Saturday, 9 February 2013

பதிவிடாத பின்னூட்டம்

ALILAIKRISHNAR

 

ணக்கம் நண்பர்களே,

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் பற்றிய கருத்துக்களும், பின்னூட்டங்களும் இப்பொழுது எடிட்டரின் ப்ளாகில் சூடு பறத்திக் கொண்டு இருக்கின்றது.

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் வெளியிடுவதைப் பற்றிய எடிட்டரின் அறிவிப்புகளை, லயன் முத்து வலைத்தளத்திலும், காமிக்ஸ் புத்தகத்தில் வரும் எடிட்டரின் ஹாட்லைனையும் ஆர்வத்தோடு தொடர்ந்து வந்தேன். மறுபதிப்பு சம்பந்தமான எனது பின்னுட்டங்களையும் லயன் முத்து தளத்தில் இட்டு வந்தேன். எனது இந்த தொடர்தல் எதுவரை என்றால், எடிட்டரின் என் வழி தனி வழி பதிவுவரை.

ன் வழி தனி வழி” பதிவைப் பார்த்த பிறகு, எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. IDLE MIND IS DEVIL’S WORKSHOP என்று ஒரு ஆங்கில சொலவாடை உண்டு. என் வழி தனி வழி பதிவை படித்த பொழுது எனது மனதில் தோன்றிய எண்ணம், லயன் முத்து ப்ளாகிற்கு வரும் வாசகர்களின் எண்ணவோட்டத்தை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொள்ள, எடிட்டர் ஏதாவது ஒரு அறிவிப்பையும், கருத்துக் கணிப்பையும், பெயர் சூட்டுதலையும் கேட்கின்றார், பின் அவர் என்ன நினைக்கின்றாரோ அதையே செய்து கொண்டு போகின்றார் என்ற எண்ணம் தோன்றியது.

Date Proof

தையடுத்து ஜூலை மாதம் 23ம் தேதி 2012-ம் வருடம் இரவு ஒரு மணிவரை விழித்திருந்து, என் வழி தனி வழி பதிவிற்கு ஒரு பின்னூட்டத்தை எடிட்டரின் தளத்தில் அடித்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பின்னூட்டம் என்ன செய்தாலும், லயன் முத்து தளத்தில் பதிவிட முடியவில்லை.

ந்த பின்னூட்டம் மிக நீண்டதாகவும், சில இடங்களில் மிகவும் காட்டமாகவும் இருந்ததினால்,  எடிட்டரின் மனம் புண்படக்கூடாது என்றும், கடிதமாக எதை வேண்டுமானாலும் எழுதி போஸ்ட் செய்தால் அது இருவருக்கு இடையே மட்டும் நிகழும் ஒரு கருத்து பறிமாற்றமாக மட்டுமே இருக்கும். அதையே  பொதுவான தளத்தில், அதுவும் மற்றவர்கள்  முன்னிலையில், ஏதோ ஒரு புள்ளி விவர புலியை போல பின்னூட்டமிடுவது சரியில்லை என்று மனதில் பட்டதால், அதை வேர்டில் காப்பி பேஸ்ட் செய்து, நிறைய எடிட் செய்து பின் மீண்டும் எடிட்டரின் தளத்தில் பின்னூட்டமாக போட்ட பின் ப்ளாக்கர் சுட்டிய மெசேஜ் – ”பின்னூட்டம் 5000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கின்றது, சுருக்கவும்!” – என்றது.

மீண்டும் காப்பி, பேஸ்ட், எடிட் செய்து பின்னூட்டமிட்டால், ப்ரவுசர் க்ராஷ் ஆனது, அடுத்து சிஸ்டம் கிராஷ் ஆனது. அப்படியும் விடாமல் கண்ட்ரோல், ஆல்ட், டெல் கொடுத்து ரீஸ்டார்ட் கொடுத்தால், பல அப்டேட்கள் இருக்கின்றது, அவைகள் அப்டேட் ஆகி முடிக்கும் முன்னே சுவிட்ச்-ஆப் செய்ய வேண்டாம் என முகத்தில் அறைவதுபோல விண்டோஸ் செய்தி சொன்னது. என்ன இது, இந்த பின்னூட்டமிடுவதற்குள் இத்தனை சிக்கல் வருகின்றதே, குடுகுடுப்பைக்காரன்  மந்திரம் போட்டு நாயின் வாயைக் கட்டுவது போல் எடிட்டரும் ஏதோ மந்திரம் போட்டு நமது கம்ப்யூட்டருக்கு கட்டு போட்டுவிட்டார் போல, பேசாமல் இந்த பின்னூட்டத்தை தவிர்த்து விடலாம் என்று அதை வேர்டில் சேமித்து வைத்து விட்டு விட்டேன்.

