Saturday 9 February 2013

பதிவிடாத பின்னூட்டம்

ALILAIKRISHNAR

 

ணக்கம் நண்பர்களே,

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் பற்றிய கருத்துக்களும், பின்னூட்டங்களும் இப்பொழுது எடிட்டரின் ப்ளாகில் சூடு பறத்திக் கொண்டு இருக்கின்றது.

காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் வெளியிடுவதைப் பற்றிய எடிட்டரின் அறிவிப்புகளை, லயன் முத்து வலைத்தளத்திலும், காமிக்ஸ் புத்தகத்தில் வரும் எடிட்டரின் ஹாட்லைனையும் ஆர்வத்தோடு தொடர்ந்து வந்தேன். மறுபதிப்பு சம்பந்தமான எனது பின்னுட்டங்களையும் லயன் முத்து தளத்தில் இட்டு வந்தேன். எனது இந்த தொடர்தல் எதுவரை என்றால், எடிட்டரின் என் வழி தனி வழி பதிவுவரை.

ன் வழி தனி வழி” பதிவைப் பார்த்த பிறகு, எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. IDLE MIND IS DEVIL’S WORKSHOP என்று ஒரு ஆங்கில சொலவாடை உண்டு. என் வழி தனி வழி பதிவை படித்த பொழுது எனது மனதில் தோன்றிய எண்ணம், லயன் முத்து ப்ளாகிற்கு வரும் வாசகர்களின் எண்ணவோட்டத்தை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொள்ள, எடிட்டர் ஏதாவது ஒரு அறிவிப்பையும், கருத்துக் கணிப்பையும், பெயர் சூட்டுதலையும் கேட்கின்றார், பின் அவர் என்ன நினைக்கின்றாரோ அதையே செய்து கொண்டு போகின்றார் என்ற எண்ணம் தோன்றியது.

Date Proof

தையடுத்து ஜூலை மாதம் 23ம் தேதி 2012-ம் வருடம் இரவு ஒரு மணிவரை விழித்திருந்து, என் வழி தனி வழி பதிவிற்கு ஒரு பின்னூட்டத்தை எடிட்டரின் தளத்தில் அடித்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பின்னூட்டம் என்ன செய்தாலும், லயன் முத்து தளத்தில் பதிவிட முடியவில்லை.

ந்த பின்னூட்டம் மிக நீண்டதாகவும், சில இடங்களில் மிகவும் காட்டமாகவும் இருந்ததினால்,  எடிட்டரின் மனம் புண்படக்கூடாது என்றும், கடிதமாக எதை வேண்டுமானாலும் எழுதி போஸ்ட் செய்தால் அது இருவருக்கு இடையே மட்டும் நிகழும் ஒரு கருத்து பறிமாற்றமாக மட்டுமே இருக்கும். அதையே  பொதுவான தளத்தில், அதுவும் மற்றவர்கள்  முன்னிலையில், ஏதோ ஒரு புள்ளி விவர புலியை போல பின்னூட்டமிடுவது சரியில்லை என்று மனதில் பட்டதால், அதை வேர்டில் காப்பி பேஸ்ட் செய்து, நிறைய எடிட் செய்து பின் மீண்டும் எடிட்டரின் தளத்தில் பின்னூட்டமாக போட்ட பின் ப்ளாக்கர் சுட்டிய மெசேஜ் – ”பின்னூட்டம் 5000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கின்றது, சுருக்கவும்!” – என்றது.

மீண்டும் காப்பி, பேஸ்ட், எடிட் செய்து பின்னூட்டமிட்டால், ப்ரவுசர் க்ராஷ் ஆனது, அடுத்து சிஸ்டம் கிராஷ் ஆனது. அப்படியும் விடாமல் கண்ட்ரோல், ஆல்ட், டெல் கொடுத்து ரீஸ்டார்ட் கொடுத்தால், பல அப்டேட்கள் இருக்கின்றது, அவைகள் அப்டேட் ஆகி முடிக்கும் முன்னே சுவிட்ச்-ஆப் செய்ய வேண்டாம் என முகத்தில் அறைவதுபோல விண்டோஸ் செய்தி சொன்னது. என்ன இது, இந்த பின்னூட்டமிடுவதற்குள் இத்தனை சிக்கல் வருகின்றதே, குடுகுடுப்பைக்காரன்  மந்திரம் போட்டு நாயின் வாயைக் கட்டுவது போல் எடிட்டரும் ஏதோ மந்திரம் போட்டு நமது கம்ப்யூட்டருக்கு கட்டு போட்டுவிட்டார் போல, பேசாமல் இந்த பின்னூட்டத்தை தவிர்த்து விடலாம் என்று அதை வேர்டில் சேமித்து வைத்து விட்டு விட்டேன்.

து ஏனோ தெரியவில்லை, இப்பொழுது வரை அந்த் வேர்ட் பைலை திறந்தாலும் வேர்ட் புரோகிராமே ப்ரீஸ் ஆகி நாட் ரெஸ்பாண்டிங் என்று பிழை சுட்டுகிறது. இப்போழுதும் பாடாய் பட்டுத்தான் இங்கு காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றேன்.  எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றது.

ன்று CC பற்றிய எடிட்டரின் ”ஆதலினால் அசடு வழிவீர்” பதிவை பார்க்கும் முன்னரே இந்த பதிவை துவக்கிவிட்டேன். சரியாக சொல்வதென்றால் எடிட்டரின் இதற்கு முந்தய ”ஒரு கட்டை விரல் காதல்” பதிவை கண்டதும் இந்த பதிவை உருவாக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த பதிவின் பின்னூட்டங்களில் CC-க்கான சந்தாவைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைக் சொல்லியிருந்தார். அதை அப்படியே இங்கு கீழே கொடுக்கின்றேன்.

“சந்தோஷங்களுக்கிடையே - சின்னதாய் ஒரு வருத்தமும் கூட ! மாயாவி ; லாரன்ஸ் - டேவிட் ; ஜானி நீரோ etc., மறுபதிப்புகள் வேண்டுமென்ற கோரிக்கை பலமாக ஒலித்த போதிலும், சந்தாக்களின் எண்ணிக்கையில் எஞ்சி நிற்பது பலவீனமே ! இது வரை காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்களின் எண்ணிக்கை 160 -ஐத் தாண்டிய பாடைக் காணோம் எனும் போது மண்டையைச் சொறியத் தான் தோன்றுகிறது.  சந்தா செலுத்தி ஒரு மொத்தமாய் எல்லா மறுபதிப்புகளையும் வாங்குவதை விட, தேவையானவற்றை மட்டும் அவ்வப்போது வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமா ? - அல்லது புது யுகக் கதைகளின் ஈர்ப்பினால் பழசுக்கு மவுசு குறைந்து போய் விட்டதா ? - புரியாத புதிரே ! லயன்-முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான சந்தா புதுப்பித்தல் ஜரூராய் நடந்து வருகின்றது சற்றே ஆறுதல் தந்திடும் சங்கதி ! ஒன்று மட்டும் நிச்சயம் - வண்ணத்தின் வீரியம் டெக்ஸ் வில்லர் போன்ற விதிவிலக்கான அசாத்திய நாயகர்களைத் தவிர, பாக்கி அனைவரையும் சாய்த்து விடும் ஆற்றல் கொண்டதென்பது அப்பட்டம்! ”

மேற்கண்ட இந்த வரிகளே இந்த பதிவை தயாரிக்க என்னை துண்டியது.

ரி விஷயத்திற்கு வருகிறேன். இப்பொழுது இவ்வளவு சொல்லிவிட்டு, எடிட்டரின் என் வழி தனி வழி பதிவிற்கான என்னுடைய பின்னூட்டத்தினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.

