Saturday, 14 July 2012

FRANK MILLERS  sin city

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜெரோமோ அல்லது சிறப்பு வெளியீடு புத்தகமோ இன்னும் கைக்கு வராத நிலையில், என்னுடைய மனம் கவர்ந்த சில காமிக்ஸ் விஷயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் இப்போது கையாள்வதற்கு எடுத்திருக்கும் கருப்பொருள் என்னவென்றால், ஒரு காமிக்ஸ் கதை எப்படி படமாக்கப் பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கவே.

உங்கள் அனைவருக்கும் காமிக்ஸ் ஓவிராக பிரபலமான, திரு. ஃப்ராங் மில்லரை தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரு முகவுரையாக அவரைப்பற்றி சில வார்த்தைகள் இங்கு கூறி விடுகின்றேன். ஃப்ராங்க் மில்லர் பிறந்தது ஜனவரி 27, 1957. இவர் ஒரு அமெரிக்க காமிக்ஸ் புத்தக எழுத்தாளர், வரைகலை நிபுணர் மற்றும் திரைப்பட இயக்குனரும் கூட. இவருடைய சில காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்கள் வெகு பிரபலமானவை. அவற்றுள் சில ரானின், டேர்டெவில், 300, சின் சிட்டி, பேட்மேன்: தி டார்க் க்னைட் ரிட்டர்ன்ஸ். 300 என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார் (தமிழில் 300 பருத்திவீரர்கள் என்ற பெயரில் வெளிவந்தது). தி ஸ்பிரிட் என்ற திரைப் படத்தை இயக்கி இருக்கின்றார். இவரது சின் சிட்டி என்ற கிராபிக் நாவலை தழுவி எடுக்கப் பட்ட அதே பெயருள்ள படத்திற்கு இணை இயக்குனராக இருந்திருக்கின்றார். இந்த சின் சிட்டி கிராபிக் நாவல் முழுக்க முழுக்க முழுக்க அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரம். பெயரைப் பார்த்ததுமே தெரிந்திருக்கும், கொடூரமான பாவங்களைச் செய்ய துளிகூட தயங்காத மக்கள் நிறைந்திருக்கும் பேசின் சிட்டி என்னும் ஒரு கற்பனை நகரத்தைப் பற்றிய கதை. ஆனால் இது ஒவ்வொரு (அடல்ட்) காமிக்ஸ் ரசிகரும் ரசிக்க வேண்டிய ஒரு கிராபிக் நாவல். இவரது படைப்புக்கள் இன்றும் பரபரப்பாக விற்பனையாகின்றது.

1986-ல் ஃப்ராங்க் மில்லரின் படைப்புக்களிலேயே என்றும் நிலைத்திருக்கும் ஒரு காவியமாக தி டார்க் க்னைட் ரிட்டர்ன்ஸ் காமிக்ஸ் வெளியானது. இந்த காவியம், இதற்கு முன் 50 வருடமாக வெளிவந்து கொண்டிருந்த பேட்மேன் காமிக்ஸுக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில் அமெரிக்க காமிக்ஸ் பதிப்பாளர்கள், எல்லா வகையான அந்த மேன், இந்த மேன் அந்த கேர்ள், அந்த உமன் என்ற பெயரில் புத்தகங்களை வெளியிட்டு காமிக்ஸ் கதைகளில் ஒரு தொய்வு ஏற்பட்டது. இந்த புதிய பேட்மேன் பரிமாணம், காமிக்ஸ் இண்டஸ்ட்ரியில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது. இவரது படைப்புக்கள் காமிக்ஸ் உலகின் எல்லைகளை மீண்டும் பெரிய அளவில் விரிவடையச் செய்ததுடன், காமிக்ஸ் புத்தகங்களிலும், கேரக்டர்களிலும் ஒரு புதிய வரைகலை தொழில் நுணுக்கம் வளர வழி செய்தது. இவரது சித்திரங்களெல்லாம் தெளிவாகவும், தனித்தன்மையுடனும், பலமாகவும், மாறுபட்ட வடிவங்களிலும், உருவங்களிலும் வரையப்பட்டு இருக்கின்றது.

