Thursday, 19 July 2012


தடையற தமிழில் போட்டுத் தாக்க!
நண்பர்களுக்கு வணக்கம்,


இந்த வலைப்பதிவு, ப்ளாக் வலைப் பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும், இன்ன பிற விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் எப்படி சுலபமாக தமிழில் டைப்பிங் செய்வது என்பதைப் பற்றியது.இந்த பதிவுக்குக் காரணம், திரு கிங் விஸ்வாவின் வலைத்தளத்தின் மூலமாக லயன் காமிக்ஸுக்கு என்று ஒரு ப்ளாக் இருக்கின்றது என்பது தெரிந்ததிலிருந்து, எடிட்டரின் வலைப்பக்கத்திற்க்குச் சென்று மேய்வது ஒரு தினப்படி விஷயமாக ஆகிவிட்டது.


ஒரு வலைப்பதிவில், எடிட்டர் என்ன கூறியிருந்தார் என்றால், கூகுள் டிராஸ்லேஷனில் ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து பின் பதிவிடுவது சிரமமாக இருக்கின்றது என்று எழுதியிருந்தார்.

நிறைய தமிழ் பதிவர்களின் வலைப் பக்கங்களிலும், அதைத் தொடர்ந்த பின்னூட்டாங்களிலும் இருக்கும் தமிழ் சொற்கள் பிழைகளோடு இருப்பதையும் பார்த்தேன். இப்படிக் கூறுவதால் என் வலைப் பக்கம் பிழைகளில்லாமலிருக்கிறது என்று நான் கூறுவதாக நண்பர்கள் நினைத்துவிடக் கூடாது. என் வலைப்பக்கங்களும் சொல் தவறுகள் நிறைந்துதான் இருக்கிறது. இந்த தவறுகள் ஏன் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்தே இருக்கின்றேன். ஆங்கிலத்தில் டைப் செய்து அது தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது ஏற்படும் வெளியே சொல்ல முடியாத அவஸ்தை அது. அவஸ்தை என்பதை விட சங்க்க்க்கடம் என்பதே சரி.

முரசு அஞ்சல் வலைப்பக்கம்.
எனக்கும் தமிழ் டைப்பிங்கிற்கும் 2000 மாவது வருடத்திலிருந்தே அல்லது அதற்கு சில வருடத்திற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது தமிழில் டைப் செய்ய “முரசு அஞ்சல்” என்னும் மென்பொருளைப் பயண்படுத்தி வந்தேன். மலேஷிய தழிழர்களின் ஆர்வத்தினால் உருவாக்கப்பட்ட மென்பொருள் முரசு அஞ்சல் ப்ரோக்ராம். இதுவும் ஒரு ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழ் எழுத்து உருவாகும். உதாரணத்திற்கு ammaa = அம்மா டைப் செய்ய வேண்டும் என்றால் a+m+maa. இந்த டைப்பிங் முறையை நீங்கள் எல்லோரும் அறிந்திருந்தாலும், எனக்குத் தெரிந்தவரை கம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் செய்வதற்கு, ஆங்கிலத்தில் போனடிக் கீ போர்டு வழிமுறையில் சிறப்பாக வேலை செய்த மென்பொருள் முரசு அஞ்சல். இன்று என்னுடைய பதிவுகளும் அதனைத் தொடரும் பின்னூட்டங்களிலும் நீண்ட அதுவும் நண்பர்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு நீண்ண்ண்ண்ட டைப்பிங்கிற்கு காரணம் 12, 13 வருடங்களுக்கு முன்னேயே கம்ப்யூட்டரில் ஆயிரக் கணக்கான தமிழ் பக்கங்களை அடித்துப் பழக்கமானதினாலேயே. (என்னுடைய டைப்பிங் சார்ந்த ஒரு சுவாரசியமான செய்தியை, விரும்புபவர்க்கு இந்த பதிவின் முடிவில் சொல்கிறேன்.)

என்னுடைய கம்யூட்டர்கள் மாறினாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறினாலும் தொடர்ந்து முரசு அஞ்சல் மென்பொருளை பயண்படுத்தி வந்தேன். முரசு மென்பொருளில் ஒரு சிக்கல் என்னவென்றால், அது ஒரு ஷேர்வேர். யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து நிறுவி இயக்கிக் கொள்ளலாம். ஒரு சில கூடுதல் செயல்பாடுகளும், அனைத்து வகையான எழுத்துருக்கள் (FONT) வேண்டும் என்றால் பணம் செலுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நீங்கள் ஒரு பக்கத்தை முரசு கொண்டு தமிழில் உருவாக்கி இருந்தீர்கள் என்றால் அந்த பக்கத்தை படிக்க வேண்டும் என்றாலும் முரசு டாஸ்க் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

நான் சொல்லும் நடைமுறை அந்த நாளில். இப்போது எப்படியோ தெரியவில்லை. இதனால் நான் எங்கெல்லாம் தமிழ் உபயோகப் படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் முரசுவை எடுத்துச் செல்லும் நிலையில் இருந்தேன். என்னிடமே பிரிண்டர் இருந்ததால், பேப்பரில் பிரிண்ட் செய்ய ஏதும் சிரமமில்லாமல் இருந்தது. ஆனால் சில பக்கங்களை கடையிலோ அல்லது வேறேங்காவதோ பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்க ஒரு வழி கண்டுபிடித்தேன். அது முரசு மூலம் ஏற்படுத்த தமிழ் பக்கத்தை, அப்படியே PDF பைலாக மாற்றி சேமித்து விட்டால், பின் அந்த பைலை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பிரிண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் பிடிஎஃப் பைலில் ஏதும் கரக்‌ஷன் செய்ய முடியாது. அப்படி கரெக்‌ஷன் செய்ய வேண்டும் என்றால் அது சிறிது தலையை சுற்றி மூக்கைத் தொடும் விஷயம்.


சமீபத்தில் தமிழ் டைப்பிங் சம்பந்தமாக எந்த வேலையும் இல்லை. எனது முரசு உபயோகமும் வழக்கொழிந்து போனது. அதனால் சமீபத்தில் ஹார்ட் டிஸ்க்கை பார்மாட் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மறு நிறுவுதல் செய்த பிறகு ஒரு சிறிய 10 வரி தமிழ் டைப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது வலையில் தேடியபோது கிடைத்ததுதான் NHM WRITER. இதற்கான ஒரு லிங்க் நமது கருந்தேளார் முகப்புப் பக்கத்தில் இருக்கின்றது. இது சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிக வலிமையாக இருக்கின்றது. இந்த மென்பொருள் தமிழ் டைப்பிங்கை முரசு அஞ்சலைவிட சிறப்பாக செய்கின்றது. நண்பர்களே என்.ஹெச்.எம். என்றால் என்ன தெரியுமா? நியூ ஹாரிசான் மீடியா. ஆம், நமது கிழக்கு பதிப்பகமேதான். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை சுட்டவும்.NHM WRITER - தமிழில் தடையின்றி டைப் செய்ய.