னி என்னுடைய ஆறிய பழைய கஞ்சியை இங்கு உங்கள் முன் வைக்கின்றேன். ஆறிய கஞ்சியாக இருந்தாலும், லேட்டாக வந்தாலும், இந்த விஷயம் இன்றும் எடிட்டர் ப்ளாகில் வெகு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

னி பதிவிடாத என்னுடைய பின்னூட்டத்தின் சாரம்:

”டியர் எடிட்டர் திரு. விஜயன் அவர்களுக்கு வணக்கம்,

தற்கு முந்தய உங்களின் பதிவுகளிலிருந்து, இந்த பதிவு மிகவும் முரன்பட்டு, வித்தியாசமாக உள்ளது. அதாவது வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து அதற்கு ஏற்றது போல இந்த பதிவில் அதிரடியாக புதிய CC க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளீர்கள்.

ங்களிடம் எனது கோரிக்கை என்னவென்றால், மறுபதிப்பு என்று வரும்போது, ஏற்கெனவே வந்த கதைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் போடாமல் முதலில் இருந்து வரிசையாக போடுங்கள். உங்களது குழந்தைகளில் எதற்கு ஒரு சிலவற்றின் மேல் மட்டும் ஃபேவரிடிசம் காட்டுகிறீர்கள். எதையும் விட்டு விடாதீர்கள். மறுபதிப்புகளை அனைவரும் வாங்கத்தான் போகிறார்கள். உங்கள் திட்டமும் வருடத்திற்கு 6 புத்தகங்கள்தான்.

முத்து காமிக்ஸின் ஆரம்ப கால வாசகனாக இருந்தாலும், நான் சந்தாதாரர் ஆகிவிட்டாலும் CC யின் 6 புத்தகங்களையும் வாங்கத்தான் போகிறேன்.

புதிய சைஸ் என்று நீங்கள் சொன்னது, கம் பேக் ஸ்பெஷல் சைஸைத்தான் என்று நினைக்கின்றேன்.

றுபதிப்புகள் உண்மையிலேயே அர்த்தம் உள்ள விஷயமாக இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் அவை என் பெயர் லார்கோ சைஸிலும், வண்ணத்திலும்,தரமான ஆர்ட் பேப்பரிலும்தான் இருக்கவேண்டும். இவைகளில் ஒன்று குறைந்தாலும் காமிக்ஸ் தான் இருக்கும், அந்த காமிக்ஸ் புத்தகங்கள், கிளாசிக்(காக) இருக்காது. காமிக்ஸ் கிளாஸிக்கின் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு கலெக்டார்ஸ் எடிஷனாக இருக்கும்படி வடிவமையுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் இப்போது உங்களுக்கு என்று இருக்கும் மார்க்கெட்டில், இப்போது நீங்கள் பின்பற்றும் தரத்தையும், தொழில் நுட்பத்தையும் ஒரே சமமாக உங்களது அனைத்து வெளியீடுகளிலும் கடைபிடியுங்கள்.

ங்களுடைய மெய்யாலும் முதல்முறையாக என்ற பதிவில் நெவர் பிபோர் ஸ்பெஷல், ரூ.400/- என்ற அறிவிப்பினால், வாசகர்களிடையே எழுந்த விலை குறித்தான பல விவாதங்களும், கோரிக்கைகளும் எழுந்த போது, அதற்கடுத்த உங்களது பதிவான “பதிவாய் ஒரு பதில்” பதிவில், விலை குறித்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நீங்கள் அளித்திட்ட உங்களது தீர்ப்பை / தீர்மாணத்தை நான் இங்கே மீண்டும் பிரதிபலிக்கிறேன்.

”//ப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில் சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம் சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் encourage செய்திடப் போவதில்லை !//”

என்று முந்தய பதிவில் சொல்லிவிட்டு, இப்போது நீங்களே இன்றய பதிவில் சொல்லியுள்ள விஷயங்கள், சிறிது முரன்படுகிறது. மறுபதிப்புத்தான், பழைய கதைகள் என்று சமாதானம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இல்லை, நான் இரண்டு தரத்தில் மைசூர்பாகு விற்கத்தான் போகிறேன் என்று நீங்கள் சொன்னால் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் உங்களுக்கு என்று ஒரு working space இருக்கும். அதில் வாசகர் தலையீடு என்பது அதிகமாக இருந்தால் நல்ல result கிடைக்காமல் போகும்.

ற்றொரு விஷயம், எந்த கதைகளெல்லாம் வெளியிடப்பட்ட உடனே சுடச்சுட விறுவிறுப்பாக விற்று தீர்ந்ததோ அந்த கதைகளை மட்டுமே மறுபதிப்புகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது எனது அனுமானம்.

லைவாங்கிக் குரங்கு மறுபதிப்புப் புத்தகத்தில், வாசகர்களுக்கு நீங்கள் எழுதிய உங்களது ”இது சீஸன் 2” கடிதத்தில் மறுபதிப்பைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை எழுதுமாறு கேட்டுக் கொண்டு, அந்த கடித்தின் கடைசியில் நீங்கள் எழுதியது,

//ந்த மறு பதிப்புப் பட்டியலுக்கு நமது லயன், திகில், மினிலயன், ஜூனியர் லயன் இதழ்கள் மட்டுமே consider செய்திட வேண்டுமென்பது தான் முக்கியம்! முத்து காமிக்ஸ் கதைகள் பிரதானமாக காமிக்ஸ் க்ளாசிக்ஸில் இத்தனை காலம் மறுபதிப்புகளாக வந்திட்டமையால் அவற்றிற்கு ஒரு தற்காலிக ஓய்வு!

So - ”நயாகராவில் மாயாவி”; மஞ்சள் பூ மர்மம்” என்று முத்துவின் கதைகளை எழுதிட வேண்டாமே ப்ளீஸ்?!//

- இது நீங்கள் எழுதியதுதான். ஆனால் இப்போது நயாகராவில் மாயாவி முன்னனிக்கு வந்து விட்டார். இது எப்படி சாத்தியமாயிற்று. எப்படி இதை கவனிக்காமல் விட்டீர்கள். அல்லது தெரிந்தேதானா. இது தான் உங்களது ”தனி வழியா”. பிறகு தலைவாங்கியின் கடைசி பக்கத்தில் எனது டாப் 20 கதைகள் என்ற ஒரு லிஸ்டையும் கொடுத்துவிட்டு, இந்த வலைத்தளத்திலும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு, இப்போது வாசகர் கருத்தையும், உமது முந்தய கருத்துக்களையும் புறந்தள்ளி விட்டு, இந்த பதிவில் ”என் வழி தனி வழி” என்று போகிறீர்கள். இதற்கு அர்த்தம் எல்லோரிடமும் கேட்பேன் ஆனால் என் இஷ்டப்படிதான் செய்வேன் என்று அர்த்தமா!

ப்படி நீங்கள் உங்கள் வழி தனி வழி என்று சொல்வதற்கு, தலைவாங்கியில் இரண்டு பக்கங்களும், வாசகர் கருத்துக் கணிப்பும் தேவையில்லையே. நீங்கள் நினைத்ததை எப்போதும் போல செய்திருக்கலாமே. கள்ள ஓட்டு என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எந்த காமிக்ஸ் ரசிகனும் டெக்ஸையோ, கேப்ட்ன் டைகரையோ, கேப்டன் பிரின்ஸையோ வேண்டாம் என்று சொல்லப் போவதில்லையே. திகில் #2க்கு விழுந்த 5 சதவீத ஓட்டுக்களில் தான் கள்ள ஓட்டுக்கள் இல்லை அதனால் அதுதான் தேர்வு என்று சொல்லிவிடாதீர்கள்.

