Monday, 14 January 2013

BLUEBERRY

 

blueberry-1

 

ன்பு நண்பர்களே,

ங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  Tiger5  
லயன் முத்து காமிக்ஸின் கௌபாய் கதாநாயகர்களில், நம் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் முதல் மூன்று கதாநாயகர்களின் பெயர்களை வரிசைப்படுத்தினால், அந்த முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம் கேப்டன் டைகருக்கு (என்கிற ப்ளூபெர்ரி) உண்டு.

Tiger2

கேப்டன் டைகர் கதாபாத்திரம், மனித உருவத்தை ஆதாரமாக கொண்டு வரையப்பட்ட கதாபாத்திரம். இப்படி அர்த்தம் கொள்வதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் கேப்டன் டைகரை உருவாக்கியவர்களைப் பற்றி சில விவரங்களை பார்க்கலாம்.

 

jean-michel charlierCaptain

ப்ளூபெர்ரி கதாபாத்திரத்தை உருவக்கியவர் ஜீன் மைக்கேல் சார்லியர் (Jean-Michel Charlier 30 October 1924 – 10 July 1989). இவர் பெல்ஜிய காமிக்ஸ்களுக்காக கதை எழுதுபவர். பல காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு சார்லியர் கர்த்தா. சராசரியாக 24 கதாபாத்திரங்களுக்கு மேல் இவர் உருவாக்கி இருக்கின்றார். அதில் எனக்குத் தெரிந்தவரை, லயன், முத்துவில் வந்தது, கேப்டன் ப்ளூபெர்ரியும், டைகர் ஜோ என்ற வனரேஞ்சர் ஜோ கதைகளுமே. அதற்கு மேல் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

 

ப்ளூபெர்ரி கதைகளை காமிக்ஸ்களாக வரைவதற்கு சார்லியர் தேர்ந்தெடுத்தது ஜீன் ஜிராட் என்ற ஃபிரெஞ்ச் ஓவியரை. (Jean Giraud என்ற Jean Henri Gaston Giraud, 08 May 1938 – 10 March 2012).

clip_image001

BANDES DESSINEES


படங்கள் வரையும் முறையில், மாடர்ன் ஆர்ட், டிரெடிஷனல் ஆர்ட், ட்ரைபல் பெயிண்டிங், தஞ்சாவூர் பெயிண்டிங் என்று பல முறைகள் இருப்பது போல், ஃபிரெஞ்ச் நாட்டில், படம் வரையும் முறையில்  Bandes Dessinees – என்ற ஒரு தொன்மையான படம் வரையும் கலை இருக்கிறது. காமிக்ஸ் படங்களை வரையும் போது படங்களில்   சித்தரிக்கும் காட்சிகள்  இயற்கையாக, நேரில் பார்ப்பதுபோல்  இருக்கும். இந்த தொன்மையான பாண்டேஸ் டெஸ்ஸினீஸ் வரைகலை முறை 19-ம் நூற்றாண்டில் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. பல காமிக்ஸ் புத்தகங்கள் இந்த தொன்மையான வரைகலையின் முறையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த காமிக்ஸ்கள் சுருக்கமாக BD (Bandes Dessinees) என்று அழைக்கப்படுகிறது.

moebius_airtight-garage_page-30_detail

ஃபிரஞ்சு மொழி ஃபிரான்ஸ் நாட்டில் மட்டுமல்லாது, பெல்ஜியத்தில் 40 சதவீத மக்களுக்கும், சுவிட்சர்லாந்தில் 20 சதவீத மக்களுக்கும் தாய்மொழியாக இருக்கிறது. அதனால், ஐரோப்பாவில், ஃபிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ்கள், நாடுகளின் எல்லைகளை தாண்டிய ஒரு பெரிய வாசக, ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த நாம் எல்லோரும் ரசனையில் ஐரோப்பிய ரசிகர்களோடு இணைகிறோம்!.

Dargaud_Wallpaper_105

 

இப்போது சப்ஜெக்ட்டுக்கு போவோம். காமிக்ஸ்களை இரண்டு வகையாக பிரித்தால், ஒருவகை கார்டூன் படங்களைக் கொண்டது, இரண்டாவது வகை மனித தோற்றத்தை சார்ந்திருக்கும் படங்களைக் கொண்டது.

கார்டூன் வகைகளுக்கு உதாரணம்; 1. மிக்கி மௌவுஸ், 2. லக்கி லூக், 3. ஹீத்க்ளிஃப், 4. கார்ஃபீல்ட் போன்றவை.

மனித தோற்றத்தை சார்ந்திருக்கும் காமிக்ஸ்களுக்கு உதாரணம்; 1. சூப்பர் மேன், 2. பேட்மேன், 3. XIII – ஜேஸன் ப்ளை, 4. ப்ளூபெர்ரி என்ற கேப்டன் டைகர்.

bf7889ac7ddc8e628b1d87bfcb9ba2ad_thumbnail

கேப்டன் டைகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கர்த்தா சார்லியர் என்றும், கேப்டன் டைகரின் கதைகளை படமாக வரைவதற்கு சார்லியர் தேர்ந்தெடுத்த ஓவியர் பெயர் ஜீன் ஜிராட் என்றும் ஏற்கெனவே பார்த்தோம்.

moebius_moali

பாண்டேஸ் டெஸ்ஸினீஸ் முறையில் படங்களை வரைவதில் ஜீன் ஜிராட் தேர்ந்தவராக இருந்தார். ஓவியர் ஜிராட், மோபியஸ் என்ற புனைப்பெயரில் உலக அளவில் பெரும் புகழ் பெற்று இருந்தார்.


இவர் கிர் என்ற பெயரிலும் படங்கள் வரைந்து வந்தார். இந்த பதிவில் இனி இவரை மோபியஸ் என்றே அழைக்கலாம்.

moebius_low 

ஹல்க், ஸ்பைடர்மேன், தோர், ஐயர்ன்மேன் போன்ற பல காமிக்ஸ் கேரக்டர்களை உருவாக்கிய கர்த்தா ஸ்டான் லீ மற்றும் அவரைப் போன்ற பல உலகப் புகழ் பெற்ற பிரபல ஓவியர்கள், மோபியஸின் ஓவியத் திறமையை வியந்து பாராட்டியுள்ளனர். ஓவியத் திறமையிலும், காமிக்ஸ் கதைகளிலும் மோபியஸ் ஒரு சகாப்தம். அவரது ஓவியத் திறமைகளை விவரிக்க ஒரு பதிவு போதாது.

 

ப்ளூபெர்ரியான ஜீன் பால் பெல்மாண்டோ!

மனித உருவத்தை ஆதாரமாக கொண்டு வரையப்பட்ட கதாபாத்திரம் கேப்டன் டைகர் என்று மேலே குறிப்பிட்டேன். அதற்கு காரணம், ஃப்ரெஞ்சு திரைப்பட நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோவின் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் மோபியஸ், கேப்டன் டைகரின் உருவத்தை வரைந்தார். இது மோபியஸ் அவர்களே வெளியிட்ட தகவல்.

clip_image001[11]clip_image001[9]

ஃப்ரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோ. இவர் பிறந்தது 1933-ம் வருடம். இவருக்கு இப்போது வயது 79.

196205

இவர் 84 படங்களில் நடித்துள்ளார். இந்த 84 படங்களில் ஆங்கிலப் படங்களும் அடக்கம். நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோ நடித்த உலகப் பிரசித்தி பெற்ற Peur Sur La Ville என்ற ஃபிரெஞ்சு திரைப்படம்,  FEAR OVER THE CITY – என்ற பெயரில் ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்து, வசூலில் சக்கை போடு போட்டது.