ஃப்ராங்க் மில்லரின் ஓவியங்கள் ஹூயூகோ ப்ராட் (1927 – 1995) என்ற ஓவியரின் ஸ்ட்ரோக்ஸ் ஸ்டைலை பவுண்டேஷனாக கொண்டு, ஆனால் முற்றிலும் மாறுபட்டு வரையப்பட்டுள்ளது. ஹூயூகோ ப்ராட் பல காமிக்ஸ்களை உருவாக்கியிருக்கின்றார். நமது இரும்புக் கை மாயாவி கதைகளை வெளியிடும் ப்ளீட்வே நிறுவனம், ஹுயூகோ ப்ராட்டினுடைய வார் காமிக்ஸ்களை வெளியிட்டு இருக்கின்றது.


ஓவியர் ஹூயூகோ ப்ராட் வரையும் முறை

ஃப்ராங்க் மில்லர் ஓவியங்களை உருவாக்க கையாளும் உத்திகள் ஹூயூகோ ப்ராட் முறையை சிறிது சார்ந்து இருந்தாலும், மில்லரின் ஸ்ட்ரோக்ஸ் இதுவரை வேறு யாரும் உபயோகப் படுத்தாத புதிய முறையாக இருந்தது. ஃப்ராங்க் மில்லரும் அவரது சின் சிட்டி காமிக்ஸை ஓவியர் ஹுயூகோ ப்ராட்டுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.


எனக்கு ப்ரான்க் மில்லரின் காமிக்ஸ்களின் மேல் ஆர்வம் ஏற்பட காரணம் இவரது சின் சிட்டி திரைப்படம். ஃப்ராங் மில்லர் இணை இயக்குனராக சின் சிட்டி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் வெளியான வருடம் 01.04.2005.


எனக்குத் தெரிந்தவரை ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில், முழுநீள திரைப்படம், ஒரு காமிக்ஸைப் போல, இன்னும் சற்று மேலே சொல்லவேண்டுமானால் காமிக்ஸாகவே உணரும்படி தயாரிக்கப் பட்ட திரைப்படம் “சின் சிட்டி”.

எப்போதும் அடல்ட் கேட்டகரி படங்களை வாங்குவது கிடையாது. வாங்கிய படங்களில் நியூடிட்டி அதிகமாக இருந்தால் அதை வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுவேன். அது போல் திருப்பிக் கொடுத்த படத்தை உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் லேக் ப்ளேசிட் 3 என்கிற படம். ஆனால், இந்த படத்தை வாங்கிய போது இது ஒரு அடல்ட்ஸ் காமிக்ஸ் கேட்டகரி என்று தெரிந்தே வாங்கினேன். வாங்கியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இந்தப் படத்தை இயக்கியது ராபர்ட் ராட்ரிக்ஸ் (டெஸ்பராடோ, ப்ரம் டஸ்க் டில் டாவ்ன்(DAWN)) மற்றும் ஃப்ராங்க் மில்லரோடு கௌரவ டைரக்டராக க்வேண்டின் டேரண்டினோ (கில் பில் 1 & 2) சேர்ந்து இயக்கியது என்பதாலும், மேலும் ப்ரூஸ் வில்லீஸ் நடித்திருப்பதால்.

வீட்டிற்கு வந்து பிரிண்ட் எப்படி இருக்கிறது என்று செக் செய்ய கொஞ்சம் பார்வர்ட் செய்து பார்த்த போது வந்த முதல் காட்சியே அடல்ட் காட்சிதான். புரூஸ் வில்லீசும் சட்டென்று கண்ணில் படவில்லை. அப்போது எஜக்ட் செய்து கவரில் போட்டு வைத்ததுதான். இந்தப் படத்தின் டைரக்டர் பட்டாளமும், ப்ரூஸ் வில்லீசும் கனவில் வந்து இந்த படத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டதனால், வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கவில்லை. பிறகு பார்க்காமலேயே சில மாதங்கள் வைத்திருந்து, பிறகு டேபிளை சுத்தம் செய்யும் போது பழைய படங்களுடன் சேர்த்து மொத்தமாக ஒழித்து எடுத்து ஒரு ஷெல்பின் மூலையில் வைத்து விட்டு மறந்து விட்டேன்.

