Sunday 15 July 2012


டியர் ப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். சென்ற பதிவில் ஓவியர் ப்ராங் மில்லரைப்பற்றி கூறியிருந்தேன். ஆனால் அவருடைய போட்டோவை பதிவில் போட மறந்துவிட்டேன். இந்த பதிவும் ஓவியர் ப்ராங் மில்லரைப் பற்றியதுதான். அவருடைய 300 காமிக்ஸும், 300 திரைப்படம் பற்றியும்தான். தமிழில் 300 பருத்தி வீரர்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. முதலில் இப்போது ஓவியர் ப்ராங் மில்லரின் ஓவியமும், அவரது போட்டோவும்.

 

300 திரைப்படத்தைப் பற்றி : இந்த கதை நடக்கும் வருடம் 480 B.C.. இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வை பின் புலமாக கொண்ட கதை. கிரேக்கத்தை சேர்ந்த 300 ஸ்பார்டன் வீரர்கள், 1,70,000 பெர்ஷியர்கள் ஸ்பார்டன் மீது படையெடுத்து வந்த போது, 300 வீரர்கள் மட்டுமே கொண்ட ஸ்பார்டன் படை பெர்ஷியன் படையோடு மோதி தடுத்து நிறுத்துகின்றது. கடைசியில் ஸ்பார்டன் ஊரை சேர்ந்த ஒரு தனி மனிதனின் துரேகத்தால் 300 பேர்களுமே பேரில் இறக்கின்றார்கள். இந்த 300 கதை முதலிலேயே ப்ராங் மில்லரால் காமிக்ஸாக வரையப்பட்டது. பிறகு படமாக்கப்பட்டது. மில்லரே இந்த கதையின் எழுத்தாளர், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இத் திரைப்படம் 09.03.2007 -ல் வெளியானது. இந்த வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வரும் நண்பர்கள், ப்திவை படிக்கும் முன் இதற்கு முந்தய பதிவைப் படித்த பின் இந்த பதிவை படிக்கவும். 

இனி 300 காமிக்ஸ் எப்படி திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கின்றது என்பதை பார்ப்போம். இந்தப் படமும் சின் சிட்டியைப் போல காமிக்ஸிலிருந்து திரைப்பட அவதாரம் எடுத்திருந்தாலும், 300 திரைப்படத்தில் காமிக்ஸ் புத்தக காட்சிகளின் சாயல் இருக்குமே தவிர, காமிக்ஸ் புத்தகத்தின்  சாயல் இருக்காது.

300 திரைப்படத்தை காமிக்ஸோடு ஒப்பிடும் சில காட்சிகள்.















  





நண்பர்களே, இப்போது இந்த பதிவின் இறுதி பாகத்தை நெருங்கி விட்டோம். சென்ற பதிவின் நீளம் காரணமாக அங்கு பதிவிடாத சில ப்ராங் மில்லரின் ஓவியங்களை போனசாக இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

அமேசிங் ஸ்பைடர் மேனும் டேர் டெவிலும்

அமேசிங் ஸ்பைடர் மேனும், டேர் டெவிலும்.




அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதற்கு முன், உங்கள் கமெண்டுகளை இடுங்கள். இந்த முறை யார் முதலில் வருகின்றார்கள் என்று பார்ப்போம். என் பெயர் லார்கோ பதிவில் கமெண்ட் ரேசில் முதலில் வந்த திரு P. கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய பரிசை அவரிடம் சேர்த்தாயிற்று.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.

22 comments:

  1. I am the first.
    I have not seen the 300 comics before.
    Thanks for sharing.
    Its nice.

    ReplyDelete
    Replies
    1. இரவுகழுகாருக்கு வணக்கம்,

      வாழ்த்துக்களுக்கு நன்றி. காமிக்ஸ் படமாக வந்தாலும், படம் காமிக்ஸாக வந்தாலும் அதில் ஒரு வசதி. படத்தை பார்த்தும், சப்டைடிலை படித்தும் புரியவில்லையென்றால், காமிக்ஸை படித்து, அப்படி படத்தில் என்னதான் சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
      ;-)
      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
  2. I am the second KARTHI ... Is there any price for this time for second comment :)

    Anyhow Nice Post..