இந்த படத்தில் ஜீன் பால் பெல்மாண்டோ கொலைகாரனை பிடிக்க துரத்திக் கொண்டு ஓடும் நீண்ட காட்சிகள் மறக்க முடியாதவை. சேஸ் ஆரம்பிப்பது, நெருக்கமாக இருக்கும் கட்டிடங்களுக்கு மேலே சேஸ் ஆரம்பிக்கும், பிறகு அது பைக் கார் என்று பல நிமிடங்களுக்கு தொடரும்.

ஜீன் பால் பெல்மாண்டோ உருவத்திற்கும், கேப்டன் டைகர் உருவத்திற்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை என்னவென்று தெரியுமா? கோனல் மூக்கில்தான் அந்த ஒற்றுமை. அந்த கோனல் மூக்கு ஒற்றுமையை இங்கு கொஞ்சம் “தெளிவாக” பின்வரும் படங்களில் பார்க்கலாம்.

11559169_gal

11762501_gal

Blueberry

jean-paul-belmondo-11722-1024x768

blueberry


ஃபிரான்ஸ் நாட்டில் ப்ளூபெர்ரி காமிக்ஸ் கதை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இந்த படத்தை RENEGADE என்ற பெயரில், ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டு 2004-ம் வருடம் வெளியிடப்பட்டு இருக்கின்றது. வின்செண்ட் கேஸ்ஸெல் என்ற பிரஞ்சு நடிகர், ப்ளூபெர்ரியாக நடித்திருக்கிறார்.

clip_image001[15]

இப்போழுது ப்ளூபெர்ரி திரைப்படத்தின் கதையை பார்ப்போம்.

ப்ளூபெர்ரி திரைப்பட தயாரிப்பிற்கு, மோபியஸ் முழு அங்கீகாரம் தந்திருக்கிறார்.

clip_image001[17]

உலகமெங்கும் பரவி இருக்கும் மோபியஸின் ப்ளூபெர்ரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு ப்ளூபெர்ரி கதையும் திரைப்படத்தைப் போல இருந்தும், திரைப்படமாக தயாரிப்பதற்கு தேவையான அளவிற்கு ப்ளூபெர்ரி காமிக்ஸ் கதைகள் இருந்தாலும், இந்த திரைப்படக் கதை ஒரு புதிய கதைவரிசைக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.

276830

திரைப்படத் துவக்கத்தில், ஒரு கோச்சு வண்டியில் டீன் ஏஜில் இருக்கும் நமது ஹீரோ மைக்கேல் டோனோவான் ப்ளூபெர்ரி என்கிற மைக் ப்ளூபெர்ரி ஒரு வெஸ்டர்ன் டவுனுக்கு வந்து இறங்குகிறார்.

ஃப்ரெஞ்சு லூசியானாவில் இருக்கும் ப்ளூபெர்ரியின் பெற்றோர்கள், மகன் பொறுப்பில்லாமல் இருப்பதால், அவன் வாழ்க்கையில் உருப்பட வேண்டும் என்பதற்காக, வெஸ்டர்ன் டவுனில் வசிக்கும் அவரது அங்கிளிடம், வேலை கற்றுக் கொள்ள அனுப்பி வைக்கின்றனர். இதுவே ப்ளூபெர்ரி இந்த டவுனுக்கு வருவதன் காரணம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள், பரந்து விரிந்த மிகப் பெரிய அமெரிக்காவில், அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிறிய காலனிகளாக இருக்கும் டவுன்களில் வசிக்கின்றனர். ஒரு டவுனுக்கும், மற்றொரு டவுனுக்கும் இடையே பல நாட்கள் பயணம் செய்ய வேண்டிய அளவுக்கு தூரம் இருக்கும். இந்த இடைப்பட்ட பயண வழித்தடங்களை வெள்ளைக்கார  கொள்ளையர்களும், நட்புக் குணம் இல்லாத சிகப்பிந்தியர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு டவுனிலும், கட்டாயம் ஒரு சலூன் என்கிற மதுபான கடையும், அதையடுத்து, தங்கும் விடுதிகளும், முடித்திருத்தும் இடமும், அனைத்து பொருட்களும் விற்கும் ஒரு பலசரக்குக் கடையும் நிச்சயம் இருக்கும். அந்த நாளைய வெஸ்டர்ன் உலகில், மக்கள் பெரும்பாலும் ஈடுபட்டது, பெரிய பெரிய மாட்டு பண்ணைகளையும், குதிரை பண்ணைகளையும் நிர்வகித்ததே. எஞ்சியவர்கள் ஆர்வம் காட்டியது, தங்க வேட்டையில். அதனால் தங்க வேட்டையில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு கிடைத்த தங்கத்தை வெஸ்டர்ன் டவுனுக்கு வந்து, பணமாக மாற்றி, தாக சாந்தி செய்துகொள்வது வழக்கம் (லக்கி லூக் கதைகளில் படித்திருப்போம்). மதுபானக் கடையில் மது, மாது, சூது என்று அனைத்தும் கிடைக்கும். மது பானக் கடையிலேயே பெண்கள் இருந்து, அங்கு தாகத்துடனும், மோகத்துடனும் வருகின்ற ஆண்களையும், பயணிகளையும், தங்க வேட்டையர்களையும் மயக்கியும், அந்த்ரங்கமாக நெருங்கிப் பழகியும் பணம் சம்பாதிப்பார்கள்.

இப்போது கதைக்கு வருவோம், கோச்சு வண்டியில் இருந்து கீழே இறங்கும் ப்ளூபெர்ரி, முதலில் பார்ப்பது, அங்கிருக்கும் விடுதியின் மாடியில் இருக்கும் ஒரு இளம் பெண்ணை. அந்த பெண் ப்ளூபெர்ரியைப் பார்த்து நட்பாக சிரிக்கிறாள். ப்ளூபெர்ரியும் அவளைப் பார்த்து சிரிக்கிறார். அடுத்த நிமிடம், ப்ளூபெர்ரியை அவரது அங்கிள் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

ப்ளூபெர்ரியிடம் அவரது அங்கிள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார். ப்ளூபெர்ரிக்கு தரப்படும் வேலை, அவரது அங்கிளுக்கு சொந்தமான பண்ணையில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு பண்ணைக்கு வேலி அமைக்க வேண்டும். ப்ளூபெர்ரி வேலையில் தாமதித்தாலோ, தவறு செய்தாலோ, பிரம்படிதான். ப்ளூபெர்ரி அவரது அங்கிளிடம் பல முறை பிரம்படி வாங்குகிறார்.

ப்ளூபெர்ரியின் மனதில் விடுதியில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் முகமே எந்த நேரமும் தோன்றி அவரை சலனப் படுத்துகிறது.

iy8bh0xokjxm0hoy

ப்ளூபெர்ரியின் அங்கிள் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் போது, அங்கிளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, ப்ளூபெர்ரி செல்லும் இடம், அவரது மனம் கவர்ந்த அந்த விடுதி பெண்ணிடம்.

screen_image_360874

விடுதியில் இருக்கும் பெண்ணும் ப்ளூபெர்ரியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்கிறாள். இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் நேரம், அந்த அறைக்குள் அத்து மீறி நுழையும் வேலஸ் செபாஸ்டியன் ப்ளண்ட் (மைக்கேல் மேட்சென்) என்னும் கௌபாய். செபாஸ்டியன் ப்ளண்ட் ஒரு அடாவடியான கௌபாய். குறிதவறாமல் துப்பாக்கி சுடுவதில் வல்லவன்.

