MY NAME IS WINCH, LARGO WINCH.
DEAR FRIENDS,
அனைவருக்கும் எனது வணக்கம். என் பெயர் லார்கோ வின்ச் காமிக்ஸ் புத்தகத்தை படித்தவுடன் மனதில் எழுந்த உணர்வுகளை இங்கு வரிசைப்படுத்தியுள்ளேன்.முதலில் அமைதி, சந்தோஷம், உற்சாகம். மீண்டும் இரண்டாவது முறை படித்தேன்.
எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு எனது பாரட்டுகள். லயன் கம் பேக் ஸ்பெஷலில் ஆரம்பித்த உற்சாக வண்ண திருவிழாவை என் பெயர் லார்கோ மூலம் தொடர்கிறார்.
கம் பேக் ஸ்பெஷலுக்கும், என் பெயர் லார்கோவுக்கும் இடையே எமனின் தூதனுக்கு* உதவிட *ஒரு குள்ளநரியையும், தூக்கத்தில் இருந்த கொலைகாரனையும்*, தலையை* வெட்டி ஆர்ப்பட்டம் பண்ணும் ஒரு குரங்கையும் அனுப்பி மனதில் கிலியை கிளப்பினார் எடிட்டர். (மேலே * உள்ள இடங்களில் *டாக்டர் 7/ *விண்ணில்/ *கலைஞன்/ *வாங்கிக் குரங்கு சேர்த்து படிக்கவும்). கிலி ஏற்பட்டதற்கு காரணம், இடையே வந்த 4 புத்தகங்களில் 2 மறுபதிப்பு. நான்கு புத்தகங்களின் மொத்த விலை 10+10+10+25=55. ரூ.55ல் 2 புதிய கதைகளுக்கு 20ம், பழைய மறுபதிப்பு புத்தகங்களுக்கு ரூ.35. இந்த கணக்கை போட்டு பார்த்ததினால்தான் கிலி வந்தது. மற்றும் ஒரு காரணம் உள்ளது. அதாவது கம் பேக் என்று சொன்னதின் அர்த்தம், பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்வதுதான் என்றாகிவிடப் போகின்றது என்பது இரண்டாவது காரணம். நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் என்பதற்கேற்ப என்னுள் ஏற்பட்ட பயத்தை லார்கோவைக் கொண்டு விரட்டி விட்டார் எடிட்டர்.
இந்த புத்தகத்தின் "TAG LINE ”முத்து காமிக்ஸ் சர்ப்ரைஸ் ஸ்பெஷல். 154 பக்கங்களிலும் புதிய கதையை, முழுக்க வண்ணத்தில் வெளியிட்டால் திருஷ்டி பட்டுவிடும் என்று நினைத்தோ என்னவோ, இந்த புத்தகத்திலும் 48 பக்கத்திற்கு திகில் காமிக்ஸின் முதல் இதழை மறுபதிப்பாக போட்டிருக்கின்றார். 1986ல் வந்த முதல் திகில் காமிக்ஸ் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது இந்த திகில் கதையை படித்தேன், 1986ல் கிடைக்காததே நல்லது என்று தோன்றியது (இப்படி நான் சொல்லவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம், கிடைக்கும் காமிக்ஸ் எதையும் வாங்காமல் விடுவதில்லை என்று உறுதி பிரமாணம் எடுத்திருக்கின்றேன்). இரண்டு திகில் கதைகளும் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.
I THINK I AM OUT GROWN TO THIS GENRE. இந்த இரண்டு திகில் கதையைவிட அதிக திகில் ஏற்படுத்தியது எடிட்டரின் காமிக்ஸ்-டைமில் இன்னும் இரண்டு திகில் கதைகள் மறுபதிப்புக்கு தயாராக இருக்கின்றது என்ற அறிவிப்பே. இந்த மூன்று திகில் கதைகளையும் அழகாக!? ஸ்கேன் எடுத்து கொடுத்த டாக்டர் சதீஷுக்கு, எடிட்டர் நன்றி சொல்லியிருக்கிறார். அட இந்த சோதனைக்கு நம் வாசக இனத்தை சேர்ந்த ஒருவரே காரணமாகிவிட்டார். அவர் மருத்துவ டாக்டராக இருந்தால் நிச்சயம் சர்ஜனாகதான் இருப்பார். பிலிப் காரிகன் டாக்டரை தேடி வருவார் என்று நினைக்கிறேன். லார்கோ புத்தகத்திலிருக்கும் இரண்டு திகில் கதைகளையும் படித்த பின் டாக்டர் சதீஷ் அவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தேன். ஏற்கெனவே அவரிடம் நல்ல நிலையில் இருந்த புத்தகத்தைத்தான் ஸ்கேன் செய்து கொடுத்திருக்கிறார். இப்போது மீண்டும் அதே கதையை லார்கோவுடன் மறுபதிப்பாக வாங்க வேண்டிய நிலை. நிச்சயம் ஸ்கேன் செய்து கொடுத்ததற்கு, தன் வினை தன்னை சுட்டு விட்டதே என்று நிச்சயம் வருத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கின்றேன். FRIENDS JUST JOKING. டியர் டாக்டர் சதீஷ், உங்களது ஆர்வத்திற்கும் நன்கு ஸ்கேன் செய்ததிற்கும் என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப 48 பக்க ப்ளாக் & வொயிட் பக்கங்களைப் பற்றியும் அந்த கதகளைப் பற்றியும் இதற்குமேல் சொல்வதற்கு ஏதும் இல்லை.
