனத்திடம் கொடுத்தால், சிறப்பான முறையில் பைண்ட் செய்து தருகின்றனர்.
பைண்டிங் செய்யும் செயல் முறையில், புத்தகத்தின் டெக்னிக்கல் விவரங்கள்.
இந்த தேடலில் எனக்கு கிடைத்த ஒரு உருப்படியான விவரம்.
பிரதியெடுக்க உபயோகப் படுத்தும் ஜெராக்ஸ் பேப்பர்களில் இரண்டு வகையான பேப்பர்கள் உள்ளனவாம்.
1. CROSS GRAINED PAPPER
2. LONG GRAINED PAPPER
நாம் டவுன்லோட் செய்தவற்றை பிரிண்ட் செய்து அதை பைண்ட் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு பிரிண்ட் செய்ய உபயோகிக்க வேண்டிய ஜெராக்ஸ் பேப்பர் க்ராஸ் க்ரெயிண்ட் பேப்பராக இருந்தால், அந்த பேப்பரை பைண்ட் செய்த பிறகு பிரித்து படிக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல, பக்கங்கள் விசிறி போல குத்திட்டு நிற்குமாம்.
லாங் க்ரெயின் பேப்பரில் பிரிண்ட் செய்து பைண்ட் செய்தால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் பக்கங்கள் தளர்வாக இரண்டு பக்கங்களிலும் படிந்து, படிப்பதற்கு வசதியாக இருக்குமாம். இந்த இரண்டு வகையான பேப்பர்களுக்கும், விலையில் அதிக வித்தியாசம் இல்லையாம். இந்தியாவில் லாங் க்ரெயின் பேப்பர் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
அப்படி லாங் க்ரெயின் பேப்பர் கிடைக்கின்றது என்றால், இனி என்னுடைய பெர்ஸனல் ப்ராஜெக்ட்டுகளுக்கு அதையே உபயோகிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். நீங்களும் லாங் க்ரெயினையே உபயோகிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
ஒரே காமிக்ஸ் ஹீரோவின் பல புத்தகங்களை பைண்ட் செய்யும்போது, அந்த பைண்டிங் புத்தகத்தின் அட்டையில் அந்த காமிக்ஸ் கதாபாத்திரத்தின் படத்தையும் அச்சிட்டு தருகிறார்கள். அனைத்திற்கும் ஒரு விலை. வீட்டில் இருந்தபடியே இந்த ஃபார்ம்களை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் நிரப்பி, நிரப்பப்பட்ட படிவங்களை, பைண்ட் செய்ய வேண்டிய புத்தகதோடு, தபாலில் அனுப்பி, உரிய கட்டணங்களை செலுத்தினால், பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களாக திரும்பி வரும்.
ஒரு கண்டீஷன், பைண்ட் செய்ய அனுப்பிய புத்தகத்தின் பக்கங்களின் ஓரம், பக்கத்தை திருப்பும்போது உடைந்து விழும் நிலையில் இருந்தால், அந்த புத்தகம் பைண்டிங் செய்ய ஏற்றுக் கொள்ளப்படாது.
நண்பர்களே, இது போன்ற வசதிகள் நமக்குக் கிடைக்க இன்னும் எத்தனை காமிக் கான்பரன்ஸுகள் இந்தியாவில் நிகழ்த்தப்பட வேண்டுமோ தெரியவில்லை.
இந்த வசதிகள் கிடைக்கும் வரை நமது காமிக்ஸ்களை அட்டைப் பெட்டியில் வைக்கலாம். காமிக்ஸ்களை ஸ்டோர் செய்து வைக்க அதற்கென்றே தனித்தன்மை வாய்ந்த அட்டைப் பெட்டிகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றதாம். அது போல் காமிக்ஸ்களை அட்டைப் பெட்டியில் வைத்தாலும் அப்போதைக்கப்போது புத்தகங்களின் நிலைமையை சோதித்து, அட்டைப் பெட்டிகளை மாற்ற வேண்டும். நண்பர் இரவுக்கழுகார் செய்துள்ளது போல ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பதும் சிறந்தது. ஆனால் அந்த ப்ளாஸ்டிக் கவர்கள் “பாலிப்ரொப்பலைன் (மைலார்)” என்ற மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமாம்.
அனைத்து காமிக்ஸ் ஆர்வலர்களின் ஆசைகளும் நிறைவேற, நாம் அனைவரும் கூட்டாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
ம் ம் ம் ம் ம்............