031543_29

விடுதிப் பெண் தன்னுடன்தான் நேரத்தைக் கழிக்க போகிறாள் என்றும், அதனால் ப்ளூபெர்ரியை வெளியேறுமாறும் மிரட்டல் தொனியில் ப்ளண்ட் கூறுகிறான். ப்ளூபெர்ரி பயப்படாமல், தான் வெளியேற முடியாது என்றும், ப்ளண்ட்தான் வெளியேற வேண்டும் என்றும் தைரியமாக நிற்கிறான். விடுதி பெண்ணும், ப்ளூபெர்ரியை வெளியேறுமாறு சொல்கிறாள். ப்ளண்ட் கோபத்தில் ப்ளூபெர்ரியை தாக்குகிறான். விடு்தி பெண் ப்ளூபெர்ரியை, ப்ளண்ட்டிடம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறாள். ப்ளண்ட் கோபத்தில் ப்ளூபெர்ரியை தாக்குகிறான். ப்ளூபெர்ரியின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. ப்ளண்ட்டின் அநாகரீகமான செயலினாலும், அத்து மீறலினாலும் எரிச்சலடைந்த ப்ளூபெர்ரி, தனது துப்பாக்கியை உருவி, ப்ளண்டை குறிவைக்கின்றான். ப்ளண்ட்டும் பதிலுக்கு, துப்பாக்கியை உருவி, விடுதிப் பெண்ணின் நெற்றியில் வைத்து, ப்ளூபெர்ரி தன்னை சுட எத்தனித்தால், விடுதி பெண்ணை கொன்று விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டுகிறான். அடுத்த நொடியில் ப்ளண்ட்டுடைய துப்பாக்கியும், ப்ளூபெர்ரியின் துப்பாக்கியும் ஒரு சேர வெடிக்கின்றது. நெற்றியில் திலகமிட்டது போல் ஒரு குண்டு துளைத்து விடுதிப் பெண்ணின் உயிர் பிரிகிறது, கட்டிலின் அருகில் இருக்கும் மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் லாந்தர் விளக்கு, மரத்தினால் கட்டப்பட்ட அறையின் தரையில் விழுந்து, பெரும் தீ மூள்கிறது. அந்த முழு கட்டடமுமே மரத்தினால் கட்டப்பட்டது. தொடர்ந்த துப்பாக்கி முழக்கத்தினிடையே, முதல் தளத்தில் இருக்கும் விடுதி  அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு கூறையின் சரிவில் உருண்டபடி ப்ளூபெர்ரி விடுதியின் வெளியே வந்து விழுகிறான். விடுதி தீப்பிடித்ததால் எழும் களேபரத்தினாலும், இரவு நேரமாக இருப்பதினாலும், கீழே விழுந்த ப்ளூபெர்ரி, உடனே எழுந்து அங்கு நிற்கும் குதிரையின் மேல் ஏறி அந்த இடத்தை விட்டு அகலுகிறான்.

 

இரவில், துப்பாக்கி தோட்டா காயத்துடன், அரை மயக்க நிலையில் குதிரை மீதேறி டவுனை விட்டு வெளியேறும் ப்ளூபெர்ரி, அவனது தோட்டா காயத்தில் இருந்து வெளியேறும் அதீத இரத்த இழப்பினால்  நினைவிழந்து மயங்கி குதிரை மீதிருந்து கீழே விழுந்து விடுகிறான்.

ப்ளூபெர்ரி விழுந்த இடம் ஏராளமான பாம்புகள் வசிக்கும் இடம்.  குற்றுயிராய் மயங்கிக் கிழே கிடக்கும் ப்ளூபெர்ரியை, விதவிதமான பாம்புகள் சுற்றிக் கொள்கிறது. இந்த நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை, ஒரு சிகப்பிந்திய பெரியவரும், ப்ளூபெர்ரியின் வயதையொத்த அவரது, அவரது மகனும் காண நேர்கிறது. செவ்விந்திய பெரியவர், அவரது கையை குவித்து, அவரது வாயில் வைத்து ஊதுகிறார். உடனே ப்ளூபெர்ரியை சுற்றி இருக்கும் பாம்புகள் அனைத்தும் விலகி செல்கின்றது.

செவ்விந்தியரும் அவரது மகனும் சேர்ந்து, ப்ளூபெர்ரியை, தங்களது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். ப்ளூபெர்ரியை காப்பாற்றியவர் ஒரு செவ்விந்திய மருத்துவர் மற்றும் மாந்திரீகர். ப்ளூபெர்ரியின் தோளில் இருக்கும் தோட்டா காயத்திற்கும், மூக்கின் மேல் இருக்கும் காயத்திற்கும் பாரம்பரிய செவ்விந்திய மருத்துவ முறைப்படி, மருந்துவம் செய்யப்படுகிறது.

renegade-2-1

BB

ப்ளூபெர்ரியும் பிழைத்து எழுகிறான். மருத்துவர் குடும்பமும், செவ்விந்தியர் குடியிருப்பு மக்களும், ப்ளூபெர்ரியை தங்களில் ஒருவனாக அரவணைத்து பாதுகாத்து வளர்க்கின்றனர். ப்ளூபெர்ரியும், செவ்விந்தியர்களோடு வாழ்க்கையில் ஒன்றி, அவர்களது மொழியிலும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்கிறான்.

ப்ளூபெர்ரிக்கு மூக்கில் ப்ளண்ட் ஏற்படுத்திய காயம் ஆறினாலும், காயத்தின் வடு ஆழமாக இருப்பதினால், ப்ளூபெர்ரியின் மூக்கின் தோற்றம் நெளிந்த உருவமாகவே இருக்கின்றது. செவ்விந்தியர்கள் ப்ளூபெர்ரியை கோணல் மூக்குக்காரன் என்றே கிண்டல் செய்து அழைக்கின்றனர்.

screen_image_360887

டீன் ஏஜ் ப்ளூபெர்ரி, இளைஞன் ப்ளூபெர்ரியாக வளர்கிறார். ப்ளூபெர்ரியை காப்பாற்றிய மாந்திரீகர் வயதானதின் காரணமாக இறக்கின்றார். மாந்திரீகரின் பொறுப்பை, அவர் மகன்  ஏற்கிறார்.

0 (1)

தன்னை வளர்த்தவரின் மரணம், ப்ளூபெர்ரியை நிலை தடுமாற வைக்கின்றது. இதன் காரணமாக, குதிரையில் ஏறி, செவ்விந்திய கிராமத்தை விட்டு மீண்டும் நகரத்துக்கு வருகிறார் ப்ளூபெர்ரி.

வெஸ்டர்ன் டவுனில் டெபுடி மார்ஷலாக (டெபுடி ஷெரீஃப்) பதவியில்  டவுனின் போலீஸ் அதிகாரியாக இருக்கின்றார்.

renegade

இதே சமயத்தில், ப்ரோசிட் என்னும் ஜெர்மானிய புவியியல் ஆராய்சியாளன், ஒரு நீக்ரோ உதவியாளனோடு, ஒரு பழைய மேப்பின் வழிகாட்டுதல் படி, செவ்விந்தியர்களின் புனித பூமியாக கருதப்படும் இடத்தில் வைக்கபட்டு இருக்கும் தங்கத்தாலான பொக்கிஷங்களை தேடிக் கொண்டு இருக்கின்றான். அவனது தேடலின் முடிவில் புதையலின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்து விடுகின்றான்.

clip_image001[19]

புதையல் இருக்கும் இடம், செவ்விந்தியர்களின் புனித இடம். அதை எடுக்க அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்று நீக்ரோ உதவியாளன் சொல்கிறான். அதற்கு வேறொரு திட்டம் தன்னிடம் இருப்பதாகவும், நாம் மீண்டும் டவுனுக்குள் சென்று, ஆட்களை திரட்டி வந்து புதையலை எடுக்கப்போவதாகவும்  ப்ரோசிட் சொல்கிறான்.

BB2

செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே சமாதானம் நிலவுவதால், செவ்விந்தியர்களின் புனித இடத்தை கொள்ளையடிக்க வெள்ளையர்கள் உடன்பட மாட்டார்கள் என நீக்ரோ செல்லி முடிக்கும் முன், எங்கிருந்தோ சில செவ்விந்தியர்கள் அங்கு வந்து விடுகிறார்கள். தனது நீக்ரோ உதவியாளனை அம்போ என்று விட்டு விட்டு ப்ரோசிட் மட்டும் குதிரையில் ஏறி தப்பித்து விடுகிறான். 