இது ஒரு முற்றிலும் இலவச மென்பொருள். இதன் மூலம் டைப் செய்தால் தவறே ஏற்படாது என்று நான் சொல்லவில்லை, அப்படி ஏற்படும் தவறுகளை அப்போதைக்கப்போதோ அல்லது முதலில் இருந்து சரிபார்க்கும் போதோ திருத்திவிடலாம்.. ஆனால் இதைப் பயண்படுத்தும் போது, இதற்கும் கூகுள் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது உங்களுக்கே தெரிய வரும்.

பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்கள் இந்த மென்பொருளைத்தான் பயண்படுத்துகின்றனர் என்று நினைகின்றேன். இது இல்லாமல் இன்னும் பல தமிழ் மென்பொருட்கள் இருக்கலாம். முன்பு தமிழக அரசு, C-DAC உடன் சேர்ந்து ஒரு தமிழ் மென் பொருள் சீடி வெளியிட்டது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கலாம்.

சுருங்கக் கூறின் இந்த மென்பொருள், சிறியது, ஆனால் உபயோகிக்க எளிமையானது. இந்த மென்பொருளை நிறுவி, கூகுள் மற்றும் இன்ன பிற அது போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் கருவிகளின் சிக்கல்களிலிருந்து விடுதலை பெற்று, தமிழ் டைப்பிங்கை சரளமாக கையாண்டு, சிறப்பான பல பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படைக்க எனது வாழ்த்துக்கள்.

இந்த மென்பொருள் விஷயத்தை உங்களிடம் பேசும்போதோ அல்லது பின்னூட்டமிடும் போதோ நான் சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மென்பொருள், விரல் விட்டு எண்ணக் கூடிய சில பேர்களுக்கு மட்டுமே தெரிய வந்திருக்கும். இதை ஒரு பதிவாக செய்தால், அது எப்போதும் அனைவரும் பார்க்கும் படி இருக்கும். மேலும் இந்த பதிவை முந்தய பதிவுகளுக்கு நடுவில் நுழைத்திருந்தால் அது நான் சப்ஜக்ட் மாறி மென்பொருள் பற்றிய பதிவில் இறங்கி விட்டது போல தெரியும். அதனாலேயே இதை கடைசியாக வைத்துக் கொண்டேன்.


நண்பர்களே, இதுவரை இந்த மென்பொருள் பற்றி தெரியாதிருந்தால் இப்போது உபயோகப் படுத்துங்கள். ஏற்கெனவே தெரிந்திருந்தால் உங்கள் ஏனைய நண்பர்களுக்கு இந்த தகவலை பரிமாற்றம் செய்யுங்கள்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

என் இனிய தமிழ் மக்களே, சாரி நண்பர்களே, இயக்குனர் இங்கே உள்ளே நுழைந்து விட்டாரோ என்று பயந்துவிடாதீர்கள்.நான் உங்களை பயமுறுத்திட நினைக்கவில்லை.

தமிழுக்காக ஒரு காரியத்தை செய்ய துணிந்துவிட்டேன். எடிட்டர் விஜயன் சாரைப் போல என் எல்லைகளை மீறிட துணிந்துவிட்டேன். ஏற்கெனவே பப்ளிஷ் செய்யப்பட்ட பதிவை, மீண்டும் எடிட் செய்து, அந்த பதிவில் மேலும் சில வரிகளை தமிழுக்காக சேர்த்துள்ளேன்.  எடிட்டர் எல்லைகளை மீறினால் அது காமிக்ஸ் காதலர்களுக்கு நல்லது. நான் எல்லை மீறுவது நண்பர்களின் தமிழ் டைப்பிங்கிற்கு நல்லது என்பதால் மீறுவதற்கு உரிமை எடுத்துக் கொள்கிறேன்.

கீழே இருக்கும் முதல் பின்னூட்டதில் நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் ஒரு தமிழ் அழகியைப் பற்றி கூறி, லிங்கும் கொடுத்திருக்கிறார். நண்பர் ஸ்டாலினின் வலைப் பக்கங்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது வலைப் பக்கங்களை அழகியைக் கொண்டுதான் அடித்திருக்கிறார், அழகாகவே இருக்கிறது பக்கங்கள். எனது நோக்கம் தமிழ் டைப்பிங்கிற்கு சிரமப்படும் அனைவருக்கும்  இந்த செய்திகள் சென்று சேர்ந்த்து, அனைவரும் அழகாக தமிழ் டைப்ப வேணும் என்ற அவாவே.அதனால் அவரின் பின்னூட்டதில் இருக்கும் லிங்க் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அழகியை கீழே இருந்து மேலே கொண்டு வந்து விட்டேன். இன்னோரு விஷயமும் சொல்லிவிடுகின்றேன், அழகியை இப்போது நான் உபயோகப் படுத்தவில்லை. முன்பு அழகியை பயண்படுத்திய போது அவள் நல்ல அனுபத்தையே தந்தாள் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. அழகியுடனான அனுபவம் கசப்பாக இருந்திருந்தல் அது கட்டாயமாக நினைவில் இருந்திருக்கும். இங்கே கொடுத்துள்ள மென்பொருட்களை உபயோகப்படுத்திப் பார்த்து, எந்த மென்பொருள் உங்களுக்கு பிடிக்கிறதோ அதை உபயோகப்படுத்துங்கள்.

யாமறிந்த வலைப்பதிவர்களிலே அழகிய உதவியாளரை கொண்டு தமிழ் அடித்த பதிவர் ஸ்டாலினைத் தவிர வேறெங்கும் காணோம் (என் கண்ணுக்கு) என்று நான் கவிதையே எழுதிவிட்டேன். தமிழின் நன்மை கருதி இரண்டு வரியோடு நிறுத்திக் கொள்கிறேன்.இல்லையென்றால் நண்பர்கள் கோபப்பட்டு, படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில் என்பது போல இவன் தமிழின் நன்மை என்று முதல் பத்தியில் எழுதிவிட்டு, அதற்கு அடுத்த பாராவில் கவிதை எழுதி தமிழை கொலை செய்கிறான், இதை சகிக்க முடியாது  என்று துப்பாக்கி தூக்கிவிடப் போகிறார்கள்.