இது நடந்து சில மாதங்கள் ஆன பிறகு எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலே ஓய்வெடுக்கும் சூழ்நிலை சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஆங்கில தினசரி பேப்பரிலோ அல்லது ஏதோ ஒரு ஆங்கில இதழிலோ ஒரு செய்திக் கட்டுரை வெளி வந்திருந்தது. அந்த கட்டுரையில் ஓவியர் ஃப்ராங் மில்லரைப் பற்றியும், அவரது சின் சிட்டி காமிக்ஸைப் பற்றியும், அந்த காமிக்ஸ் கதை எப்படி சின் சிட்டி திரைப்படமாக உருவாக்கப்பட்டிருகிறது என்றும் விளக்கப்பட்டிருந்தது. சின் சிட்டி படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகையர் பெயர்களும் கூறிப்பிடப் பட்டிருந்தது, அந்த பெயர்களில் என் கவனத்தைக் கவர்ந்தது ப்ரூஸ் வில்லீஸ். ஏனெனில் என்னுடைய ஆதர்ச கதாநாயகர்களின் வரிசையில் முதன்மையில் இருக்கும் பத்து கதாநாயகர்களில் ப்ரூஸ் வில்லீஸும் ஒருவர். அந்த கட்டுரையில் காமிக்ஸ் ஓவியப் படங்களை, திரைப்பட காட்சியுடன் ஒப்பிட்டு ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த கட்டுரையை படித்து முடித்த உடன், ஒரு குட்டி பகல் தூக்கம் போட்ட போது மீண்டும் டைரக்டர் பட்டாளமும், ப்ரூஸ் வில்லீசும் கனவில் வந்து இன்னமும் ஏன் சின் சிட்டி படத்தைப் பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டார்கள். சத்தியமாக சொல்கிறேன் இந்த நான்கு பேர்தான் வந்தார்கள். ஏனோ தெரியவில்லை இந்த படத்தில் நடித்த நடிகைகள் யாரும் வரவில்லை. இந்த படத்தில் நடித்த மிக்கி ரூர்கேவும், அந்த மஞ்சள் முகக்காரனும் கனவில் வராதது என் நல்ல நேரம் என்று நினைக்கின்றேன். அப்படி அவர்கள் வந்திருந்தால், கனவே கெட்ட கனவாக மாறி உடல் நிலை இன்னும் மோசமாக போயிருக்கும். நல்ல வேளை தப்பித்தேன். தூங்கி எழுந்ததும், முதல் வேலையாக இந்த படத்தை ப்ரூஸ் வில்லீஸுக்காகவும், காமிக்ஸ் மீதுள்ள காதலாலும் தேடி எடுத்தேன்.
திரைப்பட அட்டையில் மேலே ப்ரூஸ் வில்லீஸின் படம் இருந்தது. ஆனால் அந்த படத்தைப் பார்த்தால் அதுதான் ப்ரூஸ் வில்லீஸ் என்று சட்டென்று எனக்கு அடையாளம் தெரியவிலை. காரணம், ப்ரூஸ் வில்லீஸின் நெற்றியில் இடம் பெற்றிருந்த மிகப் பெரிய ஆழமான, “X” வடிவ வடு கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிச் செல்லும் அமைப்பில் அவரது முகத்தை அடையாளம் காண முடிதாதவாறு செய்துவிட்டது. மேலும் அந்த தோற்றம் மிகவும் வயதான நபரைப் போன்ற முகதோற்றம் கொண்டிருந்தது. பெரும்பாலான பெரிய ஹீரோக்கள் தங்களுடைய இமேஜை பாதிக்கும் எந்த ஒரு படத்திற்கோ, உருவத்தை அடையாளம் தெரியாதவாறு மாற்றிக் கொண்டு நடிக்கும்படியான கேரக்டர்களை தவிர்த்து விடுவார்கள், ஒரு சில பேரைத் தவிர. இந்த படத்தில் ப்ரூஸ் வில்லீஸ் வயதான ரிட்டயர் ஆகப் போகும் ஒரு போலீஸ் ஆபிஸராக வருகின்றார். மேக்கப்பும் அதற்கேற்பவே இருக்கின்றது. ஓகே நண்பர்களே இதுவரை ஒரு பெரிய ட்ரைலர் ஓட்டியாகிவிட்டது. இப்போது மெயின் பதிவுக்கு வருகின்றேன். நாமெல்லாம் எடிட்டர் திரு விஜயன் அவர்களிடம், பிரகாஷ் குழுமத்தின் காமிக்ஸ்கள் அனைத்தும் முழு வண்ணத்தில் தான் இருக்க வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டுள்ளோம்.

