Wednesday, 12 September 2012

PRESERVING COMIC BOOKS–FEEDBACK

 indrajalcomicscollectio_thumb[6]
Dear Friends,
சென்ற பதிவிற்கான ஒரு பின்னூட்டத்தில் நண்பர் சிபி தனது காமிக்ஸ் புத்தகங்களை பத்திரப்படுத்தி இருக்கும் விதத்தை நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக எனக்கு இமெயிலில் சில படங்களை விவரத்தோடு அனுப்பி இருந்தார். அந்த படங்களையும் விவரங்களையும் அந்த பதிவையே எடிட் செய்து சேர்த்திடவே நினைத்தேன். அப்படிச் செய்தால் அதை யாரும் பார்க்காமல் போக நேரிடலாம் என்று நினைத்து புதிய பதிவாகவே இட்டுவிட்டேன்..
நண்பர் சிபி அனுப்பியது 4 படங்கள்.
இனி நண்பர் சிபியின் மெயில் விவரத்தை உள்ளபடியே கீழே பிரதிபலிக்கின்றேன் ;
CIBI: ”Pls. find the images of the covers/pouches these are the covers easily available and price also less ( hope )
This is press type you can open and close so many time but this quality is PP only but “MYLAR” material is new to me will check and revert you about this.
Thanks for your wonderful search and sharing.
Keep it up and once again thanks for all.”
By Cibi.
CIBI
 

DSC_0118_thumb[7]
DSC_0119_thumb[6]
DSC_0120_thumb[14]
DSC_0121
மேலேயுள்ள நான்கு படங்களும் நண்பர் சிபி அனுப்பியது.
பயணுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதற்கும், மேலும் ஏதேனும் விவரங்கள் கிடைத்தால் அவைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்வேன் என்று சொன்னதற்கும், நம் அனைவரின் சார்பிலும் நண்பர் சிபிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பதிவின் மேலே இருக்கும் முதல் படம்  வலையில் காணக்கிடைத்தது. ஷங்கர் என்ற காமிக்ஸ் ஆர்வலரின் இந்திரஜால் காமிக்ஸ் கலக்‌ஷன். மேஜையில் வட்ட வடிவ பெட்டியில் அடுக்கப்பட்டு இருப்பதும்  இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். நடுவே உள்ள 25 பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களும் இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். சேமிப்புகளை எவ்வளவு நேர்த்தியாக அவர் பத்திரப்படுத்தியுள்ளார் !!!.
இந்த பதிவு ரோம்ப குட்டியாக இருக்கிறது. அதனால் நீளத்தை  அதிகரிக்க சில எக்ஸ்ட்ரா மேட்டர்கள் கீழே.
அடுத்து, Mylar மெட்டீரியலைப் பற்றி சில விவரங்களை தெரிந்து கொள்ள கீழே ஒரு லிங்க்;
MYLAR WEB ANSWER
இப்போது சில யூட்யூப் விடியோக்கள்.
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 1
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 2
மேட் என்னும் காமிக்ஸ் ஆர்வலரின் காமிக்ஸ் சேகரித்து வைத்திருக்கும் முறை நமக்கெல்லாம் காதில் புகை வரவைக்கும்.
சொல்ல என்ன இருக்கிறது ?
அடுத்து நாமெல்லாம் 2012ம் வருடத்தில் முதலீடு!!! செய்ய வேண்டிய 45 காமிக்ஸ் புத்தகங்களின் பட்டியல். வருங்காலத்தில் இவையெல்லாம் ஷேர் மார்க்கெட் பங்குகளைப் போல விலையேறும் போது விற்று நன்றாக காசு பார்க்கலாமாம்.
கட்டாயம் முதலீடு செய்ய வேண்டிய ஷேர்கள்.
இந்த வாரத்திற்கு இது போதும் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.


17 comments:

 1. நண்பர் சிபி தனது புத்தகங்களை பத்திரப்படுத்தியிருக்கும் விதம் எளிமையென்றாலும், அதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி நிச்சயம் பாராட்டக்கூடியதே! எளிமையான வழி என்பதால் அதைக் கடைபிடிக்க நானும் முயற்சிக்கிறேன்.
  சிபி சார்! உங்க விலாசம் கிடைக்குமா? விலாசம்! விலாசம்!
  நண்பர் பாலாஜி சுந்தருக்கு நான் தரவேண்டிய மொத்தத் தொகை ரூ.400 ஆகிறது. அதில் ரூ.25ஐ நண்பர் சிபியிடம் சேர்ப்பித்துவிடுங்கள்.
  (அடிக்கடி பதிவிட்டு என் பாக்கெட்டை காலி பண்ணிடுவீங்க போலிருக்கே?!)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

   சென்ற தடவை கரையாணுக்கு 50, இந்த தடவை நண்பர் சிபிக்கு 25, ஆக மொத்தம் 75 பணால், இப்படியே என் சேமிப்பையெல்லாம் கரைத்துவிடுவீர்கள் போல தெரிகிறது.