து ஏனோ தெரியவில்லை, இப்பொழுது வரை அந்த் வேர்ட் பைலை திறந்தாலும் வேர்ட் புரோகிராமே ப்ரீஸ் ஆகி நாட் ரெஸ்பாண்டிங் என்று பிழை சுட்டுகிறது. இப்போழுதும் பாடாய் பட்டுத்தான் இங்கு காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றேன்.  எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றது.

ன்று CC பற்றிய எடிட்டரின் ”ஆதலினால் அசடு வழிவீர்” பதிவை பார்க்கும் முன்னரே இந்த பதிவை துவக்கிவிட்டேன். சரியாக சொல்வதென்றால் எடிட்டரின் இதற்கு முந்தய ”ஒரு கட்டை விரல் காதல்” பதிவை கண்டதும் இந்த பதிவை உருவாக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த பதிவின் பின்னூட்டங்களில் CC-க்கான சந்தாவைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைக் சொல்லியிருந்தார். அதை அப்படியே இங்கு கீழே கொடுக்கின்றேன்.

“சந்தோஷங்களுக்கிடையே - சின்னதாய் ஒரு வருத்தமும் கூட ! மாயாவி ; லாரன்ஸ் - டேவிட் ; ஜானி நீரோ etc., மறுபதிப்புகள் வேண்டுமென்ற கோரிக்கை பலமாக ஒலித்த போதிலும், சந்தாக்களின் எண்ணிக்கையில் எஞ்சி நிற்பது பலவீனமே ! இது வரை காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்களின் எண்ணிக்கை 160 -ஐத் தாண்டிய பாடைக் காணோம் எனும் போது மண்டையைச் சொறியத் தான் தோன்றுகிறது.  சந்தா செலுத்தி ஒரு மொத்தமாய் எல்லா மறுபதிப்புகளையும் வாங்குவதை விட, தேவையானவற்றை மட்டும் அவ்வப்போது வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமா ? - அல்லது புது யுகக் கதைகளின் ஈர்ப்பினால் பழசுக்கு மவுசு குறைந்து போய் விட்டதா ? - புரியாத புதிரே ! லயன்-முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான சந்தா புதுப்பித்தல் ஜரூராய் நடந்து வருகின்றது சற்றே ஆறுதல் தந்திடும் சங்கதி ! ஒன்று மட்டும் நிச்சயம் - வண்ணத்தின் வீரியம் டெக்ஸ் வில்லர் போன்ற விதிவிலக்கான அசாத்திய நாயகர்களைத் தவிர, பாக்கி அனைவரையும் சாய்த்து விடும் ஆற்றல் கொண்டதென்பது அப்பட்டம்! ”

மேற்கண்ட இந்த வரிகளே இந்த பதிவை தயாரிக்க என்னை துண்டியது.

ரி விஷயத்திற்கு வருகிறேன். இப்பொழுது இவ்வளவு சொல்லிவிட்டு, எடிட்டரின் என் வழி தனி வழி பதிவிற்கான என்னுடைய பின்னூட்டத்தினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.

னி என்னுடைய ஆறிய பழைய கஞ்சியை இங்கு உங்கள் முன் வைக்கின்றேன். ஆறிய கஞ்சியாக இருந்தாலும், லேட்டாக வந்தாலும், இந்த விஷயம் இன்றும் எடிட்டர் ப்ளாகில் வெகு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

னி பதிவிடாத என்னுடைய பின்னூட்டத்தின் சாரம்:

”டியர் எடிட்டர் திரு. விஜயன் அவர்களுக்கு வணக்கம்,

தற்கு முந்தய உங்களின் பதிவுகளிலிருந்து, இந்த பதிவு மிகவும் முரன்பட்டு, வித்தியாசமாக உள்ளது. அதாவது வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து அதற்கு ஏற்றது போல இந்த பதிவில் அதிரடியாக புதிய CC க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளீர்கள்.

ங்களிடம் எனது கோரிக்கை என்னவென்றால், மறுபதிப்பு என்று வரும்போது, ஏற்கெனவே வந்த கதைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் போடாமல் முதலில் இருந்து வரிசையாக போடுங்கள். உங்களது குழந்தைகளில் எதற்கு ஒரு சிலவற்றின் மேல் மட்டும் ஃபேவரிடிசம் காட்டுகிறீர்கள். எதையும் விட்டு விடாதீர்கள். மறுபதிப்புகளை அனைவரும் வாங்கத்தான் போகிறார்கள். உங்கள் திட்டமும் வருடத்திற்கு 6 புத்தகங்கள்தான்.

முத்து காமிக்ஸின் ஆரம்ப கால வாசகனாக இருந்தாலும், நான் சந்தாதாரர் ஆகிவிட்டாலும் CC யின் 6 புத்தகங்களையும் வாங்கத்தான் போகிறேன்.

புதிய சைஸ் என்று நீங்கள் சொன்னது, கம் பேக் ஸ்பெஷல் சைஸைத்தான் என்று நினைக்கின்றேன்.