அழகியுடன், தமிழ் பேச நினைப்பவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டவும்.


நண்பர்களே, அழகியைக் காட்டியதற்கு நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் அவர்களுக்கு, அவருடைய பக்கத்தில் ஒரு தேக்ங்ஸ் கமெண்ட் இட்டு, ஒரு ”ஓ” போட்டு வாருங்கள். நண்பர் ஸ்டாலினுக்கு, என் நன்றியை நான் இங்கும், அங்கும் தெரிவிக்கின்றேன். அனைவருக்கும் மற்றுமொரு வேண்டுகோள், உங்கள் வீட்டுக்கார அம்மா இந்த அழகி சமாசாரத்தைப் பார்த்து, வேறேதோ சந்தேகமான சமாச்சாரம் என்று நினைத்து பூரிக்கட்டை எடுத்து வந்தாலும் அதையும் ஈரோடுகாரருக்கே கொரியர் செய்துவிடவும்.

ஒரே பதிவில் ரெண்டாம் தடவையாக, 

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.

41 comments:

 1. முன்பு இதனை உபயோகப்படுத்தியுள்ளேன். நன்றாக இருக்கும் .

  இதனையும் பயன்படுத்தி பாருங்கள் மிக நன்றாக உள்ளது-www.azhagi.com

  ReplyDelete
  Replies
  1. அப்ப்ப்பா... என்ன வேகம், இப்படி நான் பதிவிட்டு திரும்புவதற்குள், படித்து பின்னூட்டமும் போட்டுவிட்டீர்கள். அழகியை தற்காலிகமாக பயண்படுத்தி இருக்கிறேன், மென்பொருளைத்தான் கூறிப்பிட்டேன். பிறகு மறந்துவிட்டே. அழகி எனக்கு தமிழக அரசின் சிடியிலோ அல்லது தமிழ் கம்ப்யூட்டர் சிடியிலோ கிடைத்தது.
   உமது எக்ஸ்பிரஸ் வேக பின்னூட்டத்திற்கும் லிங்குக்கும், நண்பர் ஸ்டாலினுக்கு நன்றி.

   Delete
 2. பதிவிற்கு நன்றி டவுன்லோட் செய்து விட்டேன்.
  பயன் படுத்திவிட்டு கருத்தை கூறுகிறேன்.

  ReplyDelete
 3. மிக மிக உபயோகமான பதிவு. நன்றி. இன்று NHM பயன்படுத்திவிட்டு இங்கே மறுபடியும் வருகிறேன்.

  ReplyDelete
 4. நண்பரே,
  நான் nokia N900 மொபைல் வைத்திருக்கிறேன். இது whatsapp ஏற்றுகொள்ளாமல் அடம்பிடிக்கிறது. நான் என்ன செய்யட்டும்?
  கூடியவிரைவில் வேறு மொபைல் மாற்றலாம் என்று இருக்கிறேன். நல்ல மாடல் ஒன்று சொல்லுங்களேன்.
  (கடந்த மாதம்தான் நண்பர் ப்லேடுபீடியா கார்த்திக் ரெகமன்ட் பண்ண tablet ஒன்று வாங்கினேன்)

  ReplyDelete
 5. நண்பரே, ப்ளேட்பீடியா கார்த்தி சொன்ன கார்பன் டேப்லட் வாங்கினீர்களா, டச் எப்படி வேலை செய்கிறது? உங்களுக்கு அதில் எந்த சிரமமும் இல்லையென்றால், அந்த டேப்லட், ஆண்ட்ராய்டின் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் என்ற மென்பொருளில் இயங்குகிறது. நீங்கள் அதில் வைபை எனேபிள் செய்து, ஆண்ட்ராய்ட் மார்க்கெட் என்ற அப்ளிகேஷன் மூலமாக வாட் ஆப் டவுன்லோட் செய்து உபயோக படுத்திக் கொள்ளலாம்.

  வாட் ஆப்பிற்காக போனை எல்லாம் மாற்றாதீர்கள். உங்கள் போனில் வாட் ஆப் நிறுவும் போது என்ன பிழைச் செய்தி காட்டுகிறது?
  இந்த ப்ரோகிராம் நிறுவ வேண்டும் என்றால் மினிமம் ---அப்டேட் இருக்க வேண்டும் என்பது போன்ற பிழைச்செய்தி என்றால், நீங்கள் உங்கள் மொபைலுடன் பண்டிலாக வந்த சிடியில் இருக்கும் மென்பொருளை நிறுவி, உங்கள் போனின் இயக்கு மென்பொருளை தற்போதைய அப்டேட் நிலைக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் போனின் சாப்ட்வேர் வாட் ஆப்பை சப்போர்ட் செய்யும்.
  நோக்கியாவின் டோல் ப்ரீ நம்பருக்கு கால் செய்தும் உங்கள் போனின் நிலை என்ன என்பதையும், அப்டேட் ஏதும் செய்தால் வாட் ஆப்பை உபயோகப் படுத்தமுடியுமா என்றும் தெரிந்து கொள்ளலாம். வாட் ஆப்பை காசு கொடுத்து வாங்க தேவையில்லை. 30 நாட்கள் கழித்து இந்த ப்ரோகிராம் எக்ஸ்பைரி ஆகிவிட்டதாக செய்தி வரும். அப்போது, இந்த ப்ரோகிராமை முழுவதும் நீக்கிவிட்டு, மீண்டும் நிறுவிக் கொள்ளவும். இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் வந்தால், மெயில் செய்யவும்.

  ReplyDelete
 6. இங்கே கிளிக்கினால் அழகியை அடையலாம் என்று உசுப்பேத்தி
  கவுத்து வுட்டுட்டீங்களே தலைவா ;-)
  .

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சிபி,

   மெல்லப் பேசுங்கள், ஒய்புக்கு கேட்கக் கூடாது. நானும் உங்களைப் போலத்தான் ஏமாந்து போனேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். நான் மட்டும் தனியாக ஈரோட்டாரிடம் கோரிக்கை வைத்தால் அந்த கோரிக்கைக்கு பலம் இருக்காது, என்னைப்போல இன்னும் நிறைய பேர் சேர்ந்து, ஏமாந்தோம், ஏமாந்தோம் என்று கமெண்ட் போட்டால், அடுத்த முறை சக்சஸ் ஆகிற மாதிரி ஈரோட்டார் ஏதாவது ”நல்ல வேலை செய்யிற” மாதிரியான லிங்க் கொடுக்கிறாரா என்று காத்திருப்போம். ;-D. (நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருந்தா...)
   ஈரோட்டாரே JUST JOKING கோவிச்சுக்காதீங்க.