   //அடிக்கடி பதிவிட்டு என் பாக்கெட்டை காலி பண்ணிடுவீங்க போலிருக்கே?!//

   கவலைப்பட வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். ரீபூட், அதாங்க, முதலில் இருந்து ஆரம்பித்துக் கொள்ளுங்கள் கணக்கை. ரூ.400/- ஐ விட உங்கள் நட்பே பெரிது.

   தொடருங்கள் உங்கள் பின்னூட்ட விளையாட்டுக்களை.

   நன்றி.

   Delete
 2. கலக்கல் நண்பரே
  தாங்கள் இவ்வாறு பதிவிடுவீர்கள் என்று நினைக்கவில்லை :))

  மேலும் காதில் புகை அல்ல இரத்தமே வருகிறது
  ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் எப்புடியெல்லாம் பாதுகாக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம் ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே, சர்ப்ரைஸ் ஆகி விட்டதா? உங்களை பதிவாக போட சொன்னேன். நீங்கள் பதிவிடவில்லை. அதனால் நானே போட்டுவிட்டேன். இந்த விவரத்தையே மெயிலில் அனுப்பி இருந்தேன்.

   Delete
 3. நமது நண்பர் கார்த்திக் என்பவர் தங்களைப்போல காமிக்ஸ் புத்தகங்களை பாதுகாக்கும் வழி முறைகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே சொல்லியுள்ளார்
  நான் இன்றுதான் கவனித்தேன் தங்களைப்பற்றி தகவலும் சொல்லியுள்ளேன்
  முடிந்தால் நீங்களும் அவரது வலைச்சரத்தினை பார்வையிடவும் நன்றி :))

  http://www.bladepedia.com/2012/04/blog-post_1195.html

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, ஏற்கெனவே கார்த்தியின் தளத்தில் இணைந்திருந்தேன். பல பதிவுகளையும் படித்திருக்கிறேன். ஆனால் இந்த லிங்குக்கான பதிவை இதுவரை படித்ததில்லை.

   உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு, ப்ளேட்பீடியாவுக்கு போய் ஒரு பின்னூட்டமும் போட்டு வந்துவிட்டேன்.
   லிங்குக்கும் வருகைக்கும் உங்கள் மெயிலையும், படங்களையும் உபயோகிக்க அனுமதித்ததற்கும் மிகவும் நன்றி.

   Delete
 4. சிபி அவர்களிடம் பல அரிய புத்தகங்கள் உள்ளன.
  நல்ல மற்றும் சுலபமான வழி.
  பகிந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே. மைலார் கவரைப் பற்றி ஒரு செய்தி. அந்த வகை கவர்கள் மிகவும் விலை அதிகமாக இருக்கின்றது. வெளிநாட்டிலேயே ஒரு கவர் விலை 9-லிருந்து 10 ரூபாய் வரை ஆகிறது. இந்த விலையும் 1000 கவர்கள் வாங்கினால்தான். அதற்கு மேலே ஷிப்பிங் சார்ஜஸ் வேறு ஆகிறது. அதற்கு ஜிப் லாக் கவர்களே தேவலை.

   Delete
 5. ரெண்டு மூணு நாலு முன்னாடி வந்தேன், பழைய பதிவுதான் இருந்தது. சரி பதிவு ஏதாவது போட சொல்லலாம் என்று வந்தேன், அதற்குள் போட்டு விட்டீர்கள். நான் wndows 8 ஐ நிருவியுள்ளதால் adobe flash player தொந்தரவு செய்கிறது. சரியானதும் நான் இந்த வீடியோக்களை பார்க்கிறேன் நண்பா...

  ReplyDelete
 6. அடுத்த பதிவு எப்போ வரும்... வைட்டிங்...பாஸ்

  ReplyDelete
  Replies
  1. வெகு விரைவில் நண்பரே....

   Delete
 7. என்ன தல வெளிநாடு ஏதாவது டூரா...... ஆளயே காணோம்.........

  ReplyDelete
  Replies
  1. தாமதத்திற்கு வருந்துகிறேன். விரைவில் அடுத்த பதிவில்....
   மற்றவற்றை ஏற்கெனவே பேசிவிட்டோம்.

   Delete
  2. தை திரு நன்னாளில் உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....

   Delete
  3. உங்கள் அனைவரின் ஆவலை நிறைவேற்ற பலம் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

   Delete
 8. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே,
   உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

   Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.