கற்றோருக்கு “செல்”லும் இடமெல்லாம்
சிறப்பு
நண்பர்களே வணக்கம்,
சென்ற பதிவிற்கும், இந்த பதிவிற்கும் 20 நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது.
இன்று காலையில் எழுந்த உடன் நண்பர் திரு ஈரோடு ஸ்டாலின் அவர்களின் பின்னூட்டத்தினை பார்த்தேன்.
“என்ன பல நாட்களாக பதிவுகளை காணவில்லை?” என்று கேட்டிருந்தார். அதனால் உடனே உட்கார்ந்து இந்த பதிவை உருவாக்கினேன். இந்த பதிவிற்கு ஈரோட்டாரின் பின்னூட்டமே தூண்டுதலாக இருந்தது.
அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நேரில் வந்து நட்பு பட்டையை கட்டியவர்களுக்கும், கொரியரில் அனுப்பியவர்களுக்கும், குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும், நட்பை இன்று மட்டும் நினைவில் வைத்தும், நட்பை நினைவுச் சின்னமாக ஆக்கியவர்களுக்கும் எனது இதய பூர்வமான நட்போடு நன்றி சொல்கிறேன். இந்த பதிவின் கருத்துக்கு செல்வதற்கு முன், நட்பைப் பற்றி சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நட்பு என்பது இருவழி தொடர்பு. இந்த இருவழியில் ஒருவருக்கு வழி மறந்தாலும் நட்பு நிலைக்காது. நட்பை நினைக்காமல், நண்பனுக்காக தினமுமோ அல்லது வாரத்திலோ ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்யாமல், வருடத்திற்கு ஒரு நாள் நட்புக்காக நண்பர் தினம் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
உண்மையான நட்பென்பது, உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு என்ற வள்ளுவர் வாக்கின் படி இருக்கின்ற நட்பே சிறந்த உண்மையான நட்பு.
சில சமயங்களில் பதிவுகளும் பதிவிடும் தினங்களுக்கும் பொருத்தம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது. இந்த பதிவிற்கும், நண்பர்கள் தினத்திற்கும் உள்ள பொருத்தம் செல்போன் கருவியே.
செல்போன் வந்த பின்பு, நண்பர்களுக்கு இடையே இருந்த இடைவெளி நீங்கி விட்டது. முன்பெல்லாம் பால்ய காலத்து நண்பர்களை பார்க்க வேண்டும் என்றால், சைக்கிளை சேரன் போல மிதித்து ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்று பாடிக் கொண்டே செல்ல வேண்டும்.
இன்று பள்ளியில் படிக்கும்போதே குழந்தைகள் கையில் செல்போன் கிடைத்து விடுகிறது. அதனால் பள்ளியில் படிக்கும்போது இருக்கும் நண்பர்களின் தொடர்பை விட்டுப் போகாமல் காக்க செல்போன் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்து விட்டது.
நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல நல்ல நட்பு என்றும் கெட்ட நட்பு என்றும் இருக்கிறது. கூடா நட்பினால் பல குழந்தை, இளைஞர், இளைஞிகளின் வாழ்க்கையே திசை மாறி விடுகிறது. பல குடும்பங்கள் சிதைகிறது. எனவே அனைவரும் இந்த செல்போனை மிகுந்த கவனத்துடன் கையாள்வது நல்லது. வேண்டாத ஒரு நபரை நாம் நம் வீட்டு வாசலிலேயே தடுத்து துரத்தி விடலாம். ஆனால் செல்போனின் மூலமாக வரும் ஒரு வேண்டாத நட்பு, நமக்குத் தெரியாமல் குழந்தைகளின் வாழ்கையை பாழ் படுத்திவிடும்.
வலைப் பூக்களின் அறிமுகம் ஏற்பட்ட பிறகு, அந்த வலை பூக்களில் பின்னூட்ட்ம் இடவேண்டும் என்றால் ஒரு தமிழ் மென்பொருள் கருவி வேண்டும். அதே பின்னூட்டத்தை செல் போனின் மூலமாக அடிக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் தான் அடிக்க வேண்டும். நிறைய பேர்கள் வலை பூக்களில் தங்கிலீஷில் பின்னூட்டம் இட்டிருப்பதை கண்டிருக்கிறேன், நானும் இதற்கு விதி விலக்கல்ல.
எனது செல் போனுக்கு ஒரு நல்ல தமிழ் மென்பொருளை நீண்ட நாட்களாக தேடிவந்தேன். பல தமிழ் கருவிகள் கிடைத்தாலும், எதுவுமே சிக்கல் இல்லாமல் இல்லை. என் தேடலில் கிடைத்த ஒரு மென் பொருள் “செல்லினம்”. என்னுடைய சென்ற பதிவில் முரசுவைப் பற்றி எழுதி இருந்தாலும், அப்போது இந்த மென்பொருளை நான் அறியவில்லை.
முரசு அஞ்சல் குழுவின் செல்போனுக்கான தமிழ் தட்டச்சு மென்பொருள் செல்லினம். இந்த மென்பொருள், ஆப்பிள் ஐபோனுக்கும், HTC கம்பெனியின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் இயங்கும் போன்களுக்குமான அப்ளிகேஷன். இது ஒரு இலவச மென்பொருள்.
இங்கே கிளிக்கவும்
இந்த மென்பொருளை உங்கள் செல்போனின் மூலமாகத்தான் நிறுவ முடியும். வெப்சைட்டின் லிங்க் கொடுத்திருப்பது மேலும் விவரங்களை அறிந்து கொள்ள மட்டுமே.