   Delete
 7. // WARNING: THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS & MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING. //

  ஹி ஹி ஹி சூப்பரப்பு :))
  .

  ReplyDelete
  Replies
  1. அட...நான் இப்போதான் கவனிக்கிறேன்...
   பாலாஜி சுந்தர் ரூம் போட்டு யோசிச்சார்போல. உங்ககிட்ட கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. சூப்பர் நண்பரே.

   Delete
  2. நண்பர் சிபிக்கு,

   நானோ காமிக்ஸ் பத்திய ப்ளாக் இதுன்னு சொல்றேன், என் வீட்டையும் சேர்த்து நம்ம எல்லார் வீட்டிலேயும் என்ன நினைச்சுட்டு இருக்காங்கன்னா, “கழுதைக்காகிற வயசாச்சு, புள்ளைக்களுக்கு அப்பாவும் ஆயாச்சு, ஆனா இவனோ சின்ன புள்ளயாட்டம் இன்னும் காமிக்ஸு, காமிக்ஸுன்னு பைத்தியம் புடுச்சு அலையுது” அப்படின்னு நெனச்சுட்டு இருக்காங்க. போதாக் குறைக்கு நான் இங்க போடர பதிவ பார்த்தா எனக்கே பயமா இருக்கு. லார்கோ வந்ததிலிருந்து, வரிசையா காமிக்ஸ் பேரிலே எல்லாமே அடல்ட் காமிக்ஸ் அண்ட் அடல்ட் சினிமாதான். முதலில் லார்கோ, அடுத்து சின் சிட்டி, அடுத்து 300, அடுத்து வை சோ சீரியஸ் கடைசியாக ஒழுங்கா ஒரு பதிவ போட்டேன், போட்ட பதிவு கவர்ச்சியா இல்ல போலிருக்குன்னு, திருப்பி அதை திருத்தி ஒரு அழகிய நொழச்சதுல பதிவே ஒரே அழிச்சாட்டிய பதிவாகிடிச்சி. அதுவும் லார்கோவில் ஒரு நீலக் கடலில் ஒரு படகு நிற்குமே, அந்த படத்தை போடரதா வேனாமான்னு ஒரு பெரிய மனப் போராட்டத்திற்கு அப்புறந்தான், அந்த படகு படத்தை வெளயாட்டுல சேர்த்தேன். இப்ப என் பதிவ என் கொழந்தைக்கு கூட காட்ட முடியாதபடி போட்டிருக்கிறேன். நீங்களும் உங்க குழந்த கிட்ட என் பதிவ காட்ட முடியாது.
   என்னிக்காவது உங்க யார் வீட்டிட்டிற்காவது நானோ, அல்லது என் வீட்டிற்கு நீங்களோ, வரும் நிலை ஏற்பட்டாலோ அல்லது வெளியே எங்கேனும் குடுப்ப சமேதரர்களா சந்தித்துக் கொள்ளும் போதோ, உங்க வீட்ல இருக்கறவங்க என்ன பாத்து, இதுதானா அது, தான் கெட்ட குரங்கு, தானும் கெட்டதில்லாம, வனத்து குரங்கையும் சேர்த்து கெடுத்துச்சாம் அப்படின்னு ஒரு லைவ் கமெண்ட்ட போட்டா நான் தப்பிச்சுக்கனுமில்லையா, அதுக்குத் தான் இந்த வார்னிங்க போட்டேன் நண்பரே. இதப் பார்த்து இன்னும் ரெண்டு பேர் விஜயன் சார் காமிக்ஸை வாங்க மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவையே உருவாக்கினேன். அதற்காகவே இன்னும் ரீலை ஓட்டிக்கிட்டிருக்கிறேன்.

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
  3. டியர் கார்த்திகேயன்,
   உங்களுடைய ஓபன் புகழுரைகள் என்னை சங்கோஜப்படுத்தினாலும், முதலில் உங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன்.

   என் மனம்விட்டு என்னைப் பற்றி வரிசையாக உங்களிடம் சொல்லிவிடுகிறேன். என்னை மிகவும் புகழுகிறீர்கள்.எல்லாப் புகழும் இறைவனின் திருவடிகளையே சென்று சேரட்டும். இறைவனுக்கு சமர்ப்பனம்.
   நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ என்றும் நினைக்கிறேன். நீங்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை.
   அதிஷா என்ற ஒரு சக வலைப்பதிவர் இருக்கிறார். பில்லா படத்துக்கான அவருடைய விமர்சனப் பதிவை படித்துப் பாருங்கள். நீங்கள் உன்மையிலே என்னைப் பார்த்து வியந்திருந்தால், அதிஷாவின் கட்டுரையை படித்தபின் அந்த் வியப்பு அகன்றுவிடும்.
   நான் கற்றது கை மண் அளவு கூட இல்லை. நான் ஒரு மிகவும் SHY-யான ஆசாமி. யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இதுவரை இல்லாதவன். சோஷியல் சென்ஸ் துளி கூட இல்லாத ஆசாமி நான். என் நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வலைப்பக்கத்தை உருவாக்கிய பின்னேதான், என் எல்லைகளை நானே சிறிது தாண்டியிருக்கின்றேன். இதை எதனோடு ஒப்பிடலாம் என்றால் நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால் பதித்தைப் போல. ஏனென்றால் நான் வளர்ந்த விதமும் என் தன்மையும் அப்படி இயற்கையாகவே அமைந்து விட்டது.
   நானும் உங்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்று சொல்வதென்றால், முகம் தெரியாத நபர் ஒருவர் என்னிடம் இமெயில் முகவ்ரியும், போன் நம்பரும் கேட்டிருந்தால் நான் நிச்சயம் கொடுத்திருக்க மாட்டேன். ஏனென்றால் நான் எப்போதுமே ஒரு ஷெல்லுக்குளேயே (ஒரு ஆமையைபோல்)இருந்து பழக்கப்பட்டு விட்டேன். நீங்களே கேட்டவுடன் இமெயிலும், போன் நம்பரும் கொடுத்தீர்கள். அதனால் நாம் அடுத்தவரிடம் கற்றுக் கொள்ள ஏதோ ஒரு விஷயம், நம் அனைவரிடமும் இருக்கிறது.

   கற்றுக் கொள்வது என்றால் நம் உறவு ஆசான், மாணாக்கன் என்றாகிவிடும். நட்பு இருக்காது. நட்புடைய சிறப்பே ஷேரிங்.