ப்ளூபெர்ரி இருக்கும் டவுனில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவருக்கு சொந்தமாக பெரிய கால்நடைப் பண்ணையும், குதிரைப் பண்ணையும் இருக்கின்றது. அவருக்கு ஒரு அழகான மகள் இருக்கிறாள். அந்த பெண் ப்ளூபெர்ரியை விரும்புகிறாள். அதில்  அவளது பணக்கார தந்தைக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

blueberry-13

செவ்விந்தியர்களின் பிடியில் இருந்து தப்பிய ப்ரோசிட், ப்ளூபெர்ரி இருக்கும் டவுனுக்கு அருகே வந்ததும், அவனே தனது கத்தியால், அவனது நெற்றியில் செவ்விந்தியர்கள் மண்டைத் தோலினை உரிப்பதற்காக கிழித்ததுபோல் ஒரு காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஆபத்து என்று அலறியவாறு, மதுபான விடுதியில் வந்து விழுகிறான்.

செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே நிலவும் அமைதியை குலைத்து விட்டால், செவ்விந்தியர்கள் அனைவரும் வெள்ளையர்களால் கொல்லப்படுவர். பின் சுலபமாக தங்கப் புதையலை அடைந்துவிடலாம் என்பது அவனது நோக்கம்.

ப்ரோசிட்டிடம் இருக்கும் வரைபடம், ப்ளூபெர்ரியின் காதலியின் தந்தையான செல்வந்தரிடம் மாட்டிக் கொள்கிறது. இவர்கள் அனைவரும் இருக்கும் மதுபான விடுதிக்குப் பின்புறம் ஒரு செவ்விந்தியன் கத்தியால் குத்தி கொல்லப்படுகிறான். இந்த சம்பவத்தினால் வெள்ளையர்களுக்கும், சிவப்பிந்தியர்களுக்கும் இடையே நிலவி வந்த அமைதி குலையும் நிலை வருகிறது.

செவ்விந்தியனின் உயிரில்லாத உடலை, செவ்விந்தியர்களிடம் ஒப்படைக்க ப்ளுபெர்ரி பயணமாகிறார். வெகு தூரப் பயணத்தின் பிறகு ப்ரோசிட்டை விரட்டியடித்த செவ்விந்திய கும்பல் ப்ளூபெர்ரியின் வழியில் குறுக்கிடுகிறது. தேவையில்லாமல் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் செவ்விந்திய கும்பல் ஈடுபடுவதாக ப்ளூபெர்ரி சொல்ல, செவ்விந்திய கும்பலின் தலைவன், அவனிடம் இருக்கும் நீக்ரோவின் உரிக்கப்பட்ட மண்டை தொலியை ப்ளூபெர்ரியிடம் வீசி எறிந்தபின், ப்ளூபெர்ரியின் மேல் பாய்ந்து தாக்குதலில் ஈடுபடுகிறான். பெர்ரிக்கும், செவ்விந்திய குழுவின் தலைவனுக்கும் கைகலப்பு நடக்கிறது. பின் செவ்விந்திய கும்பல், இறந்த செவ்விந்தியனின் உடலோடு அங்கிருந்து அகலுகிறது.

அடுத்த நாள், நகருக்குள் வரும் கோச்சு வண்டியில் ப்ளண்ட் வந்து சேர்கிறான்.

செவ்விந்தியர்களிடம் மாட்டிய நீக்ரோ உதவியாளனின் மண்டை தோல் உரிக்கப்பட்ட பின். அங்கேயே அவனை போட்டு விட்டு செவ்விந்தியர்கள் போய்விடுகிறார்கள். தன்னை நிர்க்கதியாக செவ்விந்தியர்களிடம் சிக்க வைத்த தனது எஜமானன் ப்ரோசிட்டை கொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தோடும், உயிரை கையில் பிடித்தபடி ப்ளண்ட் வந்த கோச்சு வண்டிக்கு அடுத்து வரும் கோச்சு வண்டியில், நீக்ரோ டவுனுக்குள் வந்து சேர்கிறான்.

blueberry 10

ப்ரோசிட்டை சந்திக்கும் ப்ளண்ட், தங்கப் புதையலைப் பற்றி கேட்கிறான். ப்ளண்டைக் கண்டு நடுங்கும் ப்ரோசிட், புதையல் பற்றிய விவரங்களும், மேப்பும் அடங்கிய டைரி, (ப்ளுபெரியின் காதலியின் தந்தையான) பணக்கார பெரும் புள்ளியிடம் சிக்கியிருக்கிறது என்று சொல்லிவிடுகிறான்.

ப்ரோசிட்டை கொல்ல வெறியோடு வரும் நீக்ரோ, ப்ரோசிட்டை துப்பாக்கியால் சுடப்போகும் நேரத்தில், நீக்ரோவை சுட்டு வீழ்த்துகிறான், ப்ரோசிட்டின் பழைய நண்பனான ப்ளண்ட் (நடிகர் மைக்கேல் மேட்சென்).

நீக்ரோவை சுட்டுக் கொன்ற காரணத்தினால், சீனியர் மார்ஷலினால் ப்ளண்ட் சிறையில் அடைக்கப்படுகிறான்.

பணக்கார பெரும்புள்ளி, தங்கப் புதையல் டைரியை படித்து, அதை அடைய வேண்டும் என்றால், வெள்ளையர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் இடையே சண்டை மூளவேண்டும் என்றும், இந்த கலவரத்தில் செவ்விந்தியர்கள் கொல்லப்படுவார்கள். செவ்விந்தியர்கள் அழிந்த பிறகு அவர்களுடைய புனித இடத்தில் இருக்கும் அனைத்து தங்கத்தையும் சுலபமாக அடைந்துவிடலாம் என்று திட்டம் தீட்டி, செவ்விந்தியர்களை தாக்க சதி திட்டம் போடுகிறார்.

செவ்விந்தியனின் சடலத்தை செவ்விந்தியர்களிடம் ஒப்படைக்கச் சென்ற ப்ளூபெர்ரி, நகருக்கு வருகிறார். செல்வந்தரின் குதிரைப் பண்ணைக்குச் சென்று, வெள்ளையர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் இடையே நிலவும் அமைதி குலையும் சூழ்நிலைக்குக் காரணம், ப்ரோசிட்டினுடைய தங்க வேட்டை நடவடிக்கையே காரணம் என்றும், தங்க வேட்டைக்குப் போன காரணத்தினாலேதான், ப்ரோசிட்டின் வேலைக்காரனான நீக்ரோவின் மண்டை தொலி உரிக்கப்பட்டது என்றும், செவ்விந்தியர்களை தாக்க வேண்டும் என்ற செல்வந்தரின் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ப்ளூபெர்ரி செல்வந்தரை எச்சரிக்கிறார். பதிலுக்கு, அந்த மண்டைத் தொலியின் சொந்தக்காரனை சுட்டு கொன்றவன் மார்ஷலினால் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்கிறார்.

பண்ணையில் இருந்து தனது அலுவலகத்திற்கு வரும் ப்ளூபெர்ரி அங்கு லாக்கப்பில் அடைபட்டு இருக்கும் ப்ளண்டை அடையாளம் கண்டு கொண்டு, வெறியோடு அங்கிருந்து வெளியேறும் ப்ளூபெர்ரி, தனது சட்டையில் இருக்கும் டெபுடி மார்ஷல் ஸ்டாரை பிடுங்கி கீழே வீசி விட்டு,  ஹோட்டலில் இருக்கும் தனது அறைக்குச் சென்று, அங்கிருக்கும் தனது பழைய ரிவால்வரை எடுத்து ப்ளண்டை கொல்வதற்காக லாக்கப்பை நோக்கி வருகிறார்.