றுபதிப்புகள் உண்மையிலேயே அர்த்தம் உள்ள விஷயமாக இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் அவை என் பெயர் லார்கோ சைஸிலும், வண்ணத்திலும்,தரமான ஆர்ட் பேப்பரிலும்தான் இருக்கவேண்டும். இவைகளில் ஒன்று குறைந்தாலும் காமிக்ஸ் தான் இருக்கும், அந்த காமிக்ஸ் புத்தகங்கள், கிளாசிக்(காக) இருக்காது. காமிக்ஸ் கிளாஸிக்கின் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு கலெக்டார்ஸ் எடிஷனாக இருக்கும்படி வடிவமையுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் இப்போது உங்களுக்கு என்று இருக்கும் மார்க்கெட்டில், இப்போது நீங்கள் பின்பற்றும் தரத்தையும், தொழில் நுட்பத்தையும் ஒரே சமமாக உங்களது அனைத்து வெளியீடுகளிலும் கடைபிடியுங்கள்.

ங்களுடைய மெய்யாலும் முதல்முறையாக என்ற பதிவில் நெவர் பிபோர் ஸ்பெஷல், ரூ.400/- என்ற அறிவிப்பினால், வாசகர்களிடையே எழுந்த விலை குறித்தான பல விவாதங்களும், கோரிக்கைகளும் எழுந்த போது, அதற்கடுத்த உங்களது பதிவான “பதிவாய் ஒரு பதில்” பதிவில், விலை குறித்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நீங்கள் அளித்திட்ட உங்களது தீர்ப்பை / தீர்மாணத்தை நான் இங்கே மீண்டும் பிரதிபலிக்கிறேன்.

”//ப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில் சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம் சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் encourage செய்திடப் போவதில்லை !//”

என்று முந்தய பதிவில் சொல்லிவிட்டு, இப்போது நீங்களே இன்றய பதிவில் சொல்லியுள்ள விஷயங்கள், சிறிது முரன்படுகிறது. மறுபதிப்புத்தான், பழைய கதைகள் என்று சமாதானம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இல்லை, நான் இரண்டு தரத்தில் மைசூர்பாகு விற்கத்தான் போகிறேன் என்று நீங்கள் சொன்னால் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் உங்களுக்கு என்று ஒரு working space இருக்கும். அதில் வாசகர் தலையீடு என்பது அதிகமாக இருந்தால் நல்ல result கிடைக்காமல் போகும்.

ற்றொரு விஷயம், எந்த கதைகளெல்லாம் வெளியிடப்பட்ட உடனே சுடச்சுட விறுவிறுப்பாக விற்று தீர்ந்ததோ அந்த கதைகளை மட்டுமே மறுபதிப்புகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது எனது அனுமானம்.

லைவாங்கிக் குரங்கு மறுபதிப்புப் புத்தகத்தில், வாசகர்களுக்கு நீங்கள் எழுதிய உங்களது ”இது சீஸன் 2” கடிதத்தில் மறுபதிப்பைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை எழுதுமாறு கேட்டுக் கொண்டு, அந்த கடித்தின் கடைசியில் நீங்கள் எழுதியது,

//ந்த மறு பதிப்புப் பட்டியலுக்கு நமது லயன், திகில், மினிலயன், ஜூனியர் லயன் இதழ்கள் மட்டுமே consider செய்திட வேண்டுமென்பது தான் முக்கியம்! முத்து காமிக்ஸ் கதைகள் பிரதானமாக காமிக்ஸ் க்ளாசிக்ஸில் இத்தனை காலம் மறுபதிப்புகளாக வந்திட்டமையால் அவற்றிற்கு ஒரு தற்காலிக ஓய்வு!

So - ”நயாகராவில் மாயாவி”; மஞ்சள் பூ மர்மம்” என்று முத்துவின் கதைகளை எழுதிட வேண்டாமே ப்ளீஸ்?!//

- இது நீங்கள் எழுதியதுதான். ஆனால் இப்போது நயாகராவில் மாயாவி முன்னனிக்கு வந்து விட்டார். இது எப்படி சாத்தியமாயிற்று. எப்படி இதை கவனிக்காமல் விட்டீர்கள். அல்லது தெரிந்தேதானா. இது தான் உங்களது ”தனி வழியா”. பிறகு தலைவாங்கியின் கடைசி பக்கத்தில் எனது டாப் 20 கதைகள் என்ற ஒரு லிஸ்டையும் கொடுத்துவிட்டு, இந்த வலைத்தளத்திலும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு, இப்போது வாசகர் கருத்தையும், உமது முந்தய கருத்துக்களையும் புறந்தள்ளி விட்டு, இந்த பதிவில் ”என் வழி தனி வழி” என்று போகிறீர்கள். இதற்கு அர்த்தம் எல்லோரிடமும் கேட்பேன் ஆனால் என் இஷ்டப்படிதான் செய்வேன் என்று அர்த்தமா!