   மனைவி, குழந்தை, பெற்றோர், ஆசிரியர் இவர்கள் யாரிடமும் சில விஷயங்களை ஷேர் செய்ய முடியாது. அது நட்பில் மட்டுமே சாத்தியமாகும். SO நமக்குத்தெரிந்தை ஷேர் செய்து கொள்வோம். இன்று இண்டெர்நெட்டும், வலையுலகமும், என்னுடைய இந்த பதிவும் சிம்பாலிக்காக சொல்வது எண்ணவென்றால் “ஷேரிங்”. உலகை நகர்த்திச் செல்லும் பல சக்கரங்களில் ஷேரிங்கும் ஒரு முக்கியமான சக்கரம். அதிஷாவை ஒரு முறை படித்துப் பாருங்கள். இலுமினாட்டி என்று ஒருவரும் இருக்கிறார். அவரையும் பாருங்கள்.

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
  4. //நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ என்றும் நினைக்கிறேன்//
   No...
   உண்மையை சொன்னா நம்புங்க பாஸ்...

   Delete
 8. அடக் கடவுளே ! நம்மளப்பத்தி ஒரு பெரிய ராமாயணமே போய்கிட்டு இருக்கே !

  பா.சு : ஒரவர புகழ்ததால வழியிற ஐஸ் கட்டியை தொடச்சிகிட்டு இருங்க கொஞ்ச நேரத்துல மறுபடியும் வறேன். அழகியின் துணையுடன் ( ஊட்டுக்கு... தெரியாமல்தான்)

  ReplyDelete
  Replies
  1. ஐயா நண்பரே உம்மைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். பெரிய வீட்டுக்கு கீழே சின்ன.... சே தப்ப்புத்தப்பா வருது. முதல் பதிவுக்கு கீழே அழகியப்பத்தி ”சின்ன” பதிவ நுழைச்சுருக்கேன் அதை முதல்ல படித்தீர்களா. வாங்க வாங்க, நானும் உங்ககிட்ட வாங்கதான் (திட்டு) காத்”திட்டு” இருக்கேன்.
   என்ன நண்பரே, டைப்பிங்கில் ஒரே தப்பு தப்பா இருக்கு, நீங்க வேற அழகியின் துணையுடன் வர்றேன்னு சொல்றீங்க. அப்ப அழகி இப்ப உங்க கூட இல்லயா, யாராவது தட்டிகிட்டு போயிட்டாங்களா, அதுதான் மறுபடி கூகுளில் அடித்ததால்தான் தப்பு தப்பா வருதா. அய்யோ எனக்கு ஒன்னும் தெரியாது ஆளை விடுங்க சாமி, நான் எஸ்கேப். ஜூட்.
   அன்புடன்,
   பாசு.

   Delete
  2. நண்பர் ஈரோடு ஸ்டாலின்,

   மேலே உள்ள பதிவுக்கு முன்னே உள்ள பதிவில் நல்லா பாருங்க, எனக்கு வச்ச ஐஸை, நான் உடனே மேலிடத்தில் சப்மிட் செஞ்சாச்சு.
   அப்புறம் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு நினச்சேன். உங்க ஊரில் எடுத்த படம் ரொம்ப ஓகோன்னு ஓடுதாமே. வாழ்த்துக்கள்.

   அன்புடன்,
   பாசு.

   Delete
 9. இந்தாருங்கள் நேரடியாகவே அழகியை கீழே இறக்கி வைத்துக்கொள்ளுங்க்கள்
  http://www.azhagi.com/sai/Azhagi-Setup.zip
  அழகிக்கு துணையாக இன்னும் ஒரு ஆள் "குறள்" தமிழ் கருவி . அழகி மாதிரி நன்றாக இருக்கும் மற்றும் unicode மாறுதல் இதில் நேரடியாகவே உள்ளது .
  http://www.kuralsoft.com/download/k40setup.exe

  ஆரம்பதில் அழகியுடன் பழக 2 நாட்களுக்கு கூச்சமாக (கஸ்டமாக) இருந்தது ஆனால் பின்னர் google ஐ விட சிறப்பாக இருப்பதனை உணர்ந்தேன். on line தேவை இல்லை. சேமிப்பது மிக இலகு, மற்றும் பல வசதிகள்.

  கொசுறு செய்தி: எனது நண்பர் பொள்ளாச்சி "நசன்" இந்த தமிழ் கருவி உருவாக்குவதற்கு துணை புரிந்துள்ளார் என்பது மகிழ்வுக்குறிய விடயம்

  ReplyDelete
  Replies
  1. டியர் ஸ்டாலின்,

   மீண்டும் லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.
   இப்போது விளயாட்ட தொடங்கலாமா.
   இந்த லிங்க்காவது, நண்பர் சிபிக்கு ஏமாற்றமளிக்காமல் இருந்தால் தேவலை. அப்படி அவர் ஏமாற்றமடைந்தாலோ, புறாவுக்கு கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தி, கோபமடைந்து என் சதையை வெட்ட கத்தியுடன் கிளம்பி விடுவார். போன தடவை அழகியை வைத்து செய்த அலம்பலை இந்த முறை குறளை வைத்து செய்ய முடியாது. உங்கள் குறளுக்கான லிங்கில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே விஷயமாக இருக்கப் போவது அந்த லிங்கின் கடைசியில் இருக்கும் SETUP என்ற வார்த்தைதான். அதென்ன K40 என்பது செட்டப்பின் வயதைக் குறிக்கின்றாதா என்ற கேள்விகள் நிச்சயம் கமெண்ட்டுகளில் தொடரும்.
   அன்புடன்,
   பாசு.

   Delete
  2. உங்களது நண்பர் பொள்ளாச்சி “நசன்” அவர்களைப்பற்றி உமது பதிவில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். மேலும் திரு கிங் விஸ்வா அவரைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தார். அவருக்கு மிகப் பழைய காலத்திய சிறுவர் இதழ்களை அன்பளிப்பாக கொத்ததாகவும் பின்னூட்டமிட்டிருந்தார்.
   என் தகவல் சரிதானே நண்பரே.

   Delete
  3. வாட் படம் ? ஏன்னா நான் படம் பார்ப்பதோடு சரி
   k40 = குறள் 4 . 0 (version)
   //திரு கிங் விஸ்வா அவரைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தார்.//
   உண்மை

   Delete
  4. டியர் ஸ்டாலின்,

   வாட் படமா, ஈ-ரோடு உங்க ஊர்தானே, ஒரு வேளை அங்க தான் படம் எடுத்தாங்களோன்னு கேட்.... சரி சரி, ஈரோடு ஸ்டாலின் ரஷ்ய ஸ்டாலினாகிடாதீங்க.