 அப்படித்தானே ப்ரண்ட்ஸ், ஆம் என்பவர்கள் எல்லாம் கை தூக்குங்கள். ம்ஹூம், ஒருத்தரே ரெண்டு கை தூக்கக் கூடாது. ரெண்டு கை தூக்கியவர்கள் எல்லாம் ஒரு கையை கீழே இறக்குங்கள். இப்படி கை தூக்கியவர்கள் எல்லாம் சின் சிட்டி காமிக்ஸைப் படித்தால், இந்த காமிக்ஸை கருப்பு வெள்ளையிலேயே வெளியிடுங்கள் என்று கேட்போம். அப்படிக் கேட்டால் எடிட்டர் கத்தரிக்கோல் கையோடு நாம்மை துரத்திக் கொண்டு வருவது நிச்சயம். ஏன் என்றால் இந்த கதையை கத்தரிக்கோலால் வெட்டி, வெட்டி அவர் கையே காப்பு காய்த்துவிடும். நம் அன்பு எடிட்டரை இப்படியெல்லாம் நாம் துன்பப் படுத்தலாமா, நன்கு யோசித்துப் பாருங்கள். ….ப்ப்ப்பாவம் அவர், பெரிய மனது பண்ணி அவரை நிம்மதியாக விட்டு விட்டு விடலாம். இல்லை இல்லை அவரை கேட்டுத்தான் பார்ப்போம் என்றால் அப்புறம் நமது ஆர்வக் கோளாறால் முதலுக்கே மோசமாகிவிடும், சொல்லிட்டேன்.

 சின் சிட்டி காமிக்ஸ் பல பாகங்கள் வந்திருந்தாலும் முதல் நான்கு(?) புத்தக கதைகளை மையமாக வைத்து திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அந்த நான்கு கதையின் பெயர்கள் 1 - தி ஹார்ட் குட்பை / The Hard Goodbye , 2. எ டேம் டு கில் ஃபார் / A Dame To Kill For, 3. தி பிக் ஃபேட் கில் / The Big Fat Kill, 4 – தட் That Yellow Bastard


இப்போது முதலில் சின் சிட்டி காமிக்ஸிலிருந்து சில பிரமிப்பூட்டும் காட்சிகள். அதையடுத்து சின் சிட்டி காமிக்ஸ் காட்சிகளை, சின் சிட்டி திரைப்படத்தின் காட்சிகளோடு ஒரு ஒப்பீடு. பிறகு சின் சிட்டி திரைப்படம் சம்பந்தமான ஒரு அருமையான கம்பேரிசன் யூ-ட்யூப் வீடியோ லிங்க்.

என்ன நண்பர்களே, பயணத்தை தொடர்வோமா!.

சில காமிக்ஸ் காட்சிகள். அனைத்து ஓவியங்களிலும் காண்ட்ராஸ்ட் ஆக கருப்பு கலர் பிரயோகிக்கப்பட்டுள்ளது.


மேலே உள்ள படத்தில் ஒரு பல்லியை திறமையாக மறைத்து வைத்திருக்கிறார் மில்லர்.

 
 