ப்படி நீங்கள் உங்கள் வழி தனி வழி என்று சொல்வதற்கு, தலைவாங்கியில் இரண்டு பக்கங்களும், வாசகர் கருத்துக் கணிப்பும் தேவையில்லையே. நீங்கள் நினைத்ததை எப்போதும் போல செய்திருக்கலாமே. கள்ள ஓட்டு என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எந்த காமிக்ஸ் ரசிகனும் டெக்ஸையோ, கேப்ட்ன் டைகரையோ, கேப்டன் பிரின்ஸையோ வேண்டாம் என்று சொல்லப் போவதில்லையே. திகில் #2க்கு விழுந்த 5 சதவீத ஓட்டுக்களில் தான் கள்ள ஓட்டுக்கள் இல்லை அதனால் அதுதான் தேர்வு என்று சொல்லிவிடாதீர்கள்.

ந்த கருத்துக்கள் உமது உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்தால் -------என்ன சொல்வது. நமக்குள் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று முன்பே சொல்லியிருக்கிறீர்கள் அதனால் NO HARD FEELINGS என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஒரு கருத்தை சொல்லி அது சரியில்லை என்று நாங்கள் வாதிட்டால், அது வாக்கு வாதம், அல்லது, கருத்துக்கள் முரன்படுவது. இங்கு உங்கள் கருத்துக்கு நான் முரன்படவில்லை. உங்களது கருத்துக்கு நீங்களே மாறுபடக்கூடாது என்றும் நான் சொல்லவில்லை. இன்றய உங்களது பதிவிடப்பட்ட கருத்துக்களுக்கு உமது முந்தய கருத்துக்களையே நான் இங்கு பின்னூட்டமாக வைக்கின்றேன்.

baby krishna on palm leaf

ந்த பின்னூட்டத்தை இடும்போது, உங்களது தாயார் நீங்கள் சிறுவனாக பள்ளிக்குச் கிளம்பும் போது உங்கள் முகத்துக்கு கோகுல் சாண்டால் பவுடர் போடும் சீனும், ஆலிலை கிருஷ்ணன் சீனும், நீங்கள் குட்டி கிருஷ்ணன் ஜாடையில் இருக்கும் சீனும், என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

டைசீயாக, கொலைகாரக் கலைஞனைப் போலவோ அல்லது தலைவாங்கியைப் போலவோ அல்லது இப்பொழுது பழைய கருப்பு வெள்ளை திகில் கதைகளின் ஸ்கேன் செய்த பக்கங்களைப் போலவோ தயவு செய்து மறுபதிப்புகள் வேண்டாம். தலைவாங்கியில் பேப்பர் நன்றாக இருந்தும் அச்சுத்தரம் நன்றாக இல்லை. ஸ்கேன் செய்ததினால் வந்த வினையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மறுபதிப்புக்கள் revamped ஆக இருக்க வேண்டும், அதையும் from the scratch-லிருந்து செய்ய வேண்டும்.”

மேலே உள்ளவைகளே அந்த பழைய பின்னூட்டம்.

ப்பொழுது எடிட்டர் காமிக்ஸ் கிளாஸிக்ஸின் வெளியீடுகளின் லிஸ்டை மாற்றி இருக்கின்றார். இது மிகவும் வரவேற்கத் தகுந்த ஒரு விஷயம். இந்த புதிய லிஸ்டில் இருக்கும் நாம் விரும்பாத கதைகளும் மாறுதலுக்குள்ளாகும் என்று நம்புவோம்.

ந்த பதிவை இப்போழுது போடுவதற்கு காரணம், எடிட்டரை குறை சொல்வதற்கோ அல்லது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல. பழைய கதைகளை மறுபதிப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எடிட்டரின் ப்ளாகில் உரத்த குரலில், திரும்பத் திரும்ப எழுப்பப் படுகிறது. சில பேர்களே இந்த கோரிக்கையை முன் வைத்தாலும், இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து பல நாட்களாக, பல பதிவுகளில் எழுப்பப்படும் பொழுது, அனைவருமே மறுபதிப்பை விரும்புகின்றனர் என்ற உணர்வை எடிட்டருக்கு ஏற்படுத்துகின்றது.

டிட்டருக்கும், புதிய கதையை எடுத்து பல விதங்களில் அல்லல் படுவதற்கு பதில், பழைய கதையை மறுபதிப்பிடுவது ஒரளவிற்கு சிக்கல் குறைந்த விஷயம். அதனாலேயே அவர் திரும்ப திரும்ப மறுபதிப்பு விஷயத்திற்கே வந்து நிற்கிறார்.

டைட்டானிக் படத்தை 3D-ஆக மாற்றம் செய்து மறு வெளியீடு செய்யப்பட்டது. படம் தியேட்டருக்கு வந்து சென்ற சுவடே காணவில்லை.

ர்ணன் படம் DTS ஒலியிலும், வண்ணத்திலும் மேம்படுத்தப்பட்டு தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலில் சக்கை போடு போட்டது.