BB4

தன் சகாக்களினால் உதவியினால் லாக்கப்பில் இருந்து விடுவிக்கப்படும் ப்ளண்ட், கதவின் பின் மறைந்திருக்கும் தன் சகாக்களோடு மார்ஷல் அலுவலகத்திற்குள் துப்பாக்கியோடு நுழையும் ப்ளூபெர்ரியை, பின் மண்டையில் தாக்கி நிராயுதபாணியாக்குகின்றார்கள். ப்ளூபெர்ரியின் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்து ப்ளூபெர்ரியை அடையாளம் கண்டு கொள்கிறான் ப்ளண்ட். ஏனென்றால், அந்த ஒற்றை துப்பாக்கி ப்ளண்டுக்கு சொந்தமானது.

BB3

ப்ளண்டின் சகாக்கள் வின்செஸ்டர் ரைபிளின் பின்பக்க கட்டையினால் ப்ளூபெர்ரியை தாக்கி நினைவிழக்கச் செய்கிறார்கள். பின் மதுபானங்களை மார்ஷலின் ஆபிஸ் முழுக்க கீழே ஊற்றி, மயங்கி இருக்கும் ப்ளூபெர்ரியை உள்ளே வைத்து அலுவலகத்தை வெளியே பூட்டி, பின் அலுவலகத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி செல்கிறார்கள்.

injured

ஏற்கெனவே கட்டிடத்தின் உள்ளே மயங்கிய நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியின் நண்பர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை காப்பாற்றி, தீப்பிடித்து எரியும் கட்டிடத்தின் அடியில் இருக்கும் வழியே வெளியேறி, மயங்கிய நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை, ப்ளூபெர்ரியின் பழைய நண்பனான, தற்போதைய செவ்விந்திய மந்திரவாதியிடம் தூக்கிச் செல்கிறார்.

லாக்கப்பில் இருந்து தப்பித்த ப்ளண்ட், தன் சகாக்களுடன், இரவில் ஓசைப்படாமல், பண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் செல்வந்தரின் அறைக்குள் சத்தம் போடாமல் நுழைந்து, செல்வந்தரை கொன்று, அவரிடம் இருக்கு தங்கப் புதையல் டைரியை கைப்பற்றிய பின், தப்பிச் செல்கின்றது. போகும் போது அங்கிருக்கும் ப்ரோசிட்டையும் தங்களோடு அழைத்துச் செல்கின்றனர்.

தனது தந்தையை கொலை செய்ததற்கு பழிவாங்க, செல்வந்தரின் மகள், (ப்ளூபெர்ரியின் காதலி) தனது பண்ணையை சேர்ந்த கௌபாய்களுடன் ப்ளண்ட் கும்பலை விரட்டி செல்கிறாள்.

மயங்கிய நிலையில் செவ்விந்திய மந்திரவாதியிடம் அழைத்துச் செல்லப்படும் ப்ளூபெர்ரிக்கு, செவ்விந்திய பாரம்பரிய மந்திரவாத முறையில் புகையெல்லாம் ஊதி, ப்ளூபெர்ரியின் வாயில் நாட்டு சரக்கை ஊற்றி போதை ஏற்றி சிகிச்சை செய்கிறார். இந்த காட்சிகளை அருமையான கிராபிக்ஸில் காட்டுகிறார்கள். அனைத்து கிரபிக்ஸ்களும் XFROG என்னும் கிராபிக்ஸ் ரெண்டரிங் ப்ரோகிரம் மூலம் உருவாக்கி இருக்கின்றார்கள்.

 

BB5

blueberry2 (1)

13-RENEGADE

பம்மல் கே சம்பந்தம் படத்தில், பழமொழி சொன்னா ரசிக்கனும், அதுக்கு அர்த்தம் எல்லாம் கேட்கக் கூடாது என்று கமலஹாசன் ஒரு வசனம் சொல்லுவார், அது போல, இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை ஏன், என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்காமல் ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

blueberry2a (1)

இந்த இரவெல்லாம் செய்யப்படும் இந்த  போதை + மந்திர சிகிச்சையினால், பொழுது விடியும் போது  முழுமையாக குணமடையும் ப்ளூபெர்ரி, தனது வெள்ளை நண்பருடனும், செவ்விந்திய நண்பருடனும் ப்ளண்டைத் தேடி கிளம்புகிறார்.

இப்போழுது, அகண்ட பாலைவனத்தில், ப்ளண்ட் + ப்ரோசிட் கும்பல் தங்கப் புதையலை தேடி சென்று கொண்டு இருக்கிறது.

அவர்களை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட தனது தந்தைக்காக பழிவாங்க ப்ளூபெர்ரியினுடைய காதலியின் கௌபாய் கும்பல், ப்ளண்டின் தடத்தை பின்பற்றி செல்கிறது.

அதே போல், ப்ளுபெர்ரியும் அவரது நண்பர்களும் ப்ளண்டைத் தேடி பயணமாகிறார்கள்.

மற்றோரு இடத்தில் தங்கப் புதையல் இருக்கும் தங்களது பிசாசு நகரத்தை, வெள்ளை தங்க வேட்டையர்களிடம் இருந்து காப்பாற்ற ஒரு பெரிய சிவப்பிந்திய கும்பல் கிளம்புகிறது.

இரவுப் பொழுதில், செல்வந்தர் மகளின் முகாமை தாக்கும் ப்ளண்ட், குதிரைப் பண்ணையைச் சேர்ந்த அனைத்து கௌபாய்களையும் தாக்கிக் கொலை செய்கிறது. ப்ளண்ட் கும்பலில் இருக்கும் கயவர்களால் செல்வந்தர் மகள் மானபங்கப்படுத்தப்பட்டு, பின் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள்.

விடிந்த பின் அந்த வழியே வரும் ப்ளூபெர்ரி, செல்வந்தர் மகளைக் காப்பாற்றுகிறார். செல்வந்தர் மகளுக்கும், செவ்விந்திய மந்திரவாத சிகிச்சை தரப்பட்டு, உயிர் பிழைக்கிறார்.

பாலைவனத்தில் பயணப்படும் ப்ளண்ட் கும்பலை, முரட்டு செவ்விந்திய கும்பல் தாக்குகிறது. இந்த தாக்குதலில், ப்ளண்ட்டும், ப்ரோசிட் ஆகிய இருவர் மட்டுமே தப்பிப் பிழைக்கின்றார்கள்.
ப்ளண்ட் ஏமாந்திருக்கும் சமயத்தில், ப்ரோசிட், ப்ளண்டின் குதிரையை தன்னிடம் இருக்கும் கூர்மையான நீண்ட அளவிடும் கருவியின் ஸ்டாண்டைக் கொண்டு (ட்ரைபாட்) குத்திக் கொல்கிறான். இதில் ப்ளண்டும் காயமடைகிறான். ப்ரோசிட் குதிரையில் ஏறி தப்பி, தங்கப் புதையலை நோக்கி போகின்றான். சிறிது நேரம் கழித்து விழித்து எழும் ப்ளண்ட், ப்ரோசிட் சென்ற பாதை வழியே செல்கிறான்.

தங்கம் இருக்கும் இடத்திற்கு வரும் ப்ரோசிட் குதிரையில் வரும் முன்பே, ப்ளண்ட் நடந்தே வந்து இருளில் ஒளிந்து இருக்கின்றான். குகைகளினூடே அலைந்து திரிந்து வரும் ப்ரோசிட், தங்க சிலையை காண்கிறான். தங்கத்தை கண்ட ஆர்வத்தில் கீழே கவனிக்காமல் நடந்து, தங்கச் சிலைக்கு முன்பாக இருக்கும் புதைகுழியில் காலை வைத்து புதைமணலில் முழ்கி உயிரை விடுகிறான். இதை அருகில் இருந்து ப்ளண்ட் ரசித்து பார்க்கிறான்.

