தடையற தமிழில் போட்டுத் தாக்க!

நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த வலைப்பதிவு, ப்ளாக் வலைப் பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும், இன்ன பிற விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் எப்படி சுலபமாக தமிழில் டைப்பிங் செய்வது என்பதைப் பற்றியது.
இந்த பதிவுக்குக் காரணம், திரு கிங் விஸ்வாவின் வலைத்தளத்தின் மூலமாக லயன் காமிக்ஸுக்கு என்று ஒரு ப்ளாக் இருக்கின்றது என்பது தெரிந்ததிலிருந்து, எடிட்டரின் வலைப்பக்கத்திற்க்குச் சென்று மேய்வது ஒரு தினப்படி விஷயமாக ஆகிவிட்டது.
ஒரு வலைப்பதிவில், எடிட்டர் என்ன கூறியிருந்தார் என்றால், கூகுள் டிராஸ்லேஷனில் ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து பின் பதிவிடுவது சிரமமாக இருக்கின்றது என்று எழுதியிருந்தார்.
நிறைய தமிழ் பதிவர்களின் வலைப் பக்கங்களிலும், அதைத் தொடர்ந்த பின்னூட்டாங்களிலும் இருக்கும் தமிழ் சொற்கள் பிழைகளோடு இருப்பதையும் பார்த்தேன். இப்படிக் கூறுவதால் என் வலைப் பக்கம் பிழைகளில்லாமலிருக்கிறது என்று நான் கூறுவதாக நண்பர்கள் நினைத்துவிடக் கூடாது. என் வலைப்பக்கங்களும் சொல் தவறுகள் நிறைந்துதான் இருக்கிறது. இந்த தவறுகள் ஏன் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்தே இருக்கின்றேன். ஆங்கிலத்தில் டைப் செய்து அது தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது ஏற்படும் வெளியே சொல்ல முடியாத அவஸ்தை அது. அவஸ்தை என்பதை விட சங்க்க்க்கடம் என்பதே சரி.

எனக்கும் தமிழ் டைப்பிங்கிற்கும் 2000 மாவது வருடத்திலிருந்தே அல்லது அதற்கு சில வருடத்திற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது தமிழில் டைப் செய்ய “முரசு அஞ்சல்” என்னும் மென்பொருளைப் பயண்படுத்தி வந்தேன். மலேஷிய தழிழர்களின் ஆர்வத்தினால் உருவாக்கப்பட்ட மென்பொருள் முரசு அஞ்சல் ப்ரோக்ராம். இதுவும் ஒரு ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழ் எழுத்து உருவாகும். உதாரணத்திற்கு ammaa = அம்மா டைப் செய்ய வேண்டும் என்றால் a+m+maa. இந்த டைப்பிங் முறையை நீங்கள் எல்லோரும் அறிந்திருந்தாலும், எனக்குத் தெரிந்தவரை கம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் செய்வதற்கு, ஆங்கிலத்தில் போனடிக் கீ போர்டு வழிமுறையில் சிறப்பாக வேலை செய்த மென்பொருள் முரசு அஞ்சல். இன்று என்னுடைய பதிவுகளும் அதனைத் தொடரும் பின்னூட்டங்களிலும் நீண்ட அதுவும் நண்பர்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு நீண்ண்ண்ண்ட டைப்பிங்கிற்கு காரணம் 12, 13 வருடங்களுக்கு முன்னேயே கம்ப்யூட்டரில் ஆயிரக் கணக்கான தமிழ் பக்கங்களை அடித்துப் பழக்கமானதினாலேயே. (என்னுடைய டைப்பிங் சார்ந்த ஒரு சுவாரசியமான செய்தியை, விரும்புபவர்க்கு இந்த பதிவின் முடிவில் சொல்கிறேன்.)