ந்த கருத்துக்கள் உமது உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்தால் -------என்ன சொல்வது. நமக்குள் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று முன்பே சொல்லியிருக்கிறீர்கள் அதனால் NO HARD FEELINGS என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஒரு கருத்தை சொல்லி அது சரியில்லை என்று நாங்கள் வாதிட்டால், அது வாக்கு வாதம், அல்லது, கருத்துக்கள் முரன்படுவது. இங்கு உங்கள் கருத்துக்கு நான் முரன்படவில்லை. உங்களது கருத்துக்கு நீங்களே மாறுபடக்கூடாது என்றும் நான் சொல்லவில்லை. இன்றய உங்களது பதிவிடப்பட்ட கருத்துக்களுக்கு உமது முந்தய கருத்துக்களையே நான் இங்கு பின்னூட்டமாக வைக்கின்றேன்.

baby krishna on palm leaf

ந்த பின்னூட்டத்தை இடும்போது, உங்களது தாயார் நீங்கள் சிறுவனாக பள்ளிக்குச் கிளம்பும் போது உங்கள் முகத்துக்கு கோகுல் சாண்டால் பவுடர் போடும் சீனும், ஆலிலை கிருஷ்ணன் சீனும், நீங்கள் குட்டி கிருஷ்ணன் ஜாடையில் இருக்கும் சீனும், என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

டைசீயாக, கொலைகாரக் கலைஞனைப் போலவோ அல்லது தலைவாங்கியைப் போலவோ அல்லது இப்பொழுது பழைய கருப்பு வெள்ளை திகில் கதைகளின் ஸ்கேன் செய்த பக்கங்களைப் போலவோ தயவு செய்து மறுபதிப்புகள் வேண்டாம். தலைவாங்கியில் பேப்பர் நன்றாக இருந்தும் அச்சுத்தரம் நன்றாக இல்லை. ஸ்கேன் செய்ததினால் வந்த வினையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மறுபதிப்புக்கள் revamped ஆக இருக்க வேண்டும், அதையும் from the scratch-லிருந்து செய்ய வேண்டும்.”

மேலே உள்ளவைகளே அந்த பழைய பின்னூட்டம்.

ப்பொழுது எடிட்டர் காமிக்ஸ் கிளாஸிக்ஸின் வெளியீடுகளின் லிஸ்டை மாற்றி இருக்கின்றார். இது மிகவும் வரவேற்கத் தகுந்த ஒரு விஷயம். இந்த புதிய லிஸ்டில் இருக்கும் நாம் விரும்பாத கதைகளும் மாறுதலுக்குள்ளாகும் என்று நம்புவோம்.

ந்த பதிவை இப்போழுது போடுவதற்கு காரணம், எடிட்டரை குறை சொல்வதற்கோ அல்லது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல. பழைய கதைகளை மறுபதிப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எடிட்டரின் ப்ளாகில் உரத்த குரலில், திரும்பத் திரும்ப எழுப்பப் படுகிறது. சில பேர்களே இந்த கோரிக்கையை முன் வைத்தாலும், இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து பல நாட்களாக, பல பதிவுகளில் எழுப்பப்படும் பொழுது, அனைவருமே மறுபதிப்பை விரும்புகின்றனர் என்ற உணர்வை எடிட்டருக்கு ஏற்படுத்துகின்றது.

டிட்டருக்கும், புதிய கதையை எடுத்து பல விதங்களில் அல்லல் படுவதற்கு பதில், பழைய கதையை மறுபதிப்பிடுவது ஒரளவிற்கு சிக்கல் குறைந்த விஷயம். அதனாலேயே அவர் திரும்ப திரும்ப மறுபதிப்பு விஷயத்திற்கே வந்து நிற்கிறார்.

டைட்டானிக் படத்தை 3D-ஆக மாற்றம் செய்து மறு வெளியீடு செய்யப்பட்டது. படம் தியேட்டருக்கு வந்து சென்ற சுவடே காணவில்லை.

ர்ணன் படம் DTS ஒலியிலும், வண்ணத்திலும் மேம்படுத்தப்பட்டு தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலில் சக்கை போடு போட்டது.

து போலவே அர்னால்டு ஷ்வாஷ்னெகர் நடித்த டொட்டல் ரீகால் கதையையும், சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஜட்ஜ் ட்ரெட், ஆம் நமது முத்து லயனில் தோன்றியவரேதான், ரீபூட் என்ற பெயரில் கதையில் மாற்றங்கள் செய்து, புது ஹீரோக்களை வைத்து பல கோடி செலவில் அட்டகாசமான அனிமேஷன் காட்சிகளுடன் சமீபத்தில் வெளிவந்தது. இரண்டு படங்களும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வியே கண்டது. புது ஸ்பைடர்மேனுக்கும் இதே நிலைதான். ஆனால் மாற்றுக் கோணத்தில் படமாக்கப்பட்ட பேட்மேன் டார்க் க்னைட் ட்ரைலாஜி வசூலில் அதகளம் செய்தது.

றுபதிப்பென்றால், அதன் அவசியமும், அது எந்த வகையினில் பழையதிலிருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதே முக்கியம்.

றுபதிப்பு வேண்டாம் என்னும் கருத்துக்களும் எடிட்டரின் ப்ளாகை எட்ட வேண்டும். இல்லையென்றால் முதலுக்கே மோசம் என்ற நிலை சற்று ஸ்டெடியான நிலையை எட்டி இருக்கும் தற்போதய லயன் முத்து வெளியீடுகளுக்கு ஏற்படலாம். பாதிக்கப்படப் போவது லயன் முத்து சந்தாதாரர்களே. நான் பாதிப்பு என்று சொல்வது பணத்தை அல்ல, காமிக்ஸ் இல்லாத வறட்சி நிலையினையே.

அன்புடன்,

Tiedup Krishna

பாலாஜி சுந்தர்,

www.picturesanimated.blogspot.com

Monday 14 January 2013

BLUEBERRY

 

blueberry-1

 

ன்பு நண்பர்களே,

ங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  Tiger5  
லயன் முத்து காமிக்ஸின் கௌபாய் கதாநாயகர்களில், நம் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் முதல் மூன்று கதாநாயகர்களின் பெயர்களை வரிசைப்படுத்தினால், அந்த முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம் கேப்டன் டைகருக்கு (என்கிற ப்ளூபெர்ரி) உண்டு.

Tiger2

கேப்டன் டைகர் கதாபாத்திரம், மனித உருவத்தை ஆதாரமாக கொண்டு வரையப்பட்ட கதாபாத்திரம். இப்படி அர்த்தம் கொள்வதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் கேப்டன் டைகரை உருவாக்கியவர்களைப் பற்றி சில விவரங்களை பார்க்கலாம்.

 

jean-michel charlierCaptain

ப்ளூபெர்ரி கதாபாத்திரத்தை உருவக்கியவர் ஜீன் மைக்கேல் சார்லியர் (Jean-Michel Charlier 30 October 1924 – 10 July 1989). இவர் பெல்ஜிய காமிக்ஸ்களுக்காக கதை எழுதுபவர். பல காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு சார்லியர் கர்த்தா. சராசரியாக 24 கதாபாத்திரங்களுக்கு மேல் இவர் உருவாக்கி இருக்கின்றார். அதில் எனக்குத் தெரிந்தவரை, லயன், முத்துவில் வந்தது, கேப்டன் ப்ளூபெர்ரியும், டைகர் ஜோ என்ற வனரேஞ்சர் ஜோ கதைகளுமே. அதற்கு மேல் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

 

ப்ளூபெர்ரி கதைகளை காமிக்ஸ்களாக வரைவதற்கு சார்லியர் தேர்ந்தெடுத்தது ஜீன் ஜிராட் என்ற ஃபிரெஞ்ச் ஓவியரை. (Jean Giraud என்ற Jean Henri Gaston Giraud, 08 May 1938 – 10 March 2012).

clip_image001

BANDES DESSINEES


படங்கள் வரையும் முறையில், மாடர்ன் ஆர்ட், டிரெடிஷனல் ஆர்ட், ட்ரைபல் பெயிண்டிங், தஞ்சாவூர் பெயிண்டிங் என்று பல முறைகள் இருப்பது போல், ஃபிரெஞ்ச் நாட்டில், படம் வரையும் முறையில்  Bandes Dessinees – என்ற ஒரு தொன்மையான படம் வரையும் கலை இருக்கிறது. காமிக்ஸ் படங்களை வரையும் போது படங்களில்   சித்தரிக்கும் காட்சிகள்  இயற்கையாக, நேரில் பார்ப்பதுபோல்  இருக்கும். இந்த தொன்மையான பாண்டேஸ் டெஸ்ஸினீஸ் வரைகலை முறை 19-ம் நூற்றாண்டில் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. பல காமிக்ஸ் புத்தகங்கள் இந்த தொன்மையான வரைகலையின் முறையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த காமிக்ஸ்கள் சுருக்கமாக BD (Bandes Dessinees) என்று அழைக்கப்படுகிறது.

moebius_airtight-garage_page-30_detail

ஃபிரஞ்சு மொழி ஃபிரான்ஸ் நாட்டில் மட்டுமல்லாது, பெல்ஜியத்தில் 40 சதவீத மக்களுக்கும், சுவிட்சர்லாந்தில் 20 சதவீத மக்களுக்கும் தாய்மொழியாக இருக்கிறது. அதனால், ஐரோப்பாவில், ஃபிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ்கள், நாடுகளின் எல்லைகளை தாண்டிய ஒரு பெரிய வாசக, ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த நாம் எல்லோரும் ரசனையில் ஐரோப்பிய ரசிகர்களோடு இணைகிறோம்!.