ReplyDeleteஒண்ணுமில்லை அய்யா.... பெருமூச்சிதான்....
வருகைக்கு நன்றி நண்பரே,
ReplyDeleteY ப்ளட்.... சேம் ப்ளட்....
நமது முத்து விசிறி அவர்களும் இதைப்போலவே காமிக்ஸ் புத்தகங்களை பாதுகாப்பது எப்படி என்று ஒரு அற்புதமான பதிவிட்டுள்ளார். அந்த லிங்க் இதோ: http://muthufanblog.blogspot.in/2009/05/second-hand-comics-market-and-comics.html
ReplyDeleteமென்மேலும் தொடர்ந்து நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி விஷ்வாஜி.
Deleteநீங்கள் கொடுத்துள்ள முத்து விசிறி அவர்களின் லிங்கிற்கு சென்று புத்தக பாதுகாப்பைப் பற்றி படித்தேன். 2009-ம் வருடமே முத்து விசிறி அவர்கள் காமிக்ஸ் பாதுகாப்பைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்! அவரது காமிக்ஸ் ஆர்வம் மிகவும் பாரட்டத்தகுந்த ஒன்று.
முத்து விசிறி அவர்களது ப்ளாகை பல வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். சமீபத்தில்தான் அவரது தளத்தை “தொடர்பவராக” இணைந்தேன். அவரது அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற எனது ஆசை, இதுவரை சாத்தியப்படாததாகவே இருக்கின்றது. மீண்டும் முயற்சி செய்கிறேன்.
//மென்மேலும் தொடர்ந்து நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி விஷ்வாஜி. நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
நல்ல பதிவு நண்பரே.
ReplyDeleteநான் Bind செய்யலாம் என்று தான் இருந்தேன் பின் நமது கார்த்திக்கின் பதிவை பார்த்து தவிர்த்துவிட்டேன்.
பின்பு தான் பிளாஸ்டிக் கவர் போடா முடிவு செய்து முடித்தும் விட்டேன்.
ஆனால் //“பாலிப்ரொப்பலைன் (மைலார்)”// இருக்கிறதால் என்றெல்லாம் தெரியவில்லை.
நண்பரே வருக்கைக்கும் பின்னூட்டத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.
Deleteநல்ல வேலை செய்தீர்கள்!!! உண்மையில் முறையற்ற பைண்டிங், காலப் போக்கில் புத்தகங்களை சேதப்படுத்துவதிலேயே சென்று முடிவடைகின்றது.
லீஃப் பைண்டிங், ஸ்டிச்சிங் மெத்தட் போன்ற முறைகளே, புத்தகங்களை சேதமாக்காமல், நல்ல முறையில் பாதுகாக்கும் என்பது தெரியாமல், பலவருடங்களுக்கு முன்பே சில புத்தகங்களை சாதாரண முறையில் பைண்டிங் செய்துவிட்டேன்.
நல்ல திக்காக இருக்கும் ஜிப் லாக் கவர்கள் ஒருவேளை மைலார் கவர்களாக இருக்கும் என்ரு நினைக்கின்றேன். கீழேயுள்ள ஒரு லிங்கில் சில தகவல்கள் உள்ளன.
http://www.shopbrodart.com/book-jacket-covers/
பெரும்பாலும் விலையுயர்ந்த எலக்ரானிக் பொருட்களை பேக் செய்யப்படும் திக்கான ரீஸைக்கிள் செய்யக் கூடிய கவர்கள் இந்த வகையை சேர்ந்தவை என்றும் நினைக்கின்றேன். எங்கேனும் வேறு விவரங்கள் தெரிந்தால், அந்த விவரங்களை நிச்சயம் அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்களுக்கு காணக்கிடைக்கும் விவரங்களை தெரியப்படுத்துங்கள் நண்பரே.
மிக அருமையான அலசல் மற்றும் தகவல்கள் நன்றி நண்பரே :))
ReplyDeleteநமது அண்ணாச்சி விஸ்வாஜி சொல்லியது போல முத்து விசிறி அவர்கள் இதைப்பற்றி சில வருடங்களுக்கு முன்பே தமது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்
// நீங்களும் உங்களுக்கு காணக்கிடைக்கும் விவரங்களை தெரியப்படுத்துங்கள //
நானும் இதுபோல பாதுகாத்து வருகிறேன் அதன் புகை படத்தை எப்படி அட்டாச் செய்வது என்று சொல்லித்தாருங்கள் நண்பரே :))
.
நண்பரே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.