அடுத்து அந்த இடத்துக்கு துப்பாக்கியுடன் வரும் ப்ளூபெர்ரி, அங்கு ப்ளண்டை தேடுகிறார். ப்ளூபெர்ரியும் புதைமணல் இருக்கும் தரையில் காலை வைத்து பின் சுதாரித்து பின்வாங்குகிறார்.

BB6

குகையின் இன்னுமொரு பக்கத்தில், செவ்விந்திய மந்திரவாதி, ஏதோ பூஜை செய்து, ஒரு பாத்திரத்தில் ஒரு திரவத்தை (செவ்விந்திய மருத்துவ நாட்டு சரக்கு) வைத்து விட்டு சென்றுவிடுகிறார். அவ்விடம் வரும் ப்ளண்ட், அந்த திரவத்தை குடிக்கின்றான். பின் அங்கிருக்கும் ஒரு பெரிய கல்லின் மேல் படுத்து இருக்கின்றான். உடன் கிராபிக்ஸ் காட்சிகள் வருகிறது.

அடுத்தபடியாக ப்ளூபெர்ரிக்கும் ஒரு பானத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி, அவரும் அந்த பானத்தை பருகுகிறார் மந்திரவாதி. ப்ளூபெர்ரியும் அந்த பானத்தை பருகி கல் தரையில் படுக்கிறார்.

அடுத்து 10 நிமிடங்களுக்கு நீண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறது. இந்த கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த படத்தின் சஸ்பென்ஸை இந்த கடைசி கிராபிக்ஸ் காட்சிகளினூடேதான் டைரக்டர் வைத்திருக்கின்றார்.


கிராபிக்ஸ் காட்சிகள் முடியும் போது ப்ளூபெர்ரியும், ப்ளண்டும் உயிர்  போன நிலையில் இருக்கின்றார்கள். அப்போது அங்கு வரும் ப்ளூபெர்ரியின் காதலி, ப்ளூபெர்ரியின் நிலைகண்டு பதறி, அழுது, ப்ளூபெர்ரியை எழுப்பி விடுகிறார். ப்ளண்ட் இறந்துவிடுகிறான்.

BB7

ஜலக்கிரீடை காட்சிகளுடன் படம் முடிகின்றது.

காமிக்ஸில் நாம் கண்டு ரசித்த, சாதூர்யமான ப்ளூபெர்ரியை, இந்த படத்தில் காண முடியாதது ஏமாற்றமே. அது மட்டுமல்ல, திரைப்பட ப்ளூபெர்ரி அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்.

ப்ளூபெர்ரி செவ்விந்தியர்களின் நண்பன் என்ற ஒரு கருத்தை மட்டுமே நமது காமிக்ஸ் ப்ளூபெர்ரியிடம் இருந்து எடுத்து, அதை ஊதி பெரிதாக்கி, ப்ளூபெர்ரிக்கு ஈடாக செவ்விந்திய மந்திரவாதி கேரக்டரை உருவாக்கி படத்தை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

Blueberry_wallpaper_fond_d_ecran

படத்தில் துப்பாக்கி சண்டை காட்சிகளைவிட மாந்ரீக கிராபிக்ஸ் காட்சிகளே அதிகம். ஆனால், படத்தின் போட்டோகிராபி மிக அருமையாக இருக்கிறது.

கேப்டன் டைகர் என்னும் நமது  இதயம் கவர்ந்த ஆதர்ச கதாபாத்திரத்திற்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

அன்புடன்,

blueberry-cartoon-1

பாலாஜி சுந்தர்.

47 comments:

  1. ennanga thalaivare nammala kottai vittuttungale!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜானி,
      புரியலை. கண்காட்சியை குறிப்பிடுகிறீர்களா?

      Delete
    2. ஆமாம் தலைவரே! தங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்! கடந்த முறை அங்கே தாங்கள் வந்திருந்தாலும் பேசி பழக வாய்ப்பில்லாமல் போய்விட்டது! மறுமுறை வந்தால் நிச்சயம் வந்து பேசுங்கள்! ப்ளீஸ்!

      Delete
    3. ஜானி,

      அன்று நான் உங்களை கோட்டை விடவில்லை. உங்களை பார்த்தேன். உங்கள் உருவத்தை இதயத்தில் நிறுத்திக் கொண்டேன். நீங்கள் மிகவும் பரபரப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தீர்கள். ஒரு நண்பர் (ஜலீல் அல்லது லக்கி லிமட் என்று நினைக்கிறேன்) ஒரு முறை உங்களை சைமன் என்று அழைத்தார்கள். ஆனால் அவர்கள் அப்படி அழைக்கும் முன்பே நீங்கள் தான் ஜானியாக இருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

      ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் மேடை நாடகத்தில், ஒரு காட்சியில் எஸ்.வி. சேகர், வெவ்வேறு சட்டைகளில், மாற்றி மாற்றி மேடையின் இருபக்கங்களிலும் வந்து வந்து போவார். அதே போல நீங்களும் ஒரு நொடி வந்து அடுத்த நொடி மாயமாக மறைந்து விட்டீர்கள்.

      கிங் விஸ்வா என்னையும், மற்றவர்கள் அனைவரையும் அன்போடு கவனித்துக் கொண்டிருந்தார். முத்து காமிக்ஸின் 40-வது ஆண்டு மலர் வெளியீடு விழா நிகழ்ச்சி என்பதால் நான் ஒரு பக்கமாக இருந்து அனைத்து நிகழ்வுகளையும் ரசித்தவாறுவிட்டேன்.

      எல்லா நிகழ்வுகளும் கடவுளால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை என்பதை எனக்கு இந்த புத்தக வெளியீட்டு விழா மற்றுமொரு முறை நிருப்பித்திருக்கிறது.

      நானும் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கின்றேன்.
      எப்போது சந்திக்கலாம்? சொல்லுங்கள்.
      picturesanimated@gmail.com - இது என்னுடைய இமெயில், இதற்கு ஒரு இமெயில் அனுப்புங்கள்.

      மீதி விஷயங்கள், மெயிலில்.

      வ்வாங்ங்க பழகலாம், (;-)

      Delete
  2. Replies
    1. படத்தைப் பற்றி உங்கள் கருத்து?

      Delete
    2. நல்ல படம் ஜி! டைகர் கதைகளை தெரியாதவராக இருப்பின் ரசிப்பார்கள்! அந்த கிராபிக்ஸ் காட்சிகள் அசத்தல்! நமக்கு விறுவிறுப்பு குறைச்சல்தான் ஜி!

      Delete
    3. சூப்பர் ஒபினீயன். சூப்பர் கமெண்ட்.

      Delete
  3. Replies
    1. THANKS KARTHI.

      மறுபடியும் கண்காட்சிக்கு வரும் திட்டம் இருக்கிறதா?

      Delete
    2. இல்லை நண்பரே. :)

      Delete
  4. வெல்கம் பேக் பாலாஜி சார்.
    இடைவெளி ஏற்பட்டதற்கு என்ன காரணம் ஆனாலும் அதனில் இருந்து நீங்க சீக்கிரம் மீண்டு புத்துணர்ச்சியோடு பதிவுலகில் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் கிருஷ்ணா,
      இப்பவே Red Bull ஒரு கார்டன் வாங்கி வெச்சுட்டேன்.