என்னுடைய கம்யூட்டர்கள் மாறினாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறினாலும் தொடர்ந்து முரசு அஞ்சல் மென்பொருளை பயண்படுத்தி வந்தேன். முரசு மென்பொருளில் ஒரு சிக்கல் என்னவென்றால், அது ஒரு ஷேர்வேர். யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து நிறுவி இயக்கிக் கொள்ளலாம். ஒரு சில கூடுதல் செயல்பாடுகளும், அனைத்து வகையான எழுத்துருக்கள் (FONT) வேண்டும் என்றால் பணம் செலுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நீங்கள் ஒரு பக்கத்தை முரசு கொண்டு தமிழில் உருவாக்கி இருந்தீர்கள் என்றால் அந்த பக்கத்தை படிக்க வேண்டும் என்றாலும் முரசு டாஸ்க் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
நான் சொல்லும் நடைமுறை அந்த நாளில். இப்போது எப்படியோ தெரியவில்லை. இதனால் நான் எங்கெல்லாம் தமிழ் உபயோகப் படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் முரசுவை எடுத்துச் செல்லும் நிலையில் இருந்தேன். என்னிடமே பிரிண்டர் இருந்ததால், பேப்பரில் பிரிண்ட் செய்ய ஏதும் சிரமமில்லாமல் இருந்தது. ஆனால் சில பக்கங்களை கடையிலோ அல்லது வேறேங்காவதோ பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்க ஒரு வழி கண்டுபிடித்தேன். அது முரசு மூலம் ஏற்படுத்த தமிழ் பக்கத்தை, அப்படியே PDF பைலாக மாற்றி சேமித்து விட்டால், பின் அந்த பைலை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பிரிண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் பிடிஎஃப் பைலில் ஏதும் கரக்ஷன் செய்ய முடியாது. அப்படி கரெக்ஷன் செய்ய வேண்டும் என்றால் அது சிறிது தலையை சுற்றி மூக்கைத் தொடும் விஷயம்.
சமீபத்தில் தமிழ் டைப்பிங் சம்பந்தமாக எந்த வேலையும் இல்லை. எனது முரசு உபயோகமும் வழக்கொழிந்து போனது. அதனால் சமீபத்தில் ஹார்ட் டிஸ்க்கை பார்மாட் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மறு நிறுவுதல் செய்த பிறகு ஒரு சிறிய 10 வரி தமிழ் டைப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது வலையில் தேடியபோது கிடைத்ததுதான் NHM WRITER. இதற்கான ஒரு லிங்க் நமது கருந்தேளார் முகப்புப் பக்கத்தில் இருக்கின்றது. இது சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிக வலிமையாக இருக்கின்றது. இந்த மென்பொருள் தமிழ் டைப்பிங்கை முரசு அஞ்சலைவிட சிறப்பாக செய்கின்றது. நண்பர்களே என்.ஹெச்.எம். என்றால் என்ன தெரியுமா? நியூ ஹாரிசான் மீடியா. ஆம், நமது கிழக்கு பதிப்பகமேதான். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் லிங்கை சுட்டவும்.

NHM WRITER - தமிழில் தடையின்றி டைப் செய்ய.
இது ஒரு முற்றிலும் இலவச மென்பொருள். இதன் மூலம் டைப் செய்தால் தவறே ஏற்படாது என்று நான் சொல்லவில்லை, அப்படி ஏற்படும் தவறுகளை அப்போதைக்கப்போதோ அல்லது முதலில் இருந்து சரிபார்க்கும் போதோ திருத்திவிடலாம்.. ஆனால் இதைப் பயண்படுத்தும் போது, இதற்கும் கூகுள் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது உங்களுக்கே தெரிய வரும்.
பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்கள் இந்த மென்பொருளைத்தான் பயண்படுத்துகின்றனர் என்று நினைகின்றேன். இது இல்லாமல் இன்னும் பல தமிழ் மென்பொருட்கள் இருக்கலாம். முன்பு தமிழக அரசு, C-DAC உடன் சேர்ந்து ஒரு தமிழ் மென் பொருள் சீடி வெளியிட்டது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கலாம்.
சுருங்கக் கூறின் இந்த மென்பொருள், சிறியது, ஆனால் உபயோகிக்க எளிமையானது. இந்த மென்பொருளை நிறுவி, கூகுள் மற்றும் இன்ன பிற அது போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் கருவிகளின் சிக்கல்களிலிருந்து விடுதலை பெற்று, தமிழ் டைப்பிங்கை சரளமாக கையாண்டு, சிறப்பான பல பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படைக்க எனது வாழ்த்துக்கள்.
இந்த மென்பொருள் விஷயத்தை உங்களிடம் பேசும்போதோ அல்லது பின்னூட்டமிடும் போதோ நான் சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மென்பொருள், விரல் விட்டு எண்ணக் கூடிய சில பேர்களுக்கு மட்டுமே தெரிய வந்திருக்கும். இதை ஒரு பதிவாக செய்தால், அது எப்போதும் அனைவரும் பார்க்கும் படி இருக்கும். மேலும் இந்த பதிவை முந்தய பதிவுகளுக்கு நடுவில் நுழைத்திருந்தால் அது நான் சப்ஜக்ட் மாறி மென்பொருள் பற்றிய பதிவில் இறங்கி விட்டது போல தெரியும். அதனாலேயே இதை கடைசியாக வைத்துக் கொண்டேன்.