Delete//நானும் இதுபோல பாதுகாத்து வருகிறேன் அதன் புகை படத்தை எப்படி அட்டாச் செய்வது என்று சொல்லித்தாருங்கள் நண்பரே :))//
நீங்கள் அட்டாச் செய்வது என்று சொல்வது எதை என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னூட்டங்களில் எழுத்துக்களைத் தவிர வேறு எந்த படங்களையும் இணைக்க வழியில்லை.
இமெயிலில் படங்களை அட்டாச் செய்வது எப்படி என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒருவேளை நீங்கள் அதைத்தான் குறிப்பிட்டிருந்தால், அதையும் சொல்லிவிடுகிறேன். உங்கள் இமெயில் அக்கவுண்டில், கம்போஸ் மெயிலில் சென்று அங்கு To address and subject க்கு கீழே attach a file என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் படங்கள் இருக்கும் போல்டருக்கு சென்று படங்களை செலக்ட் செய்து எனது மெயில் ஐடிக்கு அனுப்பவும்.
எனது மெயில் ஐடி : picturesanimated@gmail.com.
மேலுள்ள எல்லாவற்றையும் விட சிறந்த மற்றொரு முறை ஒன்று உள்ளது. அது, உங்கள் ப்ளாகர் அக்கவுண்ட்டில் நுழைந்து, அங்கே மேலே பென்சில் படத்துடன் உள்ள க்ரியேட் நியூ போஸ்ட் என்ற ஐகானை க்ளிக் செய்து, உங்களிடம் இருக்கும் படங்கள் அனைத்தையும் ஒரு போஸ்ட்டாக போட்டு விடுங்கள். விவரங்களும், படங்களும் அனைத்து நண்பர்களையும் சென்றடையும். மேலும் விவரங்களுக்கு மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு தவறாக பதிலளித்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
பி.கு.: என்னுடைய வேதாளரைப் பற்றிய இதற்கு முந்தய பதிவில் கடைசி பின்னூடத்தையும், அதற்கான எனது பதிலையும் படித்தீர்களா? இல்லையென்றால் அதை ஒரு முறை உங்களை படிக்கும்படி கோரிக்கை வைக்கிறேன்.
படங்களுடன் பதிவிட்டு அதை விளக்கிய விதம் அருமை.நன்றியுடன்
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டதிற்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே.
Deleteஅன்புடன்,
பாலாஜி சுந்தர்.
வணக்கம் நண்பரே,
ReplyDeleteஎடிட்டரின் ப்ளாகில், ஒரு பின்னூட்டத்தில், உங்கள் புத்தகங்களை கரயானிடம் பறிகொடுத்தது பற்றி ஒரு வரியில் நீங்கள் எழுதியதை படித்திருக்கிறேன்.
ஏராளமான புத்தகங்களை கரயானிடம் பறிகொடுத்த சம்பவம் மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு. அது ஒரு தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு. புத்தக ஆர்வலர்களுக்கு கரையான் ஒரு நிஜமான, கொடூர மனம் படைத்த, ஈவு இரக்கமற்ற வில்லன்.
நீங்கள் இழந்த புத்தகங்கள் எந்த வகையிலாவது உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
பார்ப்போம், எடிட்டரும் மனம் மாறி, 2013-ல் பழைய வெளியீடுகள் அனைத்தையும் கலக்டார்ஸ் எடிஷனாக கொண்டு வருவார் என்று நம்புவோம்.
இந்தமாதிரி ஒரு பாதுகாப்பு முறை எனக்கு ஆரம்பத்தில் தெரியாததால் நூற்றுக்கணக்கான காமிக்ஸை கரயாண்களுக்கு பரிகொடுத்துவிட்டேன்....
ReplyDeleteநல்ல அற்புதமான தேவையான பயனுள்ள பதிவு.
டியர் ஈரோட்டாரே,
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி. சிக்கல் தீர்ந்தது.
நண்பர்களே,
ReplyDeleteகரையாணிடமிருந்து காமிக்ஸ்களை காப்பாற்ற மேலும் சில ஐடியாக்கள்...
* கரையாண்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை யாரிடமாவது கேட்டறிந்து, அவற்றை வாங்கி, அதை நம் காமிக்ஸ்களைச் சுற்றிலும் தூவி விட்டால் போதுமே! கரையாண்கள் அவற்றைச் சாப்பிட்டுப் பசியாறிவிடும், நம் காமிக்ஸும் காப்பாற்றப்பட்டுவிடுமே!