சுவையான கனியைப் போன்ற, உள்ளத்தை கொள்ளை கொள்ளும், வண்ண மயமான என் பெயர் லார்கோ பற்றி, காமிக்ஸ்-டைமில் லார்கோ கேரக்டருக்கு மிகச் சரியான முன்னுரை கொடுத்துள்ளார் எடிட்டர்.
இதயத்தை கொள்ளை கொள்ளும் ஆக்ஷன் சித்திரங்கள். வான் ஹெம்மி தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலம், வாசகர்களின் இதய சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கின்றார். இந்த கதையும் சித்திரங்களும் மனதை விட்டு அகலாது. சில சினிமாக்களையோ அல்லது கதைகளையோ படித்த பின் இரண்டொரு நாட்களுக்கு அது என் மனதிலேயே ஒடிக் கொண்டிருக்கும். அந்த லிஸ்ட்டில் லார்கோவும் சேர்ந்து கொண்டார்.
மேலை நாடுகளில் காமிக்ஸ் கதைகளின் உருவாக்கமும், திட்டமிடலும், தயாரிப்பும், ஒரு ஹாலிவுட் திரைப்பட முறையிலேயே தயாரிக்கப் படுகின்றது. அதற்கு சாட்சி லார்கோ. W-குரூப் என்று கூறும் போது மனதில் தோன்றுவது, ஹாலிவுட் வார்னர் பிரதர்ஸ் கம்பெனியை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
இப்போதெல்லாம் பல காமிக்ஸ் கதாசிரியர்கள், வரைகலை நிபுணர்கள், ஆங்கில பட தயாரிப்புகளில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்களில் வான் ஹெம்மியும் ஒருவர். வான் ஹெம்மியின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பு லார்கோ கேரக்டர்.
என் பெயர் லார்கோவின் கதையோட்டத்தை ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதையை போல கொண்டு சென்றிருக்கிறார் கதாசிரியர். படம் வரைந்தவர் அந்த கதையை அப்படியே சினிமா ஸ்டில்ஸ் ஆக உருவாக்கி நம் கண் முன் நிறுத்துகின்றார்.
காமிக்ஸின் ஒவ்வொரு ப்ரேமும், ஆக்ஷன் பட ஸ்டில்லை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு ப்ரேமும் வைட் ஆங்கிள் வியூவிலும், ஜூம் வியூவிலும், சில இடங்களில் ஈகிள் ஐ வியூவிலும், அகேலா க்ரேன் வியூவிலும் மாறி மாறி வந்து என்னை புரட்டிப் போட்டு விட்டது. எடிட்டர் சொன்னது போல இது ஒரு மைல் கல் இதழ்தான்.
எடிட்டரின் தமிழாக்கம் வெகு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு ப்ரேமிலுள்ள பலூன்களும் படத்தின் அழகை மறைக்காமல் இடம் பெற்றுள்ளது. எழுத்துக்கள் நன்கு சிறப்பாக அமைந்துள்ளது.
காமிக்ஸ் லார்கோ, சினிமா லார்கோவின் தோளோடு தோள். |
சரி இப்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகின்றேன். என் பெயர் லார்கோவை படித்து முடித்தவுடன் செய்த முதல் காரியம், 2008-ல் வெளியான லார்கோ வின்ச் சினிமாவை பார்த்ததுதான். முதல் பார்ட் லார்கோ வின்ச், இரண்டாவது பார்ட் தி பர்மா கான்ஸ்பைரசி. இரண்டுமே பிரமாதமான படங்கள். இந்த இரண்டு படங்களையும் பார்த்த உடன், ஹாலிவுட் படங்களே பிரம்மாண்டமானவை என்று நினைத்திருந்த எண்ணம் தகர்க்கப்பட்டது. பிரெஞ்ச் சினிமாவின் மேல் தனி மரியாதை தோன்றியது.
