ஜானி நீரோ தோன்றும் கொலைகாரக் கலைஞன்
இது ஒரு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளியீடு, அதனால் இது ஒரு மறு பதிப்பு. நினைவில் நிற்கும் அருமையான சித்திரங்கள் கொண்ட, விறு விறுப்பான கருப்பு வெள்ளைப் படங்களைக் கொண்ட கதை. முதல் பதிநான்கு பக்க படக்கதையும், கார் கடலில் பாயும் படங்களும் ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். இதற்கு மேல் இந்த கதையைப் பற்றி சொல்லவதற்கு ஏதும் இல்லை.
முதல் முறையாக முத்து காமிக்ஸில் குறைந்தது 30லிருந்து 35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த புத்தகம். முதல் வெளியீடான முத்து காமிக்ஸை நன்கு வளர்ந்த பெரியவர்களே என்னிடமிருந்து சுட்டு விட்டார்கள். பிறகு மீண்டும் முத்து காமிக்ஸில் ஒருமுறையும், காமிக்ஸ் க்ளாசிக்ஸில் ஒரு முறையும் வெளிவந்தது என்று நினைக்கின்றேன். என் கலக்ஷனில் நிச்சயம் ஒரு புத்தகம் இருக்கும் என்று தெரிந்தே இந்த புத்தகத்தை வாங்கினேன்.
அதிக அளவு கருப்பு மசி உபயோகத்தினால் நிறைய பக்கங்களின் படங்கள் கருப்பாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றது. இந்த கருப்படிக்கப்பட்ட படங்கள், பவர் கட்டிலிருக்கும் தமிழக இரவுகளில் கதை நடக்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.இந்த கதையின் முந்தைய பதிப்புகளுக்கும் இந்த மறுபதிப்பிற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அப்போது என்னிடம் கம்ப்யூட்டரும், பதிவேற்றுவதற்கு வலைப்பூவும் இல்லை. அவ்வளவே.
இந்த காமிக்ஸின் மெல்லிய அட்டையின் தரம், என் கலக்ஷனில் இருக்கும் பழைய பல காமிக்ஸின் தரத்திலேயே இருக்கின்றது. என் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் சில மெல்லிய அட்டைகள் லேசாக மடித்தாலே ஒடிந்து விழுந்துவிடும். இந்த புத்தகத்திற்காவது, காமிக்ஸ் க்ளாசிக்ஸின் மற்றொரு வெளியீடான தலைவாங்கிக் குரங்கு புத்தகத்தின் தடிமனான அட்டையைப் போல் போட்டிருக்கலாம். மீண்டும் வாங்கியதற்கு திக் அட்டை ஒரு ஜஸ்டிபிகேஷன் என்று என் மனதை நானே சமாதானப்படுத்திட உதவியாக இருக்கும். எப்படி ஆனாலும் இதே கதையை மீண்டும் ஒரு மறுபதிப்பு கருப்பு வெள்ளையிலோ அல்லது கலரிலோ வெளியிட்டாலும் வாங்காமல் இருக்கப் போவதுமில்லை, தலைக்கேறிய காமிக்ஸ் போதை தலையை விட்டு கீழே இறங்கப் போவதுமில்லை.
அன்புடன்,
BALAJI SUNDAR.
நான் இந்த மறுபதிப்பை வாங்க வில்லை.
ReplyDeleteஎன்னிடம் ஒரிஜினல் இருக்கிறது என்று நினைகிறேன்.
//என் பழைய காமிக்ஸ் புத்தகங்களின் சில மெல்லிய அட்டைகள் லேசாக மடித்தாலே ஒடிந்து விழுந்துவிடும்//
இதன் மூலம் உங்களிடம் பல அறிய புத்தகம் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.அதனை பற்றிய பதிவை எதிர் பார்கிறேன்.
டியர் இரவுக்கழுகரே,
Deleteபுதிய மறுபதிப்புகளை மீண்டும் மீண்டும் வாங்காமல் இருக்க கடவுள் உங்களுக்கு மனவுறுதியை அளித்துள்ளார்.
வாழ்த்துக்கள். நானும் ஒரு காமிக்ஸ் கலக்டர் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள். என் கலெக்ஷன் பற்றிய பதிவுகளை தக்க சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.