* கரையாண்களை விரும்பிச் சாப்பிடும் விலங்குகள் எவை என்று கேட்டறிந்து, விலை கொடுத்து வாங்கி, அதை நம் வீட்டிலேயே வளர்க்கலாமே!
இதெல்லாம் சிரமமெனில், நீங்கள் வைத்திருக்கும் காமிக்ஸ்களை ஒரு பார்சலாகக் கட்டி என் முகவரிக்கு அனுப்பிவிடலாமே! உங்கள் புத்தகங்கள் காலத்திற்கும் பாதுகாக்கப் படுமே!
அதிகம் யோசிக்காமல், விரைந்து செயல்படுங்கள் நண்பர்ளே!
வணக்கம் விஜய் அவர்களே,
ReplyDeleteஅரிசி மாவில் கோலம் போட்டு, எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவிட்டவர்கள் தமிழர்கள் என்பதை நீங்கள் உங்கள் பின்னூட்டத்தின் மூலமாக நிருபித்திருக்கிறீர்கள். எந்த விதமான யாகங்கள் செய்தால் கரையாண்கள் வராமல் இருக்கும் என்றும் சொல்லியிருந்தால், நாங்கள் எல்லோரும் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போம். ;-).
உமது பின்னூட்டத்தின் மூலமாக கரையாண்களுக்கு நல்ல பெயர் வாங்க்கிக் கொடுத்துவிட்டீர்கள். இனி அனைவரும் கரையாண்கள் எவ்வ்வ்ளோவோஓஓஓ தேவலை என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள் :-)).
கரையாண்களிடம் புத்தகத்தை பறிகொடுத்து, அந்த அனுபவத்தில் கரையாண்களை தீர்த்துக் கட்ட கோபத்தோடு காத்திருக்கும் ஈரோட்டார், உங்கள் பின்னூட்டத்தை பார்த்து மனம் விட்டு சிரித்து தனது காமிக்ஸ் இழப்பை மறந்திருப்பார்.
இனி நண்பர்கள் அனைவருக்கும் கரையாண்களின் மேல் இருந்த பயம் முற்றும் விலகி இருக்கும். இனி அனைவரும் கரையாண்களின் நினைப்பு பயமுறுத்தாது. (நிச்சயம் ரூம் போட்டுத்தான் யோசித்திருப்பீர்கள்!)
அருமையான, அனைவருக்கும் பயணுள்ள யோசனைக் குறிப்புகள்.
நண்பர்களே, இந்த குறிப்புகளையெல்லாம் உங்கள் நினைவில் புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.:-)
நண்பரே, தங்களது வருகைக்கும், ஜோவியலான பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.:-))
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
ஒரு மாறுபட்ட பதிவிற்கு நன்றி நண்பரே! கரையாண்களிடமிருந்து புத்தகங்களை காப்பாற்றுவதுகூட எளிதானதுதான், சேமிப்பில் வைத்திருக்கும் கொஞ்சநஞ்ச புத்தகங்களையும் நம் காமிக்ஸ் நண்பர்ளிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி ஏதேனும் பதிவிட முடிந்தால் உதவியாக இருக்கும்.
Deleteமற்றபடி, உங்களுக்கு நான் தரவேண்டிய தொகையின் அளவு ரூ.350 ஆகிறது. இதில் 50 ரூபாய் கரையாண்களுக்கு தீணி வாங்க!
;-)
பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே,
Delete//கரையாண்களிடமிருந்து புத்தகங்களை காப்பாற்றுவதுகூட எளிதானதுதான், சேமிப்பில் வைத்திருக்கும் கொஞ்சநஞ்ச புத்தகங்களையும் நம் காமிக்ஸ் நண்பர்ளிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது//
கரையாண்களே தேவலை என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நிறைய புத்தகங்களை கொண்டு போன நண்பர்கள், அதை உங்களிடம் திரும்ப தரவில்லை போல தெரிகிறது! :-X
பரிசாக தரும் உங்கள் பண முடிப்பிற்கு மிகவும் நன்றி. :-))
// நிறைய புத்தகங்களை கொண்டு போன நண்பர்கள், அதை உங்களிடம் திரும்ப தரவில்லை போல தெரிகிறது! :-X//
Deleteஇவர் வைத்திருக்கும் புத்தகங்களை எங்கிருந்து லவட்டிக்கொண்டுவந்தார் என்பதனை மட்டும் கேட்டுச்சொல்லவும்:-)
காமிக்ஸ்வாழ் மக்களே!