    Keep it up :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புளுபெர்ரி அவர்களுக்கு வணக்கம்.

      இந்த முறை ஒரு மாற்றத்திற்காக, யார் கடைசியாக கமெண்ட் போடுகிறார்களோ அவர்களுக்கு பரிசை கொடுக்கலாம் என்று சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
    2. //இந்த முறை ஒரு மாற்றத்திற்காக, யார் கடைசியாக கமெண்ட் போடுகிறார்களோ அவர்களுக்கு பரிசை கொடுக்கலாம் என்று சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.//

      நண்பா,

      சங்க உறுப்பினர்களின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கடிதத்தை உடனடியாக அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். இல்லையெனில் இரவுகழுகுவிடம் சொல்லி உங்களை கவனிக்க சொல்லி விடுவேன் :)

      Delete
  3. நேற்று முழுவதும் குடும்பத்துடன் பயணத்தில் இருந்ததால் இன்டர்நெட் பக்கம் வரமுடியவில்லை. நண்பர் இரவுக்கழுகு முந்திகிட்டார். அதான் நண்பர் திருப்பூர் ப்ளுபெர்ரி ஐ செகண்ட் ஆ அனுப்பினேன்...:-)

    300 படம் வந்தபுதிதில் ஒருதடவைதான் பார்த்தேன் (dvd லதான்). படம் முடிந்ததும் டிவி ஸ்க்ரீன் முழுதும் ரத்தக்கறை. துடைத்து எடுக்கவே ஒருமணிநேரம் ஆச்சு .:-)

    அப்புறம் பாலாஜி சார், உங்கள் குரலை என் செல்போனில் கேட்டதே பெரிய பாக்கியமாக, பரிசாக நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. டியர் கார்த்திகேயன்,

      நீங்கதான் நண்பர் திருப்பூர் ப்ளுபெர்ரியை இரண்டாவதாக அனுப்பினீர்களா, அனுப்பும் போது என்பெயரை சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா, நீங்களும் உங்களது முதல் பின்னூட்டத்தில் என்னை கார்த்தி என்று அழைத்தீர்கள், இப்பொழுது திருப்பூர் ப்ளுபெர்ரியும் என்னைஎன்னை கார்த்தி என்று அழைப்பதன் காரணம் என்னவாக இருக்கும்?
      வேறு யாரோ என்று நினைத்து விட்டாரோ? அல்லது எனது எழுத்தை படித்து இருவரும் என்னை சிம்பாலிக்காக ப்ளேடு பீடியாவோடு இனைத்துவிட்டீர்களா. நீங்கள் இருவரும்தன் விளக்க வேண்டும்.

      //படம் முடிந்ததும் டிவி ஸ்க்ரீன் முழுதும் ரத்தக்கறை. துடைத்து எடுக்கவே ஒருமணிநேரம் ஆச்சு .:-)//
      அப்போ ஹாலிலும், உங்கள் மேலெல்லாம் இருந்த கறைகளை கழுவ எவ்வளவு நேரம் ஆயிற்று?
      இந்த படத்திற்கே இந்த நிலையென்றால், நீங்கள் கில் பில் பாகம் 1 பார்க்கவில்லையா, அது இதைவிட மோசம்.