நெரியோ வின்ச் |
சிறையிலிருந்து தப்பிக்கும் லார்கோ |
2001-லேயே லார்கோ வின்ச் படமாக தயாரிக்கப் பட்டிருந்தாலும், 2008ல் முதல் பாகமும் 2011ல் இரண்டாம் பாகமும் வந்திருக்கின்றது. இந்த இரண்டு படத்திலும் டொமர் சிஸ்லே என்னும் ப்ரெஞ்ச் நடிகர் லார்கோவாக நடித்திருக்கின்றார். இந்த இரண்டு படங்களின் தயாரிப்பு குழுவிலும் வான் ஹெம்மி இடம் பெற்றிருக்கின்றார்.
தனித்தீவை நோக்கி படகுப் பயணம் |
லார்கோவிற்கு சொந்தமான தனித்தீவு. காமிக்ஸிலிருக்கும் அதே அமைப்புடன். |
ஒவ்வொரு லார்கோ காமிக்ஸ் ரசிகரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். என் பெயர் லார்கோ வின்ச் காமிக்ஸை படிக்கும் போது, இந்த கதை ஒரு ஹாலிவுட் படத்தைப் போல உருவாக்கப் பட்டிருக்கின்றது என்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் படத்தை பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்பட்டதென்றால், லாக்கோ வின்ச் ஆங்கில படத்தை ஹாலிவுட் படத்தைப் போல எடுத்திருக்கின்றார்கள். ஆம் காமிக்ஸ் கதையில் வரும் ஆக்ஷன் சீன்களும் இருக்கின்றது, மேலும் காமிக்ஸில் இல்லாத வேறு வகையான பல நிறைய ட்விஸ்ட்டுகளும் இருக்கின்றது. காமிக்ஸை படித்துவிட்டு அதே கதை தான் படமாக்கப் பட்டிருக்கும் என்று நினைத்து சினிமாவை பார்த்தால் நமக்கு ஆச்சரியம் தான் ஏற்படும். அந்த ட்விஸ்ட்களைப்பற்றி இங்கு நான் கூறிவிட்டால், இனி இந்த சினிமாவை பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் போய்விடும்.குறிப்பு: இந்த இரண்டு சினிமா படமும் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல,இல்லையென்றால் உங்கள் ரிமோட்டின் பாஸ்ட் பார்வர்ட் பட்டன் நன்கு வேலை செய்கின்றதா என்று தெரிந்துகொண்டு ஹாட் சீட்டில் அமரவும்.
இந்த படத்தின் முகப்பு ஸ்டில்லை இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாக்காரர்களும் தமிழ் பட உலகையும் சேர்த்து காப்பியடித்துக் கொண்டுள்ளார்கள். இளைய தளபதி விஜயின் யொஹானும் அதில் ஒன்று. கதையையும் சுட்டுவிட்டார்களா அல்லது சுவையில்லாத ஓட்சுக்கு, இந்தியாவில் இப்போது மசாலா சேர்த்து விற்பது போல ஒரிஜினல் கதையோடு நம்ம ஊர் மசாலாவைக் கலந்து விட்டார்களா என்பது படம் வந்தால் தான் தெரியும். டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன். ஏற்கெனவே ப்ராட் பிட் & மோர்கன் ப்ரீமேன் நடித்த செவன் என்கிற ஒரே படக் கதையை தழுவி காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களை எடுத்து புகழ் பெற்றவர்!.
மற்ற லார்கோ வின்ச் காமிக்ஸ் கதைகளைப் பார்த்தால் மாடஸ்டி பிளைசிக்கு அடுத்து எடிட்டர் கத்தரிக்கோலுக்கு நிறைய வேலை கொடுப்பவராக லார்கோ இருப்பார். லார்கோவும் அவரதுநண்பரும்,ஐரோப்பாவில்லிருந்து டைம் ட்ராவல் செய்து தமிழுக்கு வரும்போது தங்கள் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான, மெய்மறந்த ப்ளேபாய் நேரங்களை எல்லாம் ஒரு தேர்ந்த கத்தரிக்கோலிடம் (எடிட்டர் என்றாலே வெட்டுபவர்தானே!) இழக்கப் போவதை வருங்காலம் சொல்லும். உதாரணத்திற்கு கதையில் வரும் ஒரு படகுக்காட்சியை மேலே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.இதற்கு அடுத்த உடனடி கட்டத்திலிருக்கும் படத்தை இங்கு போட முடியாது. காரணம் அதை போட்டால் கமெண்ட் போடுபவர்களெல்லாம் பப்பி ஷேம் பாட்டைத்தான் பாடுவார்கள்.