   அன்புடன்,
   பாசு.

   Delete
  5. " ஈ " ரோடு - இரவு நேரத்துல இருக்கற கொசுக்கடி போதாதுன்னு இந்த 'கடி" யுமா?

   இன்னைக்கு தூங்குனமாதிரிதான்...

   அப்புறம் . நமக்கு சொந்த வூரு ஈரோடு இல்லைங்கோ.......

   Delete
 10. இதையும் பயன் படுத்தி பாருங்கள், நண்பர்களே.
  http://bsatheeshme.blogspot.in/2010/12/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சதீஷ் குமார் பாபுவுக்கு வணக்கம்.

   தமிழ் தட்டச்சு மென்பொருளுக்கான தங்களுடைய பரிந்துரைக்கு மிகவும் நன்றி. உங்கள் பரிந்துரை மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
   என்னுடைய கூகுள் + ல் குழுவில் உங்களை இணைத்திருக்கிறேன்.

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
 11. நண்பர் திரு.சதீஷ் அவர்களின் ப்ளாகில் எ-கலப்பை
  (eKALAPPAI) என்கிற ஆங்கில வழி போனடிக் தமிழ் தட்டச்சு மென்பொருளைப் பற்றிய விவரங்களையும், அதை டவுன்லோட் செய்வதற்கான லிங்கையும் கொடுத்துள்ளார். முடிந்தால் இதையும் பரிட்சித்துப் பாருங்கள்.

  C-DAC-ன் இலவச CD-யில் இருந்த பல தமிழ் மென்பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நான் உபயோகப் படுத்தவில்லை. அப்போது எனது கம்யூட்டரில் முரசு அஞ்சல் நிறுவப்பட்டு இருந்தது.

  முரசு அஞ்சல் உபயோகத்தில் எனக்கு முழு திருப்தி கிட்டவில்லை. முரசுவைப் போலவே அதே தமிழ் தட்டச்சு அனுபவத்தைத் தரும் எளிமையான பல மென்பொருட்கள், பின்னாளில் வழக்கத்துக்கு வந்தாலும், நான் அவைகளை உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை;
  1. முரசுவை 1996-97 முதலே உபயோகப்படுத்தி வந்தேன். முரசுவினால் உருவாக்கப்பட்ட கோப்புகளை, முரசுவினைக் கொண்டுதான் படிக்கமுடியும். மேலும் முரசு மூலம் உருவாக்கப்பட்ட தமிழ் கோப்புகளை வெறோரு நண்பருக்கு அனுப்பினாலும் அவரும் முரசுவை நிறுவி இருக்க வேண்டும்.

  2. முரசுவைக் கொண்டு உருவாக்கிய பல நூறு கோப்புக்கள் ஏற்கெனவே எனது சேமிப்பில் இருந்தது. அந்த கோப்புக்களை முரசுவை கொண்டே படிக்கவோ, பிரிண்ட் செய்யவோ முடியும். அந்த பழைய கோப்புக்களை மாற்றிக் கொள்ள வழி வகை ஏதும் தெரியவில்லை.

  3. அப்போது என்னிடம் இருந்தது இன்டெலின் 233 MMX இயங்கு வேகமும், 32 MB தற்காலிக நினைவகமும், 2 ஜீபி வன்தட்டு நினைவகமும் கொண்ட விண்டோஸ் 95 இயங்குதளத்தில் இயங்கும் கணினி. பின்பு இதே கணினியில் விண்டோஸ் 97ம் பிறகு 98-டையும் நிறுவி உபயோகப்படுத்திவந்தேன். 2006-ம் வருடம் வரை இந்த கம்ப்யூட்டரை பயண்படுத்தி வந்தேன். 2001-ம் வருடம் விண்டோஸ் எக்ஸ்பி வெளிவந்தாலும் அதை இந்த கணினியில் நிறுவ முடியற்சித்து தோற்று விட்டேன் ;-). இப்போது உங்களுக்கே தெரிய வந்திருக்கும் இந்த கணினியின் ஃபுல்லி லோடட் நிலமை.

  4. மேலும் முரசுவோடு, வேறொரு தமிழ் மென்பொருளை நிறுவி பயன்படுத்தும் போது, சில நாட்கள் கழித்து ஒத்திசைவு சிக்கல்கள் எழுந்ததும் ஒரு காரணம்.

  நண்பர்களே, உங்களுக்கு ஒரு குறிப்பு, அனைத்து தமிழ் மென்பொருட்களையும் உபயோகித்து, எது இலகுவாக இருக்கின்றதோ அந்த ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை

  கலப்பையை வைத்து ஏதும் அலம்பல் செய்தால், பிறகு கலப்பையாலேயே அடிவாங்கும் பெரிய அபாயத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக அடக்க்க்க ஒடுக்க்க்கமாக நல்ல பையனாக இருந்துவிட்டேன். (கார்த்திகேயன் கவனிக்க)

  இந்த கருவிகளை பயண்படுத்தி விட்டு அதன் மூலம் நீங்கள் பெற்ற உங்கள் அனுபவத்தை இங்கே பின்னூட்டமாக இடுங்கள், அது எனக்கும், மற்ற புதியவர்களுக்கும் மிகப் பயணுள்ளதாக இருக்கும்.

  இதோ டவுன்லோட் செய்துவிட்டேன், எப்படி இருக்கிறது என்று திரும்பி வந்து சொல்கிறேன் என்று சொல்லிச் சென்ற நண்பர்கள் இரண்டு நாட்களாகியும் காணவில்லை. ஒருவேளை அழகியுடன் செட்டில் ஆகிவிட்டார்களோ!!!, நண்பர்கள் இப்படி காணாமல் போக நானே காரணமாகிவிட்டேனே :=(.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete
 12. மேலும் ஒரு காரணத்தை கூற தவறி விட்டேன். அது, C-DAC இலவச தமிழ் மென்பொருள் CD வெளியிடப்பட்ட வருடம் 2005 ல் தான்.