என்னிடம் ஏற்கனவே கிளாசிக்ஸ் இல் பாக்கெட் சைஸ் இல் வெளிவந்த ஒரு புத்தகமும், இந்த ஆண்டு மறுபடியும் வெளிவந்த புத்தகமும் என்னிடம் உள்ளது. பெரிய சைஸ் இல் வெளிவந்த இந்த புத்தகத்தை ஏனோ மறுபடியும் எனக்கு படிக்க தோணவில்லை. அப்படியே புத்தம்புதுசாக வைத்திருக்கிறேன். எடிட்டர் இந்த கதையை நான்கு முறை வெளியிட்டுயிருகிறார் என்று நினைக்கிறேன். அதற்க்கான அவசியமும் இதுவரை எனக்கு புரியவில்லை. அப்படி ஒன்றும் இந்த கதை என்னை ஈர்க்கவில்லை.
ReplyDeleteடியர் கார்திகேயன்,
Deleteஉங்களுடைய கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
ஒரு புத்தகம் மறுபதிப்பிடப்படுகிறது என்றால், சில காரணங்கள் இருக்கும் உதாரணத்திற்கு, அந்தப் பதிப்பின் அனைத்து பிரதிகளும் புயல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து, பின் அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டி வாசகர் விசாரிப்புகள் (டிமாண்ட்) தொடர்ந்தால் அப் புத்தகம் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மறுபதிப்பிடப்படும். இந்த ரூல் அனைத்து படக்கதை இல்லாத புத்தகத்திற்கும் பொருந்தும் உ.ம்.: அர்த்தமுள்ள இந்துமதம் மற்றும் மனிதவள, மனவள சம்பந்தமான கண்ணதாசன் பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், இதே ரூல் சில படக்கதைப் புத்தகத்திற்கும் பொருந்தும் உ.ம்.: அமர் சித்திர கதாவைப் பிரிண்ட் செய்ய தொடங்கிய போது வந்த டைட்டில்கள் இன்றும் கிடைக்கின்றன என்று நினக்கின்றேன். அப்படி எடுத்துக் கொண்டால் நமது முத்து மற்றும் லயனில், டெக்ஸும், டைகரும், பிரின்ஸுமே முன்னுரிமை என்பது எனது விருப்பம். ஆனால் கலரில், புதிய சைசில். XIII விட்டு விட்டேனே, ரத்தப்படலம் மெகா இஷ்யூ மறுபதிப்பிடலாம் அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இதுவரை அந்த புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை. அமர் சித்திர கதாவைப் போல நமது பிரகாஷ் பப்ளிஷர்சின் அனைத்து வெளியீடுகளும் எப்போது வேண்டுமானாலும் ஆர்டரின் மூலம் வாங்கிவிட முடியும் என்றால் இது போன்ற நிலை இருக்காது. அந்த சமயத்தில் எந்த காமிக்ஸ் வெளியிடப்படுகிறதோ அதைத்தான் வாங்க வேண்டும் என்ற நிலையில் நாம் இருக்கின்றோம். இப்போதுதான் மறுபதிப்பு பற்றிய தேர்தலுக்குப் பின் மறுபதிப்பிடும் முறை துவங்கியிருக்கிறது. இந்தப் பழக்கம் ஒரு முழுமை நிலைக்கு வரும் வரை, மீண்டும் மீண்டும் இது போன்ற சந்தர்ப்பங்கள் நம்மை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதைத்தவிர வேறு என்ன சொல்வது?, இது போன்ற கருத்துக்களுக்கு, விருப்பப் பட்டவர்கள் மட்டும் வாங்கலாம், நீங்கள் வேண்டுமானால் வாங்காமல் இருங்கள் என்று ஒரு சில வாசகர்கள் நினைக்கலாம்.
இந்த பிரபஞ்சத்தில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத பல விஷயங்கள் இருக்கின்றது. அதில் இது போன்ற புதிரான மறுபதிப்பு சாய்ஸ்சும் ஒன்று. :)
இங்கு மற்றுமொரு முக்கியமான விஷயத்தை சொல்லிவிடுகின்றேன். சமீபத்திய மறுபதிப்புகளைப் பற்றிய கருத்துக்களை கூறும்போது எடிட்டர் விஜயன் என்ன கூறி இருக்கின்றார் என்றால், மறுபதிப்புகளுக்கான கதைகளை தேர்ந்தெடுக்கும் போது சுத்தமாக முத்து வெளியீடுகளையும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளியீடுகளையும் தவிர்க்கப் போவதாக கூறி இருக்கின்றார்.