Dargaud_Wallpaper_105

 

இப்போது சப்ஜெக்ட்டுக்கு போவோம். காமிக்ஸ்களை இரண்டு வகையாக பிரித்தால், ஒருவகை கார்டூன் படங்களைக் கொண்டது, இரண்டாவது வகை மனித தோற்றத்தை சார்ந்திருக்கும் படங்களைக் கொண்டது.

கார்டூன் வகைகளுக்கு உதாரணம்; 1. மிக்கி மௌவுஸ், 2. லக்கி லூக், 3. ஹீத்க்ளிஃப், 4. கார்ஃபீல்ட் போன்றவை.

மனித தோற்றத்தை சார்ந்திருக்கும் காமிக்ஸ்களுக்கு உதாரணம்; 1. சூப்பர் மேன், 2. பேட்மேன், 3. XIII – ஜேஸன் ப்ளை, 4. ப்ளூபெர்ரி என்ற கேப்டன் டைகர்.

bf7889ac7ddc8e628b1d87bfcb9ba2ad_thumbnail

கேப்டன் டைகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கர்த்தா சார்லியர் என்றும், கேப்டன் டைகரின் கதைகளை படமாக வரைவதற்கு சார்லியர் தேர்ந்தெடுத்த ஓவியர் பெயர் ஜீன் ஜிராட் என்றும் ஏற்கெனவே பார்த்தோம்.

moebius_moali

பாண்டேஸ் டெஸ்ஸினீஸ் முறையில் படங்களை வரைவதில் ஜீன் ஜிராட் தேர்ந்தவராக இருந்தார். ஓவியர் ஜிராட், மோபியஸ் என்ற புனைப்பெயரில் உலக அளவில் பெரும் புகழ் பெற்று இருந்தார்.


இவர் கிர் என்ற பெயரிலும் படங்கள் வரைந்து வந்தார். இந்த பதிவில் இனி இவரை மோபியஸ் என்றே அழைக்கலாம்.

moebius_low 

ஹல்க், ஸ்பைடர்மேன், தோர், ஐயர்ன்மேன் போன்ற பல காமிக்ஸ் கேரக்டர்களை உருவாக்கிய கர்த்தா ஸ்டான் லீ மற்றும் அவரைப் போன்ற பல உலகப் புகழ் பெற்ற பிரபல ஓவியர்கள், மோபியஸின் ஓவியத் திறமையை வியந்து பாராட்டியுள்ளனர். ஓவியத் திறமையிலும், காமிக்ஸ் கதைகளிலும் மோபியஸ் ஒரு சகாப்தம். அவரது ஓவியத் திறமைகளை விவரிக்க ஒரு பதிவு போதாது.

 

ப்ளூபெர்ரியான ஜீன் பால் பெல்மாண்டோ!

மனித உருவத்தை ஆதாரமாக கொண்டு வரையப்பட்ட கதாபாத்திரம் கேப்டன் டைகர் என்று மேலே குறிப்பிட்டேன். அதற்கு காரணம், ஃப்ரெஞ்சு திரைப்பட நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோவின் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் மோபியஸ், கேப்டன் டைகரின் உருவத்தை வரைந்தார். இது மோபியஸ் அவர்களே வெளியிட்ட தகவல்.

clip_image001[11]clip_image001[9]

ஃப்ரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோ. இவர் பிறந்தது 1933-ம் வருடம். இவருக்கு இப்போது வயது 79.

196205

இவர் 84 படங்களில் நடித்துள்ளார். இந்த 84 படங்களில் ஆங்கிலப் படங்களும் அடக்கம். நடிகர் ஜீன் பால் பெல்மாண்டோ நடித்த உலகப் பிரசித்தி பெற்ற Peur Sur La Ville என்ற ஃபிரெஞ்சு திரைப்படம்,  FEAR OVER THE CITY – என்ற பெயரில் ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்து, வசூலில் சக்கை போடு போட்டது.

இந்த படத்தில் ஜீன் பால் பெல்மாண்டோ கொலைகாரனை பிடிக்க துரத்திக் கொண்டு ஓடும் நீண்ட காட்சிகள் மறக்க முடியாதவை. சேஸ் ஆரம்பிப்பது, நெருக்கமாக இருக்கும் கட்டிடங்களுக்கு மேலே சேஸ் ஆரம்பிக்கும், பிறகு அது பைக் கார் என்று பல நிமிடங்களுக்கு தொடரும்.

ஜீன் பால் பெல்மாண்டோ உருவத்திற்கும், கேப்டன் டைகர் உருவத்திற்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை என்னவென்று தெரியுமா? கோனல் மூக்கில்தான் அந்த ஒற்றுமை. அந்த கோனல் மூக்கு ஒற்றுமையை இங்கு கொஞ்சம் “தெளிவாக” பின்வரும் படங்களில் பார்க்கலாம்.

11559169_gal

11762501_gal

Blueberry

jean-paul-belmondo-11722-1024x768

blueberry


ஃபிரான்ஸ் நாட்டில் ப்ளூபெர்ரி காமிக்ஸ் கதை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இந்த படத்தை RENEGADE என்ற பெயரில், ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டு 2004-ம் வருடம் வெளியிடப்பட்டு இருக்கின்றது. வின்செண்ட் கேஸ்ஸெல் என்ற பிரஞ்சு நடிகர், ப்ளூபெர்ரியாக நடித்திருக்கிறார்.

clip_image001[15]

இப்போழுது ப்ளூபெர்ரி திரைப்படத்தின் கதையை பார்ப்போம்.

ப்ளூபெர்ரி திரைப்பட தயாரிப்பிற்கு, மோபியஸ் முழு அங்கீகாரம் தந்திருக்கிறார்.

clip_image001[17]

உலகமெங்கும் பரவி இருக்கும் மோபியஸின் ப்ளூபெர்ரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு ப்ளூபெர்ரி கதையும் திரைப்படத்தைப் போல இருந்தும், திரைப்படமாக தயாரிப்பதற்கு தேவையான அளவிற்கு ப்ளூபெர்ரி காமிக்ஸ் கதைகள் இருந்தாலும், இந்த திரைப்படக் கதை ஒரு புதிய கதைவரிசைக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.

276830

திரைப்படத் துவக்கத்தில், ஒரு கோச்சு வண்டியில் டீன் ஏஜில் இருக்கும் நமது ஹீரோ மைக்கேல் டோனோவான் ப்ளூபெர்ரி என்கிற மைக் ப்ளூபெர்ரி ஒரு வெஸ்டர்ன் டவுனுக்கு வந்து இறங்குகிறார்.