து போலவே அர்னால்டு ஷ்வாஷ்னெகர் நடித்த டொட்டல் ரீகால் கதையையும், சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஜட்ஜ் ட்ரெட், ஆம் நமது முத்து லயனில் தோன்றியவரேதான், ரீபூட் என்ற பெயரில் கதையில் மாற்றங்கள் செய்து, புது ஹீரோக்களை வைத்து பல கோடி செலவில் அட்டகாசமான அனிமேஷன் காட்சிகளுடன் சமீபத்தில் வெளிவந்தது. இரண்டு படங்களும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வியே கண்டது. புது ஸ்பைடர்மேனுக்கும் இதே நிலைதான். ஆனால் மாற்றுக் கோணத்தில் படமாக்கப்பட்ட பேட்மேன் டார்க் க்னைட் ட்ரைலாஜி வசூலில் அதகளம் செய்தது.

றுபதிப்பென்றால், அதன் அவசியமும், அது எந்த வகையினில் பழையதிலிருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதே முக்கியம்.

றுபதிப்பு வேண்டாம் என்னும் கருத்துக்களும் எடிட்டரின் ப்ளாகை எட்ட வேண்டும். இல்லையென்றால் முதலுக்கே மோசம் என்ற நிலை சற்று ஸ்டெடியான நிலையை எட்டி இருக்கும் தற்போதய லயன் முத்து வெளியீடுகளுக்கு ஏற்படலாம். பாதிக்கப்படப் போவது லயன் முத்து சந்தாதாரர்களே. நான் பாதிப்பு என்று சொல்வது பணத்தை அல்ல, காமிக்ஸ் இல்லாத வறட்சி நிலையினையே.

அன்புடன்,

Tiedup Krishna

பாலாஜி சுந்தர்,

www.picturesanimated.blogspot.com

22 comments:

 1. டியர் பாலாஜி,

  லேட்டா வந்தாலும் 'லேட்டாவே' வந்து இருக்கீங்க!!! ;)

  //பின்னூட்டம் 5000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கின்றது, சுருக்கவும்!//
  இரண்டு பகுதிகளாக போட்டிருக்கலாமே? முதல் பாகத்திற்கு எதிர்ப்பு வருகிறதா என்பதை பொறுத்து இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருக்கலாம்! ;)

  ReplyDelete
 2. //இரண்டு பகுதிகளாக போட்டிருக்கலாமே?//

  நண்பரே,

  அதெல்லாம் முயற்சித்து விட்டேன் தல, ஒன்னும் வேலைக்கு ஆகல. இந்த பதிவிற்கே தலைப்பை “என்னை பாடாய் படுத்திய பதிவு” அல்லது “போட விடாமல் போட்டுப் பார்த்த பதிவு” அல்லது “சூனியத்தால் சூன்யம் ஆன பதிவு” என்று கூட தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நேற்று இரவுவரை அந்த வேர்ட் பைலை திறந்தாலே நட்டுக் கொள்கிறது. பேசாமல் மொத்தமாக முயற்சியை கைவிட்டு விடலாமா என்று கடைசி நிமிடம் வரை நினைக்க வைத்துவிட்டது.

  //முதல் பாகத்திற்கு எதிர்ப்பு வருகிறதா//

  வருகிறதாவா! நிச்சயம் ஒரு 10 வினோதமான ID-களை உருவாக்கி திட்டி தீர்த்திருப்பார்கள். ;-{X)

  ReplyDelete
  Replies
  1. டியர் கர்த்திக்,
   ப்ளாகை எடிட் செய்து, சில பாரக்களை சேர்த்துள்ளேன். அவைகளையும் பார்வையிடவும். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

   Delete
  2. //நிச்சயம் ஒரு 10 வினோதமான ID-களை உருவாக்கி திட்டி தீர்த்திருப்பார்கள். ;-{X)//
   நல்லவேளை தப்பித்தீர்கள்! :D அங்கே Moral Policing என்ற போர்வையில், சில போலிகள் ஏதோ உள்நோக்கத்துடன் உலாவி வருகிறார்கள்!!!

   Delete
 3. உங்கள் கோவம் நியாயமானது தான் பாலாஜி.
  ஆனால் பாவம் ஆசிரியர் தான்.இந்த பக்கம் நாம கேள்வி கேக்க அந்த பக்கம் ஒரு கூட்டம் வேறு மாதிரி சொல்ல.சரி கடைசில ஆசிரிய என் வழி தனி வழின்னு போக அதுவும் முடியாம திரும்ப பாதி நம்ம பக்கம் வந்திருக்கார். பாக்கலாம் இரத்தப்படலம் தவிர மற்ற கதைகள் ஓகே தானே.எல்லாம் சரியாக முடியும் என நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா.