எடிட்டர் திரு. விஜயன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த கோரிக்கையை உங்களைத் தவிர வேறு யாரிடம் கேட்பது?. மோபியஸ், ஜீன் வான் ஹெம்மி மற்றும் வில்லியம் வான்ஸ் மற்றும் அவர்களைப் போன்ற பல கதாசிரியர்களின் இன்னும் தமிழில் வெளிவராத காமிக்ஸ்களை வெளியிடுங்களேன். குறிப்பாக சயன்ஸ் பிக்ஷன் கதைகள். இந்த கோரிக்கையை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். வேண்டுமானால் முத்து காமிக்ஸின் நெவர் பிபோர் ஸ்பெஷலில் உள்ள 80 பக்க கருப்பு வெள்ளை பக்கங்களை எடுத்துவிட்டு, அதற்கு பதில் வண்ணத்தில் இந்த சயின்ஸ் பிக்ஷனோ அல்லது வேறு புதிய கதைகளையோ முயற்சி செய்யுங்களேன். இது போல் வெளியிட இருக்கும் ஜம்போ ஸைஸ் ஸ்பெஷல் புத்தகங்களில் 50 பக்கங்களை புதிய பரிட்சார்த்த முயற்சிகளுக்கு வைத்துக் கொள்ளுங்களேன். அல்லது இது போல் ஒரு ஜம்போ ஸ்பெஷலை “நெவர் பிபோர் நியூ ரிலீஸ் ஸ்பெஷல்” என்று 10 புதிய கதைகளை போட்டு அதில் அதிக வரவேற்பை பெறும் கதைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம்.
லார்கோ வின்ச் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள்.
வந்தோமில்ல பர்ஸ்ட்...
ReplyDeleteசூப்பர் பாலாஜி சுந்தர், அப்படியே டவுன்லோட் லிங்க் கொடுங்களேன்.
டியர் கார்த்திகேயன்,
Deleteபாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.
பர்ஸ்ட் கமெண்ட் இட்டு ரேஸில் முதலில் வந்ததற்கு உங்களுக்கு ஒரு பரிசு வைத்திருக்கின்றேன். வந்து கலெக்ட் செய்து கொள்ளுங்கள்.
எடிட்டர் ப்ளாகிலும், கிங் விஸ்வா அவர்களின் ப்ளாகிலும் தான் யார் பர்ஸ்ட் கமெண்ட் இடுவது என்ற போட்டி நடக்கும். இதனால் இரவுக்கழுகார் நிஜமாகவே இரவு ஆந்தையாகிவிட்டர். அவர் தூங்குவதே இல்லை என்று நினைக்கின்றேன். இங்கேயும் யார் பர்ஸ்ட் வருவது என்ற பந்தயத்தை ஆரம்பித்து விட்டீர்களா. போட்டி வரும் அளவுக்கு இந்த வலைத்தளம் அவ்வளவு முக்கியமானதில்லை என்பது எனது பணிவான கருத்து.
லார்கோ வின்ச் இரண்டு படங்களின் ஒரிஜினல் பிரிண்ட்களை துபாய் சென்று வந்த ஒரு நண்பரை வாங்கி வரச் சொன்னேன். இந்த பதிலையே உங்கள் மெயிலுக்கும் அனுப்பியுள்ளேன்.
கார்திகேயன், ஏன் உங்கள் வலைப்பூவில் பதிவுகள் ஏதும் இடுவதில்லை. உங்கள் வலைப்பூ வாடி இருக்கின்றது கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
Karthikeyan.You can easily get the Torrents(Like in Pirate bay) in the internet.I have used that to see the movie long back.Hope this is helpful.
DeleteSuper Baalaji.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை.என் பெயர் லார்கோ வின் விமர்சனங்களில் உங்களுடையதுதான் சிறந்தது என்பேன்.
அருமையாக விளக்கி உள்ளீர்கள்.
கூடவே படங்களை பற்றியும் கூறியது அட்டகாசம்.