இந்த அப்ளிகேஷன் மூலமாக ஐபோனிலும் எச்டிசி-யின் ஆண்ட்ராய்ட் போனிலும் அனுப்பும் குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் மற்றும் சமூக வலைதளமான பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் தமிழிலேயே எழுதலாம். உதாரணத்திற்கு கீழே சில படங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி நண்பரே! செல் போன் தமிழ் மென்பொருளுகும்தான்
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே
Deleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
எனக்கு இல்ல எனக்கு இல்ல.
காரணம் நான் நோக்கியா N8 பயன்படுத்துகிறேன்
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே,
Deleteகூடிய விரைவில் உங்கள் செல்போன் கருவிக்கும் செல்லினத்தில் ஒத்திசைவு எற்படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.
நண்பரே,
ReplyDeleteஇந்த சிறியவன் உங்களுக்கு ஒரு செய்தியுடன் ஒரு மெயில் அனுப்பி இருக்கிறான். தயவுசெய்து பாருங்களேன்
நண்பரே,
Deleteஉமது மெயிலை பார்த்து விட்டேன். பதிலும் அனுப்பி விட்டேன். உமது மெயிலின் கருத்து உங்கள் மேலான தன்மையை உணர்த்துகிறது.
வருகைக்கும், பின்னூட்டதிற்கும், மெயிலுக்கும், நண்பர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.
உங்களின் மெயிலை பார்த்த பின்புதான் தெரிந்தது, WHATAPP-பில் மெஸேஜ் அனுப்பியது நீங்கள் தான் என்று. இன்று உங்கள் நம்பரை வாட் ஆப்பில் சேர்த்துவிட்டேன். அதிலேயே உங்களை தொடர்பு கொள்கிறேன்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteதமிழில் குறுஞ் செய்தி அனுப்ப முடியுமா என்று தேடியதுண்டு, மிக்க நன்றி நண்பரே :))
.
நண்பரே, நான் Nokia 5130C-2 உபயோகிக்கிறேன், என்னால் தமிழ் படிக்க இயலுகிறது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை. எனது நண்பர்களின் சில அலைபேசியில் இந்த முறை இல்லை. ஆனால் எனக்கு அது இல்லை....
ReplyDeleteNokia Softwareஐ எப்படி மாற்றுவது என்று கூறுங்களேன்.
நண்பரே, உங்கள் நோக்கியா சென்னையில் தயாரிக்கப்பட்டது என்றால் உள்ளிருப்பு மொழிகளிலிலும், உள்ளீடு செய்யும் மொழிகளிலும் தமிழ் நிச்சயம் இருக்கும். செல்லோடு தரப்பட்ட விவரக் குறிப்பேட்டை படித்துப் பார்க்கவும். அப்படி இல்லாமல் உங்கள் செல்பேசி வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டது என்றால், அதனுள்ளே தமிழ் இருப்பது சாத்தியம் இல்லை. செல்பேசியை வாங்கிய போது அதனுடன் கொடுக்கப்பட்ட சிடியில் இருக்கும் நோக்கியா சூட்டை கணினியில் நிறுவி அதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை இந்தியா, தமிழ்நாடு என்று மாற்றி பின் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு முயற்சி செய்து பார்க்கவும்.
Deleteஉங்கள் கைபேசியில் நிறுவப்பட்டுள்ள O.S. ”ஸிம்பியானா” அல்லது ”படாவா”மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வலை பக்கங்களையும் பார்த்து அவற்றில் ஏதேனும் உங்களுக்கு உதவியாக இருக்குமா என்பதை தெரிந்து பின் உங்கள் கைபேசியில் நிறுவிக் கொள்ளவும். பானினி என்னும் முதலில் கொடுத்துள்ள மென்பொருள் உங்களுக்கு உபயோகப்படும் என்று நினைக்கின்றேன்.
1. http://www.phoload.com/software/1260-paninitamil/phones
2. http://www.software112.com/products/mobichm-s60-3rd-edition.html
முயற்சித்து விட்டுப் பார்த்துவிட்டு எப்படி உள்ளது என்று கூறுகிறேன் நண்பரே...
Deleteதாங்கள் கூறிய இரண்டு இணைப்புகளுள் முதல் இணைப்பில் உள்ள மென்பொருள் மிக அருமையாக வேலை செய்கிறது நண்பா, இரண்டாவது மென்பொருள் எனக்கு சரிப்படவில்லை. மிக்க நன்றி நண்பா...
Deleteஎனக்கு அந்த Operating Systemஐ மாற்றுவது எப்படி என்று விளக்கினால் இன்னும் எனக்கு உதவியாக இருக்கும்...
மிக்க நன்றி
பதிவிற்கு ரொம்பவே தாமதமாய் வந்து இருக்கிறேன். இந்த பதிவை என்னுடிய டாஷ்போர்டில் மிஸ் செய்து விட்டேன் நண்பா..இன்று வலைச்சரம் முலமாக இங்கு வந்தேன்.
ReplyDeleteநானும் ஆண்ட்ராய்ட் போன் தான் உபயோகபடுத்துகிறேன், இந்த மென்பொருள் எனக்கு கண்டிப்பாய் பயன்படும். பகிர்வுக்கு நன்றி நண்பா..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.
Deleteநாடோடி நண்பருக்கு வணக்கம்,
ReplyDeleteஎன்னை உங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி. வலைசரத் தளத்தை உங்கள் லிங்கின் மூலமாக சென்று பார்த்து, அங்கு ஒரு பின்னூட்டமும் இட்டு விட்டேன். அந்த பின்னூட்டத்தை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.
”உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.
இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.
இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.”
அன்புடன்,
பாலாஜி சுந்தர்,
கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்.
ReplyDeleteலிங்கைக் கொடுத்து லிங்க் ஆனதற்கு நன்றி திரு செழியன்.
Deleteஎனது ஆர்வ கண்காணிப்பில் நீங்கள் வெகு நாட்களாக இருக்கின்றீர்கள்.