Wednesday, 12 September 2012

PRESERVING COMIC BOOKS–FEEDBACK

 indrajalcomicscollectio_thumb[6]
Dear Friends,
சென்ற பதிவிற்கான ஒரு பின்னூட்டத்தில் நண்பர் சிபி தனது காமிக்ஸ் புத்தகங்களை பத்திரப்படுத்தி இருக்கும் விதத்தை நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக எனக்கு இமெயிலில் சில படங்களை விவரத்தோடு அனுப்பி இருந்தார். அந்த படங்களையும் விவரங்களையும் அந்த பதிவையே எடிட் செய்து சேர்த்திடவே நினைத்தேன். அப்படிச் செய்தால் அதை யாரும் பார்க்காமல் போக நேரிடலாம் என்று நினைத்து புதிய பதிவாகவே இட்டுவிட்டேன்..
நண்பர் சிபி அனுப்பியது 4 படங்கள்.
இனி நண்பர் சிபியின் மெயில் விவரத்தை உள்ளபடியே கீழே பிரதிபலிக்கின்றேன் ;
CIBI: ”Pls. find the images of the covers/pouches these are the covers easily available and price also less ( hope )
This is press type you can open and close so many time but this quality is PP only but “MYLAR” material is new to me will check and revert you about this.
Thanks for your wonderful search and sharing.
Keep it up and once again thanks for all.”
By Cibi.
CIBI
 

DSC_0118_thumb[7]
DSC_0119_thumb[6]
DSC_0120_thumb[14]
DSC_0121
மேலேயுள்ள நான்கு படங்களும் நண்பர் சிபி அனுப்பியது.
பயணுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதற்கும், மேலும் ஏதேனும் விவரங்கள் கிடைத்தால் அவைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்வேன் என்று சொன்னதற்கும், நம் அனைவரின் சார்பிலும் நண்பர் சிபிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பதிவின் மேலே இருக்கும் முதல் படம்  வலையில் காணக்கிடைத்தது. ஷங்கர் என்ற காமிக்ஸ் ஆர்வலரின் இந்திரஜால் காமிக்ஸ் கலக்‌ஷன். மேஜையில் வட்ட வடிவ பெட்டியில் அடுக்கப்பட்டு இருப்பதும்  இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். நடுவே உள்ள 25 பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களும் இந்திரஜால் காமிக்ஸ்கள்தான். சேமிப்புகளை எவ்வளவு நேர்த்தியாக அவர் பத்திரப்படுத்தியுள்ளார் !!!.
இந்த பதிவு ரோம்ப குட்டியாக இருக்கிறது. அதனால் நீளத்தை  அதிகரிக்க சில எக்ஸ்ட்ரா மேட்டர்கள் கீழே.
அடுத்து, Mylar மெட்டீரியலைப் பற்றி சில விவரங்களை தெரிந்து கொள்ள கீழே ஒரு லிங்க்;
MYLAR WEB ANSWER
இப்போது சில யூட்யூப் விடியோக்கள்.
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 1
காமிக்ஸ் புத்தக பாதுகாப்பு பற்றி விளக்கும் வீடியோ பார்ட் - 2
மேட் என்னும் காமிக்ஸ் ஆர்வலரின் காமிக்ஸ் சேகரித்து வைத்திருக்கும் முறை நமக்கெல்லாம் காதில் புகை வரவைக்கும்.
சொல்ல என்ன இருக்கிறது ?
அடுத்து நாமெல்லாம் 2012ம் வருடத்தில் முதலீடு!!! செய்ய வேண்டிய 45 காமிக்ஸ் புத்தகங்களின் பட்டியல். வருங்காலத்தில் இவையெல்லாம் ஷேர் மார்க்கெட் பங்குகளைப் போல விலையேறும் போது விற்று நன்றாக காசு பார்க்கலாமாம்.
கட்டாயம் முதலீடு செய்ய வேண்டிய ஷேர்கள்.
இந்த வாரத்திற்கு இது போதும் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.