 பனி விழும் இரவுப் பொழுது 

அடுத்து காமிக்ஸ் காட்சிகள் திரைப்படமாக பரிணாம வளர்ச்சி பெற்ற விதம் மற்றும் தொழில் நுட்பம் உபயோகப் படுத்தப்பட்ட விதம்.இப்போது ஒரு விஷயத்தை சொல்லிவிடுகின்றேன். இந்த சினிமாவை நான் பார்த்த காலம், லயன் முத்து காமிக்ஸ்கள் கிடைக்காத ஒரு வறட்சிக் காலத்தில். அந்த சமயத்தில் இந்த சினிமா பார்த்தது மனதுக்கு திருப்தி அளித்த விஷயம். சின் சிட்டி காமிக்ஸின் சித்திரங்களில் வெகு சிறப்பாக அமைந்த படங்களை மட்டுமே காமிக்ஸ் படங்களின் தொகுப்பாக பதிவிட்டிருக்கின்றேன். சின் சிட்டியின் அனைத்து சித்திரங்களும் இதே போல இருக்காது. சில சித்திரங்கள் சுமார்தான். கதையும் அதிக அளவில் நமது ரசனைக்கு ஏற்றபடி இருக்காது. ஆனால் அந்த கதை படமாக்கப் பட்டபோது, வெகு சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. பதிவின் கடைசீ கட்டத்துக்கு வந்து விட்டோம். இப்போது ஒரு சுவாரசியமான ஒப்பிடும் யூ-ட்யூப் லிங்க்.

http://www.youtube.com/watch?v=mYuF09P4l7g

கடைசியாக ஒரு போனஸ் நியூஸ். இதே சின் சிட்டி குழு, சின் சிட்டியின் அடுத்த தவனையாக இரணாவது படத் தயாரிப்பில் இருக்கின்றார்கள். அந்த குழுவில் டைரக்டர் க்வேண்டின் டேரண்டினோ இடம் பெறவில்லை நடிகர் ப்ரூஸ் வில்லீசின் கேரக்டர் முதல் படத்திலேயே முடிந்துவிடுகிறது.

ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.

12 comments:

 1. சூப்பர்... முழுசா படிச்சுட்டு வரேன்..

  ReplyDelete
 2. The comparison is superb.but i didnot like this movie and comics.

  ReplyDelete
  Replies
  1. Yes I too agree and expressed the same in the last para. What I am trying to say is the technology involved in filming the story, which created new kind of genre in film industry. I too have a aversion to too much of violence, bloodbath, gore and mutilation of parts and too much exposure of skin or nudity. The director Quentin Tarantino is top class expert in total. The other two directors are also equally talented to the Tarantino. In my view the movie is comparably better than the comics. Did you watched the movie from start to end? I doubt. Any how there is one more reason for taking this topic as the post.

   Delete
  2. இரவுக்கழுகாரே,
   //The director Quentin Tarantino is "top class" expert in total.// means that he is expert in
   //violence, bloodbath, gore and mutilation of parts and too much exposure of skin or nudity.//
   and the other two directors also equally talented to Tarantino in violence, bloodbath, gore and mutilation of parts and too much exposure of skin or nudity.
   Did you ever seen the other movies of Trantino? என் ஒபீனியன் - பிடிக்காது, ஆனா பிடிக்கும்.

   Delete
  3. நான் முழுவதும் பார்த்தேன் நண்பரே.
   எனக்கு Quentin Tarantino பிடிக்கும் நண்பரே.
   அவர் எடுத்த கில் பில் series எனக்கு பிடிக்கும்.
   ஆனாலும் சின் சிட்டி எனக்கு பிடிக்கவில்லை.

   நண்பரே word verification நீக்கினால் நன்றாக இருக்கும்.

   Delete
  4. டியர் இரவுக்கழுகு,
   உங்கள் அன்பு கோரிக்கை நிறைவேற்றப் பட்டது.
   ஆங்கில படங்களில் நிறைய பெண்கள், பிகினி உடையோடு ஏதாவது ஒரு தண்ணீர் துறையில் குளிக்கும் காட்சிகள் இருக்கும். ஒரு மாறுதலுக்கோ என்னவோ Quentin Tarantino பல படங்களில் ரத்தகளரி காட்சிகளை ரத்தக் குளியல் காட்சிகளாக காட்டியிருப்பார். இவர் பெயர் ஒரு படத்தில் எந்த வகையறாவில் இடம் பெற்றாலும், அதாவது டைரக்டராகவோ அல்லது எக்ஸிக்யூட்டிவ் புரெட்யூசராகவோ இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் நிலை இதுதான். கில் பில்லில் பல காட்சிகளில் பீய்ச்சி அடிக்கும் ரத்ததின் காரணமாக அந்த காட்சிகள் சென்சாரின் கத்தரிகோலில் சிக்கிவிடக் கூடாது என்று அந்த காட்சிகள் சட்டென்று கருப்பு வெள்ளையாக மாறிவிடும் அல்லது யாராவது மெயின் சுட்சை அனைத்து இருட்டக்கிவிடுவார்கள். இதனால் திடுக்கிட்டு, படம் பார்க்கும் நாம் நம் டிஸ்க்கிலோ அல்லது டிவியிலோ ஏதோ கோளாறு என்று நினைபோம். இதுதான் ரகசியம்.