ஃப்ரெஞ்சு லூசியானாவில் இருக்கும் ப்ளூபெர்ரியின் பெற்றோர்கள், மகன் பொறுப்பில்லாமல் இருப்பதால், அவன் வாழ்க்கையில் உருப்பட வேண்டும் என்பதற்காக, வெஸ்டர்ன் டவுனில் வசிக்கும் அவரது அங்கிளிடம், வேலை கற்றுக் கொள்ள அனுப்பி வைக்கின்றனர். இதுவே ப்ளூபெர்ரி இந்த டவுனுக்கு வருவதன் காரணம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள், பரந்து விரிந்த மிகப் பெரிய அமெரிக்காவில், அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிறிய காலனிகளாக இருக்கும் டவுன்களில் வசிக்கின்றனர். ஒரு டவுனுக்கும், மற்றொரு டவுனுக்கும் இடையே பல நாட்கள் பயணம் செய்ய வேண்டிய அளவுக்கு தூரம் இருக்கும். இந்த இடைப்பட்ட பயண வழித்தடங்களை வெள்ளைக்கார  கொள்ளையர்களும், நட்புக் குணம் இல்லாத சிகப்பிந்தியர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு டவுனிலும், கட்டாயம் ஒரு சலூன் என்கிற மதுபான கடையும், அதையடுத்து, தங்கும் விடுதிகளும், முடித்திருத்தும் இடமும், அனைத்து பொருட்களும் விற்கும் ஒரு பலசரக்குக் கடையும் நிச்சயம் இருக்கும். அந்த நாளைய வெஸ்டர்ன் உலகில், மக்கள் பெரும்பாலும் ஈடுபட்டது, பெரிய பெரிய மாட்டு பண்ணைகளையும், குதிரை பண்ணைகளையும் நிர்வகித்ததே. எஞ்சியவர்கள் ஆர்வம் காட்டியது, தங்க வேட்டையில். அதனால் தங்க வேட்டையில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு கிடைத்த தங்கத்தை வெஸ்டர்ன் டவுனுக்கு வந்து, பணமாக மாற்றி, தாக சாந்தி செய்துகொள்வது வழக்கம் (லக்கி லூக் கதைகளில் படித்திருப்போம்). மதுபானக் கடையில் மது, மாது, சூது என்று அனைத்தும் கிடைக்கும். மது பானக் கடையிலேயே பெண்கள் இருந்து, அங்கு தாகத்துடனும், மோகத்துடனும் வருகின்ற ஆண்களையும், பயணிகளையும், தங்க வேட்டையர்களையும் மயக்கியும், அந்த்ரங்கமாக நெருங்கிப் பழகியும் பணம் சம்பாதிப்பார்கள்.

இப்போது கதைக்கு வருவோம், கோச்சு வண்டியில் இருந்து கீழே இறங்கும் ப்ளூபெர்ரி, முதலில் பார்ப்பது, அங்கிருக்கும் விடுதியின் மாடியில் இருக்கும் ஒரு இளம் பெண்ணை. அந்த பெண் ப்ளூபெர்ரியைப் பார்த்து நட்பாக சிரிக்கிறாள். ப்ளூபெர்ரியும் அவளைப் பார்த்து சிரிக்கிறார். அடுத்த நிமிடம், ப்ளூபெர்ரியை அவரது அங்கிள் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

ப்ளூபெர்ரியிடம் அவரது அங்கிள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார். ப்ளூபெர்ரிக்கு தரப்படும் வேலை, அவரது அங்கிளுக்கு சொந்தமான பண்ணையில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு பண்ணைக்கு வேலி அமைக்க வேண்டும். ப்ளூபெர்ரி வேலையில் தாமதித்தாலோ, தவறு செய்தாலோ, பிரம்படிதான். ப்ளூபெர்ரி அவரது அங்கிளிடம் பல முறை பிரம்படி வாங்குகிறார்.

ப்ளூபெர்ரியின் மனதில் விடுதியில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் முகமே எந்த நேரமும் தோன்றி அவரை சலனப் படுத்துகிறது.

iy8bh0xokjxm0hoy

ப்ளூபெர்ரியின் அங்கிள் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் போது, அங்கிளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, ப்ளூபெர்ரி செல்லும் இடம், அவரது மனம் கவர்ந்த அந்த விடுதி பெண்ணிடம்.

screen_image_360874

விடுதியில் இருக்கும் பெண்ணும் ப்ளூபெர்ரியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்கிறாள். இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் நேரம், அந்த அறைக்குள் அத்து மீறி நுழையும் வேலஸ் செபாஸ்டியன் ப்ளண்ட் (மைக்கேல் மேட்சென்) என்னும் கௌபாய். செபாஸ்டியன் ப்ளண்ட் ஒரு அடாவடியான கௌபாய். குறிதவறாமல் துப்பாக்கி சுடுவதில் வல்லவன்.

031543_29

விடுதிப் பெண் தன்னுடன்தான் நேரத்தைக் கழிக்க போகிறாள் என்றும், அதனால் ப்ளூபெர்ரியை வெளியேறுமாறும் மிரட்டல் தொனியில் ப்ளண்ட் கூறுகிறான். ப்ளூபெர்ரி பயப்படாமல், தான் வெளியேற முடியாது என்றும், ப்ளண்ட்தான் வெளியேற வேண்டும் என்றும் தைரியமாக நிற்கிறான். விடுதி பெண்ணும், ப்ளூபெர்ரியை வெளியேறுமாறு சொல்கிறாள். ப்ளண்ட் கோபத்தில் ப்ளூபெர்ரியை தாக்குகிறான். விடு்தி பெண் ப்ளூபெர்ரியை, ப்ளண்ட்டிடம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறாள். ப்ளண்ட் கோபத்தில் ப்ளூபெர்ரியை தாக்குகிறான். ப்ளூபெர்ரியின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. ப்ளண்ட்டின் அநாகரீகமான செயலினாலும், அத்து மீறலினாலும் எரிச்சலடைந்த ப்ளூபெர்ரி, தனது துப்பாக்கியை உருவி, ப்ளண்டை குறிவைக்கின்றான். ப்ளண்ட்டும் பதிலுக்கு, துப்பாக்கியை உருவி, விடுதிப் பெண்ணின் நெற்றியில் வைத்து, ப்ளூபெர்ரி தன்னை சுட எத்தனித்தால், விடுதி பெண்ணை கொன்று விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டுகிறான். அடுத்த நொடியில் ப்ளண்ட்டுடைய துப்பாக்கியும், ப்ளூபெர்ரியின் துப்பாக்கியும் ஒரு சேர வெடிக்கின்றது. நெற்றியில் திலகமிட்டது போல் ஒரு குண்டு துளைத்து விடுதிப் பெண்ணின் உயிர் பிரிகிறது, கட்டிலின் அருகில் இருக்கும் மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் லாந்தர் விளக்கு, மரத்தினால் கட்டப்பட்ட அறையின் தரையில் விழுந்து, பெரும் தீ மூள்கிறது. அந்த முழு கட்டடமுமே மரத்தினால் கட்டப்பட்டது. தொடர்ந்த துப்பாக்கி முழக்கத்தினிடையே, முதல் தளத்தில் இருக்கும் விடுதி  அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு கூறையின் சரிவில் உருண்டபடி ப்ளூபெர்ரி விடுதியின் வெளியே வந்து விழுகிறான். விடுதி தீப்பிடித்ததால் எழும் களேபரத்தினாலும், இரவு நேரமாக இருப்பதினாலும், கீழே விழுந்த ப்ளூபெர்ரி, உடனே எழுந்து அங்கு நிற்கும் குதிரையின் மேல் ஏறி அந்த இடத்தை விட்டு அகலுகிறான்.

 

இரவில், துப்பாக்கி தோட்டா காயத்துடன், அரை மயக்க நிலையில் குதிரை மீதேறி டவுனை விட்டு வெளியேறும் ப்ளூபெர்ரி, அவனது தோட்டா காயத்தில் இருந்து வெளியேறும் அதீத இரத்த இழப்பினால்  நினைவிழந்து மயங்கி குதிரை மீதிருந்து கீழே விழுந்து விடுகிறான்.