//முத்து மற்றும் லயனில், டெக்ஸும், டைகரும், பிரின்ஸுமே முன்னுரிமை என்பது எனது விருப்பம்.//
Deleteஎன்மனதில் இருப்பதை பளிச்சென்று கூறிவிட்டீர்கள் . நன்றி. இவர்களுடன் லக்கி லூக் யும் இணைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
இரண்டாவது வரிசையில், ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி, சிக் பில் போன்றோரை வேயட்டிங்கில் நிறுத்தி கொள்ளலாம்.
மிக முக்கியமான ஒன்று - இவர்கள் யாராக இருந்தாலும் சரி மறுவெளியீடு செய்வதென்றால் கண்டிப்பாக கலரில் பெரிய சைஸ் ல் மட்டுமே மறுபதிப்பு செய்யவேண்டும்.
டியர் கார்த்திகேயன்,
Deleteஎன்னைப்போலவே ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் இன்னொரு நண்பரை கண்டுவிட்ட திருப்தி உமது பின்னூட்டத்தைப் பார்த்த உடன் ஏற்படுகிறது.
இன்னும் பல படக்கதை கதாநாயகர்கள் பெயர் விட்டுப் போய்விட்டது. அவற்றுள் சில, -மாடஸ்டி ப்ளைசி & கார்வின், காரிகன் மற்றும் எனது ஆல் டைம் ஃபேவரைட் பேண்டம், மாண்ட்ரேக் மற்றும் ப்ளாஷ் கார்டன். இன்னும் சில பேர்கள் இருக்கின்றார்கள் ஞாபகம் வரவில்லை.
உங்களது இரண்டாவது வரிசையில் சிக் பில் தவிர ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி இவர்களின் கதைகளை கலரில் வெளியிட வழியில்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் இவைகளின் மூலமே கருப்பு வெள்ளை என்று நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை. கிங்கிடம் விளக்கம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
டியர் கார்த்திகேயன்,
Deleteலக்கி லூக்கை விட்டு விட்டேன். அவரும் மறுபதிப்புக்கு உரியவரே ஆனால் நமது கண்டீஷன்களுடன்.
மாடஸ்டி ப்ளைஸியின் முலமும் கருப்பு வெள்ளையா என்று தெரியவில்லை. ஆனால் ப்ளைஸியின் ஏதொ ஒரு கதை கலரில் ஸ்பெஷல் இஷ்யூவாக வந்தது என்று நினைக்கின்றேன். அந்த கதையில் மலைமேல் உள்ள ஒரு மடாலயம் வரும் என்று நினைக்கின்றேன். மறுபதிப்புக்கு கதை தேர்வு என்பது ரூம் போட்டு யோசித்து தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால் அப்படி ரூம் போட்டால் நிச்சயம் ரத்தகளரி ஆகும்! :-).
இந்த கதையை பொறுத்த வரையில் இது முதன் முறையாக வெளிவந்த கால கட்டத்தை நினைவில் கொண்டு அதன் பிறகு இதனை விமர்சிப்பது நலம். அந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்) தமிழில் இந்த கதை பெரிதும் சிலாகிக்கப்பட்டது (என்று பழைய காமிக்ஸ் ரசிகர்கள் சொல்கிறார்கள்).
ReplyDeleteஎடிட்டரே இதன் சில கட்டங்களை நினைவு கூர்ந்து எடிட்டோரியலில் சொல்லி இருப்பார். எனக்கும் இந்த கதையின் சில கட்டங்கள் நினைவில் இருக்கின்றன. ஆனால் முதன் முறையாக இந்த கதையை இப்போது படிப்பவர்களுக்கு இது சுமாராகவே (அல்லது மொக்கையாகவே) தெரியும் வாய்ப்புகள் மிக அதிகம்.
தொடர்ந்து அதிரடியாக பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
டியர் கிங்,
Deleteஉங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களது பின்னூட்டத்தின் இரண்டாவது பத்தியில் இருக்கும் கருத்தே எனது கருத்தும். அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.
//அந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்) தமிழில் இந்த கதை பெரிதும் சிலாகிக்கப்பட்டது (என்று பழைய காமிக்ஸ் ரசிகர்கள் சொல்கிறார்கள்).//
முதல் பத்தியில் நீங்கள் குறிப்பிட்ட அந்த பழைய காமிக்ஸ் ரசிகன் என்ற நிலையில் இருந்து வெளிப்பட்டதுதான் இந்த கொலைகாரக் கலைஞன் வலைப்பதிவு என்பதை பணிவுடன் உங்கள் முன் வைக்கின்றேன்.
நன்றி. உங்கள் வழிகாட்டுதல் எப்போதும் எனக்கு தேவை.