   Quentin Tarantinoவின் ரத்தக் கொலை வெறி காட்சிகளுக்கு "HOSTEL" என்ற படம் ஒரு நல்ல உதாரணம். அந்த படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் தியேட்டரில் வாந்தி எடுத்ததாக ஆங்கில பட சேனல்களில் டாக்குமெண்டரி இண்டர்வ்யூக்கள் காட்டப்பட்டது. உண்மையிலேயே அப்படி நடந்ததா அல்லது அது ஒரு விளம்பர யுக்தியா என்பது தெரியாது.

   பாலாஜி சுந்தர்

   Delete
 3. இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று நினைத்து அமர்ந்தேன். ஆனால் ஒரு 15 நிமிடத்திலேயே பார்க்க பிடிக்காமல் நிறுத்திவிட்டேன்.

  படத்தைவிட உங்கள் பதிவு சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. டியர் கார்த்திகேயன்,
   உங்களுக்கு என் சஜஷன், முடிந்தால் யாரும் உங்களை பார்க்காத பொழுது ஒரு முறை முழுக்க பார்த்துவிடுங்கள். படம் பார்க்கும் போது பக்கத்தில் ஒரு டஸ்ட் பின் அல்லது நல்ல திக்கான ப்ளாஸ்டிக் கவர் வைத்துக் கொள்ளுங்கள், ஆபத்து நேரத்தில் துப்பாக்கியை கெட்டியாக பிடிப்பது போன்ற உணர்வில் ரிமோட்டை கையில் வைத்துக் கொள்ளுங்கள். படம் பார்க்கும் போது ஸ்நாக்ஸ் எதையும் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால் ஒரு வேளை சில சீன்களில் குமட்டலாம். அதற்குத்தான் பக்கெட்டும், ப்ளாஸ்டிக் கவரும்.
   சில பாடங்களை விருப்பமில்லாமல் படிப்போமில்லையா அது போலத்தான் சில படங்களும். விருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு முறை பாருங்கள். அப்போதுதான் மற்றவர்களிடம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறலாம். டெக்னிகல் வைஸ் பல சீன்கள் அச்சு அசலாக காமிக்ஸ் பக்கங்கள் போலவே இருக்கும். இன்னொரு விஷயம். நாலு கதைகளை ஒன்றாக இணைத்து ஒரு படமாக கோர்த்திருக்கிறார்கள். ஏறக்குறைய 4 கதைகளும் தனி ட்ராக்கில் போகும். எடிட்டிங்கில் மாறி மாறி வரும். படம் கோர்வையாக இருக்காது. நாம் தான் மனதில் பாலோ பண்ண வேண்டும். மேலும் ஒரு முக்கியமான விஷயம். 4 கதைகளுக்கான பவுண்டேஷனும் படத்தின் முதல் பாகத்தில் அதாவது இண்டர்வெல்லுக்கு முன்புவரை தனித்தனியாக வரும், இது பார்வையாளருக்கு குழப்பத்தைக் கொடுக்கும். Taste differs but we are all common in one Taste. y blood.... same blood...

   Delete
 4. பயணத்தில் இருப்பதால் விரிவான கமென்ட் இட முடியவில்லை: ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரசித்து,ரசித்து இந்த பதிவை இட்டு இருக்கிறீர்கள்.

  Welcome to QT Fan Club.

  ReplyDelete
 5. நண்பரே, தங்கள் வரவு நல்வரவாகுக.
  Hi,King Viswa,

  எனது இதயத்தை படித்துவிட்டீர்கள். ஃப்பேன் க்ளப்பில் சேர்த்த்துக் கொண்டதற்கு நன்றி. ஒரு ரிக்வெஸ்ட், நேரம் கிடைக்கும் போது உங்களது விரிவான கமெண்ட் இட வேண்டும்.
  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.