   // இரத்தப்படலம் தவிர மற்ற கதைகள் ஓகே தானே.எல்லாம் சரியாக முடியும் என நம்புவோம்.//

   ஆம் கிருஷ்ணா. பொறுத்திருந்து பார்ப்போம். சைசும் விலையும் கலரும் என்ற அறிவிப்பு மன நிறைவைத் தரும் விஷயம்.

   Delete
 4. அடடே! ரொம்ப நாள் நீங்க காணமப் போனதுக்கும் இதுதான் காரணமோ?!!

  எப்படியோ, எடிட்டரின் 'என் வழி தனி வழி' பிடிவாத குணம் (உங்களைப் போன்ற சில) நண்பர்களின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் வந்தது மகிழ்ச்சியே!

  'இனி எல்லாம் சுகமே'ன்னு நம்புவோமாக! :)

  ReplyDelete
  Replies
  1. சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள். உரத்து சொல்லாதீர்கள். கரெக்ட்டான உங்களது கண்டுபிடிப்பிற்கு பரிசாக ஸ்டீல் க்ளா பைக்கின் பில்லியன் ரைடர் ஜாய் ரைட் உங்களுக்காகவே ஸ்பெஷலாக காத்திருக்கின்றது. என்ஜாய்!

   Delete
 5. நியாயமான கேள்விகள். அடிக்கடி முடிவை மாற்றுவது நமக்கு புதிதா என்ன?

  //மறுபதிப்பென்றால், அதன் அவசியமும், அது எந்த வகையினில் பழையதிலிருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதே முக்கியம்.//

  முற்றிலும் உண்மை. அது படி பார்த்தால் முழு வண்ணத்தில் பெரிய சைசில் தான் உருவாகப் பட வேண்டும்.

  மறு பதிப்பே தேவை இல்லை மற்றும் மறுபதிப்பு நீங்கள் சொன்னமாதிரி நாம் எட்டிய நிலையான நிலமயை குலைக்கும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. No Hard Feelings :D

  ReplyDelete
  Replies
  1. //மறு பதிப்பே தேவை இல்லை//

   நண்பரே,

   மறுபதிப்பு வேண்டாம் என்னும் கருத்துக்கள் என்பது இப்பொழுது XIII-ன் பார்ட் 1&2 மறுபதிப்பு தேவையில்லை என்பது போன்ற கதைத் தேர்வுகளையே. மற்ற படி மறுபதிப்பிற்கான க்யூவில் நீங்கள் சற்று பின்னால் தள்ளி நிற்கின்றீர்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் ஒரு கர்ச்சீப்பை போட்டு விட்டு, க்யூவில் உங்களுக்கு முன் மற்றும் பின் நிற்பவர்களிடம் சற்று நிமிடதத்தில் வருவதாகவும் அதுவரை உமது இடத்தை பார்த்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு முன்னால் வந்து பார்த்தீர்கள் என்றால் க்யூவில் முதல் இடத்தில் நானும், நண்பர் ஸ்டீல் க்ளாவும் பல மாதங்களாக காத்துக் கொண்டு இருப்பதை பார்க்கலாம். XIII-ன் கலர், ஜம்போ ஸ்பெஷல் மறுபதிப்புப் புத்தகம் அச்சிடப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பல மாதங்களுக்கு முன் எடிட்டரின் பிளாகில் பின்னூட்டமாக வெளிப்படுத்தி இருப்பேன். அதே கமெண்டில் ஸ்டீல் க்ளா சந்தோஷத்தோடு ஒரு ரிப்ளை போட்டிருப்பார்.

   //மறுபதிப்பு நீங்கள் சொன்னமாதிரி நாம் எட்டிய நிலையான நிலமயை குலைக்கும் //

   சற்றே ஸ்டெடியான நிலை என்று சொன்னதை ஸ்திரமான நிலைக்கு வந்து விட்டோம் என்று எடுத்துக் கொளாதீர்கள். 6, 7 மாதங்களாக சொன்ன நேரத்துக்கு புத்தகத்தை கிடைக்கும் படி முயற்சி எடுத்ததைத்தான். அது கூட கொரியரில் வ்ருவதால்தான். டிஸ்கவரி புத்தக நிலையம் போன்ற கடைகளில் கூட 15 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்குப் பிறகுதான் கிடைக்கின்றது.

   இன்றுள்ள நிலையில் ஒவ்வொரு புத்தகத்துக்கும் கொரியருக்கு எவ்வளவு செலவு செய்கின்றோம் என்று நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். ரூ.10/- புத்தகத்துக்கு ரூ.20 அல்லது 30 கொரியர் செலவு செய்கின்றோம். உதாரணம் சமீபத்திய ஜானியின் கதை.

   மற்றபடி ஸ்திரத்தன்மையை எட்டுவது என்பது எப்பொழுது புத்தகங்கள் தொடர்ச்சியாக குறித்த காலத்தில் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கின்றதோ அந்த காலம்தான் நாம் நிலையான நிலைமையை எட்டிவிட்டோம் என்பதைக் குறிக்கும்.