  ReplyDelete
 13. தங்களின் இந்த பதிவு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. ஆரம்பத்தில் நானும் NHM WRITER தான் பயன்படுத்தி வந்தேன். பிறகு, Google TAMIL IME என்னும் கூகுளின் மென்பொருளுக்கு மாறிவிட்டேன். இது மத்த சாப்ட்வேரை விட மிகவும் எளிமையானதாக உள்ளது. தாங்களும் பயன்படுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.http://www.google.com/inputtools/windows/index.html

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, உமது ஆர்வத்திற்கும், பரிந்துரைக்கும் இங்கு பதிலிட்டதற்கும் மிகவும் நன்றி. கூகுள் தமிழ் ஐஎம்இ நான் உபயோகப்படுத்திப் பார்த்தேன். இந்த மென்பொருளை செட்டிங்ஸ்சில் சென்று எனேபிள் செய்வது பயணாளருக்கு சிறிது சிக்கலான விஷயமாக இருக்கும். மேலும் நான் பல வருடங்களாக முரசு அஞ்சல் உபயோகித்து பழக்கப்பட்ட ஆசாமி. அதனால் இதில் சிறிது சிக்கலை உணர்ந்தேன். உதாரணத்திற்கு ந- என்ற எழுத்தை டைப் செய்ய w மற்றும் n இரண்டு கீ-களை உபயோகிக்கலாம், ஆனால் இரண்டாவதாக வரும் எழுத்து ந-வாக இருந்துவிட்டால் அதாவது (i+n) இன்-என்று டைப் செய்த பின் (-) மைனஸ் குறி அடித்தால் ன்-என்ற எழுத்து ந்-ஆக மாறிவிடும். ந - டைப்பிங் செய்ய w உபயோகப் படுத்தலாம் என்று எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. நண்பர்கள் இதைப் பற்றி பகிர்ந்து கொண்டாலே தெரியவரும். இப்போது இன்னும் சற்று விவரமாக பார்ப்போம். “இந்த” எனும் வார்த்தையை தட்டச்சு செய்ய iwtha என்று உள்ளிடுவது ஒரு முறை, மற்றொரு முறை in-tha என்று அடிக்க வேண்டும். ஆம், முதலில் ஒரு எழுத்துவந்து அதன் பின்னே n-அடித்தால், ன்- தான் வரும், ந்- வராது. இது ஒரு சிறிய விஷயம். ஆனால் விளக்குவதற்கு இவ்வளவு வரிகள் தேவைப்படுகிறது. மேலும் இப்போது அனைத்து மொழி உள்ளீடு செய்யும் மென்பொருள் கருவிகளிலும், ஆட்டோ கரெக்ட் வசதி செய்துள்ளதால், தானாகவே நாம் தட்டச்சு செய்யும் போது வரும் சில பிழைகள் திருத்தப்பட்டு விடுகின்றன. எனக்கும் ந்-க்கு w-அடித்து பழக்கமாகி விட்டது. இதுவரை 5 முறை கூகுள் தமிழை எனது கணினியில் நிறுவிட்டேன். இதுவரை கூகுள் இன்புட் டூல்ஸ் விண்டோவை என் டெஸ்க்டாப்பில் கண்டதில்லை. மேலும் கூகுள் தமிழில் அடிக்கும் போது வார்த்தை வார்த்தையாக காண்பித்து பின் ஸ்பேஸ் பாரை தட்டியதும் தமிழ் வார்த்தை வருகிறது. இந்த முறையில் ஒரு எழுத்தை திருத்தவேண்டும் என்றால் சிரமமாக உணர்ந்தேன். இதையெல்லாம் கருத்தில் கொண்டே NHM கருவியை நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன்.
   உங்களிடம் ஒரு கேள்வி, கூகுள்சிரி தளம் உங்களுடையதா?

   Delete
  2. கூகிள்சிரி தளம் என்னுடையது அல்ல. கூகிள்சிரி தளத்தார் என்னையும் ஒரு அட்மினாக இணைத்துக்கொண்டனர். இன்னும் பல பதிவர்களுக்கு கூகிள் ஐஎம்இ பற்றி தெரியவில்லை. எனக்கும் நண்பர் ஒருவர் தான் பரிந்துரை செய்தார். நீங்கள் சொல்வதுபோல் கூகிள் ஐஎம்இ யில் சில எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்யமுடியாது. சற்று நிறுத்தி பாதியாக பிரித்து தான் அடிக்கமுடியும். கூகுள் இன்புட் டூல்ஸ் விண்டோவை டெஸ்க்டாப்பில் கண்டதில்லை என்று கூறி இருந்தீர்கள். இதோ இதை எனேபில் செய்வதற்கான வழிமுறை. தாங்கள் பயன்படித்துவது windows 7 எனில் இந்த முறையை பயன் படுத்தவும். goto control panel>click region and language> select keyboard and languages> click change keyboard>select language bar> select docked in the task bar > click apply and ok... finish it. இவ்வளவு தான் நண்பரே. கீழே இரவின் புன்னகை, எத்தனம் என்பதை தான் எட்பிதனம் என்று தவறாக தட்டச்சு செய்து விட்டார். இன்று ஒரு நகைச்சுவை பதிவு எழுதிள்ளேன். படித்து பார்த்து கருத்துரை தெரிவிக்கவும்..http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html

   Delete
  3. நண்பர் சேகர், என்னுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்ததற்கு நன்றி. நானும் கூகுள்சிரி தளத்தில் ஒரு அட்மினாக இருக்கின்றேன். அங்கு ஏதும் பதிவிடுவதில்லை. நண்பர் இரவின் புன்னகையின் எழுத்துப் பிழைக்கு விளக்கம் அளித்ததற்கு மிக மிக நன்றி.
   உங்களின் முந்தய பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் முன்பே,கூகுளை மீண்டும் நிறுவிப் பார்த்த பின்புதான் என் பதிலை பதிவு செய்தேன். நீங்கள் சொன்ன வழிமுறையை ஏற்கெனவே செயல்படுத்தி, கூகுள் இன்புட் டூல்ஸும் வந்துவிட்டது. நாம் வேர்டோ அல்லது ஏதேனும் தளத்திலோ இருக்கும்போது மட்டுமே, வெளிவருகிறது, மற்ற சமயங்களில் மறைவாகவே இருக்கின்றது. இன்புட் டூல்ஸ் எனேபிள் ஆனபிறகு ஒரு குழப்பம் ஏற்பட்டது பாருங்கள், அப்படி ஒரு இமாலய குழப்பம். ஒவ்வொரு ப்ரொவ்சர் டேப் மாறும் போதும் தமிழுக்கு மாறிவிடுகிறது. தொடர்ந்து வேலை செய்ய தடையாக இருந்ததால் நீக்கிவிட்டேன். நண்பரே, உங்களை வருத்தப்படச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. கூகுளை விட NHM WRITER-ரே எனக்கு இலகுவாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் NHM உபயோகித்தீர்களா, அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் கூகுளை உபயோகிக்க மாட்டீர்கள். காரணம், ஆங்கில கீ போர்டில் தமிழ் அடிக்கும் போது, வார்த்தை வார்த்தையாக வருவதை விட எழுத்துக்களாக வருவதே சிறப்பு. உங்கள் முடிவை பரிசீலனை செய்யலாம் என்பது என் உள்ளக் கருத்து. கட்டாயப் படுத்தவில்லை. உங்களை இரவின் புன்னகையின் தளத்தில் நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு வந்தேன். அவருடைய பதிவை விட என் பின்னூட்டம் மிகப் பெரிது. 4000 எழுத்துக்களுக்கு மேல் போனதால், தனித்தனியாக பிரித்துப் போட்டிருக்கின்றேன். முடிந்தால் பாருங்கள்.
   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
  4. நானும் NHM Writer உபயோகித்து பார்கிறேன் நண்பரே.

