MACKENNA'S GOLD
டியர் நண்பர்களே,
ஜூன் 20ம் தேதி, இரவு இபே-வில் புக் செய்தது, 23ம் தேதி சனிக்கிழமை காலை 11.30க்கு வந்தது காமிக்ஸ் புதையல்.
கிரெடிட் கார்டை ஆன்லைன் பர்சேசுக்கு பயண்படுத்தியது இல்லை.
பல நாட்களாக புக் செய்ய முயற்சித்தும் மேமெண்ட் ஸ்க்ரீன் வரை வந்து பின் அதற்கு மேல் தொடர முடியவில்லை. இதுவே முதல் முறை. அதனால் பல பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக கார்டை ரெடி செய்து செக்யூரிட்டி ரெஜிஸ்ட்ரேஷனை முடிப்பதற்குள் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகியது. அதற்குள் இபேயில் இருந்த இரதப்படலம் XIII மெகா புத்தகம் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கும் விஷயமாக அமைந்து விட்டது.
ஏதேனும் எக்ஸ்ட்ரா காப்பி இருக்குமா அல்லது மறுபதிப்பிடும் திட்டமிருக்கின்றதாவென இபேயிலிருந்தே ஒரு மெயில் அனுப்பினேன். வெகு விரைவாக ஒரு பதில் மெயில் வந்தது. இரத்தப்படலம் XIII மெகா இஷ்யூ காப்பிகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் மறுபதிப்பு என்பது இம்பாஸிபிள் என்றும் சக வாசக நண்பர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் ஏதேனும் எக்ஸ்ட்ரா காப்பி இருக்கின்றதா என்று முயற்சிக்கவும் என்று எனக்கு தெரியப்படுத்தினார்கள். (கொலைகாரக் கலைஞன் பற்றிய என்னுடைய முந்தைய வலைப்பதிவில் மறுபதிப்பு பற்றிய எனது கருத்துக்களை படித்திருப்பர் என்று நினைக்கின்றேன் ;) ) Better luck next time.
எடிட்டரின் பரணில் (கொடவுனில்) பழைய புத்தகங்களின் ஸ்டாக் விரைவாக தீர்ந்து வருகின்றது என்று நினைக்கின்றேன். ஏனெனில் இரவுக்கழுகாருக்கு வந்த பார்சலிலிருந்த புத்தகங்களுக்கும் எனக்கு வந்த புத்தகங்களுக்கும் சிறு வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன். மேலும் இந்த வருடத்திய வெளியீடான லயன், முத்து மற்றும் காமிக்ஸ் க்ளாசிக்ஸின் மூன்று புதிய புத்தகங்களும் என் பார்சலில் இருந்தது. இதற்கு பதில் இந்த மாத வெளியீடுகளான (சிகப்புக் கன்னி மர்மம் மற்றும் தற்செயலாய் ஒரு தற்கொலை) இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனது முந்தைய பதிவில் கொலைகார கலைஞன் புத்தகம் ஏற்கெனவே என்னிடம் ஒரு காப்பியோ இரண்டு காப்பியோ இருக்கும் என்று தெரிவித்தேன். இப்போது சர்ப்ரைஸாக மீண்டும் ஒரு காப்பி.
கொலைகாரக் கலைஞனை ஏலத்தில் எடுக்க SOTHEBY'S லண்டன் ஏலக்கடையில் கூடியிருக்கும் கூட்டம். |
என்னை விடாது துரத்துகின்றான் கொலைகார கலைஞன். இத்தனை காப்பிகள் என்னிடம் சேர்வதைப் பார்த்தால் வருங்காலத்தில் எனது கொள்ளுப் பேரனோ எள்ளுப் பேரனோ, பேத்தியோ கொலைகாரக் கலைஞனை
வருங்கால செய்தி: கொலைகாரக் கலைஞன் புத்தகத்தை ஏலத்தில் எடுக்க லண்டனில் கடும் போட்டி. |
SOTHBY'S ஏலக் கடையில் பல கோடி டாலர்களுக்கு விற்று அந்த பணத்தில் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் புதிய காமிக்ஸ்களை வாங்கி படித்து வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
எனக்கு வந்தது மொத்தம் 69 புத்தகங்கள். இந்த பழைய புத்தங்கள் வாங்காதவர்கள் விரைவாக செயல்பட்டு வாங்குவது நல்லது. இல்லையேன்றால் என்னைப்போல் XIII- மெகா இஷ்யூவை கோட்டைவிட்டுவிட்டு வருதப்பட நேரும். மேலும் கொடவுன் காலியானல், எடிட்டரும் இன்னும் அதிக புது உற்சாகதோடு வருங்கால புதிய வெளியீடுகளை அதிகமாக கவனிப்பார். இந்த புதிய முறை இபே விற்பனை மூலம் இனிவரும் காலங்களில் புதிய புத்தக வெளியீடுகள் எல்லாம் கொடவுனில் தேங்காமல் விற்றுவிடும் என்று உறுதியாக நம்புகின்றேன். பார்சலை பிரித்தபோது எடுத்த படங்களும், சிறிய விளக்கங்களும்.