      Delete
  5. நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு பதிவு. நன்றி. தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்.
    NBS விழாவில் தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. :)

    ReplyDelete
    Replies
    1. //நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு பதிவு//

      24 நவம்பர் 2012-ல், ”WHATAPP” CHATTING-ல் ”ப்ளூபெர்ரி” பதிவை பற்றி உங்களிடம் நான் தெரிவித்தது நி்னைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன். காமிக் புத்தக பாதுகாப்பு பற்றிய பதிவிற்கும் முன்பே உருவாக்கத்தில் இருந்த பதிவு இது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பதிவும் இதுதான் (ரெகார்ட் ப்ரேக்).
      //தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்//

      நன்றிகள் பல கார்த்திகேயன். அடுத்த பதிவை நாளையே போட்டுவிடட்டுமா?;-)
      எனக்கும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  6. ஹ்ம்ம்... உங்களின் பிரச்சினைகள் சுமுகமாக தீரட்டும்....

    Welcome back! சற்றே நீளமான பதிவு, ஆனால் பல தகவல்களை திரட்டி அளித்துள்ளீர்கள். Renegade படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்னமும் அமையவில்லை!!! அதுவும் நல்லதுதான் என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹாய்... கார்த்திக் சொமலிங்கா..,

      ஆறுதலுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆறிவிடும்.

      //சற்றே நீளமான பதிவு//

      நீண்ட நாட்களாக இந்த பதிவை மடியில் கட்டிக் கொண்டு, நான்கு, ஐந்து முறை ரீ-ட்ராஃப்ட் செய்தும் பதிவிட முடியாமல்... அது ஒரு அவஸ்த்தை...
      பதிவின் தாமதத்திற்கு நானும், பதிவின் நீளமும் முக்கிய காரணங்கள்.
      உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
      இப்படி ஒரு நீ....ளமான பதிவு மூட்டையை (நினைவுத்)தோளில் சுமந்து கொண்டு இருக்கும் போது, உங்களின் பல பதிவுகள் அடங்கிய ஒரு நீண்ட மெயிலில், உங்களின் ப்ளூபெர்ரி பதிவையும் அதில் நீங்கள் ப்ளூபெர்ரிக்கும், ஜீன் பால் பெல்மாண்டோவுக்கும் இருக்கும் சம்பந்தத்தைப் பற்றியும்மான தலைப்பைக் கண்டவுடன் ஒரு செகண்ட் திக்..திக்.. என்று இதயம் அடித்துக் கொண்டது. அவ்வளவுதான் இனி இந்த பதிவை போடவே முடியாது என்று ஒரு செகண்ட் நினைத்து விட்டேன். உங்கள் பதிவை முழுக்கப் படித்த பிறகு, நீங்கள் இந்த படத்தைப் பற்றி மேலோட்டமாக மட்டுமே குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும், மனம் ஆறுதல் அடைந்தது.
      திக்..திக்கிற்கு காரணம்...இந்த பதிவு அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட பதிவு மற்றும் என்னுடைய கால தாமதத்தின் காரணமாக ஒரே கருத்தில் இரண்டு பதிவுகள் வந்தால் Plagiarism என்ற கருத்து நண்பர்கள் மனதில் ஏற்படலாம்.

      //பல தகவல்களை திரட்டி அளித்துள்ளீர்கள்//

      http://www.bladepedia.com/2012/11/Lieutenant-Blueberry-Jean-Giraud-Moebius-Jean-Michel-Charlier-French-Tamil-Comics-Intro.html
      உங்களுடைய மேற்கண்ட பதிவில் ஏற்கெனவே இதே கருத்தில் நீங்கள் பதிவிட்டிருந்தாலும் அதைப்பற்றி ஏதும் குறிப்பிடாமல், பெரிய மனதோடு இந்த பதிவை பாராட்டியிருக்கின்றீர்கள். உங்களது தாரளமான மனதுக்கு நன்றி.

      ஒரு முறை இந்த படத்தை பாருங்கள்.பிறகு காமிக்ஸ் ப்ளூபெர்ரியே என்றும் அருமையான சினிமா உணர்வை தருவார்.

      காமிக்ஸில் இருக்கும் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் கேரக்டரை சிதைக்காமல் அப்படியே திரைப்படத்தில் கொண்டுவந்த கரணத்தினாலேயே அந்த படங்கள் வெற்றி பெற்றன. அதே போல ப்ளூபெர்ரி கேரக்டரையும் அப்படியே திரைப்படங்களில், செர்ஜியோ லியோனின் கௌபாய் ஹீரோக்களைப் போல காட்டினால் நிச்சயம் தொடர் வெற்றிபடங்களாக ப்ளூபெர்ரி பட வரிசைகள் இருக்கும்.

      உங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் பல நன்றிகள்.:-)

      Delete
    2. //ஒரே கருத்தில் இரண்டு பதிவுகள் வந்தால் Plagiarism என்ற கருத்து நண்பர்கள் மனதில் ஏற்படலாம்//
      என்னுடைய பதிவில் ப்ளூபெர்ரி பற்றிய தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல், அந்த கதாபாத்திரத்தைப் பற்றிய என் எண்ணங்களை / நினைவுகளை மட்டுமே பகிர்ந்துள்ளேன்! ஆனால் உங்களுடைய பதிவு பல விவரங்களை உள்ளடக்கிய பதிவு, கவலை வேண்டாம்! :)

      உங்களுடைய பதிவின் சற்றே நீளம் எனக் குறிப்பிட்டது, குறை சொல்வதற்கல்ல! :) நமது காமிக்ஸ் நண்பர்கள் வேண்டுமானால் இதை ஒரே மூச்சில் படித்து விடுவார்கள். ஆனால் புதிதாக காமிக்ஸ் படிக்கும் ஒருவரோ அல்லது காமிக்ஸ் பற்றி அறியாத ஒருவரோ இப்பதிவை படிக்க முற்பட்டால் அவர்களுக்கு நடுவிலேயே அலுப்பு தட்டி விடக் கூடாது அல்லவா?! இப்படிப் பட்ட நீளமான பதிவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து வெளியிட்டால் படிப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு பாகத்தின் அடியிலும் அடுத்த பாகத்திற்கான ஒரு டீசர் லைனை வெளியிட்டால் அது கூடுதல் சுவாரசியம் தரும்! :) :) நீங்களும் நீண்ட நாட்களுக்கு ட்ராஃப்டில் வைத்துக்கொண்டு முழி பிதுங்கத் தேவையில்லை!!! :D

      //அதே போல ப்ளூபெர்ரி கேரக்டரையும் அப்படியே திரைப்படங்களில், செர்ஜியோ லியோனின் கௌபாய் ஹீரோக்களைப் போல காட்டினால் நிச்சயம் தொடர் வெற்றிபடங்களாக ப்ளூபெர்ரி பட வரிசைகள் இருக்கும்//
      உண்மை, ஏதாவது ஒரு பிரபல ஹாலிவுட் நிறுவனம் மனம் வைத்தால் இது நடக்கலாம்!

      Delete
    3. //ஏதாவது ஒரு பிரபல ஹாலிவுட் நிறுவனம் மனம் வைத்தால் இது நடக்கலாம்!//

      இந்த ஹாலிவுட் நிறுவனங்கள் அவர்கள் ஊர் சூப்பர் ஹீரோ கதைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள்.

      ஐரோப்பிய காமிக்ஸ் ஹீரோக்களுக்கு இரண்டாம் இடம், மூன்றாம் இடம் கூட தருவதில்லை.

      Delete
  7. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

    WELCOME FRIEND !!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும், வரவேற்பிற்கும் நன்றி TBATN,

      ”இன்று” கூறிய உங்களது பொங்கல் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. WISH YOU THE SAME FRIEND.;-)

      உங்களை NBS வெளியீட்டு விழாவில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி தந்தது. ஆனால் சந்தித்த அடுத்த கணமே நீங்கள் கிளம்பிவிட்டீர்கள்.

      Delete
    2. மன்னிக்க வேண்டும் நண்பரே !!!

      நான் தங்களை சந்தித்தது, ஊருக்கு செல்வதற்க்காக முன்பதிவு செய்திருந்த புகை வண்டியை பிடிக்க வேண்டிய அவசரத்தில் இருந்த பொழுது (!) ....