      நண்பரே, மேட்டரை நீங்கள் வெளியே விட்டு விட்டீர்கள். ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதாக போயிற்று. உமது பின்னூட்டத்தைக் காட்டி இரவுக்கழுகாரின் துப்பாக்கியிலிருந்து தப்பித்தேன். (பார்க்க கீழே இருக்கும் இரவுக் கழுகாருக்கான பின்னூட்டத்தை)

      சார் எல்லாம் போடாதீர்கள் சங்கோஜமாக இருக்கின்றது. நான் வயதில் சிறியவன்தான். நண்பர்களுக்குள் தனி மரியாதை அன்னியப்படுத்தி விடும்.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
  4. பாலாஜி நீங்கள் அலுமினி ஆட்டம் ஆடுகிறீர்கள்.
    பதிவில் முதல் பின்னுட்டம் இடுபவர்களுக்கு பரிசு என கூறிவிட்டு இப்பொழுது மாற்றி விட்டீர்கள்.
    இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
    எனக்கு பரிசு வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. டியர் இரவுக்கழுகு,

      நான் மண்டியிட்டு, என் இரண்டு கைகளையும் உயர தூக்கிவிட்டது உங்களுக்கு தெரிகிறதா, உங்கள் வலது கை தொப்பியின் விளிம்பை தட்டும் விதத்தைப் பார்த்தால், என்னுடைய அழுகுனி ஆட்டம் ஏற்படுத்திய கோபத்தில் உங்கள் இடது கை ஹொல்ஸ்டரிலிருந்து துப்பாக்கியை உருவி விட்டது என்று நினைக்கின்றேன், தயவு செய்து உருவிய துப்பாக்கியை மெதுவாவாவா திருப்பி உறைக்குள்ளே வையுங்கள், மெள்ள.. மெள்ள.. பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
      பரிசை உங்களுக்கே தந்துவிடுகிறேன். கோபப்படாதீர்கள்.

      நண்பர் கார்த்திகேயனுக்கு பரிசு கொடுப்பதற்கு முன்பே உங்களுக்குத்தான் முதலில் பரிசு கொடுத்தேன்/போனில் பேசினேன் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைகின்றேன் (ஆம் அதுதான் பரிசு, வேறொன்னும் இல்லை).

      அதுமட்டுமல்ல நண்பர் கார்த்திகேயன் அவருக்கு என்ன பரிசு கிடைத்தது என்பதை மேலேயுள்ள அவரது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பாருங்கள். ஆம், அவர் பரிசு நான் 48 நிமிடங்கள் அவருடன் போனில் பேசியதுதான்.

      என்னடா போன தடவை பதிவில் போட்ட அதே மொக்கை ப்ளேடை அதே ப்ராங் மில்லரையே இந்த பதிவிலும் போடுகிறோமே, அதுவும் 24 மணி நேர கேப்பில், நண்பர்கள் கடுப்பாகி விடப்போகிறார்கள், அதுமட்டுமல்ல, வரப்போகும் பதிவும் இதே கேட்டகரிதானே என்று நினைத்து செய்த ஒரு சின்ன டைவர்ஷன் வேலை இப்படி உங்கள் கோபத்தை கிளரி, என் உயிருக்கே உலைவைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
      துப்பாக்கியை உறையினுள்ளே வைத்துவிட்டீர்கள் என்று நினைத்து, உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றேன், ஒருவேளை தனக்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது என்று திருப்பூர் புளுபெர்ரி நினைத்திருந்து, இப்போது இல்லை என்று தெரிந்தால் இப்போது அவர் துப்பாக்கியை உருவி விட போகிறார். ஆபத்து வருவதென்றால் எப்படியும் வரும் போலிருக்கிறது.
      கடைசியா கமெண்ட் போடுறவருக்கு பரிசு என்று கூறினால், எப்போதும் நாம் தானே கடைசியாக பின்னூட்டம் போடுகிறோம், பரிசை அமுக்கி விடலாம் என்று நினைத்து, நானே நல்லா மாட்டிக்கிட்டேன்.

      சரி உங்களிடம் ஒரு கேள்வி. சின் சிட்டி பதிவின் கடைசியில் ஒரு யூ-ட்யூப் லிங்க் கொடுத்திருந்தேன், நண்பர்கள் யாரும் அதைப்பற்றி ஏதும் கூறவில்லை. யூ-ட்யூப் பார்த்தீர்களா?

      ஒன்னும் இல்லா விஷத்திற்கு இவ்வளவு சீன் போட்டு மொக்க போட்டது நானாகத்தான் இருக்கும்.