நான் இரண்டு படங்களையும் முத்துவில் வருவதற்கு முன்பே பார்த்துவிட்டேன்.
மிகவும் நன்றாக இருக்கும்.
லேட்டாக வந்தாலும் லேடெஷ்ட்டாக வந்துள்ளீர்கள்.
அந்த இரு லார்கோவின் ஸ்கெட்ச் உங்களுடையா கைவண்ணமா.
Deleteடியர் இரவுக்கழுகு,
Deleteஉங்கள் பாராட்டுக்கள், உங்கள் தாராளமான மனதைக் காட்டுகிறது. உங்களுக்கு என் நன்றிகள் பல. நான் எப்போதுமே தாமதமாகத்தான் இருப்பேன். இதன் காரணம் என்றேனும் ஒரு நாள் உங்களுக்குத் தெரிய வரும். ஆனால் எனக்குத்தான் எப்போதுமே காரணம் தெரியாது.
ஆம். அந்த லார்கோவின் படத்தை FACE TO FACE லார்கோவாக செய்தது எனது பேட்டோஷாப் வேலைதான். ஆனால் ஸ்கெட்ச்சுக்கு சொந்தக்காரர், ஒரிஜினல் லார்கோவின் வரைகலை கர்த்தா Mr.Philippe Francq.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
இவ்வளவு விளக்கமான பதிவை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே!
ReplyDelete//ஜேம்ஸ் பாண்ட் கதையை போல கொண்டு சென்றிருக்கிறார் கதாசிரியர். படம் வரைந்தவர் அந்த கதையை அப்படியே சினிமா ஸ்டில்ஸ் ஆக உருவாக்கி நம் கண் முன் நிறுத்துகின்றார்.//
இந்த படத்தை பார்ப்பதற்க்கும் ஆவளாகத்தான் உள்ளது .
டியர் ஸ்டாலின்,
Deleteஉங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம். அதிக லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் இரண்டு படங்களுமே ஆனித்தரமான,வியப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் நிறைந்த சினிமா படம்.
முதல் படத்தின் துவக்கத்திலிருந்தே, காமிக்ஸ் கதைக்கு சம்பந்தமே இல்லாதவாறு திருப்பத்தை வைத்திருக்கின்றார்கள்.
இரண்டாவது படத்துக்கான காமிக்ஸ் இன்னும் தமிழில் வெளியாகாததால் அதைப் பற்றி ஏதும் ஒப்பிட்டுக் கூற முடியவில்லை.
உங்களிடம் ஒரு கேள்வி: எடிட்டர், முத்து காமிக்ஸின் நெவர் பிபோர் ஸ்பெஷல் பற்றி பதிவிடபோவது உங்களுக்கு முன்பே தெரியவந்தது எப்படி என்று கூற முடியுமா?
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
ஆசிரியரிடம் அன்று பேசும்பொழுது இன்று இரவு ஒரு வதிவு வருகிறது என கூறினார் . மற்றபடி என்ன பதிவு என்று நான் அவரிடம் கேட்கவில்லை.
ReplyDeleteநண்பர் ஸ்டாலினுக்கு வணக்கம்,
Deleteதெளிவு பெற்றேன். பதிலுக்கு நன்றி. அன்று ஆசிரியர் பதிவிடப் போகின்றார் என்று தெரிந்து, முதல் கமெண்ட் போட காத்திருந்தும் வாய்ப்பு நழுவி விட்டது. Better luck next time friend.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
//கார்திகேயன், ஏன் உங்கள் வலைப்பூவில் பதிவுகள் ஏதும் இடுவதில்லை. உங்கள் வலைப்பூ வாடி இருக்கின்றது கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்.//
ReplyDeleteநல்லாத்தான போயிட்டு இருக்கு, என் இந்த கொலைவெறி .:-)
நன்றி பாலாஜி,
உங்களை போன்ற சீனியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது நண்பரே. உண்மையில் நண்பர் விஷ்வா அவர்களின் வலைபூவால் ஈர்க்கப்பட்டு நாமும் எதாவது எழுதுவோமே என்றுதான் நினைத்தேன். ஆனால், நீங்கள் மற்றும் நண்பர்கள் சிவகாசி சௌந்தர், இரவுக்கழுகு, ப்லேடுபீடியா கார்த்திக், ஜான் சைமன் போன்றோர்களின் பதிவுகளை பார்த்து, படித்து பிரமிப்பில் இருக்கிறேன். அதுமட்டும் அல்ல உங்களைபோன்ற சிறந்த பதிவர்களின் மத்தியில் நாம் ஏன் கோமாளித்தனம் பண்ணவேண்டும் என்று சும்மா இருந்துவிட்டேன். மேலும், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் HR Dept இல் இருப்பதால் வேலை பெண்டு நிமிர்கிறது. இப்போது என் டென்ஷன் எல்லாம் குறைப்பது உங்களை போன்றோர்களின் வலைபூக்கல்தான். அதிலும் சமீபகாலமாக உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்பேன்.