      மீண்டும் ஒரு இனிய வேளையில், நாம் அனைவரும் சந்திக்கலாம் நண்பா ...

      Delete
    3. மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பரே,
      நீங்கள்தான் அன்றே சொல்லிவிட்டீர்களே.
      அதுவுமில்லாமல் போக்குவரத்து நெரிசலால் நானும் தாமதமாகதான் வந்தேன்.
      NBS போன்ற மற்றுமொரு இனிய சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம் நண்பரே.

      இன்னமும் உங்கள் ஊருக்கு புகை வண்டிதானா, அது சரி, எந்த வண்டியென்றாலும் நிச்சயம் புகை வரும்தான், மின்ரயிலை தவிர. மேலே வந்தால் என்ன, கீழே வந்தால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.
      ;-})

      Delete
  8. பதிவுவைப் படிக்க கொஞ்சம் அதிக நேரம் தேவைப்படுமென்பதால் [இன்னும் NBSஐக்கூட படிக்க ஆரம்பிக்கலை :( ] இப்போதைக்கு அவசரமா சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிட்டு அப்புறம் சாவகாசமா படிச்சுக்கறேனே? (ரொம்ப நாள் பதிவிடாமல் போனதற்கு தண்டனையா கூட வச்சுக்கலாம்)

    WELCOME BACK! :)

    நாங்களெல்லாம் இங்கே சந்தோஷமாய் கும்மாளமடித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் தலையே காட்டிடாமல் இருந்தது; ஏதோ ஓர் இழப்பைப் போன்ற உணர்வை மண்டைக்குள் அவ்வப்போது மணியடித்துச் சொல்லிக் கொண்டே இருந்தது.

    இப்போது மணியடிப்பது நின்றுபோய்; அதன் எதிரொலி மட்டும் எங்கோ கேட்கிறது! :)

    ReplyDelete
    Replies
    1. @Erode Vijay:
      //மண்டைக்குள் அவ்வப்போது மணியடித்துச் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போது மணியடிப்பது நின்றுபோய்; அதன் எதிரொலி மட்டும் எங்கோ கேட்கிறது! :)//

      வர வர நீங்க 'அவர்' மாதிரியே சூசகமா பேசறீங்க!!! :) லைட்டா உங்க மேல டவுட் மணி அடிக்குது!!! ;)

      Delete
    2. @ karthik:

      அடடா, உங்க ரவுசு தாங்க முடியலையே! எனக்கு 'மண்டை'யே வலிக்குது போங்க! :)

      Delete
    3. சரி சரி, நான் சொன்னதை அப்படியே 'மர'ந்துருங்க ;) :D

      Delete
    4. @Erode Vijay

      மணி அடித்தது எனக்கும் கேட்டது. போன் மணியைச் சொன்னேன். போன் ’அடித்து” ஏன் பதிவிடவில்லை என்று பல விசாரிப்புகள்.

      மறக்காமல் வந்ததற்கு நன்றி நண்பரே.

      Delete
    5. @Vijay
      @Karthik Somalinga

      நண்பர்களே, இது என்ன கலாட்டா! ‘அவர்’, ‘மண்டை’, ’மர’... ஒன்னும் புரியலையே..ஙே...

      Delete
    6. நீங்கள் முதலில் விஜய் பெயர் போட்டிருப்பதால் இதற்கு அவரே பதில் சொல்வதே பொருத்தமானதாக அமையும்! ;)

      ஒரு சிறிய துப்பு (நோ, நோ... என் முகத்தில் அல்ல - Clue என்ற அர்த்தத்தில் சொன்னேன்!): நீங்கள் அடைப்புக்குள் வரிசைப்படுத்திய அந்த மூன்று சொற்களை, வலமிருந்து இடமாக இணைத்துப் படித்தால் கிடைத்திடும் உங்களுக்கு விடை, பரிசாக விஜய் தருவார் வடை!!! (விஜய், எப்படி நம்ம டயலாக்! ;)

      Delete
    7. கலக்குறீங்க கார்த்திக்! அப்படியே ஒரு " ஏ... டண்டணக்க ஏ... டணக்குனக்க"-வை சேர்த்திருந்தா இன்னும் ரொம்பப் பொருத்தமாயிருக்கும்! :)

      Delete
    8. //ஏ... டண்டணக்க ஏ... டணக்குனக்க//
      யாருக்கு? உங்களுக்கா?! :D

      சரி, இதை இதோட விட்ருவோம்! அவர் ப்ளாக்ல இப்படி கும்மி அடிச்சா பாலாஜி கோச்சுக்கப் போறார்! :)

      Delete
    9. நீங்க தாராளாமாக கும்மியை அடிச்சுக்கோங்க, நான் கோச்சுக்க மாட்டேன், எனக்கு அடி விழாம இருந்தா சரி.(:-)

      Delete
    10. கார்திக்:

      மேலே படிச்சீங்களா? அவரே பர்மிஷன் கொடுத்திட்டார்! அப்புறமென்ன start music...

      Delete
    11. நண்பரே நமது இளைய தளபதி
      அந்த வடையை ஒரு குச்சியின் நுனியில் மாட்டி தான் தருவார் என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் யுவர் ஆனர் ;-)

      ஏ... டண்டணக்க ஏ... டணக்குனக்க :))
      .

      Delete
    12. மெதுவடை போல இது குச்சி வடை! :)

      Delete
    13. நண்பர்களே,
      இந்த காமெடி கலாட்டாவை பார்த்தால் விச்சு & கிச்சு இல்லாத குறையே தெரியாது. (காமெடி கலாட்டாவை சொன்னேன், யார் விச்சு, யார் கிச்சு என்று கேட்காதீர்கள்.)

      Delete
  9. வாழ்துக்கள் ! என்று ஒருவரியில் நாம் எழுதினால் கூட அதற்கு 17 பக்கம் பதில் எழுதும் ஒரு பொறுப்பான மனிதரை பல மாதங்களாக காணவில்லை என நினைத்திருந்தபொழுது ஒரு அருமையான பதிவுடன் வந்திருக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    ReplyDelete
    Replies
    1. பதினேழு பக்கங்களா?! ஆத்தாடி!!!

      @ பாலாஜி சுந்தர்

      "வாழ்த்துக்கள்!"

      Delete
    2. @ ஈரோட்டார்.

      வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அண்ணா.

      இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ!

      ஏன் இந்த கொலவெறி, நான் ப்பாவம்.

      Delete
    3. @ ஈரோடு இளைய தளபதி,

      ஹலோ, ஒவர், ஓவர் ஓவர் இது ரொம்ப ரொம்ப ஓவர்.

      ஓவர்.

      உங்கள் ”வாழ்த்துக்களுக்கு” என் 17 பக்க “ஓவர்”

      Delete
  10. நண்பரே நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு வந்தாலும் தங்களின் TRADEMARK பதிவோடு வந்திருக்கிறீர்கள் :))

    Superb ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  11. // THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING. //

    Oooh hoo.. I should be careful not to comment then :D

    ReplyDelete
    Replies
    1. Dear Rafiq Raja,

      Gotcha.....!
      Seeing you here is heartening and I am very much delighted to see your comments on this blog. Thank you very much.

      The 'WARNING' is only for the would be new addicts.
      It is not for you. B'cas you are a Senior to me.
      For you it is "Come let us join together, dive deep, deep down and indulge in and get more and more hardcore addict as if there is no tomorrow.
      Balaji Sundar

      Delete
  12. அருமையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. டியர் பரணி,
      பாராட்டுக்கு நன்றி நண்பரே!
      தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பிய அருமை நண்பர் பாண்டிச்சேரி கார்த்திகேயர் அவர்களுக்கும் நன்றி!

      Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.