ப்ளூபெர்ரி விழுந்த இடம் ஏராளமான பாம்புகள் வசிக்கும் இடம்.  குற்றுயிராய் மயங்கிக் கிழே கிடக்கும் ப்ளூபெர்ரியை, விதவிதமான பாம்புகள் சுற்றிக் கொள்கிறது. இந்த நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை, ஒரு சிகப்பிந்திய பெரியவரும், ப்ளூபெர்ரியின் வயதையொத்த அவரது, அவரது மகனும் காண நேர்கிறது. செவ்விந்திய பெரியவர், அவரது கையை குவித்து, அவரது வாயில் வைத்து ஊதுகிறார். உடனே ப்ளூபெர்ரியை சுற்றி இருக்கும் பாம்புகள் அனைத்தும் விலகி செல்கின்றது.

செவ்விந்தியரும் அவரது மகனும் சேர்ந்து, ப்ளூபெர்ரியை, தங்களது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். ப்ளூபெர்ரியை காப்பாற்றியவர் ஒரு செவ்விந்திய மருத்துவர் மற்றும் மாந்திரீகர். ப்ளூபெர்ரியின் தோளில் இருக்கும் தோட்டா காயத்திற்கும், மூக்கின் மேல் இருக்கும் காயத்திற்கும் பாரம்பரிய செவ்விந்திய மருத்துவ முறைப்படி, மருந்துவம் செய்யப்படுகிறது.

renegade-2-1

BB

ப்ளூபெர்ரியும் பிழைத்து எழுகிறான். மருத்துவர் குடும்பமும், செவ்விந்தியர் குடியிருப்பு மக்களும், ப்ளூபெர்ரியை தங்களில் ஒருவனாக அரவணைத்து பாதுகாத்து வளர்க்கின்றனர். ப்ளூபெர்ரியும், செவ்விந்தியர்களோடு வாழ்க்கையில் ஒன்றி, அவர்களது மொழியிலும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்கிறான்.

ப்ளூபெர்ரிக்கு மூக்கில் ப்ளண்ட் ஏற்படுத்திய காயம் ஆறினாலும், காயத்தின் வடு ஆழமாக இருப்பதினால், ப்ளூபெர்ரியின் மூக்கின் தோற்றம் நெளிந்த உருவமாகவே இருக்கின்றது. செவ்விந்தியர்கள் ப்ளூபெர்ரியை கோணல் மூக்குக்காரன் என்றே கிண்டல் செய்து அழைக்கின்றனர்.

screen_image_360887

டீன் ஏஜ் ப்ளூபெர்ரி, இளைஞன் ப்ளூபெர்ரியாக வளர்கிறார். ப்ளூபெர்ரியை காப்பாற்றிய மாந்திரீகர் வயதானதின் காரணமாக இறக்கின்றார். மாந்திரீகரின் பொறுப்பை, அவர் மகன்  ஏற்கிறார்.

0 (1)

தன்னை வளர்த்தவரின் மரணம், ப்ளூபெர்ரியை நிலை தடுமாற வைக்கின்றது. இதன் காரணமாக, குதிரையில் ஏறி, செவ்விந்திய கிராமத்தை விட்டு மீண்டும் நகரத்துக்கு வருகிறார் ப்ளூபெர்ரி.

வெஸ்டர்ன் டவுனில் டெபுடி மார்ஷலாக (டெபுடி ஷெரீஃப்) பதவியில்  டவுனின் போலீஸ் அதிகாரியாக இருக்கின்றார்.

renegade

இதே சமயத்தில், ப்ரோசிட் என்னும் ஜெர்மானிய புவியியல் ஆராய்சியாளன், ஒரு நீக்ரோ உதவியாளனோடு, ஒரு பழைய மேப்பின் வழிகாட்டுதல் படி, செவ்விந்தியர்களின் புனித பூமியாக கருதப்படும் இடத்தில் வைக்கபட்டு இருக்கும் தங்கத்தாலான பொக்கிஷங்களை தேடிக் கொண்டு இருக்கின்றான். அவனது தேடலின் முடிவில் புதையலின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்து விடுகின்றான்.

clip_image001[19]

புதையல் இருக்கும் இடம், செவ்விந்தியர்களின் புனித இடம். அதை எடுக்க அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்று நீக்ரோ உதவியாளன் சொல்கிறான். அதற்கு வேறொரு திட்டம் தன்னிடம் இருப்பதாகவும், நாம் மீண்டும் டவுனுக்குள் சென்று, ஆட்களை திரட்டி வந்து புதையலை எடுக்கப்போவதாகவும்  ப்ரோசிட் சொல்கிறான்.

BB2

செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே சமாதானம் நிலவுவதால், செவ்விந்தியர்களின் புனித இடத்தை கொள்ளையடிக்க வெள்ளையர்கள் உடன்பட மாட்டார்கள் என நீக்ரோ செல்லி முடிக்கும் முன், எங்கிருந்தோ சில செவ்விந்தியர்கள் அங்கு வந்து விடுகிறார்கள். தனது நீக்ரோ உதவியாளனை அம்போ என்று விட்டு விட்டு ப்ரோசிட் மட்டும் குதிரையில் ஏறி தப்பித்து விடுகிறான். 

ப்ளூபெர்ரி இருக்கும் டவுனில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவருக்கு சொந்தமாக பெரிய கால்நடைப் பண்ணையும், குதிரைப் பண்ணையும் இருக்கின்றது. அவருக்கு ஒரு அழகான மகள் இருக்கிறாள். அந்த பெண் ப்ளூபெர்ரியை விரும்புகிறாள். அதில்  அவளது பணக்கார தந்தைக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

blueberry-13

செவ்விந்தியர்களின் பிடியில் இருந்து தப்பிய ப்ரோசிட், ப்ளூபெர்ரி இருக்கும் டவுனுக்கு அருகே வந்ததும், அவனே தனது கத்தியால், அவனது நெற்றியில் செவ்விந்தியர்கள் மண்டைத் தோலினை உரிப்பதற்காக கிழித்ததுபோல் ஒரு காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஆபத்து என்று அலறியவாறு, மதுபான விடுதியில் வந்து விழுகிறான்.

செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே நிலவும் அமைதியை குலைத்து விட்டால், செவ்விந்தியர்கள் அனைவரும் வெள்ளையர்களால் கொல்லப்படுவர். பின் சுலபமாக தங்கப் புதையலை அடைந்துவிடலாம் என்பது அவனது நோக்கம்.

ப்ரோசிட்டிடம் இருக்கும் வரைபடம், ப்ளூபெர்ரியின் காதலியின் தந்தையான செல்வந்தரிடம் மாட்டிக் கொள்கிறது. இவர்கள் அனைவரும் இருக்கும் மதுபான விடுதிக்குப் பின்புறம் ஒரு செவ்விந்தியன் கத்தியால் குத்தி கொல்லப்படுகிறான். இந்த சம்பவத்தினால் வெள்ளையர்களுக்கும், சிவப்பிந்தியர்களுக்கும் இடையே நிலவி வந்த அமைதி குலையும் நிலை வருகிறது.

செவ்விந்தியனின் உயிரில்லாத உடலை, செவ்விந்தியர்களிடம் ஒப்படைக்க ப்ளுபெர்ரி பயணமாகிறார். வெகு தூரப் பயணத்தின் பிறகு ப்ரோசிட்டை விரட்டியடித்த செவ்விந்திய கும்பல் ப்ளூபெர்ரியின் வழியில் குறுக்கிடுகிறது. தேவையில்லாமல் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் செவ்விந்திய கும்பல் ஈடுபடுவதாக ப்ளூபெர்ரி சொல்ல, செவ்விந்திய கும்பலின் தலைவன், அவனிடம் இருக்கும் நீக்ரோவின் உரிக்கப்பட்ட மண்டை தொலியை ப்ளூபெர்ரியிடம் வீசி எறிந்தபின், ப்ளூபெர்ரியின் மேல் பாய்ந்து தாக்குதலில் ஈடுபடுகிறான். பெர்ரிக்கும், செவ்விந்திய குழுவின் தலைவனுக்கும் கைகலப்பு நடக்கிறது. பின் செவ்விந்திய கும்பல், இறந்த செவ்விந்தியனின் உடலோடு அங்கிருந்து அகலுகிறது.