   மற்றொரு விஷயத்தையும் நாம் கவணிக்க வேண்டும். CC-க்கான அறிவிப்புக்குப் பின், இப்பொழுது லயன் முத்து காமிக்ஸில் வெளியான டெக்ஸின் சிகப்பாய் ஒரு சொப்பனத்தின் சைஸிலும், விலையிலும் எனக்கு உடன்பாடில்லை. அதையும் பெரிய ஸைஸிலேயே போட்டிருக்கலாம். பார்மாட் மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திகிலில் வந்த கதைகளும், மாடஸ்டி ப்ளைஸியும், தினசரிகளில் வெளிவந்த டெய்லி ஸ்டிரிப் கதைகளும் கம்பேக் ஸ்பெஷல் ஸைஸில் வரும் போது, டெக்ஸை பெரிய ஸைசில் கொண்டு வருவது சாத்தியமான விஷயமே. என்னைப் பொறுத்தவரை சிறிய டெக்ஸ், ரூ.50/- விலையில் என்பது ஒரு பின்னைடைவே.

   // No Hard Feelings :D//
   வருத்தம் ஏதும் இல்லை நண்பரே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃபீலிங். ;-))

   நண்பர்களில் மாற்றுக் கருத்து இருப்பதுவும் நட்பின் மேன்மையே.
   உங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

   முக்கியமாக இந்த பதிவின் காரணம், பலவித வேண்டும் வேண்டம் என்ற கதை லிஸ்ட்கள், கோரிக்கைகள், ஓட்டெடுப்புக்கள் எல்லாம் நடந்தும் கடைசியில் கதைத் தேர்வு என்று வந்த போது எப்படி எல்லாம் தலைகீழானது மற்றும் இன்று அந்த தலைகீழ் எப்படி மீண்டும் தலைகீழானது என்பதற்கே.

   மற்றொரு முக்கியமான விஷயம்: பழைய காமிக்ஸ் க்ளாசிக் லிஸ்டை தயாரித்தது யார் என்ற விஷயத்தை ஒரு நெருங்க்க்கிய நண்பர் சொன்னதும் காரணம்.

   கார்த்திக் சோமலிங்கா ப்ளீஸ் நானும் “அவர்” மாதிரியே பேசுகின்றேன் என்று சொல்லிவிடாதீர்கள். ”நான் ஒரு போதும் அவரில்லை”
   :-)))

   Delete
  2. அந்த க்யூ - கர்சீப் கற்பனை சூப்பர்! :)

   Delete
  3. // அந்த க்யூ - கர்சீப் கற்பனை சூப்பர்! :) //

   நன்றி நண்பரே!

   Delete
 6. [இந்த மறு பதிப்புப் பட்டியலுக்கு நமது லயன், திகில், மினிலயன், ஜூனியர் லயன் இதழ்கள் மட்டுமே consider செய்திட வேண்டுமென்பது தான் முக்கியம்! முத்து காமிக்ஸ் கதைகள் பிரதானமாக காமிக்ஸ் க்ளாசிக்ஸில் இத்தனை காலம் மறுபதிப்புகளாக வந்திட்டமையால் அவற்றிற்கு ஒரு தற்காலிக ஓய்வு!

  So - ”நயாகராவில் மாயாவி”; மஞ்சள் பூ மர்மம்” என்று முத்துவின் கதைகளை எழுதிட வேண்டாமே ப்ளீஸ்?!//

  இவை தலைவாங்கி குரங்கில் ஆசிரியரின் வரிகள் .]

  [''கள்ள வோட்டோ நல்ல வோட்டோ கடைசியில் எல்லாம் செல்லா வோட்டா போச்சு'' ].

  இவை என் வழி தனி வழி பதிவில் நான் பதிவு செய்திருந்த கருத்து . இதற்க்கு யாரோ ஒரு நண்பர் ''ஆசிரியர் பின்னர் தன் மனதை மாற்றிகொண்டார்'' என்று பதில் எழுதி இருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

   Delete
 7. என்னது திடீரென வருகின்றீர்கள் பிறகு பல நாள் இந்த பக்கமே வருவதில்லை :)
  எனது ஒரு சின்ன அபிப்பிராயம் இப்பொழுது வரும் 100 ரூபாய் இதழ்கள் போல் cc இல் இரண்டு பாப்புலரான கலர் காமிக்ஸ் + கறுப்பு வெள்ளையில் ஒரு பழய இதழ் வந்தால் அனைவரையும் திருப்தி படுத்தலாமே!

  ReplyDelete
  Replies
  1. //என்னது திடீரென வருகின்றீர்கள் பிறகு பல நாள் இந்த பக்கமே வருவதில்லை :)//

   :-(&)
   மெதுவாக ஆரம்பிக்கலாமே என்றுதான்.