நண்பர்களே, இதுவரை இந்த மென்பொருள் பற்றி தெரியாதிருந்தால் இப்போது உபயோகப் படுத்துங்கள். ஏற்கெனவே தெரிந்திருந்தால் உங்கள் ஏனைய நண்பர்களுக்கு இந்த தகவலை பரிமாற்றம் செய்யுங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
என் இனிய தமிழ் மக்களே, சாரி நண்பர்களே, இயக்குனர் இங்கே உள்ளே நுழைந்து விட்டாரோ என்று பயந்துவிடாதீர்கள்.நான் உங்களை பயமுறுத்திட நினைக்கவில்லை.
தமிழுக்காக ஒரு காரியத்தை செய்ய துணிந்துவிட்டேன். எடிட்டர் விஜயன் சாரைப் போல என் எல்லைகளை மீறிட துணிந்துவிட்டேன். ஏற்கெனவே பப்ளிஷ் செய்யப்பட்ட பதிவை, மீண்டும் எடிட் செய்து, அந்த பதிவில் மேலும் சில வரிகளை தமிழுக்காக சேர்த்துள்ளேன். எடிட்டர் எல்லைகளை மீறினால் அது காமிக்ஸ் காதலர்களுக்கு நல்லது. நான் எல்லை மீறுவது நண்பர்களின் தமிழ் டைப்பிங்கிற்கு நல்லது என்பதால் மீறுவதற்கு உரிமை எடுத்துக் கொள்கிறேன்.
கீழே இருக்கும் முதல் பின்னூட்டதில் நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் ஒரு தமிழ் அழகியைப் பற்றி கூறி, லிங்கும் கொடுத்திருக்கிறார். நண்பர் ஸ்டாலினின் வலைப் பக்கங்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது வலைப் பக்கங்களை அழகியைக் கொண்டுதான் அடித்திருக்கிறார், அழகாகவே இருக்கிறது பக்கங்கள். எனது நோக்கம் தமிழ் டைப்பிங்கிற்கு சிரமப்படும் அனைவருக்கும் இந்த செய்திகள் சென்று சேர்ந்த்து, அனைவரும் அழகாக தமிழ் டைப்ப வேணும் என்ற அவாவே.அதனால் அவரின் பின்னூட்டதில் இருக்கும் லிங்க் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அழகியை கீழே இருந்து மேலே கொண்டு வந்து விட்டேன். இன்னோரு விஷயமும் சொல்லிவிடுகின்றேன், அழகியை இப்போது நான் உபயோகப் படுத்தவில்லை. முன்பு அழகியை பயண்படுத்திய போது அவள் நல்ல அனுபத்தையே தந்தாள் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. அழகியுடனான அனுபவம் கசப்பாக இருந்திருந்தல் அது கட்டாயமாக நினைவில் இருந்திருக்கும். இங்கே கொடுத்துள்ள மென்பொருட்களை உபயோகப்படுத்திப் பார்த்து, எந்த மென்பொருள் உங்களுக்கு பிடிக்கிறதோ அதை உபயோகப்படுத்துங்கள்.
யாமறிந்த வலைப்பதிவர்களிலே அழகிய உதவியாளரை கொண்டு தமிழ் அடித்த பதிவர் ஸ்டாலினைத் தவிர வேறெங்கும் காணோம் (என் கண்ணுக்கு) என்று நான் கவிதையே எழுதிவிட்டேன். தமிழின் நன்மை கருதி இரண்டு வரியோடு நிறுத்திக் கொள்கிறேன்.இல்லையென்றால் நண்பர்கள் கோபப்பட்டு, படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில் என்பது போல இவன் தமிழின் நன்மை என்று முதல் பத்தியில் எழுதிவிட்டு, அதற்கு அடுத்த பாராவில் கவிதை எழுதி தமிழை கொலை செய்கிறான், இதை சகிக்க முடியாது என்று துப்பாக்கி தூக்கிவிடப் போகிறார்கள்.
அழகியுடன், தமிழ் பேச நினைப்பவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டவும்.

நண்பர்களே, அழகியைக் காட்டியதற்கு நண்பர் ஈரோடு எம். ஸ்டாலின் அவர்களுக்கு, அவருடைய பக்கத்தில் ஒரு தேக்ங்ஸ் கமெண்ட் இட்டு, ஒரு ”ஓ” போட்டு வாருங்கள். நண்பர் ஸ்டாலினுக்கு, என் நன்றியை நான் இங்கும், அங்கும் தெரிவிக்கின்றேன். அனைவருக்கும் மற்றுமொரு வேண்டுகோள், உங்கள் வீட்டுக்கார அம்மா இந்த அழகி சமாசாரத்தைப் பார்த்து, வேறேதோ சந்தேகமான சமாச்சாரம் என்று நினைத்து பூரிக்கட்டை எடுத்து வந்தாலும் அதையும் ஈரோடுகாரருக்கே கொரியர் செய்துவிடவும்.
ஒரே பதிவில் ரெண்டாம் தடவையாக,
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.