      அன்புடன்,

      பாலாஜி சுந்தர்.

      Delete
    2. அப்புறம் எடிட்டரின் தளத்தில் முதல் நீண்ட பின்னூட்டம் இட்டு அசத்தியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

      Delete
    3. நட்புகருதி எனது துப்பாக்கியை உறையில் போட்டுவிட்டேன்.
      நான் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே பரிசை பெற்றுவிட்டேனா.
      நான் அந்த லிங்கை இன்னும் பார்கவில்லை.பார்த்து விட்டு கருத்தை கூறுகிறேன்.
      நேற்று தான் 300 காமிக்ஸ் டவுன்லோட் செய்தேன்.
      இன்னும் படிக்கவில்லை.மேலோட்டமாக பார்த்தேன் நன்றாக இருந்தது.

      Delete
    4. வோ.. துப்பாக்கியை உறையில் போட்டதற்கு இரவுக்கழுகாருக்கு நன்றி. எப்படியோ நான் பிழைத்தேன்.
      அது சரி, உங்கள் துப்பாக்கி பெல்ட்டை கழட்டி ஸ்டாண்டில் தொங்க விட்டுவிட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் ஒரு கேள்வி.
      நான்கு நாட்களாக உங்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கோபத்தைவிட நட்புக்கு மரியாதை கொடுப்பவர் என்று தெரிந்து விட்டது கேள்விக்கு வருகிறேன். ரொம்ப நாளா ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு இருந்தீர்களே, திடீரென்று இப்ப காணோமே, கைவலிக்கின்றது என்று கீழே போட்டு விட்டீர்களா அல்லது ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டீர்களா? இல்லை அந்த மேட்டர் உங்க வொய்ப்புக்கு தொரிந்து விட்டதால் இந்த மாற்றாமா Don't get angry. just joking. திருப்பி துப்பாக்கியை தூக்கிவிடாதீர்கள் மீண்டும் கையை தூக்கிவிட்டேன், சரண்டர்.
      சும்மாதான் கேட்டேன். சத்தியமாக நீங்க அந்த பெண்ணை கீழே போட்டுட்டா நான் தூக்கிக்கலாம் என்ற எண்ணமெல்லாம் இல்லை.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete
  5. நண்பரே நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைகிறேன்.
    அந்த புகைப்படம் அப்படியேதான் உள்ளது.அதனுடன் மேலும் இரண்டு படங்களை சேர்த்துள்ளேன் அவ்வளவுதான்.

    நீங்கள் அந்த பெண்ணை என்னிடம் இருந்து பரிக்க நினைத்தால் அது சரியல்ல.

    ReplyDelete
  6. ஓகே நண்பரே, பிழையை பொறுத்தருள்க. நான் கேட்பது உங்கள் வலைத்தளத்தில் உள்ள படத்தை அல்ல. முன்பெல்லாம் உங்களது பின்னூட்டங்களில் இரவுக்கழுகு என்ற பெயருக்குப் முன் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டிருக்கும் படம் தான் வரும் என்று நினைக்கின்றேன். இப்போது இருக்கும் படம் பளிச் சென்று வித்தியாசமாக இருந்ததால் கேட்டேன். முன்பே இந்த படம் இருந்ததா?
    அந்தப் பெண்ணை உங்களிடமிருந்து பறிக்கவோ, பிரிக்கவோ நான் நினைக்கவில்லை. அந்த பெண்ணைப் பார்த்தால் அது எழுந்திருக்குமா என்பது தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் தூக்குவதற்கு உடலில் வலுவும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. விட மாட்டேன் நண்பரே,நீங்கள் எதனை முறை கடைசி பின்னுடமஈட்டாலும் நானும் இடுவேன்.
      முன்பு எனது profile படமாக இருந்தது,டெக்ஸ் ஒரு துப்பாக்கியை வைத்துருந்தார் வேறு ஒன்றும் இல்லை.

      Delete
  7. நண்பரே

    Largo Winch 2 The Burma Conspiracy - டவுன்லோட் செய்து விட்டேன். (ஆங்கில மொழி பெயர்ப்புடன்).