பார்ப்போம் வருங்காலத்தில் உங்களைப்போன்ற பூக்களுக்கிடையில் இந்த நார் மணக்குமா என்று.......
டியர் கார்த்திகேயன்,
ReplyDeleteமுன்பு படித்த ஒரு விஷயத்தை இங்கு கூறுகின்றேன்.
எத்தனையோ வகை கோடிக்கணக்கான வகை செடிகள் இருக்கின்றன ஆனால் எல்லா செடி, கொடி, மரங்கள் அனைத்தும் பச்சை வண்ணத்திலே தான் இருக்கின்றது. அப்படி பச்சை நிறத்திலிருக்கும் அனைத்து வகையான செடிகளில் பூக்கும் பூக்கள் பச்சை நிறத்திலா இருக்கின்றது, அல்லவே. அத்தனை வகை செடிகளிலும் பூக்கும் பூக்கள் விதவிதமான வண்ணங்களில் இருக்கின்றன. இது எதை உணர்த்துகிறது என்றால், இந்த பூமியின் ஆன்மாதான் பல வண்ண மலர்களின் வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பூக்கள் ஆன்மாவின் தன்மையில் இருப்பதாலேயே அவைகள் இறைவனுக்கு அர்ப்பனம் செய்யப்படுகின்றது. அந்த பூக்கள் உதிரியாக இருந்தால் இறைவனின் காலடியிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும். அந்த பூக்கள் இறைவனின் கழுத்துக்கு போகவேண்டுமானால் ஒரு நார் நிச்சயம் தேவை. நார் பல பூக்களை ஒன்றாக சேர்த்து, அழகான பூக்களை மேலும் அழகுள்ளதாக ஆக்குகின்றது.
உங்கள் மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு விஷயத்தை சிறிய அளவிலே, இரண்டு சிறிய பாராக்கள், இரண்டு படங்கள் என்கிற அளவிலே, மாதத்திற்கு ஒரு பதிவு என்று துவங்குங்கள், மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
வலைபதிவு செய்ய நிறைய நேரம் தேவைப்படும். உங்கள் வேலைப் பளுவில் மேனேஜ் செய்வது சிரமம் என்றால், சிறிய அளவில் ஆரம்பியுங்கள்.
உங்கள் ப்ளாக் உடன் உங்கள் இமெயில் ஐடியை இணையுங்கள். ஏற்கெனவே ஒரு மெயில் உங்களுக்கு அனுப்ப முயற்சி செய்தேன். உங்கள் மெயில் முகவரியை picturesanimated@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பிவையுங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
Wow it tells you how you are
Deleteவணக்கம் சிபி,
Deleteஉங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வலைப்பூவின் மூலமாக இன்னும் ஒரு நண்பர் கிடைத்திருக்கிறீர்கள்.
பாலாஜி சுந்தர்.
மிக அழகாக விவரித்துள்ளீர்கள் மிக்க நன்றி பாலாஜி சுந்தர் அவர்களே
ReplyDelete// “நெவர் பிபோர் நியூ ரிலீஸ் ஸ்பெஷல்” என்று 10 புதிய கதைகளை போட்டு அதில் அதிக வரவேற்பை பெறும் கதைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம். //
இதற்க்கு என்னுடைய வோட்டு உங்களுக்கே :))
அந்த இரண்டு படங்களுமே மிக அருமையாக இருக்கும் நமது காமிக்ஸ் நண்பர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்
.
வணக்கம் சிபி,
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எனக்கு ஒரு சிறிய குழப்பம். உங்களை எப்படி அழைப்பது, சிபி அல்லது சிபிசிபி, எது சரி?. *O*.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
நண்பர் பாலாஜி சுந்தர்
ReplyDeleteவணக்கம். நல்ல பதிவு (உடனடியாக படத்தை டவுன்லோட் செய்ய போகிறேன்)
விரிவான பதிவிற்கு நன்றி !!!
வணக்கம் ப்ளூபெர்ரி,
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி. திரைப்படத்தை பார்த்தபிறகு உங்கள் கருத்துக்களை இ-மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.