உறுதியான தரமான பேக்கிங். விரைவான டெலிவரி. எடிட்டருக்கு வாழ்த்துக்கள். |
பெரிய சைஸ் புத்தகத்தை எடுத்த பிறகு இருக்கும் மற்ற புத்தகங்கள். |
நீண்ட வருடங்களுக்குப் பிறகு வாங்காமல் விட்டுப்போன புத்தகங்கள் இப்போது கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு காமிக்ஸ் புதையல். கொலராடோ (ஓமர் ஷெரீப்) கையில் தங்கக் கட்டி கிடைத்தவுடன் கண்களில் தென்படும் மகிழ்ச்சியைப் பாருங்கள். அதே மகிழ்ச்சி எனக்கும். அதனாலேயே இதை மெக்கனாஸின் தங்கப் புதையலைப் போல் என்று ஒப்பிடவே தலைப்பையும், அந்த சினிமாவின் படங்களையும் இங்கே சேர்த்திருக்கின்றேன். (கொலராடோ என்ற நதியின் பெயர் நம் வெஸ்டர்ன் காமிக்ஸ் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர்.)
விண்ணில் ஒரு குள்ளநரி மற்றும் எமனின் தூதன் Dr.7 புத்தகங்கள் பற்றிய பதிவு (தாமத) தயாரிப்பில் உள்ளது.
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
அன்புடன்
பாலாஜி சுந்தர்.
வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஎன்னிடம் அந்த விண்ணில் ஒரு குள்ள நரி மட்டும் இல்லை.
அதனையே நான் எனது பதிவில் தெரிவித்து இருந்தேன்,
Happy Reading ..
இரவுக் கழுகாரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,
Deleteதங்களுடைய ப்ளாகில் கூடத்தில் குள்ளநரி என்று குறிப்பிட்டு இருப்பது விண்ணில் ஒரு குள்ளநரி புத்தகத்தைப் பற்றித்தானா?
ஆமாம் நண்பரே.
Deleteஅந்த புத்தகத்தை பற்றி தான் கூறினேன்.
ஜெரோமே Ebayil வந்துவிட்டார் பார்த்தீர்களா.
நாமும் எதிர்பார்க்கலாம் என்று நினைகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஇந்த ஆண்டு ஆரம்பத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் நேரடியாக சென்று full set ஒன்று வாங்கினேன். உங்களுக்கு அனுப்பியுள்ள புத்தகங்களை விட எனக்கு நிறைய புத்தகங்கள் அந்த பார்சலில் இருந்தது. நான் அதுவரை படிக்காத பல புத்தகங்கள் அதில் இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நண்பர் கார்திகேயனுக்கு வணக்கம்,
Deleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, சிறு வயது முதல் எந்த கண்காட்சியிலிருக்கும் புத்தக ஸ்டாலுக்கு சென்றாலும் எனது அம்மா, பை நிறைய புத்தகம் வாங்கித்தருவார். ஒவ்வொரு வருடமும் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லுவது தாமதமானாலும், தவறாது வருடம் தோறும் புத்தக கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எனது அம்மா. இதையொட்டிய எனது கருத்தை முதல் பதிவில் காணலாம். 2012-ம் வருடத்திய புத்தக கண்காட்சியை தவற விட்டு விட்டேன். இப்போது சக காமிக்ஸ் ப்ளாக்கர்களின் பதிவை படிக்கும் போதும், உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும் போதும், நான் எவ்வளவு நல்ல மீண்டும் கிடைக்காத வாய்ப்பை தவற விட்டு விட்டேன் என்று தெரிகின்றது.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
நண்பர் கார்த்திகேயனுக்கு,
Deleteஉங்கள் ப்ளாக்கிற்கு சில முறை வந்தேன். ஏன் நீங்கள் வலைப்பதிவு ஏதும் செய்வதில்லை. உங்கள் பங்குக்கு கொஞ்சம் தண்ணீர் உற்றுங்களேன். (உங்கள் காமிக்ஸ் வலைப்பூ செடிக்கு)
//கொடவுன் காலியானல், எடிட்டரும் இன்னும் அதிக புது உற்சாகதோடு வருங்கால புதிய வெளியீடுகளை அதிகமாக கவனிப்பார்.//
ReplyDeleteஉண்மை அனைவரும் சீக்கிரம் வாங்கினால் நல்லது
வணக்கம் நண்பரே,
ReplyDeleteஸ்டாக் சீக்கிரம் தீர்ந்துவிடும் என்று நினைக்கின்றேன். அப்படி தீர்ந்த உடன் இபே செமையாக களைகட்டும் என்று நினைக்கின்றேன்.
நல்ல சுவாரசியமான பதிவு.. "கொலைகார கலைஞன்" புத்தக ஏலம் சூப்பர். XIII யாரிடமாவது எக்ஸ்ட்ரா இருக்கும் என்று நம்புகிறேன்..
ReplyDeleteவணக்கம் விமல்,
ReplyDeleteஉங்களது கனிவான பின்னூட்டத்திற்கும், பாராட்டுதலுக்கும், இந்த வலைப்பூ தளத்தை தொடர்பவராக இணைந்ததற்கும் மிகவும் நன்றி.
XIIIக்காக ஒரு முதன்மையான தீவிர காமிக்ஸ் ரசிகரை கேட்டுள்ளேன். அவரும் தருவதாக வாக்களித்துள்ளார்.
உங்களின் குட்டிப்புலி கதையை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.