Deleteதான் வைத்திருந்த காமிக்ஸ்களில் பலவற்றை கரையாண் அரித்துவிட்டதாக நம் நண்பர் ஈரோடு ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் மற்றவர் அபிமானத்தை பெறுவதற்கான திட்டதிட்ட நாடகம்!
கரையாண் அரித்ததென்னவோ உண்மைதான்!
'அரித்தது' என்பதைவிட 'அரிக்க வைக்கப்பட்டது' என்பதே உண்மை!
ஏனென்றால், கரையாண் அரித்ததெல்லாம் அவர் வைத்திருந்த 'என் பெயர் எழுதப்பட்டிருந்த' புத்தகங்களின் குறிப்பிட்ட சில பக்கங்களைத்தான்!
உபரித்தகவல்:
பல வருடங்களுக்கு முன்பே 'செல்லப் பிராணிகளைப்போல் கரையாண்களை வளர்த்துவது எப்படி?' என்ற புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிவைத்திருக்கிறார் நம் நண்பர் ஸ்டாலின்.
இப்போது சொல்லுங்கள் மக்களே, 'யார்' யாரிடமிருந்து 'லவட்டி'யது?!
"மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படும்போது, அவை எப்போதும் இனிப்பதில்லை"
//என் பெயர் எழுதப்பட்டிருந்த' புத்தகங்களின் குறிப்பிட்ட சில பக்கங்களைத்தான்!//
Deleteஇவர் எப்போதுமே இப்படிதான் எல்லோருடய புத்தகத்தையும் இவரோடதுன்னு சொல்லுவார். இப்ப ஒரு விஷயம் சொல்லுறேன் புனித சாத்தானிடம் இருக்கும் " பறந்து வந்த பயங்கரவாதிகள்". ஆடிட்டர் ராஜாவிடம் உள்ள திகில் சாத்தானின் சாம்ராஜ்யம் . ராஜாவிடம் நான் வாங்கிவந்த, "இரத்த நகரம்" இதெல்லாம் இவருடயதுன்னு சொல்லுவாரு பாருங்க...:-)(அவருடயது இல்லை எனில் இல்லை என்றுமட்டும் சொல்லட்டுமே அப்புறம் ......)
//'செல்லப் பிராணிகளைப்போல் கரையாண்களை வளர்த்துவது எப்படி?' என்ற புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிவைத்திருக்கிறார்//
இந்த புத்தகத்தின் ஆசிரியரே இவர்தான் என்பதனையும் , எழுதிய புத்தகம் ஒன்று கூட விற்கவில்லை நீங்களாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று அவர் என்னிடம் புலம்பியதையும் அதற்கு என்னிடம் வாங்கிய பணத்தில் பாக்கி மீதி கூட தராததையும் ஏன் மறைத்தார் என்பதுமட்டும் புரியவில்லை
உபயோகமான தகவல்கள், நன்றி பாலாஜி!
ReplyDeleteகரையான்கள் சாப்பிட வசதியாக குமுதம், விகடன் போன்ற வார இதழ்களை காமிக்ஸை சுற்றி கேடயமாக வைக்கலாம்! ;) good night folks...
Deleteநண்பர் கார்த்திக்கு வணக்கம்.
ReplyDeleteமுதல் முறையாக வருகிறீர்கள். வருகைக்கும் கமெண்ட்டுக்கும் இந்த தளத்தில் இணைந்ததற்கும் மிகவும் நன்றி.
50 ரூபாயை வைத்துக் கொண்டு, கரையாண்களுக்கு என்ன ஆல்டர்நேட் உணவு வாங்குவது என்பது தெரியாமல் முழி முழி என்று முழித்துக் கொண்டிருந்தேன். குமுதம், விகடன் ஐடியா நன்றாக வேலை செய்யும் என்று நினைக்கின்றேன்.
:)
Delete//அந்த பாழாய் போன மைலார் கவர்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன். அது பற்றிய விவரம் தெரியவந்தால் சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் சொல்லுங்கள்.//
Deleteசமீபத்தில் இந்தக் கவர்களை Amazon மூலம் வாங்கினேன்:
http://www.amazon.com/Current-Size-Comic-Boards-Combo/dp/B001MDF4UA/ref=sr_1_1
மேலும் சில பயனுள்ள பொருட்களின் பட்டியல்:
http://www.amazon.com/Comic-Book-Collecting-Starter-Kit/lm/RH1IJGZCNF1S2/ref=cm_lmt_srch_f_1_rsrsrs0