அடுத்த நாள், நகருக்குள் வரும் கோச்சு வண்டியில் ப்ளண்ட் வந்து சேர்கிறான்.

செவ்விந்தியர்களிடம் மாட்டிய நீக்ரோ உதவியாளனின் மண்டை தோல் உரிக்கப்பட்ட பின். அங்கேயே அவனை போட்டு விட்டு செவ்விந்தியர்கள் போய்விடுகிறார்கள். தன்னை நிர்க்கதியாக செவ்விந்தியர்களிடம் சிக்க வைத்த தனது எஜமானன் ப்ரோசிட்டை கொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தோடும், உயிரை கையில் பிடித்தபடி ப்ளண்ட் வந்த கோச்சு வண்டிக்கு அடுத்து வரும் கோச்சு வண்டியில், நீக்ரோ டவுனுக்குள் வந்து சேர்கிறான்.

blueberry 10

ப்ரோசிட்டை சந்திக்கும் ப்ளண்ட், தங்கப் புதையலைப் பற்றி கேட்கிறான். ப்ளண்டைக் கண்டு நடுங்கும் ப்ரோசிட், புதையல் பற்றிய விவரங்களும், மேப்பும் அடங்கிய டைரி, (ப்ளுபெரியின் காதலியின் தந்தையான) பணக்கார பெரும் புள்ளியிடம் சிக்கியிருக்கிறது என்று சொல்லிவிடுகிறான்.

ப்ரோசிட்டை கொல்ல வெறியோடு வரும் நீக்ரோ, ப்ரோசிட்டை துப்பாக்கியால் சுடப்போகும் நேரத்தில், நீக்ரோவை சுட்டு வீழ்த்துகிறான், ப்ரோசிட்டின் பழைய நண்பனான ப்ளண்ட் (நடிகர் மைக்கேல் மேட்சென்).

நீக்ரோவை சுட்டுக் கொன்ற காரணத்தினால், சீனியர் மார்ஷலினால் ப்ளண்ட் சிறையில் அடைக்கப்படுகிறான்.

பணக்கார பெரும்புள்ளி, தங்கப் புதையல் டைரியை படித்து, அதை அடைய வேண்டும் என்றால், வெள்ளையர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் இடையே சண்டை மூளவேண்டும் என்றும், இந்த கலவரத்தில் செவ்விந்தியர்கள் கொல்லப்படுவார்கள். செவ்விந்தியர்கள் அழிந்த பிறகு அவர்களுடைய புனித இடத்தில் இருக்கும் அனைத்து தங்கத்தையும் சுலபமாக அடைந்துவிடலாம் என்று திட்டம் தீட்டி, செவ்விந்தியர்களை தாக்க சதி திட்டம் போடுகிறார்.

செவ்விந்தியனின் சடலத்தை செவ்விந்தியர்களிடம் ஒப்படைக்கச் சென்ற ப்ளூபெர்ரி, நகருக்கு வருகிறார். செல்வந்தரின் குதிரைப் பண்ணைக்குச் சென்று, வெள்ளையர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் இடையே நிலவும் அமைதி குலையும் சூழ்நிலைக்குக் காரணம், ப்ரோசிட்டினுடைய தங்க வேட்டை நடவடிக்கையே காரணம் என்றும், தங்க வேட்டைக்குப் போன காரணத்தினாலேதான், ப்ரோசிட்டின் வேலைக்காரனான நீக்ரோவின் மண்டை தொலி உரிக்கப்பட்டது என்றும், செவ்விந்தியர்களை தாக்க வேண்டும் என்ற செல்வந்தரின் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ப்ளூபெர்ரி செல்வந்தரை எச்சரிக்கிறார். பதிலுக்கு, அந்த மண்டைத் தொலியின் சொந்தக்காரனை சுட்டு கொன்றவன் மார்ஷலினால் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்கிறார்.

பண்ணையில் இருந்து தனது அலுவலகத்திற்கு வரும் ப்ளூபெர்ரி அங்கு லாக்கப்பில் அடைபட்டு இருக்கும் ப்ளண்டை அடையாளம் கண்டு கொண்டு, வெறியோடு அங்கிருந்து வெளியேறும் ப்ளூபெர்ரி, தனது சட்டையில் இருக்கும் டெபுடி மார்ஷல் ஸ்டாரை பிடுங்கி கீழே வீசி விட்டு,  ஹோட்டலில் இருக்கும் தனது அறைக்குச் சென்று, அங்கிருக்கும் தனது பழைய ரிவால்வரை எடுத்து ப்ளண்டை கொல்வதற்காக லாக்கப்பை நோக்கி வருகிறார்.

BB4

தன் சகாக்களினால் உதவியினால் லாக்கப்பில் இருந்து விடுவிக்கப்படும் ப்ளண்ட், கதவின் பின் மறைந்திருக்கும் தன் சகாக்களோடு மார்ஷல் அலுவலகத்திற்குள் துப்பாக்கியோடு நுழையும் ப்ளூபெர்ரியை, பின் மண்டையில் தாக்கி நிராயுதபாணியாக்குகின்றார்கள். ப்ளூபெர்ரியின் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்து ப்ளூபெர்ரியை அடையாளம் கண்டு கொள்கிறான் ப்ளண்ட். ஏனென்றால், அந்த ஒற்றை துப்பாக்கி ப்ளண்டுக்கு சொந்தமானது.

BB3

ப்ளண்டின் சகாக்கள் வின்செஸ்டர் ரைபிளின் பின்பக்க கட்டையினால் ப்ளூபெர்ரியை தாக்கி நினைவிழக்கச் செய்கிறார்கள். பின் மதுபானங்களை மார்ஷலின் ஆபிஸ் முழுக்க கீழே ஊற்றி, மயங்கி இருக்கும் ப்ளூபெர்ரியை உள்ளே வைத்து அலுவலகத்தை வெளியே பூட்டி, பின் அலுவலகத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி செல்கிறார்கள்.

injured

ஏற்கெனவே கட்டிடத்தின் உள்ளே மயங்கிய நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியின் நண்பர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை காப்பாற்றி, தீப்பிடித்து எரியும் கட்டிடத்தின் அடியில் இருக்கும் வழியே வெளியேறி, மயங்கிய நிலையில் இருக்கும் ப்ளூபெர்ரியை, ப்ளூபெர்ரியின் பழைய நண்பனான, தற்போதைய செவ்விந்திய மந்திரவாதியிடம் தூக்கிச் செல்கிறார்.

லாக்கப்பில் இருந்து தப்பித்த ப்ளண்ட், தன் சகாக்களுடன், இரவில் ஓசைப்படாமல், பண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் செல்வந்தரின் அறைக்குள் சத்தம் போடாமல் நுழைந்து, செல்வந்தரை கொன்று, அவரிடம் இருக்கு தங்கப் புதையல் டைரியை கைப்பற்றிய பின், தப்பிச் செல்கின்றது. போகும் போது அங்கிருக்கும் ப்ரோசிட்டையும் தங்களோடு அழைத்துச் செல்கின்றனர்.

தனது தந்தையை கொலை செய்ததற்கு பழிவாங்க, செல்வந்தரின் மகள், (ப்ளூபெர்ரியின் காதலி) தனது பண்ணையை சேர்ந்த கௌபாய்களுடன் ப்ளண்ட் கும்பலை விரட்டி செல்கிறாள்.

மயங்கிய நிலையில் செவ்விந்திய மந்திரவாதியிடம் அழைத்துச் செல்லப்படும் ப்ளூபெர்ரிக்கு, செவ்விந்திய பாரம்பரிய மந்திரவாத முறையில் புகையெல்லாம் ஊதி, ப்ளூபெர்ரியின் வாயில் நாட்டு சரக்கை ஊற்றி போதை ஏற்றி சிகிச்சை செய்கிறார். இந்த காட்சிகளை அருமையான கிராபிக்ஸில் காட்டுகிறார்கள். அனைத்து கிரபிக்ஸ்களும் XFROG என்னும் கிராபிக்ஸ் ரெண்டரிங் ப்ரோகிரம் மூலம் உருவாக்கி இருக்கின்றார்கள்.