    முதல் பத்து நிடங்கள் பார்த்தேன். அருமை அட்டகாசமான கார் சேசிங் .... மீதியுள்ள நிமிடங்கள் பட்டையை கிளப்பும் என நினைக்கிறேன்.

    டவுன்லோட் லிங்க்

    https://www.rapidshare.com/files/1982547902/backup.LWinch272.part1.rar
    https://www.rapidshare.com/files/419253064/backup.LWinch272.part2.rar
    https://www.rapidshare.com/files/4188678737/backup.LWinch272.part3.rar
    https://www.rapidshare.com/files/467682555/backup.LWinch272.part4.rar
    https://www.rapidshare.com/files/2944088497/backup.LWinch272.part5.rar
    https://www.rapidshare.com/files/339515953/backup.LWinch272.part6.rar
    https://www.rapidshare.com/files/1228822375/backup.LWinch272.part7.rar
    https://www.rapidshare.com/files/2026766707/backup.LWinch272.part8.rar
    RAR pass : ultrascorp

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே,

      ஓபனாக லிங்க் கொடுத்துவிட்டீர்கள். அன்ஸிப் செய்ய பாஸ்வேர்டும் கொடுத்திருக்கின்றீர்கள். ஒரு சிறிய சந்தேகம். இரண்டு படங்களும் இந்த 8 லிங்க்குக்குள்ளே அடங்கிவிடுகிறதா அல்லது லார்கோ வின்ச் இரண்டாம் பாகம் மட்டும்தானா?

      படத்தை பதிவிறக்கம் செய்ய விரும்பும் நண்பர்கள் மேலுள்ள லிங்க்கை காப்பி பேஸ்ட் செய்து டவுன்லோடுங்கள். ஒவ்வொரு பைலாக டவுன்லோட் செய்யும் சிரமத்தை தவிர்க்க “JDOWNLOADER" என்ற மென்பொருளை நிறுவுவதன் மூலம் டவுன்லோடை சுலபமாக்கலாம். இந்த ப்ரோகிராம் அனைத்து ஆன்லைன் டைரக்ட் பைல் ஷேரிங் தளங்களிலிருந்தும் சுலபமாக டவுன்லோட் செய்ய உதவும் கருவி.

      Delete
    2. நண்பரே

      இது இரண்டாம் பாகத்திர்க்கானது ....

      மிக அருமையான படம். (முதல் பாகமும் சூப்பர்)

      நண்பர்கள் அனைவரும் (முக்கியமாக லார்கோ சங்க உறுப்பினர்கள்) தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

      Delete
    3. நண்பரே, தவறாமல் வந்து லார்கோ வின்ச்சின் இரண்டாவது திரைப்படத்தின் வாயிலாக நீங்கள் பெற்ற அனுபத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி புளுபெர்ரி.

      Delete
  8. ஒரு பதிவை நல்லமுறையில் கொண்டுவர நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அற்புதமானது . வாழ்த்துக்கள்! அடுத்த பதிவும் இதே மாதிரி ஆச்சர்யபடுத்தட்டும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்டாலினுக்கு வணக்கம்.

      உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி, தன்யனானேன். உங்களைப் போன்ற நண்பர்களின் ஆர்வமும், ஆதரவும், வாழ்த்துமே என்னை மேலும் பதிவிடுவதற்கு ஊக்கப்படுத்துகிறது. உமது வாழ்த்துக்கள் இந்த பதிவுகளை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      Delete

WARNING:
THIS BLOG IS CREATED AND MAINTAINED BY A PERSON HAVING A HISTORY OF ADDICTION. IF YOU CONTINUE TO KEEP VISITING THIS BLOG, YOUR HABITS MAY CHANGE AND YOU MAY ALSO BECOME ADDICTED TO COMIC BOOKS AND MOVIES AND YOU ARE ALSO OBLIGED TO POST YOUR RESPONSIBLE COMMENTS. SO THINK TWICE BEFORE CONTINUING.