   Delete
  5. Google IME ல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற Ctrl+g என்ற விசையைத் தட்டினால் எளிதாக உடனே நம்மால் மாற இயலும் நண்பரே...

   Delete
 14. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

  இப்படிக்கு
  Azhahi.Com

  ReplyDelete
 15. நண்பரே, எட்பிதனம் வழியாக இங்கு வந்துள்ளேன். இனி வழக்கமாக வருகைப்புரிகிறேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் இரவின் புன்னகைக்கு வணக்கம்,

   வருகை புரிந்ததற்கு நன்றி நண்பரே. “எட்பிதனம்” என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.
   நானும் உங்கள் தளத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளேன். படித்த பதிவு, மறுபிறப்பு பற்றிய உங்களது முதல் பதிவு.

   அன்புடன்,
   பாலாஜி சுந்தர்.

   Delete
  2. 'எட்பிதனம்'---> நண்பரே இதுவும் கூகிள் தமிழ் உள்ளீடு உபயோகித்ததன் விளைவு தான். எத்தனம்' என்பதே சரியானது. தங்கள் வருகைக்கும், என் பதிவை விட பெரிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்... தாங்கள் மற்ற பதிவுகளையும் படித்து தங்கள் உயர்ந்த கருத்துகளை கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... நண்பரே...

   Delete
  3. இரவின் புன்னகையாரே, சற்று முன்பே நண்பர் சேகர் எட்பிதனம் என்பதை விளக்கிவிட்டார். நீங்கள் கூகுள் தமிழை மாற்ற நல்ல ஒரு காரணம் தானாகவே ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலத்தை விட தமிழில் அதிக எழுத்துக்கள். மேலும் பெரிய கொம்பு, சிறிய கொம்பு, மேல் கொம்பு, கீழ் கொம்பு, துணைக் கால், சிறிய ன, பெரிய ண, பிறகு ந என்று பல எழுத்துக்கள். இப்படிச் சொல்வதால் தமிழை குறை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். உலகின் சிறந்த மொழிகளில் தமிழும் ஒன்று. இறைதன்மை நிறைந்த ஒரே மொழி தமிழ். முருகப் பெருமானும், தமிழும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, தமிழ்ச்சங்கத்தின் மூலமாக தமிழ் வளர்த்த நாடு நம் தமிழ்நாடு. இயல், இசை, நாடகம் என்று தமிழ் வளர்ந்து வந்திருக்கிறது.
   அரசு உத்யோகம் செய்து, ரிட்டயர் ஆன பின்பும் அதில் ஹிந்தி வகுப்புகளை நடத்தும் ஒரு பெரியவர், பண்டிட் என்ற நிலைக்கும் மேலே போய் ஹிந்தியை கரைத்துக் குடித்தவர். அவர் ஒரு தமிழர். ஒரு முறை அவர் பாடம் நடத்தும் போது ஒரு விஷயத்தை சொன்னார். ஹிந்தியில் ஒரு உச்சரிப்பை நான்கு விதமாக உச்சரிப்பார்கள். ஆனால் தமிழ் அப்படியில்லை, எனென்றால் தமிழ் மொழியில் இருக்கும் சொல் வளமே அதற்கு காரணம். ஹிந்தியில் சொல் வளம் இல்லை அதனாலேயே ஒவ்வொரு வார்த்தைக்கும் நான்கு விதமான உச்சரிப்பு என்று கூறினார்.
   தமிழைப் பொறுத்தவரை எனக்கு உடன்பாடில்லாத விஷயம், அனைத்தையும் கட்டாயமாக தமிழாக்கம் செய்ய வெண்டும் என்று பேக்கரியை அடுமணை என்பதும், சுடுமணை என்பதும் தான் என்னை சங்கடப் படுத்துகிறது. இதுபோல் செய்வது தமிழை வளர்க்காது, பிரபலப் படுத்தாது, அனைவரிடமும் கொண்டு சேர்க்காது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ் வளர வேண்டும் என்றால் அது மற்ற மொழிகளிலுள்ள வார்த்தைகளையும், பெயர்களையும், அவசியமானால் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கேள்வி, சைக்கிள் டயரை எப்படி தமிழி அழைப்பீர்கள், சைக்கிள் ட்யூபை எப்படி தமிழில் அழைப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.

   Delete
  4. எனக்கு நீங்கள் கூறிய மென்பொருளை உபயோகிக்கும் போதும் சில பிரச்சனைகள் எழுகின்றது. எந்த தமிழ் வார்த்தைக்கு எந்த விசையை தட்டுவது என்று எனக்கு தெரியவில்லை... உதவுங்களேன்...

   Delete
 16. என்ன பல நாட்களாக பதிவுகளை காணவில்லை?

  ReplyDelete
 17. நண்பரே, இனிய ப்ரண்ட்ஷிப் தின வாழ்த்துக்கள்.

  நீங்கள் கேட்டதற்காகவே இன்று ஒரு சிறிய பதிவு.

  புத்தக கண்காட்சியில் நீங்கள் நிரம்ப பிஸியாகி விட்டீர்களா. என்ன புதிய காமிக்ஸ்களை பார்த்தீர்கள்?
  அப்படி புதிய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் நாங்களும் அவைகளை அடைவதற்கான வழிகளை தெரிந்து சொல்லுங்களேன்.

  உங்கள் ஊரில் அதிக மின்சார தடை உள்ளதா?

  அடுத்த பதிவு தாமதமானதற்கு வேலைப் பளுவும், கவனச் சிதறலே காரணம்.

  உங்கள் இமெயில் இன்பாக்ஸை செக் செய்யவும். அங்கு தனியாக ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன்.

  உங்கள் அக்கறையான விசாரணைக்கு நன்றி நண்பரே.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் தின வாழ்த்துகள்

   Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.