 

BB5

blueberry2 (1)

13-RENEGADE

பம்மல் கே சம்பந்தம் படத்தில், பழமொழி சொன்னா ரசிக்கனும், அதுக்கு அர்த்தம் எல்லாம் கேட்கக் கூடாது என்று கமலஹாசன் ஒரு வசனம் சொல்லுவார், அது போல, இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை ஏன், என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்காமல் ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

blueberry2a (1)

இந்த இரவெல்லாம் செய்யப்படும் இந்த  போதை + மந்திர சிகிச்சையினால், பொழுது விடியும் போது  முழுமையாக குணமடையும் ப்ளூபெர்ரி, தனது வெள்ளை நண்பருடனும், செவ்விந்திய நண்பருடனும் ப்ளண்டைத் தேடி கிளம்புகிறார்.

இப்போழுது, அகண்ட பாலைவனத்தில், ப்ளண்ட் + ப்ரோசிட் கும்பல் தங்கப் புதையலை தேடி சென்று கொண்டு இருக்கிறது.

அவர்களை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட தனது தந்தைக்காக பழிவாங்க ப்ளூபெர்ரியினுடைய காதலியின் கௌபாய் கும்பல், ப்ளண்டின் தடத்தை பின்பற்றி செல்கிறது.

அதே போல், ப்ளுபெர்ரியும் அவரது நண்பர்களும் ப்ளண்டைத் தேடி பயணமாகிறார்கள்.

மற்றோரு இடத்தில் தங்கப் புதையல் இருக்கும் தங்களது பிசாசு நகரத்தை, வெள்ளை தங்க வேட்டையர்களிடம் இருந்து காப்பாற்ற ஒரு பெரிய சிவப்பிந்திய கும்பல் கிளம்புகிறது.

இரவுப் பொழுதில், செல்வந்தர் மகளின் முகாமை தாக்கும் ப்ளண்ட், குதிரைப் பண்ணையைச் சேர்ந்த அனைத்து கௌபாய்களையும் தாக்கிக் கொலை செய்கிறது. ப்ளண்ட் கும்பலில் இருக்கும் கயவர்களால் செல்வந்தர் மகள் மானபங்கப்படுத்தப்பட்டு, பின் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள்.

விடிந்த பின் அந்த வழியே வரும் ப்ளூபெர்ரி, செல்வந்தர் மகளைக் காப்பாற்றுகிறார். செல்வந்தர் மகளுக்கும், செவ்விந்திய மந்திரவாத சிகிச்சை தரப்பட்டு, உயிர் பிழைக்கிறார்.

பாலைவனத்தில் பயணப்படும் ப்ளண்ட் கும்பலை, முரட்டு செவ்விந்திய கும்பல் தாக்குகிறது. இந்த தாக்குதலில், ப்ளண்ட்டும், ப்ரோசிட் ஆகிய இருவர் மட்டுமே தப்பிப் பிழைக்கின்றார்கள்.
ப்ளண்ட் ஏமாந்திருக்கும் சமயத்தில், ப்ரோசிட், ப்ளண்டின் குதிரையை தன்னிடம் இருக்கும் கூர்மையான நீண்ட அளவிடும் கருவியின் ஸ்டாண்டைக் கொண்டு (ட்ரைபாட்) குத்திக் கொல்கிறான். இதில் ப்ளண்டும் காயமடைகிறான். ப்ரோசிட் குதிரையில் ஏறி தப்பி, தங்கப் புதையலை நோக்கி போகின்றான். சிறிது நேரம் கழித்து விழித்து எழும் ப்ளண்ட், ப்ரோசிட் சென்ற பாதை வழியே செல்கிறான்.

தங்கம் இருக்கும் இடத்திற்கு வரும் ப்ரோசிட் குதிரையில் வரும் முன்பே, ப்ளண்ட் நடந்தே வந்து இருளில் ஒளிந்து இருக்கின்றான். குகைகளினூடே அலைந்து திரிந்து வரும் ப்ரோசிட், தங்க சிலையை காண்கிறான். தங்கத்தை கண்ட ஆர்வத்தில் கீழே கவனிக்காமல் நடந்து, தங்கச் சிலைக்கு முன்பாக இருக்கும் புதைகுழியில் காலை வைத்து புதைமணலில் முழ்கி உயிரை விடுகிறான். இதை அருகில் இருந்து ப்ளண்ட் ரசித்து பார்க்கிறான்.

அடுத்து அந்த இடத்துக்கு துப்பாக்கியுடன் வரும் ப்ளூபெர்ரி, அங்கு ப்ளண்டை தேடுகிறார். ப்ளூபெர்ரியும் புதைமணல் இருக்கும் தரையில் காலை வைத்து பின் சுதாரித்து பின்வாங்குகிறார்.

BB6

குகையின் இன்னுமொரு பக்கத்தில், செவ்விந்திய மந்திரவாதி, ஏதோ பூஜை செய்து, ஒரு பாத்திரத்தில் ஒரு திரவத்தை (செவ்விந்திய மருத்துவ நாட்டு சரக்கு) வைத்து விட்டு சென்றுவிடுகிறார். அவ்விடம் வரும் ப்ளண்ட், அந்த திரவத்தை குடிக்கின்றான். பின் அங்கிருக்கும் ஒரு பெரிய கல்லின் மேல் படுத்து இருக்கின்றான். உடன் கிராபிக்ஸ் காட்சிகள் வருகிறது.

அடுத்தபடியாக ப்ளூபெர்ரிக்கும் ஒரு பானத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி, அவரும் அந்த பானத்தை பருகுகிறார் மந்திரவாதி. ப்ளூபெர்ரியும் அந்த பானத்தை பருகி கல் தரையில் படுக்கிறார்.

அடுத்து 10 நிமிடங்களுக்கு நீண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறது. இந்த கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த படத்தின் சஸ்பென்ஸை இந்த கடைசி கிராபிக்ஸ் காட்சிகளினூடேதான் டைரக்டர் வைத்திருக்கின்றார்.


கிராபிக்ஸ் காட்சிகள் முடியும் போது ப்ளூபெர்ரியும், ப்ளண்டும் உயிர்  போன நிலையில் இருக்கின்றார்கள். அப்போது அங்கு வரும் ப்ளூபெர்ரியின் காதலி, ப்ளூபெர்ரியின் நிலைகண்டு பதறி, அழுது, ப்ளூபெர்ரியை எழுப்பி விடுகிறார். ப்ளண்ட் இறந்துவிடுகிறான்.

BB7

ஜலக்கிரீடை காட்சிகளுடன் படம் முடிகின்றது.

காமிக்ஸில் நாம் கண்டு ரசித்த, சாதூர்யமான ப்ளூபெர்ரியை, இந்த படத்தில் காண முடியாதது ஏமாற்றமே. அது மட்டுமல்ல, திரைப்பட ப்ளூபெர்ரி அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்.

ப்ளூபெர்ரி செவ்விந்தியர்களின் நண்பன் என்ற ஒரு கருத்தை மட்டுமே நமது காமிக்ஸ் ப்ளூபெர்ரியிடம் இருந்து எடுத்து, அதை ஊதி பெரிதாக்கி, ப்ளூபெர்ரிக்கு ஈடாக செவ்விந்திய மந்திரவாதி கேரக்டரை உருவாக்கி படத்தை ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

Blueberry_wallpaper_fond_d_ecran

படத்தில் துப்பாக்கி சண்டை காட்சிகளைவிட மாந்ரீக கிராபிக்ஸ் காட்சிகளே அதிகம். ஆனால், படத்தின் போட்டோகிராபி மிக அருமையாக இருக்கிறது.

கேப்டன் டைகர் என்னும் நமது  இதயம் கவர்ந்த ஆதர்ச கதாபாத்திரத்திற்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

அன்புடன்,

blueberry-cartoon-1

பாலாஜி சுந்தர்.