   :-))

   //எனது ஒரு சின்ன அபிப்பிராயம் இப்பொழுது வரும் 100 ரூபாய் இதழ்கள் போல் cc இல் இரண்டு பாப்புலரான கலர் காமிக்ஸ் + கறுப்பு வெள்ளையில் ஒரு பழய இதழ் வந்தால் அனைவரையும் திருப்தி படுத்தலாமே!//

   சின்ன அபிப்பிராயமா இது! ஒரு மாதத்திற்கு 3 காமிக்ஸ் கேட்கின்றீர்கள், சூப்பர் திட்டம். அப்படி வந்தால் எல்லோருக்கும் மாதா மாதம் தீபாவளிதான்.

   Delete
  2. நல்ல ஐடியாதான்! நடக்கனுமே?!

   எடிட்டரின் போன பதிவில்கூட இதே கேள்வியை கேட்டிருந்தேன். பதில் சற்றே வருத்தத்துடன் வந்தது; 'சூப்பர் ஹீரோக்கள் இலவச இணைப்பாகவா? காலச்சக்கரம் சுழலும் விதம்தான் எத்தனை கொடுமையானது?!!' என்று எடிட்டர் பதிலளித்திருந்தார். :(

   ஒருவேளை நான் கேட்டவிதம் சரியில்லையோ என்னவோ! :(

   Delete
  3. உங்களின் அந்த கேள்வியையும், அதற்கான எடிட்டரின் பதிலை நானும் படித்தேன். அது போன்ற ஒரு கேள்வியினை வேறு எப்படி கேட்பீர்கள்?

   எடிட்டரைப் பொறுத்தவரை துவக்க கால ஹீரோக்களே முத்து காமிக்ஸுக்கும், லயனுக்கும் அஸ்திவாரம் மற்றும் ஆதாரத் தூண்கள். அந்த ஹீரோக்களை இலவச இணைப்பு என்று எண்ணும் போது அவர் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலையை அவர் உணர்ந்தவரே.

   25 கோடி ரூபாய் விலை மதிப்பிருக்கும் பெராரி காரின் எஞ்சினை கழட்டி மாட்டு வண்டியில் மாட்டினால் எப்படி இருக்கும் பெர்பார்மன்ஸ்?

   அதுபோலவே பழைய காமிக்ஸ் ஹீரோக்களும். பழைய காமிக்ஸ் ஹீரோக்களின் இன்னும் வெளிவராத பல விறு விறுப்பான கதைகள் இருக்கலாம். அவைகள் வெளியிடப்பட்டால், நன்கு விற்பனையும் ஆகலாம். ஆனால், மறுபதிப்பென்று வந்துவிட்டால், அந்த புத்தகங்களை எல்லோரும் வாங்கலாம். ஆனால் ஏமாற்றத்தின் காரணமாக எழும் புலம்பல்களையும், வசவுகளையும் தவிர்க்க முடியாது.

   தினமணிக் கதிர் என்று ஒரு வார பத்திரிக்கை இருந்தது. அருமையான புத்தகம். மறைந்த எழுத்தாளர் சாவி அதன் எடிட்டராக இருந்து இருக்கின்றார். சாவி எடிட்டராக இருந்த காலத்தில் பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை வெளியிட்டு பல புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டார். பல புதியவர்களை அறிமுகப்படுத்தியமைக்காக எழுத்தாளர் சாவியை பாராட்டும் பொழுது, அடக்கத்துடன் அவர் கூறியது, ”எழுத்துத் திறன் அவரவரது சொந்த சொத்து, நான் செய்தது அறிமுகம் மட்டுமே”. சாவியால் அறிமுகப்படுத்தப் பட்ட சிலர், திரு.பாலகுமாரன், திரு. சுப்ரமண்ய ராஜு போன்ற பலர்.

   பாரம்பரியமிக்க அந்த தினமணிக் கதிர் பத்திரிகையின் விற்பனை சரிந்து, நின்றே போனது. பின் இப்பொழுது அந்த பத்திரிகை தினமணி பேப்பரின் ஞாயிறு பதிப்புடன் இலவசமாக தரப்படுகிறது.
   இது போலவே கோகுலம், கல்கி போன்ற வார இதழ்களும் நின்று பின் மீண்டும் வெளிவர துவங்கியது.

   மாறும் காலத்திற்கேற்றவாறு மாறாவிட்டால் புறக்கணிப்பு நிச்சயம்.

   Delete
 8. வாங்க நண்பரே இவ்வளவு நாட்கள் தலைமறைவு ஆனதுக்கு காரணம் இதுதானோ ;-)

  எல்லாம் நன்மைக்கே

  வருத்தம் என்பது சகஜம் தான் அதிலிருந்து மீண்டு வருவது என்பது ஒரு சிலராலே முடியும் நன்றி நண்பரே :))
  .

  ReplyDelete
 9. மறுபடியும் காணாம போயாச்சா?....:)

  ReplyDelete
 10. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
  .

  ReplyDelete
 11. அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும்,

  இனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.